குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, October 28, 2011

காயத்ரி சாதனை

குருதேவர் காயத்ரி சித்தரும், ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரும் உபதேசித்தபடி...காயத்ரி மந்திரம் பற்றி இன்று அறியாத இந்துக்கள் இல்லை எனலாம். இவர்கள் இது ஒரு வேதமந்திரம், பிரார்த்தனை என்ற அளவில் அதன் பலனை அறிந்தோ அறியாமலோ ஜெபித்து வருகின்றனர். உண்மையில் சித்தர்களும், ரிஷிகளும் அறிந்த பேருண்மை "காயத்ரி" ஆகும்.
ஒவ்வொரு மனிதனிற்கும் அறிவு, ஞானம், மனோசக்தி, இருப்பது போல், இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஞான ஆன்ம சக்தியின் ப்ிரம்ம அலைவடிவம்தான் காயத்ரி மந்திரம்.
பூமியில் உள்ள நதிகள், மலைகள், இயற்கை, கோள்கள், நட்சத்திரங்கள் என்ற அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையில் தமது அசைவை மேற்கொள்ளுகின்றன, உடலில் உள்ள கலங்கள் மனிதனது தன்னறிவில்லாமலே சரியாக இயங்குகின்றன. இவ்வாறு இயங்குவதற்கு சரியான ஞானம் அவசியம், அந்த ஞானம் பெற்ற ஒருவன் தனது வாழ்க்கையில் நடைபெறும் விடயங்களில் எது சரி? எது தவறு என்ற அறிவினை பெற்று வாழ்க்கையின் உண்மையான இலட்சியம் என்ன என்பதனை அறிந்து தனது வாழ்க்கையினை இன்பமுள்ளதாக்கிக்கொள்கிறான். இந்த ஞானசக்தி எமது மனதின் ஆழங்களில் நீறுபூத்த நெருப்பாக மறைந்து காணப்படுகிறது. இந்த தணலினை ஊதி பெரும் ஞானநெருப்பாக்கி அதில் எமது அஞ்ஞானத்தினை எரிக்கும் செயல் முறையினை "சாதனை" "சாதனா" எனப்படும். காயத்ரி சக்தியினை தனது சூஷ்ம உடம்பில் செயற்படுத்த தெரிந்தவனுக்கும் அவனது ஆன்மா தெய்வசக்திகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை கிடைக்கிறது.
இவ்வாறான காயத்ரி மந்திரம், அதனுடைய சக்தி, அந்த சாதனையினால் எப்படி எம்மில் விழிப்படையச் செய்வது என்பது பற்றி இனிவரும் பதிவுகளில் குருவருளால் விளக்குவோம்.

5 comments:

 1. வெகுநாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு..

  ”சாதனை”க்கு ஒரு சிறந்த விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.. அருமை..

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. மிகப்பயனுள்ள அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. //........இந்த ஞானசக்தி எமது மனதின் ஆழங்களில் நீறுபூத்த நெருப்பாக மறைந்து காணப்படுகிறது. இந்த தணலினை ஊதி பெரும் ஞான‌ நெருப்பாக்கி அதில் எமது அஞ்ஞானத்தினை எரிக்கும் செயல் முறையினை "சாதனை" "சாதனா" எனப்படும். காயத்ரி சக்தியினை தனது சூஷ்ம உடம்பில் செயற்படுத்த தெரிந்தவனுக்கும் அவனது ஆன்மா தெய்வசக்திகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை கிடைக்கிறது.
  .........//
  சென்னை மீஞ்சூருக்கு அருகில் உள்ள பஞ்ச முக காயத்ரி ஆலயத்தில் 108 காயத்ரி ‍வேள்வி குண்டங்கள் அமைத்து பூஜை செய்ததில் நானும் கலந்து கொண்டு வேள்வி செய்ததுண்டு.
  இந்த காயத்திரி மந்திர உபாசனை செய்த காலத்தில் எனக்கு மகள் பிறந்ததால் அவளுக்கு காயத்ரி என்று பெயர் வைத்தேன். இந்த மந்திரத்தின் சக்தியோடும், வேறு சில பயிற்சியோடும் தெய்வ சக்திகளோடு தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை எனக்கு கிடைத்தது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

  இந்த காயத்திரிமந்திரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு தாங்கள் விளக்க முன்வருவதை அறிநது சந்தோஷப்படுகின்றேன்.
  தொடருங்கள் இந்தபதிவை.

  வாழ்த்துக்களுடன்,
  பா.முருகையன், வடலூர்.
  www.siddharkal.blogspot.com

  ReplyDelete
 4. திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
  இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.

  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete
 5. very nice informations.---by dr siva my email id:lionrssv@gmail.com

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01

குவாண்டம் இயற்பியல் குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் ...