பூஜை
என்பது என்ன நாம் சிறந்த ஒருவரின் அருகில் செல்வதன் மூலம் சிறப்பினைப் பெறுவது. நாம்
ஒரு அமைச்சரின் நட்பினைப் பெற்றால் அந்த நட்பின் பலனாக நாம் விரும்பியோ விரும்பாமலோ
எமக்கு சில செல்வாக்கு, நன்மை அதிகாரம் வந்து சேரும். அதைப்போல நாம் ஏதாவது ஒரு பிரபஞ்ச
மகாசக்தியை பூஜிப்பதன் மூலம் அந்த மகாசக்திக்கு அண்மையில் நாம் இருப்பதால் எமக்கு அறிந்தோ
அறியாமலோ சில சிறப்பியல்புகள் வந்து சேரும்.
உபாசனை
என்பது நாம் சிறப்பான ஒருவரின் அருகில் இருந்து பழகும் போது அவரது பண்புகளாலும், ஆற்றலாலும்
நாம் உருமாறி அவரைப்போன்ற சிறப்பான குணவியல்புகளைப் பெறுதல். எப்படி தீயிற்கு அருகில்
செல்லும் போது எமது உடலில் சூடு உருவாகுவதுபோல், பனிக்கட்டிக்கு அருகில் செல்லும் போது
உடல் குளிச்சியடைவது போல் உயர்ந்த தெய்வசக்தியிற்கு அருகில் செல்லும் போது எம்மிக்
அந்த தெய்வசக்தியின் பண்புகள் உருவாகி நாம் தெய்வ குணமுடியவர்களாக மாறுதல் உபாசனை எனப்படும்.
ஆகவே
நீங்கள் எந்தத் தெய்வத்தை பூஜை செய்தாலோ, உபாசனை செய்தாலோ இந்த மாற்றம் உங்களில் வரவேண்டும்.
இப்படி மாற்றம் வரும் போது மனம் சுத்தியாகி ஏகாக்கிரம் அடைந்து தியான சமாதி நிலையை
அடைவதன் மூலம் உண்மையான் பூஜை, உபாசனையின் இலக்கு அடையப்படுகிறது.
நாம்
ஒரு இலட்சியமாக தெய்வீக சக்தியை உபாசிப்பதன் மூலம் அந்த இலட்சிய தெய்வீக சக்திகளின்
பண்புகளை பெறுவதே இந்த இறைசாதனையின் நோக்கமாகும்.
காயத்ரி
உபாஸனை செய்தால் காயத்ரி சித்த சாதனையில் கூறப்பட்டுள்ள பண்புகள் உங்களில் விழிப்படைந்துள்ளதா
என்பதை ஆராயுங்கள், எந்தப் பண்பு விழிப்படையவில்லை என்பதை அறிந்த அதற்காக உங்களில்
இருக்கும் அசுத்த நிலைப் பண்புகள் எவை என்பதைக் கண்டுபிடியுங்கள்.
காயத்ரி
உபாஸனையின் பயனாக பிரபஞ்ச ஒழுங்குடன் ஒன்றி புத்தி செயற்படும் நிலை வாய்க்கிறது
மகாகணபதி
உபாஸனையினூடாக புலங்கள், தத்துவங்களைக் கட்டுப்படுத்தி அன்னையின் பேராற்றலைத் தாங்கும்
உடலும் மனமும் வாய்க்கிறது.
மகாலக்ஷ்மி
உபாசனையினூடாக இலட்சியமுடைய செல்வம், அருள் நிறைந்த வாழ்க்கை வாய்க்கிறது. ஸாதகன் இலட்சியமுடையவனாகிறான்.
இராஜசியாமளை
உபாசனையால் மனதின் எவ்வகை விருத்திகளிலும் தோயாத புத்தியோக வாழ்க்கையும், அனைத்தையும்
வசப்படுத்திய வாழ்வும் அமைகிறது.
புத்தியோக
வாழ்வில் வெற்றிபெற்றவனுக்கு மகாவாராஹி உபாசனை புலன் கள் அடங்கிய ஆத்ம சைதன்ய அனுபவம்
கிடைக்கிறது.
இவ்வளவும்
சாதித்தவனுக்கு அன்னையின் உண்மைச் ஸ்வரூபமான ஸ்ரீ லலிதையின் உபாஸ்னை கிட்டுகிறது.'
ம்ருயுஞ்ஜெய உபாஸனை ஒருவனுக்கு அம்ருதீகரண உடலையும், ஆரோக்கியத்தையும், பிராப்த கர்மத்தால் ஏற்படும் அகால மரணத்தைத் தடுத்து இறைத் தன்மையை உணரும் வாழ்வின் இலட்சியத்திற்கு தேவையான ஆயுள் ஆரோக்கியத்தைத் தருக்கிறது. எப்படி வெள்ளரிப்பழம் பழுத்தவுடன் கொடி தானாக விடுகிறதோ, அதுபோல் ஒருவன் ஞானம் பெற்றவுடன் பற்றுக்கள் தானாக அறும் என்ற ஞானத்தையும், ஆன்மீகம் என்ற போர்வையில் வாழ்க்கையின் கடமையிலிருந்து ஓடாமல் சாதிக்கும் உடல் உறுதியைத் தருகிறது.