மகாமண்டலேசுவரர் தாந்திரீகாச்சாரியர் அபினவகுப்தரின் கருத்துப்படி பிரம்மச்சாரி [பிரம்மச்சாரி]
"உடலுறவை - மைதுனா இறைசெயலாக மதிக்கிறவன் ஒரு பிரம்மச்சாரியாக கருதப்படுகிறார்".
தாந்த்ரீக தெய்வ உருவமாற்றத்தில் பாலியல் ஆற்றலின் மாற்றம் என்பது கற்பின் ஒரு வடிவம் (பிரம்மச்சார்யமாக கருதப்படுகிறது. அபினவகுப்தா ஒரு பிரம்மச்சாரியை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
நிம்மதியாக இருப்பவர் , பாலுறவின் போது கூட, சரியான விழிப்புணர்வைப் பேணுபவர், பாலுறவின் போது அவரது உடல் மிகவும் அமைதியாக இருக்கும்; எந்த வக்கிரமான உடலசைவுகளையும் வெளிப்படுத்த மாட்டார்; தாந்திரீகப் பாரம்பரியம் படி எந்த நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முழுமையாக அறிந்தவர்; முழு அறிவொளி மற்றும் உண்மையான உணர்வுள்ளவர், எப்போதும் சுதந்திரமாக இருப்பவர், தன்னுணர்வுடன் இருக்க, தனது சொந்த உணர்வை அனுபவிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனைப் பெறுவதற்காக மட்டுமே உடலுறவைப் பேணுபவர், தனது பேராசையில் அல்ல, தான் இந்த உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டவர் என்ற பசுபாவம் அற்றவர் - தான் தேர்ந்தெடுத்த உயர் தெய்வீகப் பாதையில் நிபந்தனையின்றி அர்ப்பணித்தவர்.
உலக விவகாரங்களின் மத்தியிலும், வாமாச்சாரா சடங்குகளின் செயல்பாட்டின் போதும், அவரது நடத்தை தனது சுயத்தின் மீதான கவனத்தை விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறது, மைதுன சாதனையின் போது விந்து வெளியேறுவதை ஒருபோதும் அனுமதிக்காத ஆற்றல் இருக்க் வேண்டும். அதற்கு மேலும் விந்து வெளியேறுதல் நடந்தால்:
“விந்து வெளியேறும் தருணத்தில் மனம் தன்னிச்சையாக அமைதியடைந்தால் எண்ணத்தின் அனைத்து அதிர்வுகளும் நின்றுவிட்டால்), பேரின்ப உணர்வு உடனடியாக அதில் எழுகிறது. இதன் விளைவாக வரும் நிலை "பிரம்மனுக்கு உரியது" என்று முழுமையாக விவரிக்கப்படுகிறது.
எனவே, பிரம்மச்சரியத்திற்கான முக்கிய அளவுகோல், முழுமையான (பிரம்மத்தில்) தொடர்ந்து மூழ்கியிருக்கும் உணர்வு நிலையாகும். உடலுறவில் இதைச் சாதிக்கத் தெரிந்ந்தல் அந்த சாதகன் பிரம்மச்சாரி என்று கொள்ளப்படுவான்.
-------------------------
1. மைதுனா - பாலின சேர்க்கை, இந்து மற்றும் புத்த தாந்த்ரீக மரபுகளில் உடலுறவு. மைதுனாவின் செயல்பாட்டில், ஒரு ஆணும் பெண்ணும் தெய்வீக ஜோடிகளாக மாறுகிறார்கள், தெய்வீக சாரங்களின் உருவகமாக அல்லது வெளிப்பாடாக உணரப்படுகிறார்கள். ஒரு நுட்பமான மட்டத்தில் - குண்டலினி சக்தியை எழுப்பி எழுப்பும் போது சஹஸ்ரார சக்கரத்தில் சிவன் மற்றும் சக்தியின் சங்கமம் நடைபெறும். .
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.