காயத்ரி சாதனைக் குறிப்புகள் - 01

காயத்ரி மந்திரமானது ரிஷிகளின் மூல மந்திரமாக இருந்து வருகிறது, அதன் அமைப்பு இரு வகைகளில் பயன் படுகிறது, ஒன்று அர்த்தமுள்ள பிரார்த்தனையாக ஆழ்மனதிற்கு ஒரு சுய ஹிப்னாடிச மறை மொழியாக (auto suggesstion) மனதை செம்மைப்படுத்துகிறது, இரண்டாவது அதன் அதிர்வுகள் எல்லா மந்திரங்களது அதிர்வுகளையும் வழங்கி மனிதனில் சூஷ்ம சக்தியினை விழிப்பிற்க கூடியதாக உள்ளது, சாதாரண வைதிகர்கள் பயன்படுத்தும் காயத்ரி முதலாவது வகையினை சார்ந்தது, இரண்டாவது முறை தாந்திரிக அடிப்படையில் தீட்சை மூலம் செயற்படுத்த படுவது. இரண்டாவது முறையில் முறையாக சித்தி பெற்ற குருமுறையாக சாபவிமோசனம் செய்வித்து மந்திர தீட்சை பெறுதல் வேண்டும். இப்படியான தீட்சையினால் பெறப்படும் காயத்ரி மந்திர சித்தியினால் ஒருவன் தனது ஆன்ம பரிணாமத்தினை சாதனையினை பூர்த்தி செய்யும் வழியில் ஞானம் உருவாக்கி அவனை வலி நடாத்தும்.

இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்கலாம் என்பது நிறுவப்பட்டுள்ளது, ஆதலால் இவற்றை பற்றி விவாதித்தல் அவசியமற்றது.

காயத்ரி மந்திரத்தின் பொருள்

"எல்லாம் வல்ல பரம்பொருள் எமது அறிவினை ஒளிர செய்து சரியான வழியில் இட்டு செல்லட்டும்"

இந்த பொருள் மிக எளியதும் மனிதனது அனைத்து தேவைகளையும் தீர்ப்பதற்கான அடிப்படை தகுதியை வழங்க்கிவதாகவும் உள்ளது. ஒருவனுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணம் அறியாமை, அறியாமையினால் துன்பம் வருகிறது, ஆகவே துன்பத்தினை தீர்பதற்கு அறியாமையினை நீக்குதல் வேண்டும், எந்த பிரச்சனையினையும் எதிர்கொள்ளும் மனநிலையும் தீர்க்கும்  பக்குவமும் அறிவு தெளிவானவர்களுக்கு இலகுவாகும். தினசரி இந்த பொருளினை மனதில் சிந்தித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வருபவர்களுக்கு படிப்படியாக புத்தி இறை ஞானத்துடன் தொடர்பு கொள்ளத்தொடங்கும், அவை வலுக்க எந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் தன்மை உண்டாகும்.

இந்த செயல்முறையினை மேலும்  தெளிவாக விளக்குவதானால் ஒருமனிதன் எந்த முடிவுகளையும் எடுக்கும் போதும் அவனுடைய மேல் மனம் ஆழ்மனதினை தொடர்பு கொள்ளும், அந்த வேளையில் ஆழ்மனம் தரும் தகவல்களை வைத்துக்கொண்டு மேல்மனம் அந்த விடயம் தொடர்பாக புத்தியின் துணையுடன் ஆராயும், இதன் படியே ஒருவரும் முடிவுகள் அமையும், இந்த செயல்முறையில் மேல்மனதினை, ஆழ்மனம் செல்வாக்கு செலுத்தும், ஆழ்மனதினை புத்தி செல்வாக்கு செலுத்தும், இவற்றின் தன்மை, தூய்மை, பலம் போன்றவற்றின் தன்மைக்கு அமைய ஒருவருடைய ஆற்றல் செயல் அமைந்திருக்கும். பொதுவாக மேல்மனம் தர்க்க மனம் - ஒருவிடயதினை சரியா, பிழையா என ஆராய்ந்து கொண்டிருப்பது, இவற்றுக்குரிய தகவல்களை எந்த வித ஒழுங்கும் இல்லாமல் வழங்கிக்கொண்டு இருப்பது ஆழ்மனம், இதுதான் சரி , இது பிழை என ஒப்பீடு வழங்குவது புத்தி, ஆக புத்தி சரியாக இருந்தால் மற்றைய இரு பகுதிகளும் சரியாக வேலை செய்யும்.

காயத்ரி மந்திரம் என்பது இந்த பொறிமுறையினை சரி செய்யும் ஒரு உபகரணமே (tool) ஆகும், அதன் பொருள் ஆழ்மனதிற்கும் மேழ்மனதினையும் புத்தியுடன் இணைக்கும் செயலை செய்கிறது, அதன் மந்திர அதிர்வுகள் புத்தியை தெய்வ சக்தியான பரஞானத்துடன்  இணைக்கிறது.  

இதுவே எந்த பிரார்த்தனைக்கும் பொருந்தும் செயல்முறை இரகசியமாகும் - அதாவது எந்த மந்திரதினது அதிர்வு புத்தியை இறை சக்தியுடன் இணைக்கும், அதற்கு பொருள் 
இருப்பின் அது மனம் - புத்திகளை ஒழுங்குபடுத்தும். 

இந்த விளக்கத்தின் மூலம் காயத்ரி மந்திரம் எப்படி செயற்படுகிறது என்பதன் அடிப்படை விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

ஓம் சத்குரு பாதம் போற்றி! 

Comments

 1. மந்திரங்கள் செயல்படும் முறைமை பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். மந்திரங்களின் இன்னொரு முக்கிய பணி, நம் மனதை தூய்மைப் படுத்துவதும் (Cleaning), பண்படுத்துவதும் (Refining) ஆகும். அந்த தூய்மைப்படுத்தும் பணி முழுமையடைந்தால்தான் மந்திரத்தின் முழுபயனை ஒருவர் அடைய முடியும்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 2. தங்கள் பகிவுக்கு நன்றி... சித்தர்தள் என்று கூறி தமிழை விடுத்து சமசுகிருத மந்த்ரங்களை விளக்கியதின் பொருள் தான் புரிய வில்லை....

  தாங்கள் தெரிவித்த கருத்தின் படி ஒரு வினா எனக்கு எழுந்தது... இந்த காயத்ரியை அனைவரும் பயன்படுத்தக் கூடாது என்று யார் அந்த தடையை நீக்கியவர் யார்? மேலும் இந்த ஒரே காயத்ரி மந்த்ரத்துக்கு பல விளக்கங்கள் இருந்தால் குழம்புபவர் சிலர் அல்ல பலர்

  ”இத்தகைய அரிய மந்திரத்தின் சக்தி தவறாக பயன்படக்கூடாது என்பதனை கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னர் அவை வைதிகர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் கருத்தில் அதனுடைய உபயோகம் மட்டுப்படுத்த பட்டது. தார்காலத்தில் அனைவரும் காயத்ரி ஜெபிக்கலாம் என்பது நிறுவப்பட்டுள்ளது, ஆதலால் இவற்றை பற்றி விவாதித்தல் அவசியமற்றது”

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு