குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 25, 2013

கொங்கணவ சித்தரின் வாலைக்கும்மி ஆங்கில மொழிபெயர்ப்பு - 01

Valai Kummi - Kummi songs of Bala by Konganava Siddhar



Sri Konganavar (Konganar/Gonganar/Gonganavar) is a great Siddha. He is said to be the disciple of Siddhar Bogar. He attained samadhi at Thirupathi and it is believed that the Thirupathi temple has been built over his samadhi. 

all the Tamil Siddhars are upasaka of Bala, it is said without Bala their is no Siddhi, Konganavar wrote a wisdom song on Bala, it is called Valai Kummi, Valai is Tamil pronounciation of Bala, Kummi is a type of song dancing with the clapping of hands, a play for females; here I am sharing those songs with my limited knowledge, known person can add more, this set have 112 songs, I will share time to time one or two as per my time availability. 


Song - 01 - விநாயகர் துதி - Ganapathy Prayer 

பின் முடுகு வெண்பா - this refer the particular grammer of Tamil poems

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்றசெல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசயநாதனின் சொல்வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்சபாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம். (01)


Concise meaning: 
Bala girl is full of Knowledge, I concider her as my lover, I wish to sang Kummi on her, I keep the Padam of Ganapathy in my heart, who gave the victory, who know the meaning of all the words, 


Song -02: Ganapathy prayer 
கும்மிசத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்கவித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.


Concise meaning: 
I salute to Vinayaga, one tusker (Eka danda) to protect, who helped me to sang a song on Sakthi, Sadathari - the girl who have long entangled or plaited hair; Bala girl who is Excellent (perfection, the best of the kind) woman;


Song - 03: Saraswathi Prayer
சரசுவதி துதிசித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்தத்தமித் தோமென ஆடும் சரசுவதி பத்தினி பொற்பதங் காப்பாமே.


Concise meaning: 
I salute to a chaste women Sarashwathi to protect, who help me to sang a Kummi song on Bala, she worshipped by Siddhar, they also worshiped Sarashwathi. 


Song - 04: Shiva/ Guru Prayer 
சிவபெருமான் துதிஎங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின் தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு பங்கயப் பொற்பாதம் காப்பாமே.


Concise meaning: 
Bala who is omnipresent, worshipped by Lord Shiva, she is a sister of Mahavishnu, I wish to sang a song on her to that who is having Ganaga in his head, Sambu, He is SatGuru, I salute his golden feet for protection. 


Song - 04: Prayer on Subramanya

சுப்பிரமணியர் துதிஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்குமானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும் மால்முரு கேசனும் காப்பாமே. 


concise meaning:
Bala worshiped my Subramanya, she is girl of wisdom, girl of light, to sang a kummi I salute the Subramanya who is fond of Valli, 


Song - 05: Prayer in Vishnu
விஷ்ணு துதிஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.


Concise meaning:
Bala worshiped by Vishnu, Bala is poor girl, Bala was become daughter of Pandiyan King, Bala is Ambika, to sang a Kummi I salute who become a worker of Kandeepan (Arjunan), lord of Vaikunda's golden foot!


Song -06: Prayer on Nantheesar
நந்தீசர் துதிஅந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொற்பதங் காப்பாமே.


Concise meaning: 
Bala worshipped by Nantheesar (primary attend and Disciple of Lord Shiva, Tamil Siddha lineage start he is second adi Guru, he learn from Shiva and Sakthi, then other siddhars learnt from him), Bala is destroyer of ego, Bala is Beauty, Bala is Ambika, to sang a Kummi I salute the golden foot of Nantheesar who is a first and wonder!


Song 07:
நூல்கும்மி தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
வல்லவள் வாலைப்பெண் மீதினிலேசல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே!


Concise meaning:
Bala is danced in Thillai (Chthambaram) and Mullai, on her I sang amorous tamil, kummi, she is the remover of all the old karma.


Song - 08:
மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்றுபேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்


Concise meaning:
She don't have father or Mother, She created the void, earth and sky, she is 5-7 years girl, She is the one Bala Girl, the entire earth is within her!


Song - 09:
வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே.


Concise meaning:
Oh, Bala! let listen I will tel you how Veda formed! How five elements evolved! how science evolved! how Sastra originated! how Nada and songs originated. 


Song - 10:
மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே.


Concise meaning:
Oh, Bala, to answer how yuga's evolved? where did from first God and first Devatha evolved, how the wonderful Bala came, it all are explanation of wisdom. 


Song - 11: 
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.


Concise meaning:
(to get the wisdom which explain in the 10th song on should know the secret of) the five letters that are evolved before Lord Hari, then those five letters are become as Hari, those five letters are formed fixed to Human body, those letters are formed Mind and Prana. 

Note: normally is Tamil Siddha tradition five letters denote Na, maḥ Śi,vā, ya, which was become as Panch Butha and corresponding to Muladara to Visuddhi compliance with Pruthvi, Jala, Agni, Vayu and Akash. this is referred in this song.


Song - 12:
ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்;நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.


Concise meaning:
in first stage Bala become those five letters, then her name become as five letter holder, she is not silent letter, she belong to wisdom category. 

Note 01: at present state of mind I cannot explore the hidden secret of this song, if any one can explore please share.
Note 02: this traslation is done within my limted knowledge of Tamil & English, Bala/Guru may direct us in to correct path. Love ♥ Sumanan

Sunday, May 12, 2013

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக,
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்
திருமகன்(திருமகள்) நான் பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருகுருவின் அருள்பெறவே
திருமானின் அருள்பெறவே
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
தினம் தினம் வணங்குகின்றோம்
தாய்பூமியில் தவமிருந்தே
தரணிதனில் பக்குவத்தை
தன் உணர்வின் பொக்கிஷமாய்
தழைத்தோங்கும் உயர் ஞானமுடன்
தக்கதொரு செயலுருவாய்
திக்கெட்டும் சத்தியத்தின் சக்தி நிலை
திகழ்ந்தோடும் வளர்ச்சியில் யாம்
திகழ்ந்திடவே அருள் செய்வீர்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே திருவருள் தந்திடுவீர்

-- மஹரிஷி ஈஸ்ரவரப்பட்டர் -

தாய்தந்தை ஆசீர்வாதமே உண்மை ஆன்ம முன்னேற்றத்தினை தரும்!

Tuesday, May 07, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 27: நாமங்கள் 68 - 69


சக்ரராஜ-ராதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதாயை (68)
ஸ்ரீ சக்கரமான தேரின் மேல் எல்லா ஆயுதங்களும் புடைசூழ விளங்குபவள்

சக்ர ராஜம் என்பது லலிதையின் தேர், அது சகலவிதமான ஆயுதங்களையும் உடையது. ஆயுதங்கள் எனப்படுவது ஸுத்தவித்தையாகிய தூய அறிவினை அடைவதற்கான வழிமுறைகள். இதுவே பிரம்மத்தினை அறிவதற்கான வழிமுறைகள். இந்த தேர் ஒன்பது சில்லுகளை உடையது. சக்ர ராஜத்தினை சூழ மேலும் இரு தேர்களை உடையது. அதுபற்றி அடுத்த நாமங்களில் விபரிக்கப்படும். சக்ர ராஜம் லலிதாம்பிகை வசிக்கும் ஸ்ரீ சக்கரம் எனவே கூறப்படுகிறது. பரிஷ்க்ருத என்றால் அலங்கரிக்கப்பட்ட என்று பொருள்.

இந்த நாமத்தினை விளங்கிக்கொள்ள ஸ்ரீ சக்கரம் பற்றிய சுருக்கமான அறிவு அவசியம், ஸ்ரீ சக்கரம் ஒன்பது ஆவரணங்களையும் ஐந்து சக்தி சக்கரங்களையும், நான் கு சிவசக்கரங்களையும் உடையது. மேல் நோக்கிய முக்கோணங்கள் சிவச்சக்கரம் என்றும், கீழ் நோக்கிய சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் என்றும் கூறப்படும். இந்த இரண்டு சக்கரங்களும் சேர்ந்து நாற்பத்தி நான் கு முக்கோணங்களையும், நாற்பத்தி மூன்று தெய்வங்களையும் (44வது தெய்வம் லலிதை), எழுபத்தி ஒன்பது யோகினிகளும் வசிக்கின்றனர். ஸ்ரீ சக்கரத்தில் எல்லா தேவதேவியரும் உறைவதாக கூறப்படுவதால்தான் ஒருவன் எந்த தெய்வத்தினை பூஜிப்பதானாலும் ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜை செய்வது போதுமானது எனக்கூறப்படுகிறது. ஸ்ரீ சக்ரராஜ நிலையாயை எனும் 996 வது நாமம் தேவி ஸ்ரீ சக்கரத்தில் வசிக்கிறால் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சக்ரராஜம் என்பது மூலாதாரம் தொடக்கம் ஆக்ஞா வரையிலான ஆறு சக்கரங்களையும் குறிக்கும். ரதா என்றால் அடிப்படை என்று பொருள். அருதா என்றால் கட்டுப்படுத்தல் என்று பொருள். ஸர்வாயுத என்றால் தூய அறிவு என்று பொருள். ஆறு சக்கரங்களும் தூய அறிவினை அடைவதற்கான அடிப்படை, ஆறாவது ஆக்ஞா சக்கரத்தினூடாக மனதினை கட்டுப்படுத்தலாம். முதல் ஐந்து சக்கரங்களும் பஞ்ச பூத அமிசமானவை, ஆக்ஞா சக்கரம் மனதினை குறிக்கும், தூய அறிவினை அடைவதற்கு பஞ்சபூதங்களையும் மனதினையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அறிவும் பெறவேண்டும். இந்த சக்கரங்களை கட்டுப்படுத்தும் போது சித்திகள் கிடைக்கின்றன. சுத்த வித்தை பற்றி பேசும் போது சிவ சூத்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். “ஸுத்தவித்யோதயாசக்ரேஸத்வ”, இதன் பொருள் சுத்தவித்தையின் மூலம் மட்டுமே சக்தியினை கட்டுப்படுத்த முடியும். இங்கு சக்தி என்பது சக்கரங்களை குறிக்கும். தூய அறிவின் மூலம் ஒருவன் சிவத்தன்மையினை அடையமுடியும். சிவத்தன்மை என்பது சிவத்துடன் ஒன்றிய நிலை. இந்த நிலையில் சிவத்தை தவிர வேறெதுவும் எஞ்சியிராது. இந்த நிலையில் அனைத்தும், எல்லோரும் சிவமாகவே தெரிவர். இந்த நிலை பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றிய நிலை எனப்படும். மாயை விலகிய பின்னரே சுத்த வித்தை சாத்தியமாகும். பகவத்கீதையில் கிருஷ்ணன் “ எல்லா தியாகங்களினதும் முடிவு எல்லையற்ற அறிவில் முடியும்” என்கிறார். எல்லையற்ற அறிவு என்பது பிரம்மத்தைப்பற்றிய அறிவு. இதன் விளக்கம் சக்கரங்களையும் மனதினையும் கட்டுப்படுத்தும் ஆற்றலினை பெறுவதன் மூலம் எல்லையற்ற அறிவினை பெறலாம். இதனை தவிர வேறு ஏதும் தேவை சாதகனுக்கு தேவையில்லை.

வாக்தேவிகள் தன்னை அறியும் இந்த உபாயத்தினை இவ்வளவு சூட்சுமமாக இந்த நாமத்தில் கூறியுள்ளார்கள்.

கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதாயை (69)
கேயசக்ரமென்னும் தேரில் வீற்றிருக்கும் மந்த்ரிணீ சக்தியால் சேவிக்கப்பட்டவள்

முந்தைய நாமத்தின் உரையில் சக்ரராஜத்தினை சூழ இரண்டு தேர்கள் உள்ளன எனகூறப்பட்டது, அவற்றும் ஒன்று இந்த நாமத்தில் விபரிக்கப்படுகிறது. அதன் பெயர் கேயச்சக்ரம். இது மந்திரிணி தேவி என அழைக்கப்படும் சியாமளா தேவியின் தேர். இந்த தேவி பற்றி பத்தவது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் வார்த்தைப்பொருள் கேயச்சக்கரத்தில் வீற்றிருக்கும் மந்திரிணீயால் வணங்கப்படுபவள் என்பதாகும். மந்திரிணி என்பது லலிதையின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவர். மந்திரிணி தேவி லலிதையின் மீது மிகுந்த மதிப்பும் அவளை வணங்கவும் செய்கிறாள். வணங்குதல் என்பது மதித்தலைவிட வேறானது.

நாம் முன்னர் ஸ்ரீ சக்கரத்தில் 79 யோகினிகள் இருக்கின்றார்கள் என்று பார்த்தோம். இந்த யோகினிகளும் லலிதையின் வணங்குபவர்கள். இவர்களையும் மந்திரிணி என அழைப்பர். இது சியாமளையினை விட வேறானது. அவர்களை ஸ்ரீ வித்தை பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சாதகர்களை தேர்ச்சி பெறவைப்பவர்கள். இந்த நாம இவர்களையும் குறிப்பதாக இருக்கலாம். கேயசக்ர என்றால் முக்கியமான சக்கரம் என்றும் பொருள். இது ஸ்ரீ சக்கரத்தினை குறிக்கும். யார் ஸ்ரீ சக்கரத்தினை தியானிப்பவர்கள் மந்திர சித்தியினை அடைவார்கள், அவர்களையும் மந்திரிணி எனப்படுவர். தேவியை பஞ்சதசி மற்றும் சோடஷி மந்திர சித்தியடைந்த உபாசகர்கள் வழிபடுவார்கள். இங்கு ஸ்ரீ சக்கரத்தினை வழிபடுவதம் முக்கியத்துவம் விளங்கப்படுத்தப்படுகிறது. பல நூற்களில் மனித உடல் ஸ்ரீ சக்கரத்துடன் ஒப்பிடப்படுகிறது. ஒன்பது ஆவரணங்களும் மனித உடலின் ஒன்பது பகுதிகளுடன் ஒப்பிடப்படுகிறது. பிரமாந்திரம் எனப்படும் தலை உச்சி சஹஸ்ராரம், நெற்றி ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம் கழுத்தில், அநாகத சக்கரம் இருதயத்தில், மணிப்பூரகம் நாபியில், இடுப்பு (சுவாதிஷ்டான மூலாதார சக்கரங்கள்), ஒரு தொடைகளும், கால்களும் ஆக ஒன்பது பகுதிகளை குறிக்கிறது. இந்தக்குறிப்பு தெய்வ சக்தி உடலினூடாக பயணிக்கும் பாதையினை விபரிக்கிறது. சஹஸ்ரார பகுதியில் உள்ள தலையுச்சிப்பகுதியால் உட்புகுந்து எல்லாச் சக்கரங்களிலும் நிறைந்து மேலதிக சக்தி பாதத்தினூடாக வெளியேறும்.

சிவசூத்திரம் (2.3) மந்திரத்தின் இரகசியார்த்தம் பற்றி குறிப்பிடும். அறியாமை அகன்ற “நான்” என்ற உணர்வு எல்லா மந்திரங்களதும் முக்கியமான பகுதி, அதன் சாராம்சம் பிரம்மத்தினை அறிவதற்கான அறிவினை பெறுவது, இதுவே மந்திரத்தின் இரகசியம். ஆதலால் மந்திரங்கள் என்பவை எழுத்துக்களின் கோர்வை மட்டும் அல்ல, அது சக்தியின் வடிவேயாகும். இந்த எழுத்துக்கள் மாத்ரிகா எனப்படும். மாத்ரிகா என்றால் தாயிற்கு சொந்தமானது எனப்பொருள் படும். முதலாவது நாமத்தின் விளக்கத்தினை பார்க்கவும். ஆன்மீக சாதனையின் ஆரம்ப காலத்தில் மந்திர ஜெபம் மிகமுக்கியமான ஒன்றாகும்.

இந்த நாமத்தில் மந்திரத்தின் முக்கியத்துவமும், எமது உடலுடன் ஸ்ரீ சக்கரத்தினை தொடர்பு படுத்தப்பட வேண்டிய முறையும் விபரிக்கப்பட்டுள்ளது. எமது உடலிற்கும் ஸ்ரீ சக்கரமும் வேறானது இல்லை என்று உணர்வதே ஆன்மீகத்தில் தன்னையுணர்தல் எனப்படுகிறது. 



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Monday, May 06, 2013

சித்த வித்யா விஞ்ஞானம் தொடர்பான வாராந்திர கலந்துரையாடல் - அனைவரும் வருக!

எமது வலைத்தளம் வாசிக்கும் இலங்கை வாசகர்களுக்கும், மற்றும் எமது தளத்தின் விடயப்பரப்பு தொடர்பான ஆர்வலர்களுக்கும் அறிவிப்பு.

குருவருளினால்  சில ஆர்வமுள்ள இளைஞர்களின் வேண்டுகோளுக்கு அமைய கொழும்பில் (இலங்கை) சித்த வித்யா விஞ்ஞானம் தொடர்பான  வாரந்திர கலந்துரையாடல் செய்யலாம் என எண்ணியுள்ளோம். எம்முடன் தொடர்புகொண்ட ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ள பலர் நாம் எழுதும் விடயம் பற்றி  திறந்த நிலை கலந்துரையாடல் கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆகவே இந்த கலந்துரையாடல்களை நடத்துவதற்கு  எண்ணியுள்ளோம். இதற்கு குருநாதரின் பரிபூரண ஆசி கிட்ட பிரார்த்திக்கிறோம். 

இதன் ஆரம்ப நோக்கங்கள்  வருமாறு;
  1. எமது யோக, சித்த கலாச்சார விடயங்களை அறிவியல் பூர்வமாக விளங்கிகொள்ளல், விழிப்புணர்வினை ஏற்படுத்துதல். 
  2. யோகம், மந்திர சாஸ்திரம், ஆழ்மனம், வாஸ்து, ஜோதிடம் பற்றிய அறிமுக கலந்துரையாடல்களும், ஆழ்ந்த கற்கையும் - மேலதிக விடயதானங்களை கீழே தந்துள்ளோம் 
பொதுவாக இந்த கலந்துரையாடலை வாராந்திர கலந்துரையாடலாக நடாத்த எண்ணியுள்ளோம். இந்த கலந்துரையாடலில் கீழ்வரும் விடயப்பரப்புகள் தொடர்பாக உரையாடல்கள் நடாத்த எண்ணியுள்ளோம். 

  • சித்தர்களின் அடிப்படைத்தத்துவங்கள் 
  • சித்தர் நூற்கள் 
  • இல்லற யோக சாதனை முறைகள் 
  • மந்திர சாஸ்திர விளக்கங்கள் 
  • மனம் சித்தர்களின் பார்வையில் 
  • குண்டலினி யோக கோட்பாடுகள்
  • ஜோதிடம் அடிப்படை, பிரயோகம்
  • கிரியா யோகம்
  • காயத்ரி உபாசனை, விஞ்ஞானம்
  • சகல தெய்வ உபாஸனை முறைகள் 
  • ஆழ்மன சக்தி செயற்பாடு சாதனைகள்
  • ஹிப்னாடிசம் மெஸ்மரிசம்
  • யோகம்
  • தந்திர யோகம்
  • தந்திர கிரியா யோகம்
  • பதஞ்சலி யோக சூத்திரம்
  • ராஜ யோக பயிற்சி அடிப்படைகள்
  • சித்த யோகபயிற்சி
  • நவரத்திரன விஞ்ஞானம்,பிரயோகம்
  • கர்ம விஞ்ஞானம்
  • அமானுஷ்ய சக்தி, ஆவிகள்
  • யந்திர விஞ்ஞானம் 
  • மூலிகை சாதனை முறைகள்
  • டெலிபதி எனும் சூஷ்ம திருஷ்டி விஞ்ஞானம் 
  • மேலும் பல....
இது ஆரம்ப கூட்டத்திற்கான முன்மொழிவு மாத்திரமே! 

இந்த விடயங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன். 

மேலும் இந்த கலந்துரையாடல்கள் அனைத்தும் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ளுவதற்காக மட்டுமே!  ஏனெனில் இன்று பலரும் சித்த, யோக விடயங்களை ஆழ்ந்து கற்காமல் வெறுமனே ஒரு சில விடயங்களை கேள்விப்பட்டு முயற்சித்து பின்னர் பலன் எது வித  பெறாமல் ஆர்வம் குன்றிப்போய்விடுகின்றனர். எமது கலந்துரையாடல்களில் ஒவ்வொரு விடயத்தினையும் தெளிவாக புரிந்து கொண்டு அவரவர்களை பக்குவப்படுத்தி தயார் படுத்திக்கொள்ள உதவும்.

மேலும் இந்த விடயங்கள் சாதாரணமானவர்கள் அறிந்துகொள்ள, பயிற்சிக்க முடியாத அபூர்வ விடயம் என்ற மாயையினை தகர்த்து அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய பொதுச் சூழலினை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது அமையும்.

இந்த கலந்துரையாடல்கள் வெறுமே நட்புடன் கூடிய சகோதரத்துவத்தினை வளர்க்கும் உரையாடல்களாகவே  இருக்கும்.

இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள இலங்கையில் உள்ள அன்பர்கள் பின்னூட்டம் மூலம் அல்லது sithhavidya@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அறியத்தரலாம். கலந்துகொள்ளவிரும்பும் நண்பர்களது எண்ணிக்கை கண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தபின்னர் இடம், திகதி  பற்றிய அறிவிக்கப்படும் ! 

மேலும் இந்த கலந்துரையாடல் சிறப்புற உங்களது முன்மொழிவுகளையும் பின்னூட்டமிடவும்!

இதன் அடுத்த கட்ட முன்னேற்றங்கள் எமது பதிவினூடே அறியத்தருகிறோம். 

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 26: நாமங்கள் 64 - 67


தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமானத்ம-வைபவாயை (64)
தேவரிஷிகணங்களால் துதிக்கப்படும் ஆத்ம வைபவம் உடையவள்

இந்த நாமத்துடன் தொடங்கி 84வது நாமம் வரை பண்டாசூர வதம் விபரிக்கப்படுகிறது. தேவ+ரிஷி+கண என்றால் தேவர்கள், ரிஷிகள், கணங்கள் என்பன. அக்னிபுராணம் ஏழுவகையான கணங்கள் உள்ளதாக கூறுகிறது. உதாரணத்திற்கு ருத்ர கணம் என்றால் சிவனுடைய உதவியாளர்கள். இதுபற்றி ஸ்ரீ ருத்ரத்தில் தனியாக ஒரு ஸ்லோகம் 11 அவர்களை குறித்து வழிபடுகிறது, ரிஷி என்பவர்கள் வசிஷ்டர், நாரதர் முதலானவர்கள். நாரதன் தேவ ரிஷி எனவும் குறிப்பிடப்படுவார். தேவி தேவர்களால், தேவதைகளால், முனிவர்களால், கணங்களால் வணங்கப்படுபவள். ஸ்தூயமானத்ம என்றாள் வணங்கப்படுதல் என்று பொருள். வைபவா என்றால் எல்லாவற்றிலும் கலந்துள்ளவள் என்று பொருள். பிரம்மம் ஒன்று மட்டுமே எல்லாவற்றிலும் கலந்துள்ள ஒன்று. தேவர்களும் ரிஷிகளும் பிரம்மத்தினை தவிர்ந்த வேறெதனையும் வணங்காதவர்கள். ஆகவே இது மறைமுகமாக தேவியின் நிர்குண பிரம்ம ரூபத்தினை கூறுகிறது.

தேவ ரிஷியான நாரதர் தேவியை அணுகி தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தும் பண்டாஸுரனை அழிக்கும் படி வேண்டிக்கொண்டார். இந்த நாமத்தின் ஆழ்ந்த அர்த்தம் பண்டாஸுரன் என்பது அறியாமையில் எழும் ஆணவத்தினை குறிப்பது, அவர்கள் தமது ஆணவத்தினை கரைப்பதற்காக லலிதையினை அணுகுகின்றார்கள். தேவி மாத்திரமே அதனை கரைப்பதற்கு உரியவள், இந்த அறியாமை கலந்த ஆணவத்தினாலேயே பாபங்கள் செய்யப்படுகின்றன.

பண்டாஸுர-வதோத்யுக்த-சக்தி-ஸேனா-ஸமன்விதாயை (65)
பண்டாஸுர வதத்திற்கு ஆயுத்தமாயிருக்கும் சக்தி ஸேனையால் சூழப்பட்டவள்

தேவி தற்போது பண்டாஸுரனை அழிப்பதற்கு தயாராக இருக்கிறாள். அவளுடைய போர்ப்படை ஸ்ரீ சக்கரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு தெய்வங்களை கொண்டிருக்கின்றன. இந்த நாமத்துடன் தொடர்புடைய கதை ஒன்று காணபடுகிறது. மன்மதன் சிவனுடைய கோபத்திற்கு ஆளாகி எரிக்கப்பட்டு விடுகிறான், கணேசர் விளாயாட்டாக அந்த சாம்பலை எடுத்து ஒரு பொம்மையினை உருவாக்குகிறார். இதனைப்பார்த்த படைப்புக் கடவுளான பிரம்மன் கணேசரை பாராட்டுமுகமாக “பண்டா, பண்டா” என் கிறார். அதனால் அவன் பெயர் பண்டாஸுரன் ஆகிறது. மன்மதன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியில் எரிக்கப்பட்டதால் பண்டாஸுரன் மிக்க சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் எல்லாவித தீய சக்திகளையும் கொண்டிருக்கிறான்.

பண்டா என்றால் பந்தம் என்று பொருள். சிவ சூத்திரம் (1.2) கூறுகிறது; “ஞானம் பண்டாஹ”. இதில் பண்டாஹ என்பதற்கு தரப்பட்ட விளக்கம் எல்லைப்படுத்தப்பட்ட அறிவு என்பதாகும். இதன் பொருள் அறியாமை பந்தத்தினை உருவாக்குகின்றது என்பதாகும். பந்தம் என்பது ஆசை, பற்று என்பவற்றைக்குறிக்கும். அறிவின் குறைபாட்டால் ஏற்படும் இருமை உணர்வும் பந்தம் எனப்படும். ஒருவன் அறிவினை அடையும் போது நானே அது (பிரம்மன்) என்பதனை உணர்கிறான். மனதின் உள்ளார்ந்த அல்லது எதுவித நிபந்தனையற்ற நிலை ஆணவம் மலம் எனப்படும். இது ஒரு மனிதன் அனுபவத்தால் சார்ந்திருக்க கூடிய அறிவின் எல்லையினை குறிப்பிடுகிறது. இந்த அடிப்படை எல்லைப்படுத்தும் காரணி பிரபஞ்சப்பேருணர்வினை ஒரு ஜீவாத்மாவாகவோ, தனி ஆத்மனாகவோ எல்லைப்படுத்துகிறது. இந்த நிலை உள்ளார்ந்த நிலை எனக்குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் மனம் பந்தத்தில் இருந்து விடுபடும் வரை பிரம்மத்தினை அறிவதில்லை. இந்த விடுதலை அறிவினால் மட்டுமே சாத்தியமானது. சிவசூத்திரம் (1.6) இது போன்ற சந்தர்ப்பத்திற்கான இன்னொரு விளக்கத்தினைதருகிறது. அதீத விழிப்புணர்வு நிலையினால் பல்வேறு சக்திகள் (சக்தியின் பல்வேறு நிலைகள்) இணைந்து பிரபஞ்சத்தினை (மாயை, இருமைகள், அறியாமை) இல்லாதாக்கி உயர்ந்த உணர்வாகிய பிரம்மத்தினை அறிய வழி வகுக்கிறது.
இந்த நாமத்தின் இரகசியார்த்தம் என்னவென்றால், லலிதை எமது பிறப்பு இறப்பு ஆகிய சுழற்சியிலிருந்து அகல அருள் புரிய தயாராக இருக்கின்றாள், தன்னை நோக்கி சாய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறாள். பண்டாஸுரன் அறியாமையினால் செய்யும் தீயகாரியங்களது மொத்த உருவம். தேவி மனிதனைச் சூழ உள்ள அறியமையினயும் அதனால் விளையும் தீயவிளைவுகளையும் அழிப்பதற்கு தயாராக இருக்கின்றாள். சக்தி ஸேனா என்றால் அவளுடைய பல்வேறு செய்கைகள், இது படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய மூன்றை மாத்திரம் குறிப்பதல்ல. தேவியின் பல்வேறு தொழில்கள் ஸ்ரீ சக்கரத்தில் காணப்படும் பல்வேறு தெய்வங்களாக குறிக்கப்பட்டுள்ளன.

ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வஜ்ர-ஸேவிதாயை (66)
ஸம்பத்கரீ சக்தியின் யானைப்படையினால் சூழப்பட்டவள்

தேவி யானைப்படைகளாலும் அதன் தலைவியான ஸம்பத்கரீ தேவியாலும் வணங்கப்படுகிறாள். ஸம்பத்கரீ தேவி பற்றி ஏற்கனவே 9வது நாமத்தில் விபரித்துள்ளோம். மிக சக்தி வாய்ந்த ஸ்ம்பத்கரீ வித்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த நாமத்தில் ஸம்பத்கரீ வித்தையில் காணப்படும் மூன்று பீஜாட்சரங்கள் மறைவாக கூறப்பட்டுள்ளது. இந்த பீஜாட்சரம் மிக இரகசியமாக கருதப்படுவது, ஏற்கனவே 9வது நாமத்தில் கூறப்பட்டுள்ளது. க்ரோம் (क्रों) எனும் பீஜம் க+ர+ம வுடன் பிந்து சேர்ந்து உருவாக்கம் பெறுகிறது. க என்ற அட்சரம் இன்பத்தினையும் புகழினையும் தருவது. ர என்ற அட்சரம் மிக சக்தி வாய்ந்ததும் அக்னி பீஜம் எனப்படுவது. எந்த பீஜமும் அக்னி பீஜத்துடன் சேரும்போது அதீத சக்திகளை தரும். ம என்ற பீஜம் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் சகலவித சௌபாக்கியங்களைத்தரும். க்ரோம் பீஜத்தினை தொடர்ச்சியாக ஜெபிப்பதால் ஒருவனுக்கு இன்பமும் சௌபாக்கியமும் உண்டாகும். ஆயினும் எந்த மந்திரமும் ஆத்ம பீஜம் இன்றி பலனை தராது, அது தக்க குருவின் மூலம் பெறவேண்டியது.

அறிவு, அறியப்படுவது, அறிபவன் ஆகிய மூன்றும் மும்மைகள் எனப்படும். இந்த மும்மைகளில் அறிவு விழிப்படைவது ஸுக ஸம்பத்கரி எனப்படும். சிவ சூத்திரம் (1.9) கூறுகிறது “ஸக்திஸந்தானே ஸரீரோபதி”, இதன் அர்த்தம் ஒருபுள்ளியில் சக்தியுடனான (அதீத விழிப்புணர்வுடனான) இணைவு எனப்படும். ஸக்திஸந்தானே என்றால் என்றால் ஒருவன் தனது தனிப்பட்ட பிரார்த்தனைகளை விருப்புகளை சிவனிடம் பிரார்த்திக்க வேண்டியதில்லை. ஒருவன் தனது எண்ணங்களை வலுப்படுத்தினாலே தான் வேண்டியதை அடையலாம். ஸந்தானே என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான ஒரு விடயம். விழிப்புணர்வுடன் கூடிய ஒருமைப்பாடும் அந்த நிலையினை அடைவதற்கான விருப்பமுமே ஆன்மீக முன்னேற்றத்தில் முக்கியமான ஒன்று. ஸந்தானேக்குரிய பண்புகளை வளர்க்காமல் மந்திர திட்சை பலனளிக்காது, மந்திர ஜெபத்தின் பலனை அனுபவிக்க முடியாது.

லலிதையினை க்ரோம் பீஜத்தினால் தியானிக்க தியானிப்பவன் தான் விரும்பியதை அடையும் பண்பினைப் பெறுவான். இது ஒருவன் தனது ஆன்மீக நிலையில் அடையக்கூடிய உயர் நிலையினையும் குறிக்கும்.

   
அஸ்வாரூடதிஷ்டிதாச்வ-கோடிகோடிபிராவ்ருதாயை (67)
அச்வாரூடா சக்தியின் குதிரைப்படையால் சூழப்பட்டவள்

லலிதை அஸ்வாரூடா தலைமைதாங்கும் குதிரைப்படையால் சூழப்பட்டவள். இவள் 8வது நாமத்தில் விபரிக்கப்பட்ட தேவதையே ஆகும். அஸ்வாருடா தேவியின் படையில் குதிரைப்படையின் தலைவி. இந்த தேவியின் முகம் குதிரை முகம். அஸ்வாருட மந்திரம் 13 பீஜங்களை உடைய மிக சக்திவாய்ந்த மந்திரம். இந்த பதின்மூன்று பீஜங்களில் நான்கு பீஜங்கள் ஆரம்பத்திலும் நேராகவும் முடிவில் மறுதலையாகவும் ஜெபிக்கப்படுகிறது. இது சம்புடீகம் எனப்படும். சம்புட என்றால் கூண்டு என்று அர்த்தம். இப்படி ஜெபிக்கும் மந்திரங்கள் துரிதமாக பலனைதருவன.

புலன் கள் குதிரைகளாக உருவகப்படுத்தப்படுகிறது. அவை கட்டுப்பாடு அற்று வேகமாக ஓடுமானால் ஆபத்தில் முடியலாம். மனமே குதிரைப்பாகன், மனதாலேயே புலன் களை கட்டுப்படுத்தவேண்டும். சிவ சூத்திரம் (1.12) கூறுகிறது; விஸ்மாயோ யோகபூமிகா”. இதன் அர்த்தம் சிறிது சிக்கலானது ஆனால் விளங்கிகொள்ளக்கூடியது. இதன் வார்த்தை சார்ந்த அர்த்தம் யோகத்தின் நிலைகளும் படி நிலைகளும் கவர்ச்சிகரமான ஆச்சரியங்கள்”. நிலைகள் என்றால் சக்கரங்கள் என்று பொருள். இந்த நிலைகளில் (சக்கரங்களில்) உணர்வு பயணித்து உயர்ந்த சக்கரங்களை அடையும் போது உணர்வு உயர்ந்த நிலையினை அடைகிறது. சஹஸ்ராரத்திற்கு வெளியே அல்லது மனித உடலின் வெளியே உணர்வு செல்லும்போது அது தூரிய நிலை எனப்படும். இந்த நிலையில் யோகி தனது அக உணர்வுகளை பூரணமாக கட்டுப்படுத்தும் நிலையினை அடைகிறான். இதனை உயர் உணர்வு எனக்கூறலாம். இந்த நிலையில் யோகி உயர்ந்த இன்பத்தினை அனுபவிக்கிறான். இதனை இன்னுமொரு வார்த்தைகளில் கூறுவதானால் தன்னை அறிவதால் வரும் எல்லையற்ற இன்பம் பேரின்பத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த நிலை என்ற சொல்பதும் நன்றாக செயற்படத்தொடங்கிய ஆக்ஞா சக்கரத்தினையும் குறிக்கும். இது எல்லாபுலன் களையும் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் தரும். படி நிலை என்பது உணர்வின் வெவ்வேறு நிலைகளை குறிக்கும். உணர்வின் அதிஉயர்ந்த நிலை தூரியம் எனப்படும். தனது இச்ச சக்தியின் துணையுடன் யோகி சிவத்துடன் தொடர்பினை ஏற்படுத்தும் நிலை இது. இதனை உமா அல்லது குமாரி என்பார்கள். இந்த நிலையில் யோகியானவன் எல்லாவற்றையும் சமபாவத்தில் பார்க்கும் தன்மையினை பெறுகிறான். அவன் அகத்தினையும் புறத்தினையும் வேறாக காண்பதில்லை. நான் நீ, நல்லது கெட்டது போன்ற வித்தியாசங்கள் தெரிவதில்லை.

இந்த விவரணைகள் இந்த நாமத்தின் விளக்கத்தில் இருந்து விலகிச்செல்லவில்லை, இது புலன் களை கட்டுப்படுத்துவது குதிரையினை கட்டுப்படுத்துவது போன்றது. புலன்களை கட்டுப்படுத்துவதால் பலவித ஆன்மீக நன்மைகள் கிடைக்கின்றன. சக்தி மட்டுமே ஒருவனை அதியுயர் பிரம்மமான சிவனிடம் அழைத்துச் செல்லும் வல்லமையுள்ளவள். சக்தி மாயாய் வடிவினாள். மாயை அகலாமல் பிரம்மத்தினை அறியமுடியாது. சிவத்துடன் தொடர்புகொள்ளும் இச்சாசக்தியினை கொடுக்ககூடியது சக்தி மட்டுமே, இந்த சக்தியினை உமா என சிவசூத்திரம் குறிப்பிடுகிறது.

ஆகவே லலிதை மனதின் மாயையினை அகற்ற பல்வேறு ரூபங்களுடனும் நாமங்களுடனும் தோன்றி அருள்புரிகின்றாள். அவள் தனியாகவே எல்லவித பதிவுகளையும், மாயைகளையும் அகற்றி உணர்வினை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி சிவத்துடன் தொடர்புற வைக்கிறாள். ஒரு தடவை சிவத்தினை உணர்ந்துவிட்டாம் எல்லையற்ற பேரின்பம் நிலைத்திருக்க தொடங்குகிறது.

கட உபநிஷதம் புலங்களாகவும், உடலினை தேராகவும் அடையவேண்டிய இலக்கே பாதையே சுயமே அனுபவிப்பவனாக (குதிரைகளினதும் தேரினதும் உரிமையாளன்)   உருவகப்படுத்துகிறது. அறிவானது கட்டுப்படுத்தப்படாத மனதுடன் தொடர்பு பட்டிருக்கும் போது எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிய முடியாதது. இது கட்டுப்படுத்தப்பட முடியாத குதிரைகளை கொண்ட தேர்ப்பாகன் போன்ற நிலை. இத்தகைய நிலைகள் தேவிபாகவதத்திலும் ஸ்ரீமத் பகவத் கீதையிலும் விளக்கப்பட்டுள்ளது. 

Sunday, May 05, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 25: நாமங்கள் 59 - 63


மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தாயை (59)
தாமரைக்காட்டில் உறைபவள்

தாமரைகளால் நிறைந்த வனத்தில் வசிப்பவள். தாமரை மலர் நீரில் மட்டுமே மலரும். இயற்கையின் வளத்தினைப்பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. பெரும் மலைகளும் சிகரங்களும் பற்றி முன்னைய நாமங்களில் விபரிக்கப்பட்டது. இதில் மறைமுகமாக நீர் நிலைகளைப்பற்றி கூறப்படுகிறது. மஹாபத்ம என்பது ஒரு வித யானையினையும் குறிப்பிடும்.

இந்த நாமம் தலையுச்சியில் அமைந்துள்ள சஹஸ்ரார சக்கரத்தினைப்பற்றிக் குறிப்பிடுகிறது. இது ஆறு ஆதாரங்களையும் தாண்டி தலைக்கு மேல் அமைந்துள்ள ஒரு சக்கரமாகும். சஹஸ்ராரத்திற்கு நடுவில் ஒரு துளைவடிவிலலிருக்கும் பகுதி பிரம்மாந்திரம் அல்லது மஹாபத்மாடவி எனப்படும். பிரபஞ்சத்தில் இருக்கும் தெய்வ சக்தி இந்த துளையினூடாக மாத்திரமே மனித உடலினுள் இறங்கும். உயந்த உலகங்களுடனான தொடர்பு இந்த துளையினூடாகவே ஏற்படுத்தப்படுகிறது. இந்த துளை ஆறு ஆதாரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. லலிதை சிவனுடன் சஹஸ்ராரத்தில் இணைகிறாள். இது அவளது சஹஸ்ராரத்திற்கு நடுவே உள்ள உத்தியோகப்பூர்வ உறைவிடத்தினை குறிக்கிறது.

கதம்பவந-வாஸின்யை (60)
கதம்பவனத்தில் வசிப்பவள்

தேவி தெய்வீக மணத்தினை பரப்பும் கதம்ப வனத்தின் நடுவில் வசிக்கின்றாள். அவளுடைய சிந்தாமணி க்ருஹத்தினைச் சூழ கதம்ப மரங்களால் நிறைந்த வனம் காணப்படுகிறது. இயற்கையின் பச்சை நிறம் இங்கு குறிப்பிடப்படுகிறது. இந்த வர்ணணை மூலம் வாக்தேவிகள் தேவியின் பிருத்வி தத்துவத்தினைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். தேவி பூமித்தாய் எனவும் அழைக்கப்படுகின்றனர். சிந்தாமணி க்ருஹத்தினை சூழ இருபத்தி ஐந்து சுவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஒவ்வொரு தத்துவத்தினை குறிப்பவை. கதம்ப வனம் எட்டாவது தங்கச்சுவரிற்கும் ஏழாவது வெள்ளிச்சுவரிற்கும் இடையில் காணப்படுகிறது.

இங்கு ஒரு முக்கியமான விடயம் அறிந்துகொள்ளலாம், ஸ்ரீ சக்கரத்தின் அனைத்து தேவ தேவியரும் இந்த ஏழாவது எட்டாவது சுவர்களுக்கிடையில் இடைத்தொடர்படைகின்றனர். வேத முறைப்படி பன்னிரெண்டு மாதங்கள் காணப்படுகின்றன. இந்த பன்னிரெண்டு மாதங்களும் இவ்விரண்டாக ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ருதுவும் ஒவ்வொரு தெய்வத்தால் ஆளப்படுகிறது. இந்த ஆறு கடவுள்களும் அவர்களுடைய சக்தியுடன் ஸ்ரீ புரத்தில் உள்ள மூன்று தொடக்கம் எட்டாவது சுவர் வரையிலான பகுதியில் வசிக்கின்றனர்.

தங்கச்சுவரிற்கும் வெள்ளிச்சுவரிற்கும் இடைப்பட்ட பகுதியில் மந்திரிணி தேவி எனப்படும் ராஜசியாமளை வசிக்கிறாள். இவள் 90 பீஜங்களுடைய மந்திரத்தின் வித்தையான பிரம்ம வித்தையிற்கு அதிபதி. நாமம் 10 இனை பார்க்கவும்.

வாக்தேவிகள் லலிதை எவ்வாறு இந்த பிரபஞ்சத்தின் மிக நுண்ணிய அசைவினையும் கட்டுப்படுத்துகிறாள் என்பதனை விளக்குகின்றனர். வார்த்தைப்பொருளினை வைத்துப்பார்க்கும் போது இந்த நாமத்திற்கு முக்கியமான பொருள் எதுவும் இல்லை. ஆனால் இந்த சஹஸ்ர நாமத்தில் ஒவ்வொரு நாமமும் உள்ளார்ந்த இரகசிய அர்த்தத்தினையும் மந்திர பீஜத்தினையும் கொண்டிருக்கும். பொதுவாக இந்த இரகசியங்கள் பொதுவில் பகிர்வதில்லை. இத்தகைய இரகசியங்களை அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே உள்ளனர்.

ஸுதா-ஸாகர-மத்யஸ்தாயை (61)
அமிருதக்கடலின் நடுவில் உள்ளவள்.

அமிர்தக்கடலின் மத்தியில் தேவி இருக்கிறாள். ஸுதா என்றால் அமிர்தம் என்று பொருள். ஸாஹர் – கடல், மத்யஸ்தாயை -  நடுவில். ஸுதா ஸாகரம் சஹராரத்தின் மத்தியில் இருக்கிறது. சஹஸ்ராரத்திற்கு சற்று முன்னதாக ஸோம சக்கரம் இருக்கிறது. குண்டலினி உஷ்ணத்தினால் எழும்பி இந்த சக்கரத்தினை அடையும் போது இதிலிருந்து அமிர்தம் வழிந்து தொண்டையினை அடையும் (நாமம் 106). இந்த திரவம் தேனைப்போன்று பாகுத்தன்மையுடையதாகவும் சுவையுடையதாகவும் இருக்கும். இந்த திரவம் அமிர்தவர்ஷினி எனப்படும். அமிர்தம் என்பது இறவா நிலைதரும் மருந்து. தேவி இந்த ஸோமச்சக்கரத்தின் மத்தியில் அமர்ந்து அமிதத்தினை 72,000 நாடிகளினூடாக மனித உடலினுள் பொழிகிறாள். இந்த அமிர்தம் உடலினுள் முறையாக சேர்ந்தால் உடல் இறப்பில் இருந்து விடுபடும் எனக்கூறப்படுகிறது. எப்படியாயினும் இது உயர் நிலை குண்டலினி தியானத்தின் மூலமே சாத்தியமான ஒன்று. இதனாலேயே சித்தி பெற்ற மஹான் கள் பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்தனர்.

சுத்த சிந்து என்பது ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் இருக்கும் பிந்துவினையும் குறிக்கும். இது சௌந்தர்ய லஹரி 8வது ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாமம் மிக முக்கியமான ஒரு நாமமாகும், ஏனெனில் அமிர்தவர்ஷினியினைப்பற்றியும் பிந்துவினைப்பற்றியும் குறிப்பிடுகிறது.

காமாக்ஷ்யை (62)
கடாக்ஷத்தால் காமங்களைப் பூர்த்தி செய்பவள்

அன்புததும்பும் கண்களை உடையவள். அவளது கண்கள் இந்த பிரபஞ்சத்தின் மீது அருள், அன்பு, கருணை நிறைந்தவை. அதனாலேயே அவளது கண்கள் மிக்க அழகானவை. அவளுடைய பார்வை பட்ட பக்தனது விருப்பங்கள் எல்லாம் பூர்த்தியாகும். பொதுவாக எமது எண்ணங்கள் கண்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. காம என்பது (கா+மா) இரு பீஜாட்சரங்களது இணைவு. கா என்பது சரஸ்வது, மா என்பது லக்ஷ்மி. இந்த இருதேவதைகளும் லலிதையின் கண்களில் இருக்கின்றனர். காம என்பது சிவனையும் குறிக்கும். இது தேவி சிவனின் கண்ணாணவள் என்பதையும் குறிக்கும்.

காமதாயின்யை (63)
விரும்பியதைத்தருபவள்

விரும்புவது எதுவானானலும் அதனை அளிப்பவள். இதற்கு பலவித வியாக்கியானங்கள் உள்ளது. காம என்பது காமேஸ்வரனான சிவன். தாயினி என்றாள் தருபவள் என்று பொருள். முன்னைய நாமங்களின் விளக்களில் சிவன் நேரடியாக அடைய முடியாதவர், சக்தியினூடாக மட்டுமே அடையக்கூடவர். தேவி மட்டுமே பக்தர்களை ப்ரகாச வடிவாகிய நிர்குணபிரம்மமாகிய சிவனிடம் அழைத்துச்செல்லக்கூடியவள். தேவி சிவத்தினை சூழ உள்ள ஒரு திரை போன்றவள். இந்த திரை விலகாமல் சிவத்தினை அறிய முடியாது. அந்த திரையினை அகற்றுவதற்கும் அவளது அருள்தான் வேண்டும்.

படைப்புக்கடவுளான பிரம்மன் தேவிக்கு அளித்த நாமங்கள் இரண்டு; காமாக்ஷ்யை, காமேஸ்வரி. இந்த நாமங்கள் அவளுடைய எல்லையற்ற அறிவின் நிலையினால் கூறப்பட்டது. பிரம்மா இந்த இரு நாமங்களால் தேவியினை மரியாதைப்படுத்தியதன் காரணம் தேவி தன்னுடைய கண் பார்வை  அசைவினாலேயே பிரபஞ்சத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துகின்றமை.  இந்த விளக்கம் தேவியின் விமர்ச ரூபத்தினை பற்றி கூறுகிறது. தாயினி என்றால் உரிமையுடையவள் என்று பொருள். சிவனிற்கு உரிமையுடையவள். அதாவது சிவன் அவளுக்கு மட்டுமே உரியவர் என்பது

59வது நாமம் இரகசியமாக வாராஹி தேவியையும், 60வது நாமம் சியாமளா தேவியினையும், 61வது நாமம் காமாக்ஷி தேவியையும், 62 வது திரிபுர சுந்தரியினையும் குறிக்கும். இவை மிக சூட்சுமமான விளக்கங்கள்

இந்த நாமத்துடன் தேவியின் பௌதீக ஸ்தூல ரூபவர்ணணை முடிவுறுகிறது. நாமம் 64 இலிருந்து 84 நான்கு வரை பண்டாசுர வதம் பற்றி கூறப்படுகிறது. இதிலிருந்து தேவியினுடைய அதீத ரூபம் பற்றிய வர்ணணை தொடங்குகிறது. இந்த நாம பாராயணம் மிக இரகசியமான சாதனையாகும்





*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Saturday, May 04, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 24: நாமங்கள் 54 - 58


ஸ்வாதீன-வல்லபாயை (54)
தன்வயப்பட்ட பர்த்தாவையுடையவள்

தேவியினுடைய கணவராகிய சிவன் அவளுக்கு மாத்திரமே உரியவர். இது முதல் நாமத்தின் விளக்கத்தினை உறுதிப்படுத்துகிறது. முந்தைய நாமத்தில் சிவன் தன்னுடைய மூன்று தொழில்களை செய்வதற்கு சக்தியினை படைத்தார் என்பதனைப் பார்த்தோம். இந்த தனிக்காரணத்திற்காக இயக்க சக்தியான சக்தியினை நிலைச்சக்தியான சிவத்திற்கு எதிராக படைத்தார். அவள் மட்டுமே சிவத்தினுடைய ஒரேயொரு படைப்பு, ஆதலால் சிவம் அவளுக்கு மட்டுமே உரித்தான ஒருவர். சிவம் இந்த பிரபஞ்சத்தின் மூலகாரணம், அவருடைய ஆற்றல் சக்தி. இந்த ஒருங்கிணைப்பு இல்லாமல் இந்த பிரபஞ்சம் இயங்கமுடியாது. இது சௌந்தர்ய லஹரியிலும் (01) உறுதி செய்யப்பட்டுள்ளது. சக்தியுடன் இணையாமல் சிவனால் ஒரு அங்குலமும் அசைய முடியாது.

இதனை கீழ்வருமாறு விளக்க முடியும்; பிரம்மன் எல்லாமும் ஆன ஆதிப்பொருள். ஆன்மா உயிரினையும் கர்மங்களையும் உள்வாங்கி ஜீவாத்மாவாகிறது. பிரம்மனோ ஆன்மாவோ தனாகவே உயிரினை உண்டாக்க முடியாது. பிரம்மத்திற்கு தனது முழுமையை செயற்படுத்த ஆன்மா தேவை, ஆன்மாவிற்கு பிறப்பெடுக்க பிரம்மம் தேவை. சௌந்தர்ய லஹரி (01) கூறுகிறது, சிவம் தனியே செயற்பட முடியாது, அதுபோல் சிவமின்றி சக்தி செயற்படமுடியாது என்று,  என்று. இவை சக்தியைப்பற்றி குறிப்பிடப்படும் வார்த்தைகளாக இருப்பதால் இப்படிக்கூறப்படுவது ஒரு கவித்துவமான வர்ணனையாகும்.

இந்த நாமத்துடன் லலிதையின் பௌதீக உருவ வர்ணணை முடிவுறுகிறது. 53வது நாமத்தில் இருந்து 64வது நாமம் வரை லலிதை வசிக்கும் ஸ்ரீ நகரத்தின் வர்ணணை ஆரம்பமாகிறது. 13 தொடக்கம் 54 வரையிலான நாமங்களை அவதானித்து பார்த்தால் தேவியினுடைய அங்கங்களை வர்ணிப்பதைக் காணமுடியும். இந்த சஹஸ்ர நாமத்தில் மட்டும் அல்லாது சௌந்தர்ய லஹரியிலும் இத்தகைய வர்ணணைகளைக் காணமுடியும். பொதுவாக தேவியினுடைய அங்க அழகு பற்றிய இத்தகைய வர்ணணைகள் அனுமதிக்க கூடியதா? என்ற கேள்வி எழும். இது பற்றி இரண்டு வகையான பதில்களை கூறலாம். ஒன்று கவித்துவம், கவிதைகளில் இத்தகைய சிருங்கார ரஸவர்ணணைகள் இருப்பதற்கு அனுமதி உண்டு. அப்படியாயின் அது ஆதிசங்கரன் அருளிய சௌந்தர்ய லஹரிக்கு மட்டுமே பொருந்தும். எப்படி மிக உயர்ந்த ஞானியான சங்கரர் இப்படியான வர்ணணைகளை கூறமுடியும்? சங்கர் சாதாரண மனிதர் அல்ல, சிவனின் அவதாரமாக கருதப்படுகிறார். இது உண்மையானால் இந்த வர்ணணைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. அப்படியாயினும் ஏன் எல்லோரும் அறியும் வண்ணம் பொதுவில் இத்தகைய வர்ணனைகளை கூறினார் என்பது கேள்வியாகிறது. இதற்கான பதிலினை அறிவது கடினம். இதற்கான பதில் மிகவும் சூட்சுமமானதாக இருக்கும். சாதாரண நிலையில் அறிந்துகொள்ள கடினமாக இருக்கும்.

இந்த சஹஸ்ர நாமத்தினை எடுத்துக்கொண்டால் வாக்தேவிகளால் உருவாக்கப்பட்டது. வாக்தேவிகள் எப்போதும் லலிதாம்பிகையுடன் வசிப்பவர்கள். மேலும் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகை முன்னிலையில்படித்து காண்பிக்கப்பட்டு அவளின் அனுமதி பெறப்பட்டது. ஆகையால் அதில் ஏதும் பிழைகள் இருப்பின் அந்தக்கணமே லலிதை வாக்தேவிகளை கடிந்திருப்பாள். அதனை செய்யவில்லை. ஆகவே இந்த நாமங்கள் லலிதாம்பிகையின் அனுமதி பெற்றவை என்பது தெளிவாகிறது. அதுபோல் பஞ்சதசி மந்திரத்தினை தேவியின் உடலுடன் இணைத்து தியானிக்கும் தியானம் மிகவும் இரகசியமானது, அதனை முற்பகுதிகளில் வெளியிட்டிருந்தோம்.

கீழ்வருவனவே சஹஸ்ர நாமத்திலோ அல்லது வேறேங்கோ இத்தகைய வர்ணணைகளுக்குரிய காரணமாக இருக்க முடியும். முதலாவது கவித்துவ அடிப்படையில் இந்த வர்ணணைகளை ஏற்றுக்கொள்ள முடியும். கவித்துவத்தினை காட்டுவதற்கு இத்தகைய வர்ணணைகளை கூறுவது இயல்பானது. இரண்டாவது இவற்றைப்படிக்கும் பக்தர்களின் மன நிலையினை எவ்வாறு எழுச்சி அடைகிறது என்பதினை சோதிப்பது. உயர்ந்த விழிப்புணர்வு நிலையினை அடைவதற்கு முன்னர் இத்தகைய சோதனைகளை தாண்டுதல் அவசியம். முன்றாவது அத்தகைய வர்ணணைகள் மாயா சக்தியின் விளையாட்டுகளில் ஒரு பாகம். ஒருவனிலிருந்து மாயா சக்தி நீங்கும் வரை பிரம்மத்தினை அறிய முடியாது. இந்த முயற்சியினை மாய சக்தியின் பார்வை எப்போதும் தடுத்துக்கொண்டு இருக்கும். அத்துடன் இது குண்டலின் சக்தியினையும் அது பயனிக்கும் பாதைகளையும் குறிப்பிடும். இவற்றுக்கெல்லாம மேலாக இதன் உள்ளர்த்ததினை அறிவது மிகக்கடினமான ஒன்றாகும். ஒருவன் இந்த மாய உலகின் நடனத்தினை நன்கு புரிந்துகொண்டு, அது ஆசைகளால் நிரம்பியது என்றும் ஒருவன் அந்த ஆசைகளை கடந்து உயர்ந்த உணர்வு நிலைக்கு செல்ல இந்த உண்மைகளை புரிந்துகொண்டே கடக்கவேண்டும் என்பதனை நன்கு அறிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னரே பிரம்மத்தினை அறியமுடியும். இந்த விடயத்தினைப்பற்றிய உரையாடலினை முடிப்பதற்கு முன்னர் ஒருவர் நிர்குண பிரம்மம் என்பது குணங்களும் உருவமும் அற்றது என்பதனையும் நிர்குண பிரம்மத்தினை உணர்வதற்கு  முதலி சகுண பிரம்மத்தினை உணரவேண்டும் என்பதனையும் மறக்கக்கூடாது. இந்த வர்ணணைகள் இந்த விடயம் பற்றி பூரண அறிவு அற்றவர்களுக்கு (பிரம்மம் என்றால் என்ன என்று அறியாதவர்களுக்கு) குறைந்தது சகுணபிரம்மத்தினை உருவகப்படுத்தி ஆன்மீகப்பாதையில் முன்னேற உதவும் என்பதனை அறிதல் வேண்டும்.

ஸுமேரு-மத்ய-ஸ்ருங்கஸ்தாயை (55)
மேருமலையன் நாலாவது சிகரத்தில் இருப்பவள் (மற்றை மூன்று சிகரங்களுலும் மும்மூர்த்திகள் வசிக்கின்றனர்)

இந்த நாமத்தில் இருந்து 63வது நாமம் வரை தேவியின் வசிப்பிடம் வர்ணிக்கப்படுகிறது.

ஸுமேரு என்பது மேரு மலையின் நடுப்பகுதியினை குறிக்கும். தேவி மேரு மலையின் மத்தியில் வசிக்கிறாள். வாக்தேவிகள் 52 நாமத்தில் லலிதா சிவனின் இடது துடையில் இருக்கிறாள், அது இயக்க சக்தியினதும் நிலைச்சக்தியினதும் இணைவினைக்குறிக்கும். தற்போது அவளது வசிப்பிடம் பற்றிக்குறிப்பிடுகிறார்கள். மேரு மலை மூன்று சிகரங்கள் கொண்ட மலைத்தொடர், அந்த மூன்று மலைச்சிகரங்களையும் இணைத்தால் ஒரு முக்கோணமாக காணப்படும். இந்த மூன்றுக்கும் நடுவில் மற்றைய சிகரங்களை விட உயரமாக இருக்கும் சிகரத்தில் லலிதை வசிக்கிறாள். துர்வாசக மகரிஷி தனது லலிதா ஸ்தவரத்ன எனும் நூலில் “ நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் வசிக்கும் மூன்று சிகரங்களை வணங்குகிறேன், இவற்றுக்கு நடுவே உயர்ந்த சிகரம் ஒன்று காணப்படுகிறது. அதனை தங்க நிறம் அழகுபடுத்துகிறது, அதனை நான் வணங்குகிறேன் என்று.

இது ஸ்ரீ சக்கரம் பற்றிய வர்ணணையாக இருக்கும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் முக்கோணமும் அந்த முக்கோணத்திற்கு நடுவே பிந்துவும் காணப்படுகிறது. இந்த பிந்துவிலேயே லலிதையும் கணவரான மஹா காமேஸ்வரரும் இருக்கின்றனர். 52 நாமம் பிந்துவின் தியானம் பற்றி குறிப்பிடுகிறது.

ஸ்ரீமந் நகர-நாயிகாயை (56)
ஸ்ரீ நகரத்தின் நாயகி
தேவி புனிதமான எல்லா செல்வவளங்களும் குவிந்த ஸ்ரீ நகரத்தினை அதிபதியாக இருக்கிறாள். ஸ்ரீ நகரத்தினைப்பற்றி இரண்டு வர்ணணைகள் காணப்படுகின்றன. ஒன்று துர்வாசக மஹரிஷியின் லலிதா ஸ்தவரத்னம், மற்றையது ருத்ரயாமளம் (சிவனால் பார்வதிக்கு கூறப்பட்டது). முன்னையது ஸ்ரீ நகரம் தேவஸ்தபதியான விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறுகிறது. ருத்ரயாமளம் ஸ்ரீ நகரம் பாற்கடலுக்கு மத்தியில் காணப்படும் ரத்தினதுவீபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ நகரத்திற்கு மத்தியில் இன்னுமொரு நகரம் காணப்படுகிறது, அது ஸ்ரீ வித்யா எனப்படும். இது இருபத்தியைந்து சுவர்களால் ஆனது, ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு தத்துவத்தினை குறிக்கும். அவள் அதற்கு பேரரசி, அதனுள் இருந்துகொண்டு தன்னுடைய படைத்தல் முதலிய தொழில்களை செய்கிறாள்.
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தாயை (57)
சிந்தாமணி கிருகத்திலிருப்பவள்

மிகவும் விலையுயர்ந்த இரத்தினமான சிந்தாமணி இரத்தினத்தால் கட்டப்பட்ட மாளிகையில் வசிப்பவள். இந்த மணி மனதில் நினைப்பதை தரக்கூடிய வல்லமை வாய்ந்தது. இது ஸ்ரீ நகரத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ளது. எல்லா தேவ தேவியரும் இந்த இடத்திற்கு தேவியை வணங்குவதற்காக வருகை தருகின்றனர். இந்த இடமே எல்ல மந்திரங்களும் உற்பத்தியாகும் இடம். இந்த இடத்தினை தியானிப்பதால் மனதின் எல்லாவிதமான உபாதைகளும் நீங்கும்.

பஞ்ச-ப்ரஹ்மாஸன-ஸ்திதாயை (58)
பஞ்ச பிரம்மங்களையும் ஆசனமாக உடையவள்
தேவி ஐந்து பிரம்மங்களை ஆசனமாக கொண்டவள். ஐந்து பிரம்மங்களும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மஹாதேவன், சதாசிவன் ஆகிய ஐவர். சிவன், மஹாதேவன், சதாசிவன், காமேஸ்வரன் ஆகிய நால்வரும் வெவ்வேறானவர்கள். சௌந்தர்ய லஹரி (92) கூறுகிறது “பிரம்மா, விஷ்ணு, சிவன், மஹாதேவன் ஆகிய நால்வரும் உனது ஆசனத்தின் கால்களாகவும் சதாசிவன் ஆசனமாகவும் இருக்கிறார்கள். இந்த நாமம் அவளுடைய பிரபஞ்சத்தின் அதியுயர் தன்மையினைக்குறிக்கிறது. ஆனால் வாக்தேவிகள் பிரம்ம, விஷ்ணூ முதலியவர்கள் ஆசனத்தின் காலகளாகவும் சதாசிவன் ஆசனமாகவும் இருக்கிறார்கள் என்று கூறவில்லை. இந்த பஞ்சப்பிரம்மன் என்பதற்கு இன்னொருவித விளக்கமும் காணப்படுகிறது. இவை பஞ்சபூதங்களை குறிக்கின்றது என்று. எமது உடலில் (மூலாதாரம் தொடக்கம் விசுத்தி வரை) ஐந்து சக்கரங்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு பூதத்தினைக் குறிக்கிறது. மூலாதாரம் – மண், சுவாதிஷ்டானம் – நீர், மணீப்பூரகம் – நெருப்பு, அநாகதம் – வாயு, விசுத்தி – ஆகாயம். லலிதை இந்த ஐந்து பூதங்களின் மேலும் அமர்ந்திருக்கிறாள். இந்த விவரணம் சரியானதாகவும் பொருந்துவரக்கூடிய வகையிலும் காணப்படுகிறது. இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டிருப்பது பஞ்சபூதங்களால், அவற்றை ஆளவது லலிதையே என்பதனைக்குறிக்கிறது. இந்த ஐந்து சக்கரங்களும் தாண்டிய பின்னர் வரும் ஆறாவது சக்கரம் ஆக்ஞா எனப்படும், இது மனதினால் ஆளப்படுவது. இதனைக்கடக்கும் போது சிவனும் சக்தியும் இணையும் இடமான சஹஸ்ராரம் காணப்படுகிறது. இதுபற்றி சில நாமங்களில் குறிப்பிடப்படுகிறது. நாமம் 249 உம் 947 உம் இந்த விடயம் பற்றி பேசுகின்றன.


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...