குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 16, 2014

நவக்கிரக காயத்ரி சாதனை – சந்திர காயத்ரி மந்திர சாதனை




ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.

இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.

அதன்பின்னர் ஒரு திங்கட்கிழமை) சூரியோதயத்தில், சந்திர ஹோரை நேரத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும்.
  1. தாய் தந்தை குரு வணக்கம் -
  2. மஹா காயத்ரிமந்திர ஜெபம்108 தடவை
  3. காயத்ரி சித்தசாதனை
  4. சந்திர காயத்ரிமந்திரம் - 108 தடவை

இறுதியாக சந்திரனை மனதில் தியானித்தது சந்திர சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சந்திர  ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.

அதுபோல் சந்திரன் உச்சம் ஆட்சியாகும், பௌர்ணமி  நாட்களில் செய்தால் பலன் மிக அதிகம்.

இதனால் நீங்கள் பிறந்த போது உங்கள் சூக்ஷ்ம உடலில் குறைவாக காணப்படும் சந்திரனுடைய சக்தி பிராணனுடன் கலந்து அதிகரித்து அதன் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும். 

ஜாதகத்தில் சந்திரனால் பிரச்சனை என்று கூறப்படும் பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கீழே சக்தி வாய்ந்த தாந்திரீக சந்திர காயத்ரி மந்திரம் தரப்பட்டுள்ளது.

ஓம் க்ஷீர் புத்ராய வித்மஹே அமிர்த தத்வாய தீமஹி தன்னோ சோம ப்ரசோதயாத்

இதன் பலன்கள்:

சந்திரம் மனம், மூளை, உணர்ச்சிகளை, உணர்திறன், மேன்மை, கற்பனை, அரசி, தாய் என்பவற்றின் காரகத்துவம் உடையது. இந்த சாதனை மூலம் இந்த விடயங்களில் உள்ள பிரச்சனை தீருவதற்குரிய சக்தியை சாதகன் பெறுவான். மேலும் மனச்சக்தியும் அமைதியும் பெறுவான். மன அழுத்தம், மனநோய், உணர்ச்சிக் கோளாறுகள் என்பவற்றை இல்லாதாக்கும். மேலும் உடலையும் அகத்திணையும் அழகாக்கும். 


Monday, December 15, 2014

காயத்ரி அனுஷ்டானம்



காயத்ரி அனுஷ்டானத்தில் மூன்று வகை உள்ளன. லகு (சிறிய) அனுஷ்டானம், மத்திம (நடுத்தர) அனுஷ்டானம், உச்ச அனுஷ்டானம் என்பவை அவை. இவை தினசரி காயத்ரி ஜெபத்தில் இருந்து ஒருவருக்கு அதிகமாக ஆன்ம, மனோ, பிராண, தெய்வ சக்திகள் தமது காரிய சித்திக்காக தேவைப்படும் போது செய்து தம்மை வலுப்படுத்திக்கொள்ளமுடியும். 

1) லகு அனுஷ்டானம் என்பது 24000 ஜெபத்தினை  9 நாட்களில் முடிப்பது. தினசரி 27 மாலைகள் வீதம் செய்ய வேண்டி வரும், சராசரி மூன்று மணித்தியாலங்கள் தேவைப்படும். 

2) மத்திம அனுஷ்டானம்: 125,000 ஜெபத்தினை நாற்பது நாட்களில் தினசர் 33 மாலைகள் வீதம் செய்ய வேண்டும். 

3) உச்ச அனுஷ்டானம்: 24,00,000 ஜெபத்தினை ஒருவருடத்தில் தினசரி 66 மாலைகள் வீதம் செய்வது. 

இதன் மூலம் ஒருவன் அதிக தபஸ் சக்தியினை பெறலாம். இந்த விபரத்தினை கண்டவுடன் உடனடியாக இதனை செய்து பலன் பெறவேண்டும் என்று எண்ணி முயற்சிக்க வேண்டாம். முதலில் ஒருவருடம் குருமந்திரம், காயத்ரி சித்த சாதனை, தினசரி 108 தடவை காயத்ரி ஜெபம் செய்து மனம், உடல் உயர்ந்த சக்தியினை பெறுவதற்குரிய பக்குவத்தை சரியாக பெற்று அதன் பின் லகு, மத்திய, உச்ச அனுஷ்டானங்களை குருவின் வழிகாட்டலுடன் செய்ய வேண்டும். 

Tuesday, December 09, 2014

ஜாதக பிரச்சனைகளுக்கு நவக்கிரக காயத்ரி சாதனை – சூரிய மந்திர சாதனை


ஏற்கனவே எமது பதிவில் காயத்ரி மந்திரம் மூல மந்திரம் அதன் சாதனையின் மூலம் பல்வேறு தேவதா சக்திகளை பெறலாம் என்று கூறியுள்ளோம். இந்த வரிசையில் இன்று எல்லோருக்கும் இருக்கும் பயம் நவக்கிரகங்கள், ஆகவே இந்த தொடரில் ஒன்பது கிரகங்களது காயத்ரி மந்திரத்தினையும் அதன் மூலம் குறித்த கிரகசக்தியினை எம்மில் ஈர்த்து எமது குறைகளை போக்கி கொள்ளும் முறையினையும் விளக்குகிறோம். தேவையானவர்கள் பயிற்சித்து பலன் காண்க.

இதற்கான நிபந்தனை, முதலில் தினசரி நூற்றி எட்டு தடவை மகா காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ.......) கூறி, சித்த சாதனை செய்து முடித்திருக்க வேண்டும்.

அதன்பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை (இது சூரிய சாதனைக்கு, சனியிற்கு சனிக்கிழமை) சூரியோதயத்தில் கீழ்வரும் ஒழுங்கில் செய்ய வேண்டும்.
  1. தாய் தந்தை குருவணக்கம்
  2. மஹா காயத்ரிமந்திர ஜெபம்108 தடவை
  3. காயத்ரி சித்தசாதனை
  4. சூரிய காயத்ரி மந்திரம் - 108 தடவை

இறுதியாக சூரியனை மனதில் தியானித்தது சூரியனுடைய சக்தி எமது உடல், மனம், பிராணன் என்பவற்றில் சேர்வதாக பாவிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வசதியான்  சூரிய ஓரையில் இதனை நாற்பது நாட்கள் செய்து வரவேண்டும்.

அதுபோல் சூரியன் உச்சம் ஆட்சியாகும் மாதங்களிலும் செய்தால் பலன் மிக அதிகம்.

இதனால் நீங்கள் பிறந்த போது உங்கள் சூக்ஷ்ம உடலில் குறைவாக காணப்படும் சூரியனுடைய சக்தி பிராணனுடன் கலந்து அதிகரித்து அதன் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் சூரியனால் பிரச்சனை என்று கூறப்படும் பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

கீழே சக்தி வாய்ந்த தாந்திரீக சூரிய காயத்ரி மந்திரம் தரப்பட்டுள்ளது.


ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் 



Monday, December 08, 2014

அகத்திய மகரிஷி அருளிச்செய்த‌ மனோன்மணி பூசை அகவல்

இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்துவிட்டு நானும் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் அவர் செய்வதாக இருக்க கூடாது என்ற வீம்புடன் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது தினசரி பாராயணம்தான் இந்த மனோன்மணி அகவல்.

அப்போது இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டதன் காரணம் "அகத்திய மாமுனிவர் அருளியது" என்று அதன் தலைப்பில் இருந்த அறிமுகம் மட்டுமே. அர்த்தம் புரியாமல் சிறுவயதில் விளையாட்டாக வீம்பிற்கு படித்ததன் பலனோ என்னவோ, அதன் இறுதி வரிகளில் கூறப்பட்டதுபோல் "குருவடிவாயு பதேசங் கொடுத்துன் திருவடி தந்தருள் சிவசிவா சரணம்" என்ற பலன் எனது வாழ்வில் மெய்ப்பட்டது.

ஆம் குருவடிவாய் காயத்ரி மஹாமந்திர உபதேசமும், ஸ்ரீ வித்யா உபதேசமும் தேடாமலே கிடைக்கப்பெற்றது! 

ஆக தேவியை உபாசிக்க வேண்டும் என பேராவல் கொண்ட அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ இதனை படிக்க பலன் உண்டு என்பது எமது அனுபவ உண்மை!
ஹ்ரீம் ஓம் மனோமணி அற்புதப் பொருளே
ஆதியே பரையே சோதியே சுடரே
ஹ்ரீம் ஓமென்னு மக்ஷரத் தாதி
ஸ்ரீ ஓமென்னும் சிற்பரத் தாளே
உருவடி வான வுத்தமக் கொழுந்தே
அருவடி வான ஆதிய நாதி
ஓங்கி றோமான ஓங்கார றீங்கிலியே
ஆங்கிறோ மான ஆதி யனாதி
புவனப் பதியே போற்றி சிவய நம
சிவய நம வென்று சிந்திப்போர்க்கு
அபாய மறுக்கும் மறு கோணத்தி
சற் கோணத்தி சற பாணத்தி
சொற் பவனத்தி சூக்ஷ்ம ரூபி
திரிபுர பவா திகழொளி பவா
பரிபுர பவா பவனொளி பவா
சயளொளி பவா சரஹன பவா
ஆயிளொளி யான அகார றீங் கிலியே
பராபரப் பொருளே பளிங்கொளி யாளே
நிராதார மான நிஷ்கள ரூபி
சவ்வுங் கிலியும் யவ்வுமா னவளே
யவ்வும் உவ்வும் சவ்வுமா னவளே
வாசி என்னும் வளரொளிக் கொழுந்தே
பூசனை புரியும் புவனப் பதியே
கிறிபுங் கிலியுஞ் சங் வங் யங்குச
ஆற்பனத் துஞ்சி யமுத வர்ஷினி
இறியும் இறீயும் றியுமானவளே
றீங்காரத்திலிருக்கும் வடுக்கா வங் யங்
வடுகா யங் வங் ஆபத் தாரணா
பஞ்சாட்சரத்தின் பழம்பொருளாதி
நெஞ்சாட்ச் சரத்தி னிறைந்திருப் பவளே
பிரிவரை யில்லாப் பெண்ணுக் கரசே
சிவாய வென்னும் தெரிசனப் பொருளே
பூவார் குழலே புவனா பதியே
சாற்றும் பொருளே சவுந்தரி யாளே
யேற்று மடியார்க்கு கிருதயத்தி லேழுதாப் பொருளே
அவ்வுயி ராளே யவயசாட்சி யமுதவர்ஷினி
செய்வினை தீர்க்கும் திரிகோணத்தி
ஐயுங் கிலியு முன்பத்தோ ரட்சரமுந்
துய்யுஞ் சவ்வுமாய்த் தோன்றி நின்றவளே
பேயனாகிலும் பெற்றருள் பிள்ளையைத்
தாயே காக்கத் தானுனக்கே பாரம்
யாநின் னுடையான அருவுரு வாளே
சரணஞ் சரணம் நமஸ்தே சரணம்
வன சௌந்தரி போற்றி நமஸ்தே
குருவடிவாயு பதேசங் கொடுத்துன்
திருவடி தந்தருள் சிவசிவா சரணம்



அகவல் முற்றிறு

Saturday, November 29, 2014

காயத்ரி மந்திரமும் தமிழரும்

தமிழர்கள் பலர் காயத்ரி மந்திரத்தினை தமக்கு அந்நியமானதாக பார்க்கும் மனோபாவம் மிக்கவே இருக்கிறது. இதற்கு நாத்திகவாதமும், எதையும் எதிர்க்கும் மூர்க்கத்தனமான தூற்றல் அரசியலும் காரணமாக இருக்க முடியும்.  இன்று வேற்று இனத்தவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், எங்கோ யாரோ விஞ்ஞானி உறுதி அளித்ததாக் தரப்படும் சான்றிதழை வைத்துக்கொண்டு, தமது சுய அறிவால் கானாதனை கண்மூடித்தனமாக நம்புவபர்கள் தானே பரீட்சித்து, தனது மனதினை அறிவினை தெளிவு படுத்தும் தொழில்நுட்பத்தினை கண்மூடித்தனமாக மறுதலிப்பது பெரும் அறியாமையாகும்

Friday, November 28, 2014

ஆத்ம யோக ஞானம்

ஆன்ம தேடலுடன் தன்னை அறிந்து தனக்கு மேலே உள்ள மஹா சக்தியை அடைய வேண்டும்  என விரும்புபவன் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் எனது குருநாதர் உபதேசித்த படி
  1.  நீ யார்?,
  2. மனிதனின் அமைப்பு,
  3. ஆன்ம சுதந்திரம்,
  4. சூக்ஷ்மம்தான் உண்மை மனிதன்,
  5. சூக்ஷ்ம உடல்,
  6. சூக்ஷ்மமும் ஸ்தூலமும்,
  7. சூக்ஷ்ம சாதனையின் தொடக்கம்,
  8. மனக்கண் செயல் பயிற்சி,
  9. கர்மாவும் வாழ்க்கையும்,
  10. கர்மாவை வெல்லும் வழி,
  11. நல்ல அறிவும் கேட்ட அறிவும்,
  12. அறிவின் துணை பெறல்,
  13. முக்காலமறிதல்,
  14. கால ஞானமும் சூக்ஷ்ம திருஷ்டியும்,
  15. சூக்ஷ்ம திருஷ்டி பயிற்சிகள்,
  16. வாழ்வின் குறிக்கோள்,
  17. விலங்குகளின் பரிணாமம்,
  18.  வாழ்க்கைப் பட்டியல்,
  19. பாவனா சக்தி,

தியானத்தின் மூலம் பேரறிவு பெறல்


தியானம் என்பது மனத்தைக் கடந்து உணர்வை ஒடுக்கல் என்று பார்த்தோம், அந்த உணர்வு எதில் ஒடுங்குகிறதோ அதன் தன்மைகளை உணர்வும் உணர்வினூடாக மனமும், மனத்தினூடாக புத்தியும், உடலும் பெறும். ஆகவே உணர்வை பிரபஞ்ச பேரறிவில் ஒடுக்கினால் மனிதன் பிரபஞ்ச சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளமுடியும். இதற்குரிய ஓர் எளிய வழி காயத்ரி ஜெபமும், தியானமும், காயத்ரி மந்திர ஜெபம் தாரணையாகி பின்னர் உணர்வே காயத்ரி மந்திர மயமாகும் போது ஒளி வடிவான பரம்பொருள் எமது புத்தியில், மனதில் பிரகாசிக்க தொடங்கும்.

மனமும் தியானமும்

தியானம் என்பது மனச்சாதனை அல்ல, அது ஒரு உணர்வு சாதனை, உணர்வு எப்போதும் மனதுடன் இருந்து செயற்படுவது, மனதைக் கடந்து உணர்வை பிரித்தால் தியானம் சித்திக்கும். உணர்வு அது எதனுடன் ஒன்றுகிறதோ அதன் தன்மையினை பெற்று அதுவாகும். அதாவது ஒருவன் பிரபஞ்ச மகா சக்தியை தியானப்பொருளாக கொண்டு உணர்வை ஒடுக்குவானேயானால் அவனே அந்த பிரபஞ்ச சக்தியே ஆவான். தியானத்தின் உணர்வு மனதை தாண்டி வந்துவிடுகிறது, அப்படி தாண்டி வருவதற்கு எண்ணங்களை ஒழுங்கு [படுத்தும் செய்கையே தாரணை அல்லது எகாக்கிரம் எனப்படுகிறது. எந்தவொரு தியானத்தினை செய்வதற்கு முன்னரும் தாரணை செய்யப்படவேண்டும். தாரணை என்பது உணர்வு எனும் வாகனம் தியானப்பொருளை நோக்கி வேகமாக பயணித்து ஒன்றுவதற்கு ஏற்படுத்தப்படும் போக்குவரத்து கட்டுப்பாடு போன்றது, சலனமுற்றுக் கொண்டு இருக்கும் மனம் traffic Jam ஆன பாதை போன்றது, இந்த பாதையினூடாக உணர்வு பயணித்து இலக்கை (தியானப்போருளை) அடைந்து ஒன்றுவது கடினம், ஆகவே traffic control ஆகிய தாரணை இன்றி தியானம் செய்ய முடியாது.

மனம் - தாரணை - தியானம்


பலரும் மனதை கட்டுப்படுத்தவேண்டும், அடக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். தியானம் யோகம் என்பவற்றை செய்பவர்களை கேட்டாலும் இதே பதிலைத்தான் தருகிறார்கள். உண்மை இதுவல்ல பாராசக்தியின் மாயா சக்தி சொருபமான மனதை அடக்கவோ, ஒடுக்கவோ ஆரம்ப நிலையில் எவராலும் செய்ய முடியாது. சிவமானவனுக்கே மனம் அடங்கும். அப்படி செய்ய முனைபவகள்தான் யோகம், தியானம் என்று போய் வாழ்க்கையை குழப்பி கொள்பவர்கள். பலதிசைகளில் எண்ணமாக விரிந்து உணர்வை குழப்பும் மனதை பிராண சக்தி செலவினை குறைந்து ,ஒழுங்குபடுத்தி ஒரு திசையில் ஓடச்செய்யும் செய்கையே தாரணை அல்லது எகாக்கிரம், இதனை சாதிக்க இதன் முடிவில் மனம் அகன்று உணர்வு தியானிக்கும் பொருளுடன் ஒன்றாவதே தியானம்.

Wednesday, November 26, 2014

பஞ்ச ப்ரணாலீ

சரீரம், பிரபஞ்சம், மனம், ஆத்மா, தேவதை ஆகிய ஐந்தும் குருதத்துவத்தின் பஞ்ச ப்ரணாலீ எனப்படும். சாதகன் சரீரத்தின் மூலம் பிரபஞ்சத்தினை உணர்கிறான், சரீரத்தையும் பிரபஞ்சத்தினையும் உணர்ந்த பின்னர் மனசின் குணங்களை, சக்திகளை உணர்கிறான், மனதின் சக்தியால் ஆத்மாவை உணர்கிறான். அதன் மூலம் தேவதையினை உணர்கிறன், இவற்றை எல்லாம் தொட்டு காட்டுவது குருவின் கருணையான உபதேசமே! ஆகவே ஸ்தூல சரீரத்தின் உதவியால் சூக்ஷ்ம சரீரத்தின் தன்மைகளை உணர்ந்து அதன் மூலம் தேவதையின் ச்வரூபத்தினை உணர்கிறான், இவையெல்லாம் குருவின் அன்பிலிருந்தே சுரக்கும்.

காலீகானந்த நாதர் - காலீ உபாசகர்

Monday, November 24, 2014

அகஸ்தியர் ஞானம் முப்பது - பழைய பிரதி


எனது பாட்டனார் வைத்திய கலாநிதி அ. வேலுப்பிள்ளை அவர்களின் சேமிப்பில் இருந்த புத்தகத்தில் இருந்து.......





Wednesday, November 05, 2014

கனடாவில் காயத்ரி தீட்சை, மானச யோக பயிற்சி வகுப்புகள் (5-12-2014 & 6-12-2014)

அன்பின் நண்பர்களே,

குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் சீடர் இராஜ யோகி இராஜமோகன் ஐயா அவர்கள் கனடா விஜயம் செய்ய உள்ளார்கள்.

இதன் போது காயத்ரி தீட்சை, ஆன்ம, யோக, மானச வித்தைகளின் விளக்கங்களும் பயிற்சிகளும் ஆர்வம், பக்குவம் உள்ளவர்களுக்கு தருவார்கள்.

இந்த விடயத்தில் ஆர்வம் உள்ள கனடாவில் வசிப்பவர்கள், உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அறியத்தரவும்.

இது தொடர்பாக கனடாவில் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி;

contact: Arul K.Jayandran, Canada
phone: 001-6476383412
e-mail: kand2000@hotmail.com

Friday, October 31, 2014

சனி பெயர்ச்சி - ஸ்ரீ சனீஸ்வரர் உடன் ஒரு குருசிஷ்ய சம்பாஷனை


சனிஸ்வர பகவானே! குருதேவா! கடந்த ஒருவாரமாக இங்கு மக்கள் நீங்கள் இராசி மாறப்போகிறீர்கள் என்று பயந்து போய் இருக்கிறார்கள்!

புத்தரை வழிபடும் சகோதரர்களும் உங்களை கண்டு பயந்து பரிகாரம் என்று ஜோதிடர், கோயில் என்று ஓடியவண்ணம் இருக்கிறார்கள்!

கடவுள் இல்லை என்று நாத்திகமும், கொமினிசமும் பேசும் நண்பர்களும் பின்வாசலால் ஜோதிடரிடம் சென்று விசாரித்துக்கொள்கிறார்கள்!

தன்முயற்சி இல்லா மாணவர்கள் உங்கள் மேல் குற்றம் சாட்டிவிட்டு நீங்கள் இருக்கும் நிலையில் படித்தாலும் தலையில் ஏறாது என்று கூறுகிறார்கள்.

கணவனுக்கும் மனைவியிற்கும் வரும் மனஸ்தாபம் உங்களால் என்று குறை கூறுகிறார்கள்.

ஜோதிடர்களும், கோயில்களும் உங்கள் பாதிப்பினை இவர்கள் எல்லோருக்கும் குறைத்து தருவதாக வாக்குறுதி அளித்து ஸ்பெஷல் பக்கேஜ் அறிவித்துள்ளார்கள்!

இவற்றில் எவை உண்மை? எது பொய் சற்று விரிவாக கூற வேண்டுகிறேன் ஐயனே!
 *****************************************************
சித்த யோக மார்க்கத்தில் பயணிக்கும் நன் மனது கொண்ட அன்பனே!

உன் குருநாதர் உனக்கு உபதேசித்த சித்தர்களின் வாக்கான “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு” என்பதனை நீ அறிவாய். இது உண்மையிலும் உண்மை!

அண்டத்தில் நவகோள்களில் ஒருவனாக, பூமிக்கு சக்தி அளித்து மனிதகுலத்தின், பூமியின் பரிணாமத்தினை இயக்குவதில் நானும் ஒரு பங்காளன்!

அதேபோல் பிண்டமாகி உன்னிலும் நான் இருக்கிறேன்! உன்னில் நான் இருக்கும் போது என்னை எண்ணி ஏன் பயப்படவேண்டும்! இது மனிதன் தான் யார் என்று அறியாமல் இருக்கும் அறியாமையில் வந்த பயம் அன்றி வேறில்லை!

மேலும் முற்காலத்தில் இந்த உண்மையை அறிந்த சித்தர்கள், ரிஷிகள் பாமரரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதை ரூபமாக எழுதியதை கதையில் உள்ள கருத்தை புரிந்து கொள்வதை விட்டு விட்டு மக்களை பயமுறுத்த தொடங்கி விட்டனர்!

நான் முன்னர் கூறியபடி உன்னில் நான் இருக்கிறேன்! நான் மட்டுமல்ல! நவகோள்கள்! நட்சத்திரங்கள்! என பிரபஞ்ச சக்திகள் அனைத்துமே இருக்கின்றன! இறைவனின் படைப்பில் இவற்றை பெற்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு படைக்கப்படுள்ளான்!

மனிதன் அடிப்படையில் செயலாற்றுவதற்கு ஒன்பது வகையான பிரபஞ்ச அடிப்படை சக்திகள் தேவைப்படுகிறது! அவற்றை தருபவற்றை நவகோள்கள் என்கிறார்கள்.

இந்த சக்திகளை பெறும் மனிதன் தனது மனத்தின் மூலம் அவற்றை நல்லதாகவோ, தீயதாகவோ சமைத்துக்கொள்கிறான்! இதனை நீ தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும்!

நவகோள்களான நாம் நன்மையினை, தீமையினை நாமாக வழங்குவதில்லை! நீங்கள் உங்கள் மனதினால் சமைக்கும் எண்ணங்களை தகுந்த நேரத்தில் செயற்படுத்துவோம்! இப்படி செயற்படுத்துவதில் ஒவ்வொரு நவகோள் நாயகர்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது!

எனது தனித்தன்மை என்னவென்றால் நல்லெண்ணம், தெய்வ பக்தி, தூய மனம் உடைய ஒருவனுக்கு அவன் செய்யும் செயலுகான பலனை பலமடங்காக எனது சக்தி மூலம் பெருக்கி கொடுப்பேன்!

அதேபோல் ஆணவம், வஞ்சனை, சமூகத்திற்கு விரோதமான செய்கை செய்பவர்கள் போன்றோருக்கும் அதேவிதியினை பின்பற்றி பலன் கொடுப்பதில் வஞ்சனை செய்வதில்லை!'

ஆகவே நல்லெண்ணமும், தூய மனது கொண்டவனும் என்னை நினைத்து அஞ்சத்தேவையில்லை! இப்படி பயந்த எண்ணங்களை எடுப்பதால் பலர் நன்மைகள் செய்தும் தீயபலனை அனுபவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்! ஏனெனில் மனிதர்களாகிய நீங்கள் மனதில் எதை விதைக்கிறீர்களோ அவற்றை பெருக்கி உங்களுக்கு தரும் சக்திகளே நாம் அன்றி எமக்கு விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை!

என்னை மந்தன் என்றும், நொண்டி என்றும் கூறுவார்கள்! இதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று எண்ணுகிறேன்! இந்த சூரியமண்டலத்தில் மெதுவாக சுழல்பவன் என்பதனை பாமரர்கள் விளங்க குறித்த சொற்கள் அவை! வேகமாக ஓடுபவன் கண்களில் சில விடயங்கள் தப்பிவிடும் அனால் மெதுவாக நடப்பவனால் பலத்தை அவதானிக்க முடியும், அதுபோல் மனிதரது எண்ணம், செய்கை என்பவற்றில் விதைத்ததற்கான பலனை தருவதில் நிச்சயமானவன் நான்!

எனது சக்தியினை அதிகம் பெற்றவன் உலக மாயையில் இருந்து வெளிப்பட்டு பேருண்மையினை அறியும் ஆற்றல் உள்ளவனாவான்! பிரபஞ்ச உண்மைகளை அறிய ஆர்வம் கொண்டவனும், நிமிடத்திற்கு நிமிடம் கற்கவேண்டும் என்று உன்னைப்போல் ஆர்வம் கொண்டவனும் எனது சக்தியினை அதிகம் பெற்றவர்கள்!

எனது சக்தி ஒவ்வொருவனுக்கும் அவனது உண்மை தன்மையினை உணர்த்தும்!  எப்படி என்றால் பல நேரங்களில் அவன் மனதில் விதைத்ததை அவனாலேயே அறிய முடிவதில்லை! அதற்கான பலனை இன்பமாகவோ துன்பமாகவோ நான் தரும்போது அவன் எதை விதைத்தான் என்பதனை அறிவித்து ஞானம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுதுகிறேன். ஆனால் மனிதர்களது மனநிலை ஏற்பு இல்லாததால் அவர்கள் அவற்றை பெறுவதில்லை.

அன்பனே, ஒருவிடயத்தினை புரிந்து கொள்! எனது பாதிப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது! ஆனால் நான் தருவது நல்லதா? கேட்டதா? என்பது எப்போதுமே உனது தெரிவு அன்றி எனது விருப்பம் அல்ல!

உண்மைகளை கடுமையாக சொல்லி அனுபவத்தினை கொடுத்து ஞானத்தினை பெறவைக்கும் மனித உடல் தாங்கிய குருவில் எனது இந்த சக்தி செயற்படுகிறது.

மேலே நீ கேட்ட பரிகாரங்கள், பூஜைகள், யாகங்கள்  என்பன தன்னை அறிந்த ஞானம் பெற்ற ரிஷிகள் எனதும், மற்றைய கோள்களின் சக்திகளை ஈர்பதற்கு ஏற்படுத்திய வழிகள்! இவற்றை எவ்வளவு செய்தாலும் நீ உன்னில் விதைத்ததை தான் பெறுவாய் என்பதனை நினைவில் கொள்!

ஆகவே உனக்கு துன்பம் ஏற்படும் போது யாரையும், எதனையும் குறை சொல்ல வேண்டாம், உனது இதயத்தினை திறந்து என்னை குருவாக தியானித்து அந்த துன்பத்திற்கு காரணமான எனது செய்கை, எண்ணம்  என்ன என்பதனை தியானி! உனது ஆழ்மனம் மூலம் அது உணரவைக்கப்படும்! அதன்பின்னர் அத்தகைய செயலை எண்ணத்தினை நான் எடுக்க மாட்டேன் என்ற உறுதியினை எடுத்து மனதில் அன்பு, பரிவு, பாசம் போன்ற நல்ல எண்ணங்களை விதை! நன்மை பெறுவாய்!
இப்படி கணத்திற்கு கணம் தன்னை திருத்திக் கொண்டு ஞானத்துடன் வாழ்பவனுக்கு எனது சக்தி நன்மையினை அளிக்கும்.

பயத்துடன், சுய ஒழுக்கம் இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களுக்கு அவர்கள் உள்ளிருப்பவற்றை வெளிப்படுத்துவேன்!
ஆகவே எனது சக்தி நன்மை செய்ய வேண்டுமா, தீமை செய்ய வேண்டுமா என்பது எப்போதும் உன்னிடமே உள்ளது என்பதனை அறிந்து மனதில் நல்லெண்ணங்களையும் நற் செய்கைகளையும் விதைத்து வா! நன்மை பெறுவாய்!
உண்மையை அறிந்து உயர்வு பெற ஆசிகள்!


நன்றி ஐயனே!



Thursday, September 25, 2014

நவராத்திரி அனுஷ்டானம்


அண்டத்தினை இயக்கும் ஆதி சக்தியினை எம்முள் ஈர்க்கும் நன்னாட்கள்! பிரபஞ்ச இயக்கவியலை அறிந்த சித்தர்களும் மகரிஷிகளும் ஏற்படுத்தி வைத்த இந்த நாட்கள்  மனிதனாக பிறந்து தெய்வ சக்தி பெற்று இன்பமுடன் வாழ்ந்து இறையினை அறியந்து உணர  விரும்பும் அனைவருக்கும் பிரபஞ்ச தானாக சக்தி உதவும் நாட்கள் இந்த நவராத்திரி தினங்கள்.

பொதுவாக பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் சூரிய சந்திரனூடாக பிரதானமாகவும் மற்றைய கோள்களினூடாகவும் பூமியை அடைகின்றது.
இதன் அளவும் தன்மையும் சூரியன் நட்சத்திர மண்டலங்களில் இருந்து ஈர்த்து பூமிக்கு தரும் நிலைகளையே சூரிய மாதம் என்கிறோம்,

அதுபோல் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் திதி எனப்படும், இந்த தூர வேறுபாட்டால் பிரபஞ்ச சக்திகளின் சலனம் நடைப்பெற்று பூமி சக்தி பெறுகிறது. அமாவாசையில் அருகில் வரும் சூரிய சந்திரர் மீண்டும் பிரியத்தோடங்கும் நாட்கள் வளர்பிறை திதிகள் எனப்படுகிறது. இந்த வளர்பிறை திதிகளில் சந்திரனின் மூலம் பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக வருவதால் வளர்பிறையில் நல்ல விடயங்கள் செய்யலாம் என்று வைத்தனர்.

இயல்பிலேயே பூமியில் இந்த நாட்களில் அதிக பிரபஞ்ச சக்திகள் அலைக்கழிந்தாலும் மனிதன் அதனை பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் மட்டுமே அதீதமாக பெறலாம், அதனால் நவராத்திரி என்று விழாவாக ஏற்படுத்தி சக்திகளை ஈர்க்கும் முறைகளை மறைமுகமாக தெய்வ உருவங்களாகவும், தானாக பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து பூமியில் படரவிடும் தாவரங்களை நவதானியமாகவும் வகுத்து வைத்தனர்.

இது ஒவ்வொரு சந்திர மாதமும் நடைபெற்றாலும் மக்கள் காலப்போக்கில் மனமாயையினால் அறியாமல் பயன் பெறாமல் போய்விடுவார்கள் என்பதால் மக்களை ஈர்க்கும்  பலவித புராணக்கதைகளை தொடர்பு படுத்தி, அவற்றுடன் சக்தியை ஈர்க்கும் வகைகளை பூஜை முறைகளாக புகுத்தி வைத்தார்கள்.
கொலுவைத்து, படையலிட்டு மனமகிழ்வாக கொண்டாடும் அதேவேளை உயர்ந்த சக்திகளையும் ஈர்க்கும் முறைகளை அறிந்து கொண்டால் பலன் இருமடங்காகும் அல்லவா!
ஆகவே நவராத்திரி கொண்டாடும் அதேவேளை பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் முறைகள் என்ன என்பதனை அனைவரும் தெரிந்து பயன்பெற சில உதவிக்குறிப்புகள்.
1.       பூரண கும்பம்
2.       நவதானியம்
3.       தினசரி இஷ்ட மந்திர ஜெபம்
4.       அக்னி ஹோத்திரம் 

முதல் இரண்டும் அனைவருக்கும் தெரிவதால் அதுபற்றி விளக்காமல் மிகுதி இரண்டையும் பற்றி சற்று கூறுவோம்.
இஷ்ட மந்திர ஜெபம்: மந்திரம் என்பது பிரபஞ்ச சக்திகளை மனத்தால் ஈர்ப்பதற்குரிய குறித்த ஒலி அலைகள். இந்த நாட்களில் நீங்கள் உபதேசம் பெற்ற மந்திரங்களை காலை மாலை குறித்த அளவு இயலுமான எண்ணிக்கை (108, 1008, 10008) ஜெபித்து வர அந்த மந்திரத்திற்குரிய தெய்வசக்தி உங்களில் அதிகமாக ஈர்க்கப்படும்.
இப்படி மந்திரம் உபதேசமாக பெறாதவர்கள் யாரும் இருப்பின் கவலை வேண்டாம். இங்கு தரப்பட இரண்டு மந்திரங்களில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை எடுத்துக்கொண்டு இணைப்பில் தரப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி கொண்டு ஜெபித்து வரலாம். ஜெபத்தினை தொடங்கும் முன்னரும் இறுதியிலும் தரப்பட்ட குரு நாமங்களை கட்டாயம் சொல்லவேண்டும்.
மந்திரங்கள்:
காயத்ரி மந்திரம்: சாதனை விபரம் இந்த இணைப்பில் பார்க்க: https://docs.google.com/file/d/0B_q1uZTstapZT1JLVnJ2dUt3UUE/edit


ஸ்ரீ வித்யா மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஓம், சாதனை விபரம் இந்த இணைப்பில் பார்க்க: https://docs.google.com/file/d/0B_q1uZTstapZSXpEaU9lUzRLbk0/edit

அக்னி ஹோத்திரம்: ஒரு சிறிய புது மண்சட்டி, சிறிதளவு நெய், சிறிது பால் உள்ள மரத்தின் சுள்ளிகள் (மா, பலா, ஆல், அரசு, அத்தி விசேஷம்), அல்லது பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் வாங்கி கொள்ளலாம், கற்பூரம், விளக்கில் இருந்து கர்பூரத்தினை கொளுத்தி சட்டியினுள் போட்டு, தீர்த்த கரண்டியால் நீங்கள் ஜெபிக்கும் அளவிற்கு பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கையில் சிறு கரண்டியால் நெய்யினை மந்திரம் சொல்லை இறுதியில் “ஸ்வாஹா” சேர்த்து இட்டு வரவேண்டும். ஒன்பது நாட்கள் இறுதியில் எரிந்து முடிந்த சாம்பலை கவனாமாக சலித்து எடுத்து விபூதியுடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும், இது உங்களது சாதனையின் சக்தியினை சேர்த்து வைத்திருக்கும்.

இறுதியில் இந்த எளிய பிரார்த்தனையினை செய்து கொள்ளலாம்; 

அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைத்திடா பக்தி அன்பு தேயுறாச் செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 


இந்த எளிய முறையில் நவராத்ரியினை அனுஷ்டித்து அனைவரும் தெய்வ சக்தி பெற்றிட குருவை பிரார்த்திக்கிறோம். 

Monday, September 15, 2014

இல்லறத்தில் இருப்பவர்கள் தெய்வ சக்தி பெற எளிய சாதனை


பொதுவில் ஆன்மீகம் என்பது உலகை விட்டு ஓடும் ஒரு செயலாகத்தான் கற்பிக்கப்பட்டுவந்துள்ளது. அதிலும் பெண்கள் துன்பத்தினை தருபவர்களாகவும், மாயையில் ஆழ்துபவர்களாகவும் கற்பிக்கப்பட்ட மனதுடன்தான் சமூகம் மனிதர்களை வளர்க்கிறது. இப்படிப்பட்ட மனதுடன் பரிணாம உயர்வால் இறையை உணர முயலும்போது உலகமே துன்பமயமாக தோன்ற ஆரம்பிக்கிறது. உலகம் மாயை என்று வாழ்க்கை கடமைகளை முடிக்காமல் சந்நியாசம் நோக்கி ஓட ஆரம்பிக்கின்றனர்.
உலகம் அடிப்படையில் இருமைகளால் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருமை உண்மையான் “ஒன்றில்” இருந்து உருவானவை. பரிணாம பூர்த்தி என்பது மீண்டும் அந்த ஒன்றாக மாறுவதே! ஆன்மாவில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்றாலும் ஆன்மா எடுக்கும் கவசத்திற்கு ஏற்ப ஏற்படும் பேதம் சரியாக புரிந்து செயற்படும் போது உயர்விற்கு வழிவகுக்கிறது, இதனை உதாரணம் மூலம் விளக்குவதானால் அக்கினியினை நன்மைக்கும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம். இது போன்றதே ஆண், பெண் உறவு என்பதும்.
ஆண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு தெய்வ சக்திகளை ஈர்த்து வழங்கும் சக்தி அதிகமாக இருக்கும். பெண் என்ற உடம்பில் இருக்கும் ஆன்மாவிற்கு பெறும் சக்தியினை வளர்க்கும் தன்மை அதிகம். ஒரு ஆண் பலயுகங்கள் தனிமையாக வளர்க்க முயல்வதை தாய்மை சக்தி உடைய பெண்ணிடம் தருவதன் மூலம் ஒருபிறப்பில் பெறலாம். அதுபோல் ஒரு பெண் பல பிறப்புகள் முயற்சித்து பெற வேண்டிய தெய்வ சக்தியை நல்ல சாதனை உடைய ஆணிடமிருந்து உடனடியாக பெறலாம். ஆக இருவரும் சேர்ந்து முயற்சிக்கும் போது பலன் மிக அதிகம்.
இப்படி முயற்சித்து சித்தி பெற்றவர்கள்தான் சித்தர்கள், ரிஷிகள் எல்லோரும். அகஸ்தியர் – லோபாமுத்திரை, வசிஷ்டர் – அருந்ததி, காகபுஜண்டர் – பகளா, சத்தியவான் – சாவித்திரி, சப்த ரிஷிகள்,  பதினெண் சித்தர்கள் எல்லோரும். தனித்த நிலையில் யாருமே சக்தி பெறமுடியாது, அப்படி பெறும் சக்தியால் இந்த பிரபஞ்சத்தில் எதையும் வளர்க்க முடியாது.

இன்றைய கணவன் – மனைவி நிலை
இன்று மனதுடன் ஒன்றி வாழும் தம்பதிகளை காண்பது அரிதாகிவிட்டது. வாழ்க்கை என்பது பொருள்தேடும் ஒரு நோக்கத்துடன் வெளிப்பகட்டிற்காக வாழும் நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ஆண் பெண் உறவு என்பது எலியும் பூனையும் விளையாட்டாகி விட்டது. இதனால் மன முறிவுகளும், மணமுறிவுகளும் சாதாரண விடயங்கள் ஆகிவிட்டன.

ரிஷிகள் உபதேசித்த உயர்ந்த நிலை
எண்ணத்தில் தன்மையே வாழ்க்கை, கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தாழ்வாக எண்ணுவதும் பிரச்னைக்கு முதற்காரணம். சில இறைசாதனையில் உள்ள கணவனோ மனைவியோ தமது துணை அந்த வழியில் இல்லை என்றவுடன் அவரை பாவப்பட்டவராகவும், தாம் கிடைத்தற்கரிய பேறு பெற்றவராகவும் எண்ணிக்கொண்டு செய்யும் எந்த இறை சாதனையும் அவருக்கும் சரி வேறு எவருக்கும் பயன் அளிப்பதில்லை. இந்த நிலையினை கூறுவதானால் இருமாடுகள் பூட்டிய வண்டியில் ஒரு மாடு நகரமறுத்தால் மற்ற மாடு அந்த மாட்டை சுற்றி சுற்ற முடியுமன்றி இலக்கில் முன்னேறாது.
ஆகவே இல்லறத்தில் இருக்கும் கணவனோ மனைவியோ மற்றவர் தமது வழியில் இல்லை என்றால் ஒருக்காலும் கனவிலும் தமது துணை இந்த வழியில் இல்லையே என்ற வெறுப்பு எண்ணம் எடுக்க கூடாது. அவருக்குரிய தெய்வ சாதனையினையும் தனது பொறுப்பாக எண்ணி தான் பெறும் தெய்வ சக்தி உயர்ந்த சக்திகள் யாவும் ஒரு குறைவின்றி அவருக்கும் கிடைக்கவேண்டும் என்று எப்போதும் குருவை பிரார்த்தித்து எண்ண வேண்டும். இந்த எண்ணம் அவர்களை நிச்சயம் உயர்த்தும்.

மனமொத்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் “நான் பெறும் நல்ல தெய்வ சக்திகள் அனைத்தும் எனது மனைவி/கணவன் பெறவேண்டும்” என்று தமது தினசரி பிரார்த்தனைகள், மனதில் எண்ண வேண்டும்.  

Sunday, August 31, 2014

தேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்


தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மகாலக்ஷ்மி எனும் ஸ்ரீ தத்துவத்தினை விழிப்பிக்கச் செய்ய வல்ல தோத்திரம் மகா லக்ஷ்மி அஷ்டகம்.
இந்தப்பதிகளில் மகா லக்ஷ்மி அஷ்டகத்தின் சுருக்கமான பொருளையும் அதன் யோக தத்துவ விளக்கத்தினையும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய படி காண்போம், விரிவாக படிக்க எண்ணுபவர்கள் சென்னை ஆத்மா ஞான யோக சபா பதிப்பித்த ஆன்மீக படைப்பு – 06 வாங்கி கற்கவும். சபா செயலாளரிடம் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


முதலாவது சுலோகம்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ?மி நமோஸ்துதே


பொருளுரை:
பிரபஞ்ச பெரும் மாயா சக்தி வடிவினளே! ஸ்ரீ தத்துவம் எனும் லக்ஷ்மீ பீடத்திற்குரியவளே! தேவர்களால் வணங்க்கப்படுபவளே, கைகளில் சங்கு, சக்கரம், கதையினை தாங்கியவளே, மகா லக்ஷ்மியே உனக்கு எனது நமஸ்காரம்!

விஷேட யோக வித்யா உரை:

ஆன்ம கொடிகளை பிரபஞ்ச பரிணாமத்தில் செலுத்தி விளையாடும் பராசக்தியின் ஒரு திரிபு சக்தி வடிவமே மகா லக்ஷ்மீ. அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரை புஷ்பம் பிரபஞ்சத்தின் குறி, பிரபஞ்சத்தை அவளே தாங்கியிருக்கிறாள் என்பது அதன் கருத்து, அவள் நின்றிருக்கும் நீர் பிரபஞ்ச சாகரம், பிரபஞ்சமெல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமானது ஆகாயதத்துவம், அந்த ஆகாய தத்துவத்தில் இருந்து உண்டான தாமரையே பிரபஞ்சம், இதனை நடத்துபவள் மகாலக்ஷ்மி, பிரஞ்சத்தின் எண்ணற்ற அண்டக்கோளங்கள் தாமரை இதழ்கள், மீண்டும் தாமரைமேல் மகாலக்ஷ்மி வீற்றிருப்பது தானே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி என்பதை காட்டவே, ஆகவே பிரபஞ்ச மாயா சக்தியும் அவளே, மாயையினுள் ஆன்மாக்களை உட்படுத்தும் அவளே விடுவிக்கவும் செய்கிறாள், எதன் மூலம் செய்விக்கிறாள் “ஸ்ரீ” தத்துவத்தின் மூலம். ஸ்ரீ தத்துவம் என்பது ஆன்மாக்களை எல்லாவித போகங்களையும் அளித்து திகட்ட செய்து பரிணாமத்தில் உயர்த்தும் அம்பிகையின் விளையாட்டு, இதற்கு லக்ஷ்மியின் கடாட்சம் அவசியம், மகாலக்ஷ்மியின் அருளை பெறும் ஆன்மாக்கள் இன்பமயமான உலக வாழ்வினை அனுபவித்து இறுதியில் மாயையிலிருந்து வெளியேற்றி முக்தியினை அளிப்பாள். இதை தருவதற்கான சக்திகளை குறிப்பது சங்கு, சக்கரம், கதை என்பன, சங்கு நாத பிரம்மம், சக்கரம் பிரபஞ்ச இயக்கம், கதை வீரம், இந்த மூன்றையும் மகாலக்ஷ்மிஇணை உபாசிப்பவர்கள் பெற்று, தேவர் போன்ற குறைவற்ற இன்பத்தினை பெற்று பரிணாமத்தில் முன்னேறுபவர்கள் ஆகின்றனர். 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...