குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 22, 2023

கல்வித் திட்டங்கள் சார்ந்த அவதானம்

கடந்த சில ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி சார்ந்த சமூக நிறுவனங்களை வளர்த்தெடுக்க உதவி புரிந்தவன் என்ற நிலையில் கீழ்வரும் அவதானங்களைப் பெற்றுள்ளேன்;
1) சமூக சேவை மிகவும் கவர்ச்சியானது, எனவே ஏதாவது ஒரு யோசனை முன்வைத்தவுடன் அனைவரும் அதனைப் பிரதி செய்து தாமும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பெறுகிறார்கள். இது மிக நல்லவிடயம் அதிகமாக இப்படியான எண்ணம் உடையவர்கள் உருவாக சமூகத்திற்கு நன்மை. 
2) இனி இந்த உத்வேகம் சரியாகச் செய்யப்படுகிறதா என்று கேட்டால் அதில் அனேக வழுக்கள் - தவறுகள் இருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது; அண்மையில் சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்கு என்று சொல்லிவிட்டு மேடையில் 50 பேரை ஏற்றி உட்கார வைத்து மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன் என்று அறுவை செய்து நேரத்தை வீணடிக்கும் பாங்கு காணப்படுகிறது. மாணவர்கள் மனம் fragile ஆனது; கல்வியைத் தவிர, கல்வியில் கவனத்தைத் ஏற்படுத்துவதை தவிர வேறு எதுவும் கருத்தரங்கு என்று சொல்லி தேவையற்ற அலம்பல்கள் இல்லாமல் சுருக்கமாக இருக்க வேண்டும். 
3) பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே அவசியமான உத்வேகம்; பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் நிபுணர்களை உதாரணமாக வழிகாட்டியாக காட்ட முடியும்; பாடசாலை மாணவனுக்குச் பாடவிதானமும், கற்பது எப்படி என்ற முறையும், கற்றல் ஒழுக்கமுமே பிரதானம். தேவையற்ற உத்வேகம் (motivation) இருக்கக் கூடாது. 
4) திட்டங்கள் பெரிதாக்கி, நிதிகள் அதிகமாகும் போது போட்டி, பொறாமை ஏற்பட்டு திட்டம் சிதறலாம்; ஒருவர் மாத்திரம் தலைமைத்துவத்தில் இருக்கும் போது ஒருவருக்கே புகழ் கிடைக்கிறது; நாம் கொடுக்கும் நிதியில் இவர் புகழ் பெறுகிறார் என்ற போட்டி, பொறாமை ஏற்படலாம்; இதற்கு நிதர்சனமான உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம். இப்படித் திட்டத்தைச் சிதறடித்து விட்டு குரங்கு கைகளில் கிடைத்த பூமாலை மாதிரி பதவியைக் கைப்பற்றிய பின்னர் என்ன செய்வது என்ற தெரியாமல் தடுமாறும் நிறுவனங்கள் இருக்கிறது. கல்வித்திட்டங்களில் மனப்பாங்கு மாணவர்கள் பயன்பெறுகிறார்களா என்பது மாத்திரமே; யாப்பு, ஆப்பு என்று தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கெடுக்கக் கூடாது; தேவையான இடத்தில் ரூல்ஸ் பேசாமல் நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்
5) கல்வித்திட்டங்களை கல்வியியலாளர்கள் மூளையாகச் செயற்பட பொருளாதார உதவியை எல்லோரும் தம்மால் இயன்ற நிலையில் செய்ய வேண்டும் என்ற தெளிவு சமூக சிந்தனை பரவலாக இருக்க வேண்டும். பொருளாதார உதவி செய்யும் அனேகர் தாமே திட்டத்தை வடிவமைக்க வேண்டும், தன்னை கௌரவப்படுத்தினால்தான் நிதி தருவேன், எந்தக் கலியாணம் என்றாலும் நான் தான் மாப்பிளையாக இருக்க வேண்டும், செத்த வீடு என்றால் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகப்பணியில் பெரும் தலைவலி பிடித்தவர்கள். 
6) பாடசாலை உதவிகள் கேட்கும் போது அவற்றை நிரல் படுத்த வேண்டும்; do the best with available policy பின்பற்றப் பட வேண்டும்; அடிப்படை வசதியுடன் நாம் உச்ச பட்ச விளைவைப் பெறக்கூடிய திறமை இருக்க வேண்டும். சில பாடசாலைகள் வசதிகளைக் கேட்கும் அளவிற்கு பெறுபேறுகளைத் தருவோம் என்ற உறுதி தரமுடிவதில்லை. 
7) பாடசாலையின் கல்வி வளர்ச்சி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்ற மூன்று பேரின் அக்கறை, அர்ப்பணிப்பில் பிரதானமாகவும்; அதிபர் இவற்றை ஒருங்கிணைத்து தலைமைத்துவம் வழங்கும் மையப்புள்ளியாகவும் இருக்க இவற்றிற்கு தேவையான வளங்களை, உதவிகளைத் தரும் தூண்களாக பழைய மாணவர்கள், சமூக நிறுவனங்கள் இருக்க வேண்டும். இந்த அமைப்பை மீறி பழைய மாணவர்கள், சமூக நிறுவனங்கள் அதிபரைப் போன்று, ஆசிரியர்களைப் போன்று தம்மை மிமிக்கிரி செய்யும் போது தேவையற்ற நிர்வாகக் குழப்பங்கள் உருவாகி பிள்ளையார் பிடிக்க குரங்கான சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளது. அவரவர் வேலையை அவரவர் சிறப்பாகச் செய்ய என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டும்; 
 பாடசாலை நிர்வாகத்தில் எப்போது பிஸியாக இருக்கிறேன் என்று அதிபர், ஆசிரியர்கள் கூறக் கேட்கிறோம்; இந்த பிஸியான தன்மை எந்த விளைவுகளைத் தருகிறது? நாம் முன்னேறிச் செல்வதற்காக பிஸியாக வேலைச் செய்கிறோமா? அல்லது எந்தவித திட்டமும், நோக்கமும் இன்றி எமக்குள் இருக்கும் பதட்டத்தை பிஸியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்பது ஆராயப்பட வேண்டியது. 
உங்கள் அனுபவங்கள் கருத்துக்களையும் பகிரலாம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...