குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, October 30, 2016

காயத்ரி சாதனா சித்திக்கான வழிமுறைகள்

காயத்ரி உபாசனை/சாதனை சித்தி பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி யுக ரிஷி பண்டிட். ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் தமது வாழ்க்கை குறிப்பில் கூறிய அறிய விடயங்களை எனது வாசிப்பு குறிப்புகளாக குறித்து வைத்திருந்தேன். அவை அனைவருக்கும் பயன்படும்படி இங்கு பதியப்படுகிறது. 
 
இந்த குறிப்புகள் உண்மையாக சாதனா வாழ்வை பயிற்சித்து ரிஷி பரம்பரையில் வாழ விரும்புபவர்களுக்கு ஒரு அறிய வழிகாட்டி.


1.       ஆன்மீக வளர்ச்சி அடைய வாழ்க்கை மூன்றுவித சாதனைகளை கொண்டிருத்தல் வேண்டும்; ஒளி
a.       உண்மையான தெய்வ உபாசனை
b.       சாதனை அல்லது ஆன்ம சாதனை – அறத்தில் இருந்து வழுவாமல் ஒழுக்கத்திற்கு உட்பட்டு வாழ்க்கையினை வாழுதல்.
c.       ஆராதனை – தான் உதித்த மனித குலம் மேம்பட தகுந்த உதவிகளை செய்தல்.
2.       மனிதன் தான் உயிர் வாழ உணவு, உடை, உறையுள் எப்படி அவசியமோ, தாவரத்திற்கு மண், நீர், சூரிய ஒளி எப்படி ஒன்றில்லாமல் வளர்ச்சி பூரனமாகாதோ அப்படி ஆன்மீக வளர்ச்சிக்கு மேற்கூறிய மூன்றும் அவசியம்.
3.       தெய்வ உபாசனை : உபாசனை என்பது அருகில் இருத்தல் என்று பொருள் படும். ஒருவன் பிரபஞ்சத்தை ஆளும் மகா சக்தியின் அருகில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த தகுதி இருக்க வேண்டும் என்பது அவசியம்.
4.       அருகில் இருத்தல் என்றால் வெறுமனே இரயில், பஸில் ஒருவர் அருகில் இன்னொருவர் இருந்து பயணிக்கும் பயணம் போன்றதல்ல உபாசனை. இது ஈருடல் ஓர் உயிர் என்ற சரணாகதியின் மூலம் மட்டுமே அடையக் கூடியது. ஒருவன் தனது வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு கடவுளின் விருப்பபடி தனது வாழ்வினை நடாத்துவதே உண்மையான சரணாகதி தத்துவம்.
5.       நீ விரும்பும் படியெல்லாம் கடவுள் ஆடமாட்டார், கடவுள் விரும்பியபடி எம்மை மாற்றிக்கொள்வதே கடவுளை அடையும் வழி என்பதை உணர்ந்திருத்தல் வேண்டும்.
6.       விறகு பயனற்றது, தீயை தழுவும்போது அதுவும் தீயாக மாறுகிறது. எப்போதும் தீ விறகாக மாறுவதில்லை. சிற்றாறு பெரிய ஆற்றுடன் சேர்ந்து தானும் பெரிய ஆறாக மாறும், ஒருபோதும் பெரிய ஆறு சிற்றாறுடன் சேர்ந்து சேறும் சகதியுமாக மாறுவதில்லை.
7.       சாதகன் தான் கடவுளின் கைப்பாவையாக இருந்து செயல்களை செய்ய வேண்டுமே அன்றி, கடவுள் சாதகனின் அடிமையாக இருந்து செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது உபாசனை அல்ல!
8.       சாதகன் தான் வேறு கடவுள் வேறு அல்ல என்று அன்பால், பக்தியால் சரணாகதி அடைய வேண்டும். கடவுளின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.
9.       ஒருவன் தெய்வ உபாசனை செய்ய வேண்டும். அதற்கு அவன் கடவுளின் அருகில் உட்கார வேண்டும். அவர் கூறும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும். அவருடைய ஆணைகளை சிரமேல் ஏற்று செய்து முடிக்க வேண்டும். அவரை வழிகாட்டியாக கொண்டு அவர் காட்டும் வழியிலேயே செல்ல வேண்டும்.
10.   உபாசனையில் பூஜை ஒரு அங்கம்; அந்த பூஜையினை மேற்குறித்த மனப்பண்புடன் செய்வதே உண்மையான ஆன்ம வளர்ச்சியை ஏற்படுத்தும். தெய்வத்திற்கு அலங்காரம் செய்தல், உபசாரங்கள் செய்தல், நைவேத்தியம் படைத்தல் என்பனவும் ஆண்டவனை மேலானாவனாக மதித்து புகழ் பாடுதல் என்பன மட்டுமே பூஜை என்ற எண்ணத்துடன் செயற்படுகின்றனர்.
11.   இவற்றால் கடவுள் திருப்தி அடைவதாக எண்ணிக்கொள்கின்றனர். அரசர்களை புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு மகிழ்ந்து பரிசளிப்பது போன்று கடவுளும் தமது புகழாரத்திற்கு மகிழ்ந்து தாம் வேண்டுவதை தருவார் என்று நம்புகிறார்கள்.
12.   இவர்கள் எல்லாம் கடவுளின் உண்மை நிலை உணராதவர்கள். சிறு குழந்தைக்கு வாழைப்பழத்தை, இனிப்பை கொடுத்து ஏமாற்றி விடுவதுபோல் கடவுளையும் இப்படி சிறு பரிசுகளை கொடுத்து சமாளித்து விடலாம் என்று மனப்பால் குடித்து அறியாமையில் செயலாற்றுகிறார்கள்.
13.   இறைவனிடம் தாம் கேட்பவை சரியானவையா, நேர்மையானவையா என்பது பற்றி அவர்கள் சரியாக சிந்திப்பதில்லை. இத்தகைய மாயைகளுக்கு சாதாரண மனிதனே பலியாகிறான்.
14.   தாங்கள் உண்மையான பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கடவுளிடம், பொருட்செல்வம், வெற்றி, தெய்வ பதவி, வீடுபேறு, அஷ்டமா சித்திகள் என்பவற்றை பிச்சையாக வேண்டுகிறார்கள். சிலர் கடவுளை பார்க்க வேண்டும் என்று வெறிப்பிடித்து அழைக்கிறார்கள். மந்திரங்களை கூறிக்கொண்டு, மணிமாலைககளை உருட்டிக்கொண்டு, ஆடம்பர பூஜை செய்யும் பலர் இந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
15.   இன்னும் சிலர் இதை விட இலகுவான வழியினை வைத்திருக்கிறார்கள்; முற்றும் துறந்த துறவியை, சித்தரை, சித்தரின் சமாதியை, கோயிலில் சென்று வலிபட்டுவிட்டால்  போதும் தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று என்று எண்ணுகிறார்கள்.
16.   அறியாமையினால இத்தகைய கருத்துக்கள் மக்கள் மனதில் பரவி தெய்வீக சாதனை பற்றியா தவறான நம்பிக்கைகளை வேரூன்ற வைத்திருக்கிறார்கள். இவை உண்மை இல்லை என்றாலும் மக்கள் மனதில் நம்பிக்கை மூலம் ஊன்றி பதிந்து மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.
17.   அன்னை காயத்ரியை எமது ஆன்மாவினை இறைசக்தியால் பாலூட்டும் தாயாகவும், சவிதா எனும் சூரியனின் தேஜசை தந்தையாகவும் எண்ணி தியான சாதனையினை செய்ய வேண்டும்.
18.   எமது மனதிற்கு இதமாக இருப்பதற்கு தாயாகவும், தந்தையாகவும் மதித்து தியானித்தாலும் அனுபவத்தில் உருவமற்றவர்கள், எங்கும் நிறைந்தவர்கள், இதை உணர்ந்தால் மட்டுமே உடலில் கலந்துள்ள ஆன்மாவில் அந்த பேரொளி சக்தியை கலந்து எம்மை முன்னேற்ற முடியும். காயத்ரி மாதாவை தனிப்பட்ட மனிதராக கருதினால் ஏற்படும் இடைவெளியில் நானும் இறைவனும் வேறு அல்ல என்பதை உணரும் பக்குவம் ஏற்படாமல் போகும்.
19.   ஒருவன்  ஆரம்பத்தில் தன்னை கொடியாகவும், கடவுளை மரமாகவும் பாவித்துக்கொள்ள வேண்டும். கொடி மரத்தில் படர்ந்து அதன் உச்சிக்கே சென்று விடும். அதுபோல் இறைசக்தி மேல் படர்ந்து நாமும் இறை நிலையில் உச்சிக்கு சென்று விடலாம்.
20.   அடுத்து தன்னை புல்லாங்குழலாகவும் கடவுளை அதை வாசிப்பவனாகவும் கருதி உபாசனையினை மேற்கொள்ள வேண்டும். அதனால் நமது வாழ்க்கையினை கடவுளின் விருப்பத்திற்குட்பட்ட ஒழுக்க நெறியில் எம்மை ஆட்படுத்திக்கொள்ள முடியும்.
21.   உபாசனையில் சடங்குகளை விட சிரத்தி, பக்தி, நம்பிக்கை ஆகிய மூன்றுமே அத்தியாவசியமானவை.
22.   உபாசனை செய்யும்போது எப்போதும் நாம் கடவுளுடன் ஒன்றுகின்றோம் என்ற பாவமும், தியாக உணர்வும் அவசியமானவை.
23.   காயத்ரியின் பேராற்றல் காரண சரீரத்தில் சிரத்தையாகவும், சூக்ஷ்ம சரீரத்தில் பிரக்ஞையாகவும், ஸ்தூல உடலில் நிஷ்டையாகவும் வெளிப்படும். இதனை ஒருவன் தன்னை ஆராய்ந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நெருக்கடியான சந்தர்பங்களில் சாதனா வாழ்வின் லட்சியங்களில் இருந்து விலகுகிறோமா? மனித குலத்திற்கு சேவை செய்வதில் நாம் ஆர்வத்துடன் இருக்கிறோமா? ஆசைகளில் தூண்டலுக்கு மனம் எப்படி செயற்படுகிறது என்பவற்றை கொண்டு இந்த வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம்.
24.   பிரபஞ்ச மூல சக்தி தன்னை ஒரு பெண் உருவில் வெளிப்படுத்திக்கொள்கிறது. அவள் மனதை பிரக்ஞையாக ஆட்சி செய்கிறாள். பிரக்ஞையில் அறிவு, பொறுப்புணர்ச்சி, தைரியம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொண்டு உள்மனதுடன் முரண்படாமல் செயலாற்ற வேண்டும். இந்த முரண்பாடு அற்ற ஒழுக்கம் காயத்ரியின் ஆற்றல் மனதில் ஊடுருவுவதன் மூலம் சித்திக்கும். இதன் பயனாக எமது எண்ணங்கள், சிந்தனைகள், தியான சாதனை என்பவை பயனுள்ளவையாக மாறும்.
25.   இப்படி எமது செயல்களும், பண்புகளும் (குணங்களும்) இயல்புகளும் தெய்வீக தன்மையுடையவையாக மாற்றம் பெற்றிருக்கிறதா என்பதை பரிசோதித்து அறிவதே உபாசனையின் இலக்கு.
26.   காயத்ரியின் ஒரு அங்கம் – நிஷ்டை. நிஷ்டை என்பது மனவுறுதி, பொறுமை, தைரியம், துணிச்சல், கடுந்துறவு (தபஸ்), சகிப்புத்தன்மை ஆகியவற்றின் கூட்டமைப்பே நிஷ்டை. இதை அடைந்திருக்கிறோமா என்பதே சாதனையின் முன்னேற்ற அறிகுறி.
27.   சவிதாவின் பேரொளி “பிரம்மவர்ச்சாஸ்” எனப்படும். அது தேஜஸ், ஓஜஸ், வர்ச்சஸ் என அழைக்கப்படுகிறது. அது நேரடியாக பக்தி, ஒழுக்கம், அறிவுக்கூர்மை, தெளிந்த ஞானம் என்பவையாக ஒருவனில் பிரதிபலிக்கும்.
28.   காயத்ரி ஜெபத்தின் பலனாக சவிதாவின் பேரொளி ஸ்தூல, சூக்ஷ்ம, காரண உடல்களில் புகுவதால் உடலை வலிமை மிக்கதாகவும், மூளையை அறிவு மிக்கதாகவும், இதயத்தை தைரியமும், நல்ல உணர்சிகள் நிறைந்ததாகவும் மாற்றுகிறது. இந்த நிலை அதிகரிக்கும்போது நாமே ஒரு ஒளிப்பிழம்பாக இருப்பதாகவும், அக்னியும், அம்ருதமும் கலந்த நிலையை அனுபவிப்பர். இதன் பயனாக ஒருவித திருப்தியும், மனநிறைவு, மகிழ்ச்சி, அமைதி அனைத்தும் நிறைந்த ஒருவித பேரின்ப நிலையை சாதகன் அனுபவிப்பான்.
29.   இத்தகைய மனநிலையில் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இயல்பாகவும், மிகவும் சாதரணமாகவும் தோன்ற ஆரம்பிக்கும். வாழ்க்கை இன்ப துன்பமற்ற நீரோடை போன்ற அனுபவமாகும். எங்கு பார்த்தாலும் பேரின்ப பெருங்கடல் அலைபாய்வதாக தோன்றும்.
30.   இந்த நிலையை அடையும்போது எங்கு சென்றாலும், எந்த செயல் புரிந்தாலும் எம்முடன் இறை சக்தி இருப்பதையும், நாமே இறை சக்தியாக இருப்பதையும் உணர்வோம். வாழ்க்கை அச்சமற்றதாக மாற ஆரம்பிக்கும்.
31.   தெய்வ சக்தியை அடைவது என்பது மனித வாழ்க்கையின் வளர்ச்சி நல்ல உதாரணம். சிறு குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் எப்போதும் அதிக விலையுயர்ந்த பொருட்களை கைகளில் கொடுப்பதோ, பணத்தை கொடுப்பதோ இல்லை. ஏனெனில் விளையாட்டுத்தனமும், அனுபவமும் அற்ற குழந்தை அவற்றை வீணாக்கி தீய வழியில் சென்றுவிடும் என்பதால். இதுபோல் பக்குவம் அற்ற ஆத்மாக்களுக்கு இறைவனும், ரிஷிகளும் உயர்ந்த தெய்வ ஆற்றலை கொடுத்து வீணாக்குவதில்லை. அதேவேளை வளர்ந்து தன் தகுதியை கல்வி, அனுபவம் மூலம் வளர்த்துக்கொண்ட ஒருவன் பெற்றோரிடம் தனது பணத்திற்கோ, தொழிலுக்கோ கெஞ்சுவதில்லை. அதுபோல தெய்வ சக்தியின் ஆற்றலினை பெறுவதற்கு தனது தகுதியை வளர்த்துக்கொண்ட ஆத்மாக்களுக்கு கேட்காமலே தெய்வ ஆற்றல்கள் வந்து சேர்க்கிறது.
32.   ஒருவர் உயர்பதவிக்கு தகுதி பெறுவது அவர் முன்னர் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை எப்படி சரியாக கையாண்டார் என்பதில் தங்கியிருப்பது போன்று தெய்வ ஆற்றல்கள் ஒருவர் தனது முற்பிறவிகளில் பெற்ற ஆற்றலை எப்படி கையாண்டார் என்பதை அடிப்படையாக கொண்டே ரிஷிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
33.   கடவுள் எவருக்கும் தனியான நண்பரோ, எதிரியோ அல்ல. அவர் பிரபஞ்ச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயற்படுவார். அவருக்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமம்.
34.   இந்த தகுதியை எப்படி பெறுவது? அதற்கு ஜீவன் சாதனா அல்லது ஆத்ம சாதனா என்று பெயர். எந்த உபாசனையும் இந்த ஆத்ம சாதனை இன்றி சித்தி பெறுவதில்லை.
35.   ஆத்ம சாதனை என்பதை மின்சக்தி செல்வதற்கு உலோக கம்பி தேவை என்பதைப்போல் தெய்வ சக்தி எம்முள் ஊடுருவி எம்மை மாற்றுவதற்கு ஆத்ம சாதனை என்ற உலோக கம்பி தேவை.
36.   இறைவனின் அருகில் செல்வதற்கு இதய – மனச்சுத்தி அவசியம். ராம நாம ஜெபத்தை வாயால் செய்துகொண்டு மனதில் மற்றவர் பொருளை அபகரிக்க நினைக்கிறோம். நாம் தொடர்ந்து தவறுகளை செய்துகொண்டு கடவுளை கோயிலிற்கு சென்று வழிபடுவதன் மூலமும், தான தர்மங்களை ஆடம்பரமாக செய்வதன் மூலம் விடுபடலாம் என்றும் எண்ணுகிறோம். இது மிகப்பெயரிய முரண்.
37.   விதை விதைக்க முன்னர் நிலத்தை சுத்தி செய்து மண்ணை உழவேண்டும், இதைப்போல் இறைசக்தியை விதைக்க முன்னர் மனம் ஆத்ம சாதனையால் பண்பட வேண்டும்.
38.   ஆன்ம சாதனை செய்யாத எவருடைய மனம் எண்ணங்கள், பண்பு, உணவு, தினசரி கடமைகள் எல்லாவற்றிலும் விரும்பத்தகாத அமிசங்கள் நிறைந்திருக்கும். பொறாமை, பேராசை போன்ற தீய உணர்வுகளால் நிறைந்த மனம் எப்போதும் அமைதி இழந்த நிலையில் இருக்கும். இந்த நிலையில் மனம் ஒருமைப்பட்டு தியானத்தில் ஒன்றாது.
39.   வெறும் பூஜை, புனஸ்காரங்கள் மூலம் கர்மகாண்டத்தினை செய்வதன் மூலம் உருவ வழிபாடு செய்வதன் மூலம் எந்த நன்மையையும் உண்டாகாது.
40.   வழிபாடு உள்ளுணர்வுடன் தொடர்புடையது. உள்ளுணர்வு மூலம்தான் ஒருவன் தனது நல்லொழுக்கம், செயல்கள், இயல்புகள் என்பவற்றுடன் நேர்மையை இணைக்க வேண்டும்.
41.   பொறாமை, பேராசை, உலக மாயையை உண்மை என்று நம்பி வாழ்வது, ஆணவம் ஆகியவையே வெறுக்க தக்க வாழ்க்கையின் ஆணிவேர். தெய்வ சக்தியை எம்மை ஆண்ட விடாத காரணிகள்.
42.   நம்முடைய பண்புகளை பொறுத்துதான் செயல்கள் அமைக்கின்றன. நமது ஸ்தூல உடல் மனத்தால் ஆளப்படுகிறது. ஆகவே நாம் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் மனம்தான் பொறுப்பு. உடல் எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. இதை சாதகர்கள் மிகவும் தெளிவாகவும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
43.   எப்போதும் ஒரு சாதகன் தனது பண்புகளை (குணங்களை) செயல்களை (கர்மங்கள்) இயல்புகளை (சுபாவங்களை) ஒரு ஆன்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய நெறியில் இருந்து சிறிதும் வழுவாமல் ஆக்கி கொள்ள வேண்டும்.
44.   பிறக்கும்போது ஒருவர் முற்பிறவியில் அவர்களுக்கு ஏற்பட்ட பண்புகளுடன் தமது தீயபண்புகளின் படிவுடன் தான் பிறக்கிறார். இவற்றை பூஜைகள் செய்வதாலோ, குருவருளாலோ கூட அழித்து விட முடியாது. அவற்றை அழிக்க ஒரேவழி அவற்றை எதிர்த்து போராடுவது மட்டுமே, தீய எண்ணங்கள் எமது மனதில் நுழையும்போது அவற்றை எதிர்த்து போராட தகுந்த நல்லெண்ணங்களால் ஆன படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
45.   தீய எண்ணங்கள் பழக்க வழக்கங்களை நம்பியே வாழ்கின்றது. ஒருவர் தமது நல்ல பழக்க வழக்கங்களை உறுதியாக பின்பற்றினால் தீய எண்ணங்கள் அவர்களில் நிலை கொள்ள முடியாமல் போகும்.
46.   திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சந்திக்கும் புண்ணிய தீர்த்தம் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடுபவர்கள் பாவங்கள் நீங்கி புண்ணிய வாழ்க்கை அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நீரில் மூழ்குவதால் காக்கை குயிலாக மாறமுடியாது என்பதை அனைவரும் அறிவர்.
47.   திரிவேணி சங்கமத்தின் உண்மை அர்த்தம் உபாசனை, சாதனை, ஆராதனை என்றார் மூன்று மின்னோட்டங்களை மக்கள் ஸ்தூலமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இப்படி கதா ரூபத்தில் கூறி வைத்தார்கள். மேற்குறித்த இந்த மூன்று மின்னோட்டங்களும் ஒன்றாக சேரும்போது ஒரு மனிதனின் அகவாழ்வும், புற வாழ்வும் அசாதாரண முறையில் மாற்றம் அடைந்து விடுகிறது.
48.   உபாசனை, சாதனை, ஆராதனை ஆகிய மூன்றும் வெவ்வேறு நேரத்தில் அல்லது ஒரே நேரத்த்தில் செய்யும் சடங்குகள் அல்ல. இது மனிதனின் சிந்தனை, பண்பு, எண்ணங்கள் ஆகியவற்றில் ஏற்படும் உன்னதமான மாற்றங்கள். இதற்கு உடலின் செயலையும், மனதின் எண்ணங்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும்.
49.   பாவங்களை அழிக்க கூர்மையான ஞானத்தை பாவிக்க வேண்டும். சர்க்கஸில் விலங்குகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியைபோல் எமது மனதிற்கு நல்ல கருத்துக்களை புகுத்தி, நற்செயல்களை செய்ய வைத்து, நல்ல சுபாவத்தை உருவாக்க வேண்டும்.
50.   உபாசனையை – காயத்ரி ஜெபத்தை சிறிது நேரம் செய்தல் போதுமானது. ஆனால் ஆன்ம சாதனையை ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வது போல் மனதையும், உடலையும் கவனித்து தொடர்ந்து செய்து வர வேண்டும்.
51.   பூஜை செய்வதை வித்தை காட்டுவது போல் நினைத்துக்கொண்டு இந்த பூஜையை செய்தால் அந்த சித்தியை அடையலாம், இந்த சித்தி அடையலாம் என்று மனப்பால் குடிப்பவர்கள் எந்த சித்தியையும் அடைவதில்லை.
52.   உபாசனை – சாதனை  –ஆராதனை ஆகிய மூன்றின் சங்கமமே திரிவேணி சங்கமும், திரிபாத காயத்ரியின் இரகசியார்த்தமும் ஆகும்.
53.   மந்திர ஜெபமும், தியானமும் செய்யும் போது மனதின் எண்ணங்கள் உபாசனையிலும், தினசரி செயல்கள் செய்யும் போது பண்பில் சாதனையும் ஊடுருவி இருத்தல் வேண்டும்.
54.   ஆராதனை என்பது ஒருவன் தனது தனிப்பட்ட தொழிலை செய்வதற்குரிய நேரமும், குடும்ப கடமைகளை கவனிக்கும் நேரமும் போக மிகுதி இருக்கும் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதுதான் ஆராதனை.
55.   சாதாரண மக்கள் இந்த நேர சேமிப்பை தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் தேவையற்ற பொருட்களை வாங்குவதில், செயல்களிலும் வீணாக்குவர்.
56.   இந்த பிரபஞ்சம் அனைத்தும் கடவுள் தன்மையால் நிறைந்தது. அந்த கடவுள் தன்மை நன்கு செயற்பட, உலகம் மகிழ்ச்சியுடன் செயற்பட ஒவ்வொருவரும் ஆற்றக்கூடிய சேவை ஆராதனை எனப்படுகிறது.
 

2 comments:

  1. ஐயா,

    நல்ல விளக்கம் ஐயா...

    பல விஷயங்கள் தெள்ள தெளிவாக இப்பதிவினை படித்ததும் நன்றாக புரிகிறது ஐயா....

    நன்றிகள் பல பல

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...