மந்திர சாஸ்திர விளக்கங்கள் 01:மந்திரங்களை புரிந்து கொள்ளுதல்!

மந்திரங்கள் என்பவை தெய்வ சக்திகளை விழிப்பிக்க கூடிய ஒலி அலைகளை தரும் எழுத்துக்களின் கோர்வை. இவை தெய்வீக தன்மை உடையவையாக காணப்படுகிறது. ஏனெனில் இவற்றின் செயன்முறை சாதாரண மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாது உள்ளன. மந்திரங்களை பொதுவாக இரண்டு வகையாக பகுக்கலாம். முதலாவது தனி எழுத்துக்களால் ஆனவை, இரண்டாவது வகை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்களால் ஆனவ. உதாரணமாக “சிவ”  என்ற மந்திர சொல்லை எடுத்தால் (இது காரண பஞ்சாட்சரம் எனும் அதியுயர்ந்த மந்திரம்) சி + வ என இரண்டு எழுத்துக்கள் உள்ளதாக கொள்ளப்படும். இதனை இன்னும் பகுத்தால், சி = ச+இ என மேலும் இரண்டு எழுத்துக்களாக விரிந்து சிவ என்ற மந்திரத்தில் மூன்று அட்சரங்கள் உள்ளதாக முடியும். சிவ என்ற சொல்லிற்கு பொருள் கொள்ள முடியும், தனிப்பட்ட அட்சரத்திற்கு எதுவித பொருளும் கூறமுடியாது. இந்த அட்சரங்கள் சூஷ்ம உடலில் அதிர்வினை ஏற்படுத்தி தெய்வ சக்தியினை கவரும் தன்மை உடையவை.

பீஜ அட்சரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அட்சரன்களால் ஆனவை. இவை ஒவ்வொன்றும் பிரபஞ் சத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வ சக்தியினை கவரும். உதாரணமாக “ரம்” என்பது “ர” என்ற அட்சரமும் “ம + குற்று” என்ற பிந்துவும் சேர்ந்து உருவான அக்னி பீஜம் ஆகும். மெய்யெழுத்தில் இருக்கும் குற்று பிந்து எனப்படும்.  இந்த பிந்துவே எல்லா அட்சரங்களுக்கும் சக்தியினை கொடுப்பது, இது சிவ அமிசம் உடையது, அட்சரத்துடன் பிந்து சேரும் போது மட்டுமே அது குறித்த தெய்வ சக்தியினை பிரபஞ்ச்சத்தில் தாக்கி சூஷ்ம உடலில் கவரும் தன்மையுடையதாகிறது. இந்த பிந்து சப்தம் இல்லாமல் அட்சரத்திற்கு விரியம் வருவதில்லை. இந்த பிந்து சப்தத்தினை “அனுஸ்வரம்” என்பார்கள். இது எந்த அட்சரத்திற்கும் நாசி சப்தத்தினை தருவது. அட்சரத்தினை மந்திரம் ஆக்கும் பொது அது “ம” வுடன் சேர்ந்து “ம்” ஆகி விரியத்தினை தருகிறது. பிந்து தனியாகவும் வேலை செய்யாது. ம இல்லாமல் பிந்து வேலை செய்யாது. “ம” உம் “பிந்து”வும் சேரும்போதுதான் உதடுகள் இணைந்து உடலில் அதிர்வினை ஏற்படுத்தும். அப்போதுதான் உடலிற்கும் பிரபஞ்சத்திற்கும் சக்தி பரிவு நிகழ முடியும். “ம்” என்ற அட்சரத்தினை ஜெபிப்பதனாலேயே குண்டலியினை அசைவித்து உயர் சக்கரங்களுக்கு எழுப்ப முடியும். குறிப்பாக ஆக்ஞா மற்றும் சகஸ்ரார சக்கரங்களுக்கு! “ம” வினை சந்திர பிந்து என்பர். இது சமஸ்கிருதத்தில் பிறைச்சந்திரன் மேல் புள்ளி இட்டு குறிக்கப்படும். இந்த சந்திர பிந்து ஒலி பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இந்த “ம்” சப்தத்தினை அட்சரத்துடன் சேர்ப்பதனால் அந்த அட்சரத்துக்குண்டான தெய்வ சக்தியுடன் பஞ்ச பூத கலப்பு சம நிலை அடைந்து சாதகன் ஸ்துல சூஷ்ம உடலில் சம நிலையினை ஏற்படுத்துகிறது. இதனாலேயே மந்திர தீட்சையில் குருவானவர் சீடனின் சூஷ்ம உடலின் அதிர்வினை அறிந்து அதற்கு சமப்படகூடிய அட்சரங்களை அறிந்து தகுந்த பீஜ மந்திரத்தினை அளிப்பார். 

Comments

 1. வணக்கம்
  பதிவு பக்தி சுவை ஊறுது... விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. நன்றி சுமனன்!!

  ReplyDelete
 3. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு