5. தே³வகார்யஸமுத்³யதா - தேவ காரியங்களை நடத்துபவள்
சாதனா மந்திரம்:
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தே³வகார்யஸமுத்³யதாயை நம꞉ . ꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக
கடவுளின் வேலை என்ன? அவர் தனது ஆற்றலினை மிகச் சிறந்த வகையில் மிகச் சிறந்த ஒன்றினூடாக வெளிப்படுத்துதல். உயிர்கள் படிப்படையாக பரிணாமத்தில் உயர்வடைந்து உயர்தன்மைகளை அடைய வைத்தல். எல்லா உயிர்களிலும் துன்பத்தைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகரிப்பது, இவையே இறைவனின் வெளிப்பாடு. குறைந்தளவு துன்பத்தை வாழ்க்கையில் உருவாக்கி அதிகளவு உயர்ந்த நல்லிணக்கம், அன்பு மற்றும் பேரின்பத்தை உருவாக்குதல்.
கடவுள் தான் ஒரு சிறுமையான தன்மையை அடைந்து விட்டதாக தன்னைத் தானே நிந்திக்க முடியாது; அதோபோல் தான் மிக உயர்ந்த ஒன்றாக தன்னைத் தான் புகழ்ந்துகொள்ளவும் மாட்டார். கடவுள்தன்மை பற்றிய புரிதல் என்பது எப்போதும் சம நிலையானது. அவருடைய வேலை – தேவ காரியம் என்பது அனைத்திலும் சம நிலை ஏற்படுத்துவது.
இத்தகைய சம நிலைப் பார்வையைப் பெறுவதில் என்ன தடை இருக்கிறது? இந்தத் தடைக்கான காரணம் எம்மில் காணப்படும் பார்க்கப்படும் செயலும், பார்ப்பவரும் வேறு என்ற மயக்கமான நிலையாகும். நாம் காணும் இந்த உலகிலிருந்து வேறானவர்கள் என்று எண்ணிக்கொள்கிறோம். இந்த மயக்கத்திலிருந்து எமது சந்தோஷத்திற்கான தடைகள் ஒவ்வொன்றாக உருவாக ஆரம்பிக்கிறது; காம ம், கோபம், பேராசை, ஆவேசம், உரிமை, பொறாமை போன்றவை. இவை ஒவ்வொன்றையும் பகுத்தாய்வோம்.
நாம் விரும்பத்தக்க ஒரு பொருளைக் காணும்போது, அந்தப் பொருள் வேறு எவருக்கும் கிடைக்காதபடி, அதை தீவிரமாக, நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறோம்; அந்த பொருளை நாம் வைத்திருக்கும் போது, சம்பந்தப்பட்ட பொருளுக்கு வலிக்கும் அளவிற்கு உடைமையின் பலனை அனுபவிக்கிறோம். குறிப்பாக மனித உறவுகளில் இது நிகழ்கிறது. இதுவே காமம். இப்போது காம ம் தோன்றுவதற்கான காரணம் தெளிவாகிறது; அந்தப் பொருள் என்னிடமிருந்து பிரிந்தது என்ற எண்ணமே என் ஆசைக்குக் காரணம். முதல் படியில் ஆசை இல்லை என்றால் காம மும் இருக்க முடியாது. அத்துடன் நாம் காம முற்ற பொருள் நம்முடையதாகவில்லையே என்ற வலியும் எமக்கு ஏற்பட முடியாது. இப்போது ஒருவர் கேட்கலாம்: “ஏற்கனவே ஒரு பொருள் என்னுடையது என்று தெரிந்தவுடன் அதன் மீது ஆசை இல்லாமல் இருக்க முடியுமா?” இதற்குரிய பதில் “ஆம் நிச்சயமாக, ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டியது; ; நான் என் கணவனையோ அல்லது என் மனைவியையோ அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை, இரகசியமாக ஒரு காதலியை – திருமணத்திற்கு முன் அனுபவிக்க வேண்டும் என்ற என் ஆசையின் அதே அளவு காமத்தில் இருக்க வேண்டும்; அப்படிச் சம நிலையுடன் இருக்கும் போது அது காமம் இல்லை; என்னுடயது என்ற உரிமை ஒரு பொருளின் மீதான காமத்திலிருந்து காதலாக மாறுகிறது. ஒருவரை ஒருவர் துன்பத்திற்குள்ளாக்கி வலியை உருவாக்காமல் ஒருவக்கொருவர் இன்பம் தருபவர்களாக மாற வைக்கிறது. எப்போது நாம் காணும் உலகை எம்முடையதாக க் காண ஆரம்பிக்கிறோமோ அப்போது அந்தப் பொருள்கள் மீதான காமம் அவற்றின் மீதான அன்பாக மாற ஆரம்பிக்கிறது. காமத்திற்கும் காதலுக்குமான வித்தியாசம் இரண்டும் ஆசை என்ற ஒரு அடிப்படையில் தோன்றினாலும் காமம் அது காமுறும் பொருளுக்கு துன்புறுத்துகிறது. அன்பு அன்புறும் பொருளினை மேம்படுத்துகிறது. காமத்தில் உடைமை என்பது உண்மையல்ல; காதலில், உடைமை என்பது நிஜமானது.
கோபம் என்பது நாம் காம முற்ற பொருளை அடைவது தடுக்கப்படும் போது அல்லது நாம் செய்யும் ஒரு செயல் இறுதி நிலையை அடையாமல் இருக்கும் போது ஏற்படும் உருவாகும் உணர்ச்சி. இது விரக்தியான செயலின் நேரடி விளைவு. ஒருவர் அனுபவிக்கும் கோபத்தின் அளவு என்பது நாம் குறித்த பொருளின் மீது எவ்வளவு ஆசை வைத்திருந்தோம் என்பதன் நேர் விகித சமனாகும். ஒரு பெண்ணுடன் ஊர் சுற்ற சென்றது நடக்காதபோது ஏற்படும் விரக்தி அதிக கோபத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் போது சரியான சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்பது அதிக விரக்தி ஏற்படுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் வரை கொண்டு செல்லும் கோபம் ஏற்படலாம். காம ம் காமுறும் பொருளை துன்புறுத்துகிறது; கோபம் கோபமுறும் அனைவரையும் துன்புறுத்துகிறது. கோபத்தில் செய்யப்படும் செயல்கள் எதுவும் சரியான செயலாக இருக்காது. கோப உணர்ச்சி என்பது ஒருவன் காரண காரியத்துடன் செயற்படுவதை விட பலமான உணர்ச்சியாகும். இந்த ஆற்றல் ஒருவனுடைய தெளிந்த சிந்தனையாற்றலில் இருந்து அதிக ஆற்ற்லை உறிஞ்சிவிடும். விரக்தியுற்ற காதல் கோபமுறாது; அமைதியாக இருக்கும்; அது காதலித்தவரைத் துன்புறுத்துமே அன்றி காதலிக்கப்பட்டதை அல்ல.
பேராசை என்ற உணர்ச்சி என்னிடம் இது இல்லையே என்ற எண்ணத்துடன் தொடர்புடையது. இது என்னிடம் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் உள்ளது என்ற எண்ணம் ஏற்படும் போது மறையும். ஒன்றின் மீதான வெறித்தனமான நாட்டம் என்பது தன்னிடம் மாத்திரம் தனித்தன்மை, உரிமை இருக்க வேண்டும் மற்றும் அதன் பெருமை தன்னுடையதாக வேண்டும் என்ற கருத்துக்களால் விளைகிறது, அவை மீண்டும் எம்மை எல்லைப்படுத்துகிற வரம்புகளை அடிப்படையாகக் கொண்ட மாயைகளாகும். உரிமை என்பது: எனக்கு இந்த வீடு, இந்த சொத்து, இந்த வேலைக்காரர்கள், இந்த மேய்ச்சல் நிலங்கள் மட்டுமே சொந்தம்; எனவே, நான் பார்க்கும் அனைத்திற்கும் முழு உரிமையாளராக இருப்பதற்குப் பதிலாக, எனது உரிமையை இதுபோன்ற எல்லைக்கு உட்பட்ட பார்வைக்குக் கட்டுப்படுத்திவிட்டேன். நான் ஒரு கார் வாங்குவதற்கு முன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கார்களும் என்னுடையது என்ற நிலையில் அனைத்துக் கார்களையும் நான் இரசிக்கலாம்; நான் ஒரு காரை வாங்கிய பிறகு, உலகில் உள்ள மற்ற எல்லா கார்களின் உரிமையையும் இழந்து அந்த ஒரு கார் மட்டும் என்னுடையதாக மாறிவிட்டது என்ற உணர்விற்குள் செல்கிறோம்.
இறுதியாக நாம் பொறாமை அல்லது அசூயை பற்றிப் பார்ப்போம். இந்த உணர்ச்சியானது ஒருவனது மகிழ்ச்சியை இல்லாமல் ஆக்க க்கூடியது. இங்கு பிரச்சனை என்னவென்றால் ஒருவன் தன்னிடம் ஒரு பொருள், நல்லவிஷயம் இருக்கிறது, இல்லை என்பதால் துன்பமுறாமல் மற்றவனிடம் தன்னை விட உயர்ந்த ஒன்று இருக்கிறது என்பதால் வரும் உணர்ச்சி. உதாரணமாக, உரிமை பற்றிய கருத்து, எனக்கு உரிமையான் மனைவி அல்லது கணவன் மூன்றாம் தரப்பினரின் சிற்றின்ப ஈர்ப்புகளுக்கு தற்காலிகமாக அடிபணிந்ததால், அது மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிதைத்துவிடும். உண்மையில் ஒரு துணைவர் தனக்கு அதிகமாக மகிழ்ச்சியைத் தேடுவதற்கு அவர் முனைந்திருக்கிறார். இது இன்பத்தைத் தருவதற்கு மாறாக பொறாமை, பேராசை, உடமையாக்குதல் எல்லாம் சேர்ந்து ஒரு அழிவுசக்தியாகச் சேர்ந்து இன்பத்தைத் தருவதற்குப் பதிலாக விவாகரத்தினை நோக்கிச் செல்லும்.
மேலே கூறப்பட்ட பகுப்பாய்வினைச் செய்தால் எமது துன்பங்கள், இன்பத்தைப் பெறுவதற்கு தடையாக இருக்கும் மூலகாரணி நாம் காண்பவற்றை எம்மிலிருந்து வேறானவை என்று எண்ணுவதால் ஏற்படும் மயக்கம் என்பது தெரிய வரும். எனவே ஒருவன் இந்த யோசனயை தன் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் முழுவதும் தான்னுடைய வெளிப்பாடு என்பதாக மாற்றியமைக்க முடிந்தால் பிறவுபட்ட, அழிவுச் சக்திகளின் பிடிவுகளில் இருந்து ஒருவன் வெளிவந்து வலிமையடைந்து இறுதியில் அந்த பலவீனத்திலிருந்து முழுமையாக வெளிவரவும் முடியும். ஆனால் இந்த யோசனை மிகவும் யதார்த்தம் இல்லாத தும், அனுபவத்திற்கு முரணானதும் போன்றும் தோன்றும். எப்படி நான் பார்க்கும் இந்த உலகம் நான் என்று நம்புவது? எனது கையை நான் கிள்ளினால் வலிக்கிறது என்று என்னால் உணர முடிகிறது; உங்களுடைய கையை எவராவது கிள்ளினால் எனக்கு வலிக்க வில்லை! சில வேளைகளில் உங்களுக்கு வலிக்கிறது என்று நான் சந்தோஷப்படவும் முடியும். இந்தக் கருத்தை இன்னுமொரு விதமாக விளக்குவோம்; என்னிடம் மில்லியன் டாலர் இருக்குமாக இருந்தால் என்னால் பலவற்றை வாங்க முடியும். ஏழையான உங்களால் எதையும் பெற முடியாது. எனக்கு வெளியே இருப்பதும் நான் தான்இந்த உலகம் முழுவதும் நான் நிறைந்திருக்கிறேன் என்று அனுபவமாக அறிய வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் புலன் களிலிருந்து வெளிவர வேண்டும்.
பகுதி – 02 இல் மிகுதி விளக்கங்கள் தொடரும்….
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.