குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்களும் அனைவருக்கும் மிகுந்த பலனை அளிக்க கூடிய மந்திரங்களாகும்.
அவற்றை உங்களுக்கு பயன் படுமாறு இங்கு தந்துள்ளோம்.
தீர்த்த ஆசீர்வாதம்: செப்பு பாத்திரத்தில் நீரை வைத்து குறித்த மந்திரங்களை உச்சரித்து பின்னர் தெளித்து கொள்ளலாம்.
அக்ஷதை ஆசீர்வாதம்: பூஜையறையில் அக்ஷதையினை செய்து வைத்து குறித்த மந்திரங்களை உச்சரித்து பின்னர் தலையில் தூவலாம்.
குங்கும ஆசீர்வாதம்: கையில் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு குறித்த மந்திரங்களை உச்சரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
தீர்த்த ஆசீர்வாதம்
மந்திர புஷ்பம்
ஓம் யோபாம்
புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான்
ப்ரஜாவான் பஸுமான் பவதி ய ஏவம் வேத (1)
யாரொருவன் நீரின்
மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின்
மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)
யோபாமாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத (2)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன்
ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின்
ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)
யோபாமாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ
வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம்
வேத (3)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே
நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன்
ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின்
ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)
யோபா மாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய
தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான்
பவதி/ ய ஏவம் வேத (4)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ
அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த
தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி
அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)
யோபாமாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ
ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம்
வேத (5)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே
நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன்
ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின்
ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)
யோபாமாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான்
பவதி/ ய ஏவம் வேத (6)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன்
தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே
நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி
அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)
யோபாமாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய:
பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான்
பவதி/ ய ஏவம் வேத (7)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே
நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன்
ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி
அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)
யோபாமாயதனம்
வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/
யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான்
பவதி/ ய ஏவம் வேத (8)
யாரொருவன்
நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன்
ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின்
ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)
யோப்ஸு நாவம்
ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி (9)
யாரொருவன் நீரில்
நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)
·
ஓம் சாந்திரஸ்து
·
ஓம் புஷ்டிரஸ்து
·
ஓம்
திருப்திரஸ்து
·
ஓம் அவிக்னமஸ்து
·
ஓம் ஆயுஷ்யமஸ்து
·
ஓம்
ஆரோக்கியமஸ்து
·
ஓம்
ஸிவகர்மாவஸ்து
·
ஓம்
கர்மஸம்ருத்திரஸ்து
·
ஓம்
வேதஸம்ருத்திரஸ்து
·
ஓம்
சாஸ்திரஸம்ருத்திரஸ்து
·
ஓம்
இஷ்டசம்பனமஸ்து
·
ஓம்
அரிஷ்டரிஜாஜனமஸ்து
·
ஓம் யத்பாப
சனாரூப்ய அசுபம் அகர்மானம் அஸ்து
·
ஓம் யத்ரேயமஸ்து
·
ஓம் உத்தரே
கர்மாணி அவிக்னமஸ்து
·
ஓம் ஆரோக்கியம்
அரிஹர விஹி விருத்தி ரஸ்து
·
ஓம் ஆரோத்ரா
க்ரியாஹா சுதாஹா சோபாஹ சம்பனமஸ்து
·
ஓம் ஆயுஸ்வந்தர்
பவ
·
ஓம்
ஆரோக்கியவந்தர் பவ
·
ஓம் சுகவந்தர் பவ
·
ஓம் மக வந்தர் பவ
·
ஓம் தான தான்ய
வந்தர் பவ
·
ஓம் விஜய வந்தர்
பவ
·
ஓம் கீர்த்தி
வந்தர் பவ
·
ஓம் பல வந்தர் பவ
·
ஓம் தேஜஸ் வந்தர்
பவ
·
ஓம் வித்யா
வந்தர் பவ
·
ஓம் புத்தி
வந்தார் பவ
·
ஓம் பாக்ய வந்தர்
பவ
·
ஓம் பத்ர வந்தர்
பவ
·
ஓம் சகல கர்ம
சித்திவந்தர் பவ
·
ஓம் தைர்ய வந்தர்
பவ
·
ஓம் ஐஸ்வர்ய
வந்தர் பவ
·
ஓம் புண்ய வந்தர்
பவ
·
ஓம் சிரேஷ்ட
மித்ரவந்தர் பவ
·
ஓம் லக்ஷ்மீ
வந்தர் பவ
·
ஓம் மனஸ்வந்தர்
பவ
·
ஓம் ஆத்ம வந்தர்
பவ