குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Wednesday, March 07, 2012

குருவின் அவசியமும் அநாவசியமும்


உண்மையான குரு அகத்திலுள்ள நான் எனும் ஆன்மாவே, மனிதன் தனது உடலினை பார்த்தறிவதற்கு கண்ணாடி எப்படி உபயோகமாகிறதோ அது போல் எமது உண்மையான சொருபத்தினை அறிவதற்கு தன்னை அறிந்த ஒரு புறக்குரு தேவைப்படுகிறார், அவர் ஒரு கருவி மட்டுமே! இதுதான் உனது உண்மையான சொரூபம் என காட்டிவிட்டபின் அந்த அனுபவத்திலிருந்து எமது உண்மையான ஆன்ம சொருபத்தினை அறிவது நான் ஆகிய எமது அகக்குருவின் வேலை, இந்த படிமுறையில் (குருவை மையமாக கொண்ட எந்த ஆன்மவித்தையிலும் தாந்திரீகத்தில்) தன்னை உணர வைக்கும் செயல்முறையான தீட்சை மட்டுமே குருவால் கொடுக்கப்படுகிறது, அதன் பின் மாணவன் தனது சுய முயற்சியாலும், தேவைப்படி ஆன்மாவினை அறியும் நோக்கத்தில் சலனமுறும் போதும் அவரவர் பக்குவத்திற்கமைய அகக்குருவும், புறக்குருவும் வழிகாட்டுகின்றனர். 

இந்திய ஆன்ம மரபில் பொதுவாக சித்த குருக்களும், தாந்திரீக குருக்களும் மாணவன் பக்குவமடைந்த பின் தம்முடைய பாதையினை சுயமாக தேர்ந்தெடுத்து தமது சாதனையினை தொடர்வதற்கு அனுமதிக்கின்றனர். சமூக அலகில் அது நிறுவனமயப்படுத்தப்படும் போதும், ஞானத்தால், சாதனையால் பெறும் சக்திகளை, சித்திகளை தமது அகங்காரத்தினால் துஷ்பிரயோகம் செய்ததாலும், அவற்றை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனங்களாக மடங்களும், பீடங்களும் உருவாகும் போதுதான் நாம் விவாதிக்கும் குரு சிஷ்ய சேவை, பணம், என ஆன்ம ஞானத்திற்கு உபரியான மற்றைய விடயங்கள் வருகின்றன. 

இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் பலவிதமக்கள் தமது மன உருவகங்களுக்கு ஒவ்வொரு விடயங்களிலும் திருப்தி உறுகின்றனர். உணவைப் போல், சினிமாவைப்போல், பொழுதுபோக்குபோல் மனதின் அடிமையான மனிதனிற்கும் ஆன்மீகமும் பலவித சுவைகளில் தேவைப்படுகிறது. இவற்றை திருப்திப்படுத்த முனையும் குரு உண்மையான ஞானத்தினை கொடுப்பதில்லை. அல்லது நோக்கம வழிமாறுகிறது, இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் சிக்கி தமது மனநிம்மதியினையும் பணத்தினையும் இழந்து பின்பும் மனப்போராட்டத்தில் சிக்கி இந்த மார்க்கமே பொய் என்ற மனவிரக்தியில் பலர் புலம்புவதை நாம் காண்கிறோம். 

ஆகவே ஆனம பாதையில் செல்ல விரும்புபவர்கள் குருவின் அவசியத்தினையும் அநாவசியத்தினையும் புரிந்திருப்பது அவசியம்!இல்லாவிடில் வீண் மனக்குழப்பம்தான் எஞ்சும்! 

3 comments:

 1. மிக முக்கியமான விசயத்தை எழுதி இருக்கிறீர்கள்.. குருவை நிறுவனங்களில் தேடுவதை விட அகத்தில் தேடுவதே சிறப்பு..

  பகிர்வுக்கு மிக்க நன்றி...

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 2. தெளிவாகவும், சரியாகவும்,
  இவ்வளவு அப்பட்டமாகவும் உண்மையை சொல்லியுள்ளீர்கள். இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு அக,புறகுருவைக் கொண்டு மேல்நிலை அடைய வேண்டும்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் இனிய நண்பரே சுமணன் அவர்களே!!!

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...