சோம்பலின் காரணம் என்ன ? - சில யோக, சித்த மருத்துவ கருத்துக்கள்

நண்பர் ஜெய்கணேஷ் அவர்கள் கீழ்வரும் கேள்விகளின் எனது புரிதலை சித்த மருத்துவம் சார்ந்து பதியும் படி கேட்டிருந்தார். விடைகள் வருமாறு;

மருத்துவர் Thava Sumanenthiran.. சோம்பலைப் பற்றிய சித்த மருத்துவத்தின் கருத்தென்ன..? இது நோயா..? இதற்கு மருந்துகள் எதுவும்..?
1)    சோம்பல் என்பது உண்மையில் என்ன..?
a மூளையின் தூக்கமா.. அல்லது 
b
மனதின் தூக்கமா.. அல்லது 
c
உடலின் மறுப்பா..? இல்லை 
d
சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதை நோயா..? 
e
பேய், பிசாசு, பிரேத துர் தேவதைகளின் தாக்குதலா..? 
f
கிரகங்களின் கோளாறா..? 
g
விட்டேத்தி துறவு மனநிலையா..?
2) சோம்பல் ஒருவனைத் தாக்குவது எப்போதெல்லாம்..?
3) சோம்பல் வருவது எதற்காக..? ஏன்..?
உங்களுடைய ஒன்று தொடக்கம் மூன்று வரையிலான கேள்விகளிற்கு பதில் வருமாறு;
சோம்பல் என்பது உடலிலும், மனதிலும் ஏற்படும் பிராண சக்தி குறைபாடு, பிராணன் மூச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலின் பிராணனின் இழப்பு நோய்கள், உணவு முறை, இருக்கும் சூழல் என்பவற்றால் ஏற்படலாம்.
மனதின் பிராண சக்தி இழப்பு அதீத சிந்தனை, கவலை, கோபம் போன்ற எந்த நல்ல கெட்ட உணர்ச்சிகளினதும் அதீத நிலையால் ஏற்படலாம்.
உடல், மனம், பிராணன் ஆகிய மூன்றில் எந்த ஒன்றினதும் சமநிலை கெட்டால் முதலில் இயலாமை என்ற சோம்பலும், தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு இந்த நிலை ஏற்படும்போது நோயும் ஏற்படும். சரியாக கூறுவதானால் சோம்பல் என்பது ஒருவித உடல் மன பிராண சமநிலை இன்மை!
மேற்குறித்த ஆரம்ப நிலையில் சரியாக கட்டுப்படுத்தப்படாத நிலை நரம்புகளை, சப்த தாதுக்களை பாதிக்கும்போது அது நோய் எனப்படும்.
பேய், பிசாசு என்று கூறுவனவும் ஒருவித உறிஞ்சும் நிலை கொண்ட பிராண சக்தி அதிர்வுகளே! இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள், இவ்வாறானவர்களுடன் உரையாடினாலே எமது மனதிலும், உடலிலும் ஒருவித சோர்வு உண்டாவதை அவதானிக்கலாம், ஆங்கிலத்தில் psychic vampire எனக்குறிப்பிடப்படும் நிலை இதுதான்.
இதுபோல் கிரகங்களும் எமது பிராணனின் அதிர்வினை கட்டுப்படுத்தும், எமது பிறப்பு ஜாதகம் என்பது எமது இயற்கை கிரக பிராண இருப்பை குறிப்பவை, அவை பாதகமாக இருந்தால் குறித்த திசா புத்தி காலத்தில் இத்தகைய சோர்வு நிலை ஏற்படும்.

4) சோம்பலில் இருந்து ஒருவன் விடுபட உழைப்பைத் தவிர வேறு எதேனும் எளிய வழி...?
உழைப்பு என்பது சரி இல்லை, உங்களிடம் அதிக பிராணசக்தி இருந்து நீங்கள் மனதளவில் சோம்பலாக இருந்தால் உழைப்பு நல்ல தெரிவு, ஆனால் உங்களிடம் பிராண சக்தி தகுந்த அளவு இல்லாமல் சோம்பலாக இருக்கும்போது அதிக உழைப்பு நோயினை கொண்டுவரும், ஆகவே சோம்பலின் காரணம் என்ன காரணத்தினால் என்பதனை அறியாமல் உழைப்பு தேவை என்பது பிழையானது, அடிப்படையில் பிராண சக்தி சேமிப்பினை அதிகமாக்க வேண்டும்.

5) சோம்பல் மறுபடியும் தாக்காமலிருக்க தற்காப்பு வழிமுறைகள் ஏதேனும்..?
ஆம், நிச்சயமாக, சோம்பலில்லாத சிரஞ்சீவி ஹனுமான், ஹனுமனின் குணம் தேவையில்லாமல் தனது பிராணனை செலவழிக்காத்தவர், அதனால்தான் அவரது பெயர் பிராணேஷ், எனது குருநாதர் ஹனுமானின் உப்பிய வாய் அவரது பிராண சித்தி ரகசியம் என்று கூறுவார், அதனை சக்தி பிரணாயாமம் என்று சொல்லுவோம், மூக்கினால் மூச்சினை இயலுமான அளவு எடுத்து, பின்னர் ஹனுமானது கன்னத்தினை போல் உப்பி வாயினை குவித்து (சீழ்க்கை அடிப்பது போல்) மூச்சினை இயலுமான அளவு வேகமாக வெளிவிடவேண்டும். அளவுக்கு மீறி முயற்சிக்க கூடாது. இப்படி ஐந்து சுற்று செய்தால் எப்படிப்பட்ட சோம்பலாக இருந்தாலும் போய்விடும்.
இதேவேளை சக்தி இழப்பு ஏற்பட வைக்கும் அதீத உழைப்பும், சிந்தனை, பயம், கோபம், காமம் போன்ற உணர்சிகளில் அதீதமாக இருக்க கூடாது. உணவு, வாழ்க்கை முறையில் ஒரு ஒழுங்கினையும் சமநினையினையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.  
6) ஒன்னும் செய்யாமல் சும்மா இருக்கும் துறவு நிலைக்கும் சோம்பலுக்கும் என்ன வித்தியாசம்..? இரண்டும் ஒன்றா..?
துறவில் அகத்தில் உடல்,மன, பிராண சமநிலையுடன் ஆன்மா இவற்றை விட்டு பிரிந்து இருக்கவேண்டும். சோம்பல் இவை குழம்பிய நிலை

7) உழைத்தும் அதற்கான பணம், பலன் கிட்டாமல் இருக்கும் போது தாக்கும் சோம்பல் நியாயமானதா..?

நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற தாக்கம் (shock) மனதில் ஏற்படும் போது பிராண ஓட்டத்தை குழப்பி சோம்பலை ஏற்படுத்தும், இதனை ஏற்றுக்கொள்ள கூடியவர்களுக்கு இந்த நிலையிலும் சோம்பல் வருவதில்லை, இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த சமநிலை குழம்ப கூடாது என்றுதான் ஸ்ரீ கிருஷ்ணன் “கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்றான். இத்தகைய நிலையில் சோம்பல் – பிராண சக்தி இழப்பு ஏற்படுவது அவரவர் பார்வையினை பொறுத்தது. 

Comments

 1. பயன் தரும் விளக்கம் சக்தி பிராணயாம்.
  நன்றி
  வீ.ரவீந்திரன்

  ReplyDelete
 2. ஐயா,
  நன்றி
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete
 3. ஐயா,
  அருமையான பதில்கள் மற்றும் விளக்கங்களுக்கு
  நன்றி
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு