குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 15, 2023

சாதனா

இந்தப் பதிவு சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை என்ற நாமத்திற்குரிய சாதனா பாகம்:
லலிதா சாதனையின் மூலம் மனதை ஸமாதி அனுபவத்திற்கு கொண்டு செல்வது என்பது பற்றிய யோக விளக்கம் தரப்படுகிறது. 
சாதனா மந்திரம்: 
_________________________
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
இந்த நாமத்திற்குரிய சாதனை:
________________________________________
ஒரு சாதகன் எப்படி தனது அகத்திற்குள்ளே ஒரு பொருளைக் காணும் போது புலன்களால் அறியும் போது தனக்குள்ளே விருத்தியாக்கி கொண்டிருக்கும் தமக்குள்ளான மன உரையாடல்களை உருவாக்கும் வழமையான சிந்தனை முறையினை நிறுத்த முடியும்?
(குரு நாதர் internal monologue என்ற சொல்லைப் பாவித்துள்ளார்; மோனோலாக் என்பது ஒரு பாத்திரம் அவர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளின் தொகுப்பை உரக்க வெளிப்படுத்துவதற்காக வழங்கும் பேச்சு அல்லது வாய்மொழி விளக்கக்காட்சி ஆகும்.)
ஒருவன் நீண்ட உழைப்பின் பின்னர் ஓய்வெடுக்க விரும்புகிறான். கடுமையான வேலைக்கு பிறகு ஓய்வெடுக்க விரும்புகிறான்; உடலுறவின் பின்னர் ஏற்படும் அதிகரித்த பதட்ட த்தினால் ஓய்வெடுக்க விரும்புகிறான். இந்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் ஓய்வு என்பது தான் செயலாற்றுவதிலிருந்து மகிழ்ச்சியாக விடுபடுவதுடன் தொடர்பு படுகிறது. பதட்ட த்திலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவது என்பது மகிழ்ச்சி ஆன ந்தம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கையில் செயற்பாடு என்பது பதட்ட த்துடனும் கவலையுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் உலகெங்கும் மனிதர்களால் ஓய்வுப் பயணங்கள் விரும்ப ப் படுகிறது. ஓய்வு பெற்ற மனம் செயலை விரும்புகிறது; அதிக செயற்பாடுடைய மனம் ஓய்வை விரும்புகிறது. ஓய்வு, செயல் இரண்டும் மனதில் செயற்படும் மைய நீக்க, மைய நாட்ட விசைகளாகும். 
நாம் மேலே விளக்கத்தில் உணர்ந்தறிதல் என்பது மனமானது நிச்சயமற்ற தன்மையிலிருந்து உறுதியான நிலைக்குச் செல்வது என்று அறிந்தோம். நிச்சயமற்ற தன்மை பதட்டத்தையும் உறுதியான நிலை ஓய்வினையும் வெளிப்படுத்தும். மனம் தனது பதட்டத்தைக் குறைத்து துரிதமாக ஓய்வு நிலைக்குச் செல்வதற்காக குறியீடுகளையும், சுருக்கப் புரிதல்களையும் (abstractions) உருவாக்கும். மனம் தான் புலன் களில் இருந்து பெறப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத தகவல்களில் நிலைத்து தன்னை நிலையற்ற தன்மையில் வைத்திருக்க விரும்புவதில்லை. எனவே உடனடியாக புலன் களால் பெறப்படும் தகவல்களை பெயரிட்டு, அதனை உணர்ந்து செயற்பட விரும்புகிறது. இதனால் மனம் உடனடியாக புலன்களால் பெறப்படும் தகவல்கள் மீது தனது சிந்தனையை உருவாக்க விரும்புகிறது. எமது சிந்தனையின் ஆணிவேர் எமக்கு தெரியாத தைப் பற்றிய பயம், இப்படித் தெரியாத பிரபஞ்சம் எமக்கு வெளியே இருப்பதாக நாம் நம்புகிறோம். எனவே எமக்கு அறியமுடியாத ஆழத்தில் இருக்கும் விடயங்களால் வரும் பயம், பதட்டங்களைக் குறைக்க நாம் அதுபற்றி சிந்தித்து முடிவிற்கு வருகிறோம். இதனால் பிரபஞ்சத்தை உள்ளதை உள்ளபடி அறியாமல் ஒரு மயக்கமான அறிவினை மாத்திரமே நாம் பெறுகிறோம். 
இப்படி நாம் மனதிற்கு புலன் கள் மூலம் தகவல்களைக் கொட்டிக்கொண்டிருக்கும் போது எமது சிந்தனை ஒரு பக்கச் சார்பாக ஏற்கனவே இருக்கும் பதிவுகளை அடிபடையாக வைத்துக்கொண்டு எமது மனதில் தோன்றும் பதட்டங்களைக் குறைத்துக்கொண்டிருக்கும். ஆகவே மனதிற்கு தகவல்கள் செல்லச் செல்ல சிந்தனையை நிறுத்துவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. பயம் என்பது அறவே அற்ற வீரபாவம் உள்ள ஒருவனால்தான் எவ்வளவு பதட்ட த்தையும், கவலையையும் வெளிச் சூழல் உருவாக்கினாலும் இயல்பாகவே எந்தவிதமான எண்ணச் சுழலையும் உருவாக்காமல் புலன்களை இயக்க முடியும். இப்படி புலன் களிலிருந்து மனதைப் பிரித்து அகமுகமாகச் செல்லும் போது சாதகனிடம் இருப்பவை பழைய ஞாபகங்களும் அதனுடன் சேர்ந்த எண்ண ஓட்டங்களுமே. இந்த நிலையில் எந்தவிதமான பயங்களாலும் எண்ண ஓட்டம் தூண்டப்படாமல் ஒருவன் முழுமையான ஓய்வை அனுபவிக்க முடியும். இந்த நிலையில் மனமானது சிந்திக்கத் தேவையில்லை என்ற நிலையை இயல்பாக அடைந்து ஓய்வுக்கு வரலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தூண்டலே ஓய்வினைப் பெறத் தூண்டும். இதனால் நாம் பெறும் ஓய்வானது மகிழ்ச்சியான ஓய்வாக மாறி ஸமாதி அனுபவம் பெறுவதற்குரிய ஒர் நல்லொழுக்கச் சூழல் அகத்தில் உருவாகிறது. நித்திரையில் நாம் பெறும் ஓய்வு என்ன நடக்கிறது என்று நாம் உணர்வதில்லை. ஆனால் ஸமாதி அனுபவத்தில் மறுதலையாக உணர்வை இழக்காமல் முழுமையான ஓய்வினைப் பெறுகிறோம். ஸமாதியின் முதல் அனுபவம் முழுமையான பேரான ந்தம்; எப்படி ஆர்கிமிடிஸ் குளியல் தொட்டியில் இருந்து குதித்துக்கொண்டு யுரேக்கா என்று கத்திக்கொண்டு பேரானந்தமாக ஓடினாரோ அப்படி ஒருவன் தன்னை மறந்த ஒரு ஆனந்த அனுபவத்தை அடைகிறான். கனவில்லா உறக்கத்தில் இருந்து எழும்பும்போது ஒருவருக்கு ஏற்படும் முழுமையான ஓய்வு பெற்றது போன்ற உணர்வு: என்றென்றும் நீட்டிக்கப்பட்ட உடலுறவின் உச்சக்கட்டத்தின் ஆனந்த தருணங்கள் போல ஸமாதி நிலையின் அனுபவத்தை அடைகிறான். 
ஒருவன் ஸமாதி அனுபவம் பெறவேண்டும் என்பதன் காரணம் சன்னியாசியாகி உலக இன்பங்களை விட்டு ஓடுவதற்காக அல்ல, மறுபுறம் இந்த உலகில் நாம் அனுபவிக்கக் கூடிய உச்சகட்ட மகிழ்ச்சியும் ஆனந்தமும் என்னவென்பதை நேரடியாக அனுபவிப்பதற்காக. ஒருவன் தனது புலன் களால் பெறக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமும் குறித்த எல்லைக்கு உட்பட்ட து. ஆனால் யோகத்தினது நோக்கம் புலன் களைத் தாண்டி தெய்வ உருமாற்றம் பெற்ற மகிழ்ச்சியைப் பெறுவதாகும். உடலுறவில் மீண்டும் மீண்டும் ஏக்கம் ஏற்படுவதற்கான காரணம் புலன்களால் அரைகுறையாக அனுபவிக்கப்படும் உச்சகட்ட இன்பம் மீண்டும் மீண்டும் அதை அடையத் துடிப்பதாகும். 
ஒருவன் தனது உடலுறவு உச்சகட்ட இன்பத்தை ஸமாதி நிலையில் தொடர்ச்சியாக அனுபவிக்க முடிந்தால் அவனது புற உடல் உணர்வும், அகத்தின் இருக்கும் அகங்கார உணர்வும் பெயர் சொல்லமுடியதபடி கரைந்து, அவன் நித்திய கடவுள் உணர்வு பெற்று அவனது மனதில் எழுந்துகொண்டிருக்கும் காம எண்ணங்களில் இருந்து விடுபடுவான். எப்படி திருவிழாவின் பேரொளியில் விளக்கொளியின் பிரகாசம் தோற்றுவதில்லையோ, 100 வாட்ஸ் மின் குமிழ் பகலில் சூரிய ஓளிமுன்னால் பிரகாசம் இல்லாமல் போவது போல் இறைவனின் பேரொளியை ஸமாதி அனுபவத்தில் அனுபவிக்கும் போது மனிதனின் எல்லாவித சிறுமை எண்ணங்களும் காணாமல் போகிறது. 
ஆகவே சாதனையில் ஒருவன் தியானம் செய்ய அமர்ந்தால் புலன் களில் இருந்து மனதைப் பிரிந்து ஆனந்த சவாரி செய்ய வேண்டும். தியானத்திற்கான முதல் படி அவன் தியானம் செய்வதன் மூலம் அவனது மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டும். எந்த விஷயம் தியானிப்பவரிற்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதையே தியானப் பொருளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் மீதான ஏற்கனவே பதித்துவைத்திருக்கும் மனத்தடைகள், குழப்பங்கள் ஆகியவற்றை நீக்கி மனமாகிய வனத்தில் ஆனந்தம் எனும் பச்சைப் புல்வெளியைத் தேட வேண்டும். இப்படி மனதை முழுமையான சுதந்திரத்துடன் விடும் போது அந்த மனமானது மெதுவாக அடங்கி தனக்கு அமைதியும் ஆனந்தமும் தரும் ஒரு எண்ணத்தில் அடங்கத்தொடங்கும். இப்படி அடங்கத் தொடங்கும் போது மனதின் வேகம் அதிகரிக்கத் தொடங்கும், இது இன்னும் உறுதியான அதிவேகமான ஒரு பம்பரம் அதனது அதிவேக சுழற்சியில் எப்படி பரிபூரண ஓய்வில் இருக்கிறதோ அதைப் போல் மனம் வேகமடைந்து உறுதியடையும். இந்த உறுதியடைந்த மனமே சிதக்னி குண்டம், ஸ்ரீ ல லிதா, தெய்வ உருமாற்றம் பெற்ற பேராந்தமும் மகிழ்சியும் ஒருவன் அனுபவிப்பான். இந்த நிலையில் மனம் மிகவும் தெளிவானதாக இருக்கும், இது உறக்கத்தால் வருவதல்ல; ஆனால் அதியுச்ச வேகத்தில், இறைவனின் வேகத்தில் மனம் இயங்குவதால் மனதிற்கு கிடைக்கும் ஆற்றல் தெளிவு இது. இந்த நிலையில் காணப்பட்ட தரிசனங்களின் ஆச்சரியத்தில் ஒருவர் மௌனமான செயலற்ற சாட்சியாக மாறுகிறார். 
ஒருவர் சும்மா அமர்ந்து கொண்டு மனதில் எழும் எண்ணங்களைக் கவனித்துக்கொண்டு அந்த எண்ணங்களை நிறுத்தலாம் என்று முயற்சிப்பதில் எந்தப்பலனும் இல்லை. எண்ணங்களை நிறுத்த நம் வசம் உள்ள ஒரே வழி சிந்தனை. நாம் அதைப் பயன்படுத்த வேண்டும், அதாவது நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்; வெளிப்புற புலன்கள் எதைக் கொண்டுவருகின்றன என்பதைப் பற்றி அல்ல, ஆனால் எமது ஞாபகத்தில் இருக்கும் மிகவும் மகிழ்ச்சியானதைப் பற்றி சிந்திக்க வேண்டும்; இப்படிச் சிந்திக்கும் போது ஒருவன் சிரமமின்றி மனோவேகம் பெற்று மனம் ஒருமுகப்பட்டு நிலைபெற ஆரம்பிக்கிறான். எப்போது இந்த முயற்சி பூச்சியமாகிறதோ அவனது தனிமனித சிந்தனை கடந்து இறைவனின் உணர்வில் ஒன்ற ஆரம்பிக்கிறது. இது ஒரு மிக நீண்ட செயல்முறை, ஆனால் கூறப்பட்ட முறையில் பயிற்சித்தால் கட்டாயம் வெற்றி கிட்டும். எமது மனதில் இருக்கும் சந்தேகம் போன்ற தடைகளும், ஸமாதி அனுபவத்தால் கிட்டும் பேரின்பம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் இதில் வெற்றிபெறுவதற்கு தடையாக இருக்கும். இதில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது மனமானது அதியுயர் வேகத்தில் இயங்கும் போது தியானிக்கப்படும் பொருள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பது. உயர் வேகத்தில் ஒரு பொருள் இயங்கும் போது அதில் ஏற்படும் சிறு அதிர்வு, விலகல் அதியுச்ச ஆற்றலை வெளிப்படுத்தும். இப்படியானவையே சித்திகள் எனப்படுகிறது. இவற்றைப் பற்றி ஒருவர் அதிகம் கேள்விப்படுகிறார், ஆனால் மிக க் குறைவாக்வே காண்கிறார். அத்தகைய சக்திகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தவும் முடியும். அத்தகைய சித்திகளைச் செய்யு போது ஒருவனுடைய தபஸ் செலவழிக்கப்படுகிறது. அதாவது இச்சா சக்தி மூலம் இது நடைபெறுகிறது. மனதின் வேகம், தெளிவு, செயல் ஆகியவை இத்தகைய சித்திகள் வெளிப்படுவதற்கு பங்களிக்கின்றது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...