குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!

இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!

ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ

இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!

மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here

2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்

நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.

அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே

உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே

-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, May 31, 2023

மகா சைவாச்சாரியர் அபிநவகுப்தரின் ஜெயந்தி

இன்று மகா சைவாச்சாரியர் அபிநவகுப்தரின் ஜெயந்தி!
ஸோமனே எப்படி உனக்கு பல கலைகள், பல ஆர்வம், எல்லாவற்றிலும் ஆழம் சாத்தியமாகியது தெரியுமா மகனே என்றார் குரு நாதர்! 
இல்லைக் குருவே, முயற்சி இன்றி இயல்பாய் வருகிறது! 
முயற்சியும் பயிற்சியும் இன்றி எதுவும் மானிடரிற்கு கிட்டுவதில்லை! இதையே தவம் என்கிறோம்! பல பிறப்புகளில் பல ஆச்சாரியர்களிடன் கற்று அதன் வழி புரிந்த தவத்தின் சாரம் உன்னில் வெளிப்படுகிறது. 
உனக்கு ஒரு பழைய பிறவியின் ஞாபகம் காட்டுகிறேன், பத்மாசனத்தில் அமர்ந்து ஆதாரத்தில் தாரணை செய் என்றார்! 
இருளாக இருந்த மனக்கண் முன்னே ஒளி தோன்ற ஆரம்பித்தது; 
சிறிது நேரத்தில் மலைகள் சார்ந்த இடத்தில் அமைதியான குடிலில் தனது ஆச்சாரியரின் முன் இருப்பதை உணர்ந்தான் ஸோமன். பின்னர் ஆச்சாரியரின் உபதேசங்கள் கேட்பதை உணர்ந்தான். ஆச்சாரியர் " உனது விழிப்புணர்வே பைரவத்துவம், அதை நிலையாக அடைய உன்னை அனுத்தர ஆம்னயத்தினுள் அனுமதிக்கிறேன்" என்று தீட்சை அருளினார். 
ஸோமன் மீண்டும் தியான நிலையில் இருந்து திரும்பினான்; அவனது குரு முன்னால் அமர்ந்திருந்தார்; அபி நவ குப்தரிடம் பெற்ற தீட்சை ஞாபகம் வந்ததா? பெற்றதைப் பெருக்க இதோ அனுத்தர ஆம்னயத்தில் ஏற வழி என்று மந்திரம் ஈந்தார்! அபி நவகுப்தரிற்கு தென் தமிழ் நாட்டிலிருந்து சைவ சித்தாந்ததிற்கு குரு ஒருவரும் இருந்தார்; அதேபோல் அவரது பிரதம மாணாக்கன்களின் ஒருவர் மதுரையில் இருந்து சென்ற தமிழ் மகன் என்றார். 
சைவம் என்பது பெரும் ஆலமரம்! அனைத்துக் கிளைகளையும் ஆராய்ந்து, ஏன் பௌத்த ஆச்சாரங்களையும் ஆராய்ந்து தன் ஞானத்தை தந்திரலோகம் என்ற பெரு நூலாக எமக்குத் தந்துள்ளார். 
அபிநவகுப்தர் சைவத்தை அறிவுச் சார்ந்த வாய்ச் சொல் முறையாகக் காட்டவில்லை; அனைத்தையும் ஒருவன் தனது சாதனையால் அனுபவத்தில் பெற வேண்டும் என்பதற்குரிய விளக்கத்தை தெளிவாகத் தந்துள்ளார். 
பகவத் கீதைக்கு சிவபரத்துவமான உரை எழுதியுள்ளார். 
அவர் தொடாத துறையே இல்லை; இலக்கியம், காவியம், இசை, பரதம், என்று பலதும்! 
இந்திய மெய்யியலின் சாரமாக, தந்திர சாஸ்திரத்தை ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் படிக்க வேண்டியது அவரது ஸ்ரீ தந்திரலோகம்; இதன் முதல் ஐந்து அத்தியாயங்கள் நண்பர் GGiriratna Mishraஇனது ஆங்கில அறிமுகத்துடன் கிடைக்கிறது.

யோக ஞான நூல்

மிகப்பெரிய எழுத்துப் பணி குருவருளால் பூர்த்தியாகி அச்சிற்கு செல்கிறது! 
ஆங்கில உலகத்திற்கு தமிழ் சித்த மரபின் யோக ஞானம் விதைக்கப்படுகிறது! 
55500 சொற்களுடைய விளக்கவுரை தாங்கிய அகத்தியரின் யோக ஞானம் இனி ஆங்கிலத்திலும் கிடைக்கும்! 
உலகெங்கும் தமிழ்ச் சித்த மரபின் அகத்திய ஒளி பரவட்டும்! 
இது சாத்தியமாக உழைத்த என் மாணவர்கள் அனைவருக்கும் பேரன்புகள்!

Monday, May 29, 2023

ஸ்ரீ கண்ணைய யோகீஷ்வரரின் ஜெனன தினம்

இன்று (29-05-2023) எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகீஷ்வரரின் ஜெனன திகதி! திதிப்படி பார்த்தால் வைகாசிப் பௌர்ணமி! இன்னும் நாள் இருக்கிறது! 
தனது மாணவர்களுக்கு 70 வருடங்களுக்கு முன்னர் 03 - 04 கார்பன் வைத்து கையெழுத்தில் பாடங்கள் எழுதி நேர்முக யோகப்பயிற்சி கொடுத்த பெருந்தகை! 
தமிழ் சமஸ்கிருத பண்டிதர்; படிக்க வசதியில்லாத நிலையில் பச்சையப்பா கல்லூரி பண்டிதரின் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கம்பராமாயண வகுப்புகளை செவிமடுத்து தனது ஞாபக சக்தியால் பாடல்களையும் அதன் பொருளையும் ஒப்பிவித்து அவரின் அன்பைப் பெற்று பண்டிதர் பரீட்சை எழுதி சித்திபெற்றார். 
அவர் எழுதிய ஆத்ம யோக ஞான எழுத்துக்களை அவரது மாணவர்களான எனது குருநாதர் ஆர். கே. முருகேசு சுவாமிகளும், சென்னை ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்களுமாக பதிப்பித்துள்ளார்கள்! இவர்கள் இருவரும் ஸ்ரீ கண்ணைய யோகியாராலேயே தனது பணியை முன்னெடுத்துச் செல்ல பணிக்கப்பட்ட அவரது முதன்மை மாணவர்கள்! 
அவரது கைப்பட எழுதிய பாடங்களை படியெடுத்துப் படிக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற வகையில் நான் புண்ணியசாலி! 
அகத்தியமகரிஷியால் தமிழ் பேசும் மக்கள் தற்கால நிலைக்குத் தகுந்தவாறு உபாசனை ரகசியங்களை எளிமைப்படுத்தி கற்பிக்கும் படியும், அன்னை காயத்ரியின் உபாசனையை தமிழ் பத்ததி (பூஜை முறை) செய்யும் படி பணிக்கப்பட்டு அதற்காக அனேக விஷயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். 
ரிஷி தயானந்தரின் சத்தியர்த்த பிரகாசம் நூலை 1935 இல் தமிழில் மொழிபெயர்த்தவர்! 
இலங்கைக்கு 1963 இல் சேர். பொன். அருணாச்சலம் அவர்களில் மகள் சிவானந்தம் தம்பையா அவர்களின் அழைப்பில் விஜயம் செய்தார். கொச்சிக்கடை தம்பையா சத்திரத்தில் உள்ள அனந்த பத்மநாதர் கண்ணைய யோகியார் பிரதிஷ்டை செய்தது. 
இலங்கையில் 1961 ம் ஆண்டு ஆத்ம யோக ஞான சபாவினை திருமதி தம்பையாவை தலைவராகவும், ஆர். கே. முருகேசு சுவாமிகளை செயலாளராகவும் கொண்டு ஸ்தாபித்து, ஆத்ம ஜோதி இதழில் பல ஆன்மீக கட்டுரைகள் ஸ்ரீ கண்ணைய யோகியாரால் எழுதப்பட்டது. பின்னர் ஆத்ம யோக ஞான சபை நுவரெலியா காயத்ரி பீடமாக சுவாமிகளால் தனது குருநாதரின் ஆசியும் விரிவு பெற்றது.
ஸ்ரீ கண்ணைய யோகியார் தான் வாழும் காலத்தில் வெறுமனே ஒரு ஜோதிடராக அறியப்பட்டவர். ஒரு சிறிய மாணவர் குழுவிற்கு மாத்திரமே குருநாதரின் ஆணையின் படி யோகவித்தையை கற்பித்தவர். தனது மாணவனாக இருப்பதற்கு தகுதி என்னவென்பதை வரையறுத்தவர்;
இன்றைய நாளில் ஒருவன் யோகசாதனையின் தனது மாணவனாக இருக்க வேண்டும் என்றால் என்ன தகுதி இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை இங்கு பகிர்கிறேன்;
என் மாணவன்
நான் இன்ன சாதி என்று நினையாதவன்
மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்
ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்
கோப தாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்
பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன். 
எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்
தனக்கு இன்பம் தரும் கரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்
மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்.
வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக் கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.
கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்.
எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.
சமயச் சழக்கெனும் (மதம் எனும்) சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்.
ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்.
அவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
- யோகி கண்ணையா -

யோகாசனம்

யோகாசனம் பயில வேண்டும் என்று விசாரித்த "எதிர் கால" மாணவர் ஒருவர் கேட்ட கேள்வி; 
எவ்வளவு காலத்தில் எத்தனை ஆசனங்கள் சொல்லித் தருவீர்கள் என்று? 
நான் திருப்பிக் கேட்டேன்; நிறைய ஆசனம் கற்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? 
கேள்விக்கு பதில் இல்லை! அதிகமாகச் சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்று மூடத்தனமாக நம்புவதுபோல் அதிக ஆசனங்கள் படித்து உடலை வளைத்துக் காட்டுவதுதான் ஆசனம் என்று பலரும் நம்புகிறார்கள். 
இன்று பலரும் யோகாசனம் கற்பிக்கிறோம் என்று உடலை வைத்து வளைத்து பலவிதமாக வித்தை காட்டுவதை ஆசன சித்தி என்று காட்டுகிறார்கள். 
ஆசன சித்தி என்று மூன்று விடயத்தை பதஞ்சலி குறிப்பிடுகிறார்;
1. மூச்சு ஸ்திரமாகி உடல் சுகமாக ஆனந்தமாக இருக்க வேண்டும். 
2. மனம் அமைதியுற்று இறைவனிடம் ஒடுங்கக் கூடிய அளவிற்கு மனச் சலனம் குறைய வேண்டும். 
3. நீண்டகாலப் பயிற்சியின் பின்னர் வெளி உலகத்தில் ஏற்படும் குளிர், சுடு, வெப்பம், கால நிலை மாற்றங்களால் உடலில் நோய் எதுவும் வரக்கூடாது. 
இந்த மூன்றையும் அடைவதற்கு சிலருக்கு 20 ஆசனங்கள் பலவருடம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்; சிலருக்கு பத்து ஆசனம் சில மாதங்கள் செய்ய வேண்டியிருக்கும்; சிலருக்கு மூன்று ஆசனம் போதுமானது. 
மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் யோகிக்கு பத்மாசனம் மாத்திரமே போதுமானது. 
ஒவ்வொருவரும் தமது மன, உடல் பழக்க வழக்கங்களால் பிராண முடிச்சுக்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்; சிக்கல் பட்ட இந்த பிராண முடிச்சை அவிழ்ப்பதே ஆசனம்! எப்படி இடியாப்பச் சிக்கலாகிய நூல் பந்தை சிக்கெடுப்பதுபோல்! ஒவ்வொரு இடியாப்பமும் ஒரேபோல் சிக்காக இருக்காது! 
தம்பி, நேரே வாருங்கள்! உங்களுக்கு உடல் மன பிராண நிலைக்கு எத்தனை ஆசனங்கள் எவ்வளவு காலத்தில் படிக்கலாம் என்பதை நாம் உரையாடுவோம் என்று பதில் கூறினேன். 
நாம் செய்யும் செயலின் நோக்கம் என்ன? சரியாகச் செய்தால் விளைவு என்ன? விளைவை அடைய நாம் செய்யவேண்டியது என்ன? 
இதுவே எனது கற்பித்தல் முறை! 
வகுப்பிற்கு கட்டாயம் வருவார் என்று நம்புகிறேன்!

Sunday, May 28, 2023

யோகாசன வகுப்பு

சிருஷ்டி தனது யோகாசன வகுப்புகளை இன்று ஆரம்பித்தது; இவ்வளவு காலமும் நேர்முக வகுப்புகள் ஆரம்பிப்பதில் இட வசதி போதாமல் இருந்தமையால் யோகாசன வகுப்புகள் ஆரம்பிப்பதில் சிரமம் இருந்தது. 
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு 
1) யோக சிகிச்சையும்
2) அனைவருக்குமான யோகாசன நேரடி வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. 
ஆர்வமுள்ள அனைவரும் நேரில் வந்து நின்று சில நாட் பயிற்சியினைப் பெற்றுச் செல்லலாம்; மலையுச்சியில் அழகிய வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. 
ஹடயோக பிரதீபிகை, ஹடயோக ரத்னாவளி போன்ற மூல நூல்களில் இருக்கும் உத்திகளும் நேரில் பயிலலாம். 
தமிழ் சித்த மரபு ஆசனங்கள் நேரில் பயிலலாம்;
பிராணாயாம இரகசியங்கள் பயிலலாம்! 
அனைவரும் வருக! கட்டணம் உண்டு!  
ஆசனம், பிராணாயாமப் பயிற்சி முறைகள் அனைத்தும் என்னால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்படும்!

செங்கோண்மை

செங்கோல் என்பது தமிழர்கள் எப்படி அதிகாரத்தைக் கையாண்டார்கள் என்பதன் குறியீடாகும். பிரித்தானிய அரசர், மேற்கத்தியே அரச வமிசங்கள் கையில் தாங்கும் Sceptre என்பதன் பொருள் அதிகாரக் கோல் என்பதாகும். ஆனால் தமிழர்கள் இதை இரண்டாகப் பகுத்து அறம் வகுத்திருக்கிறார்கள். 
அதிகாரத்தை ஒருவன் எப்படியும் அடையலாம்; அடைந்த பிறகு அந்த அதிகாரத்தை அடைந்தவன் அப்பியாசிக்கும் முறையில் அது செங்கோன்மையாகவும், கொடுங்கோன்மையாகவும் இருக்க முடியும். 
ஆகவே அதிகாரத்தை அடைந்தவனது அறிவு முதிர்ச்சி, மனப்பண்பு, அறம் என்பவற்றை அவன் சமமான மன நிலையில் அப்பியாசிக்க வேண்டும் என்பது அவனிற்கு அறத்தைப் போதித்த ராஜ குரு நினைவுபடுத்த வழங்கப்படுவது. 
இது தங்கத்தால் ஆக்கப்பட்டிருப்பது அதிகாரத்தைக் கையாள்பவன் தங்கத்தைப் போல் மங்காத பண்புடையவனாக இருக்க வேண்டும் என்பது! 
இந்த செங்கோன்மையைப் பற்றி பத்துக்குறள்களில் வள்ளுவர் கூறுகிறார்; 
கோல் என்பது அதிகாரம்; அது செம்மையான அதிகாரமாக செங்கோலாகவும் இருக்கலாம்; கொடுமையான அதிகாரமாக கொடுங்கோன்மையாகவும் இருக்கலாம். 
வள்ளுவர் முதல் குறளில் செங்கோன்மை என்பது என்ன என்று வரையறுக்கிறார்; 
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 
எது சரி எது தவறு என்பதை சரியாக ஆராய்ந்து, சம நிலையுடைய மனதுடன் (இறைபுரிந்து என்றால் இறைவன் எல்லா உயிர்களின் மேலும் சம பாவம் உடையவன்(; தான் செய்யும் காரியத்தை செய்பவன் செங்கோன்மை உடையவன்; அதிகாரத்தை அப்பியாசிக்கும் போது கூர்ந்து எது சரி? எது பிழை என்று ஆராயும் பண்பும், பின்னர் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் பக்கச்சார்பு இல்லாமல் சரியானதைச் செய்வது செங்கோன்மை. 
இரண்டாவது குறளில் அதிகாரம் உடையவனிடம் அவனை அண்டியவர்கள் அந்த அதிகாரத்தின் மூலம் எதை எதிர்பார்ப்பார்கள் என்றும் அதிகாரம் உடையவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதும் வள்ளுவர் சொல்லுகிறார். 
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
உலகம் மழை பொழிந்தால்தான் செழுமை உறுவது போல் அதிகாரம் உடைய மன்னவன் தனது அதிகாரத்தை மக்கள் இன்பமாக வாழ பிரயோகிக்க வேண்டும் என்று குடிகளெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பர். 
ஒரு தேசத்தில் அறம் தவறாமல் இருந்தால்தான் அங்கு உயர்ந்த அறிவு உருவாகும். அது அதிகாரம் செம்மையாக இருந்தால் மாத்திரமே நடக்கும்! 
மக்களின் தேவைகளைப் புரிந்து அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மன்னனின் அடிச்சுவட்டையே மக்கள் பின்பற்றுவர். 
செங்கோன்மையோடு கோலோச்சும் மன்னவனின் இராச்சியத்தில் விளைச்சலும் வளமும் குன்றுவதில்லை; பொருள் வளத்தால் செழிக்கும். 
மன்னவனின் ஆயுதம் கையில் பகைவரை அழிக்கும் வேல் அல்ல! தன் மக்கள் மனதை வெல்லும் செங்கோல்! 
இறையாகிய செங்கோன்மையால் மக்களை அரசன் காத்தால் அரசனை மக்கள் காப்பர்
செங்கோலின் உச்சியில் இருக்கும் இடபம் இறைவனைத் தாங்கும் வாகனம்; இறைவனாகிய சிவபெருமானை சிரசில் தாங்கி அவன் ஆற்றல் உடலில் பரிணமிக்கும் இடபமாகிய புருவமத்தியில் சிவ ஒளி பெருகினால் அத்தகையவனுக்கு வள்ளுவர் கூறும் இறை புரியும் என்ற இறைவனைப் போல் சமபாவத்துடன் இருக்கும் வல்லமை வாய்க்கும்; அறத்துடன் ஆட்சி புரிவேன் என்பது செங்கோல் ஏற்கும் மன்னனது உறுதி மொழி! 
அத்தகைய உறுதி மொழியுடன் ஸ்ரீ விவேகானந்தரும், ஸ்ரீ அரவிந்தரும் கண்ட செங்கோன்மை நிறைந்த உலகத்திற்கு ஞானம் பரப்ப வல்ல பாரத தேசம் உருவாக சங்கல்பம் பூண்கிறாரா பாரதப் பிரதமர்?

Friday, May 26, 2023

அன்னை உபாசனை

5. தே³வகார்யஸமுத்³யதா - தேவ காரியங்களை நடத்துபவள்
சாதனா மந்திரம்: 
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தே³வகார்யஸமுத்³யதாயை நம꞉ . ꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக
கடவுளின் வேலை என்ன? அவர் தனது ஆற்றலினை மிகச் சிறந்த வகையில் மிகச் சிறந்த ஒன்றினூடாக வெளிப்படுத்துதல். உயிர்கள் படிப்படையாக பரிணாமத்தில் உயர்வடைந்து உயர்தன்மைகளை அடைய வைத்தல். எல்லா உயிர்களிலும் துன்பத்தைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகரிப்பது, இவையே இறைவனின் வெளிப்பாடு. குறைந்தளவு துன்பத்தை வாழ்க்கையில் உருவாக்கி அதிகளவு உயர்ந்த நல்லிணக்கம், அன்பு மற்றும் பேரின்பத்தை உருவாக்குதல்.
கடவுள் தான் ஒரு சிறுமையான தன்மையை அடைந்து விட்டதாக தன்னைத் தானே நிந்திக்க முடியாது; அதோபோல் தான் மிக உயர்ந்த ஒன்றாக தன்னைத் தான் புகழ்ந்துகொள்ளவும் மாட்டார். கடவுள்தன்மை பற்றிய புரிதல் என்பது எப்போதும் சம நிலையானது. அவருடைய வேலை – தேவ காரியம் என்பது அனைத்திலும் சம நிலை ஏற்படுத்துவது. 
இத்தகைய சம நிலைப் பார்வையைப் பெறுவதில் என்ன தடை இருக்கிறது? இந்தத் தடைக்கான காரணம் எம்மில் காணப்படும் பார்க்கப்படும் செயலும், பார்ப்பவரும் வேறு என்ற மயக்கமான நிலையாகும். நாம் காணும் இந்த உலகிலிருந்து வேறானவர்கள் என்று எண்ணிக்கொள்கிறோம். இந்த மயக்கத்திலிருந்து எமது சந்தோஷத்திற்கான தடைகள் ஒவ்வொன்றாக உருவாக ஆரம்பிக்கிறது; காம ம், கோபம், பேராசை, ஆவேசம், உரிமை, பொறாமை போன்றவை. இவை ஒவ்வொன்றையும் பகுத்தாய்வோம். 
நாம் விரும்பத்தக்க ஒரு பொருளைக் காணும்போது, அந்தப் பொருள் வேறு எவருக்கும் கிடைக்காதபடி, அதை தீவிரமாக, நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறோம்; அந்த பொருளை நாம் வைத்திருக்கும் போது, சம்பந்தப்பட்ட பொருளுக்கு வலிக்கும் அளவிற்கு உடைமையின் பலனை அனுபவிக்கிறோம். குறிப்பாக மனித உறவுகளில் இது நிகழ்கிறது. இதுவே காமம். இப்போது காம ம் தோன்றுவதற்கான காரணம் தெளிவாகிறது; அந்தப் பொருள் என்னிடமிருந்து பிரிந்தது என்ற எண்ணமே என் ஆசைக்குக் காரணம். முதல் படியில் ஆசை இல்லை என்றால் காம மும் இருக்க முடியாது. அத்துடன் நாம் காம முற்ற பொருள் நம்முடையதாகவில்லையே என்ற வலியும் எமக்கு ஏற்பட முடியாது. இப்போது ஒருவர் கேட்கலாம்: “ஏற்கனவே ஒரு பொருள் என்னுடையது என்று தெரிந்தவுடன் அதன் மீது ஆசை இல்லாமல் இருக்க முடியுமா?” இதற்குரிய பதில் “ஆம் நிச்சயமாக, ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டியது; ; நான் என் கணவனையோ அல்லது என் மனைவியையோ அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை, இரகசியமாக ஒரு காதலியை – திருமணத்திற்கு முன் அனுபவிக்க வேண்டும் என்ற என் ஆசையின் அதே அளவு காமத்தில் இருக்க வேண்டும்; அப்படிச் சம நிலையுடன் இருக்கும் போது அது காமம் இல்லை; என்னுடயது என்ற உரிமை ஒரு பொருளின் மீதான காமத்திலிருந்து காதலாக மாறுகிறது. ஒருவரை ஒருவர் துன்பத்திற்குள்ளாக்கி வலியை உருவாக்காமல் ஒருவக்கொருவர் இன்பம் தருபவர்களாக மாற வைக்கிறது. எப்போது நாம் காணும் உலகை எம்முடையதாக க் காண ஆரம்பிக்கிறோமோ அப்போது அந்தப் பொருள்கள் மீதான காமம் அவற்றின் மீதான அன்பாக மாற ஆரம்பிக்கிறது. காமத்திற்கும் காதலுக்குமான வித்தியாசம் இரண்டும் ஆசை என்ற ஒரு அடிப்படையில் தோன்றினாலும் காமம் அது காமுறும் பொருளுக்கு துன்புறுத்துகிறது. அன்பு அன்புறும் பொருளினை மேம்படுத்துகிறது. காமத்தில் உடைமை என்பது உண்மையல்ல; காதலில், உடைமை என்பது நிஜமானது. 
கோபம் என்பது நாம் காம முற்ற பொருளை அடைவது தடுக்கப்படும் போது அல்லது நாம் செய்யும் ஒரு செயல் இறுதி நிலையை அடையாமல் இருக்கும் போது ஏற்படும் உருவாகும் உணர்ச்சி. இது விரக்தியான செயலின் நேரடி விளைவு. ஒருவர் அனுபவிக்கும் கோபத்தின் அளவு என்பது நாம் குறித்த பொருளின் மீது எவ்வளவு ஆசை வைத்திருந்தோம் என்பதன் நேர் விகித சமனாகும். ஒரு பெண்ணுடன் ஊர் சுற்ற சென்றது நடக்காதபோது ஏற்படும் விரக்தி அதிக கோபத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் போது சரியான சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்பது அதிக விரக்தி ஏற்படுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் வரை கொண்டு செல்லும் கோபம் ஏற்படலாம். காம ம் காமுறும் பொருளை துன்புறுத்துகிறது; கோபம் கோபமுறும் அனைவரையும் துன்புறுத்துகிறது. கோபத்தில் செய்யப்படும் செயல்கள் எதுவும் சரியான செயலாக இருக்காது. கோப உணர்ச்சி என்பது ஒருவன் காரண காரியத்துடன் செயற்படுவதை விட பலமான உணர்ச்சியாகும். இந்த ஆற்றல் ஒருவனுடைய தெளிந்த சிந்தனையாற்றலில் இருந்து அதிக ஆற்ற்லை உறிஞ்சிவிடும். விரக்தியுற்ற காதல் கோபமுறாது; அமைதியாக இருக்கும்; அது காதலித்தவரைத் துன்புறுத்துமே அன்றி காதலிக்கப்பட்டதை அல்ல. 
பேராசை என்ற உணர்ச்சி என்னிடம் இது இல்லையே என்ற எண்ணத்துடன் தொடர்புடையது. இது என்னிடம் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் உள்ளது என்ற எண்ணம் ஏற்படும் போது மறையும். ஒன்றின் மீதான வெறித்தனமான நாட்டம் என்பது தன்னிடம் மாத்திரம் தனித்தன்மை, உரிமை இருக்க வேண்டும் மற்றும் அதன் பெருமை தன்னுடையதாக வேண்டும் என்ற கருத்துக்களால் விளைகிறது, அவை மீண்டும் எம்மை எல்லைப்படுத்துகிற வரம்புகளை அடிப்படையாகக் கொண்ட மாயைகளாகும். உரிமை என்பது: எனக்கு இந்த வீடு, இந்த சொத்து, இந்த வேலைக்காரர்கள், இந்த மேய்ச்சல் நிலங்கள் மட்டுமே சொந்தம்; எனவே, நான் பார்க்கும் அனைத்திற்கும் முழு உரிமையாளராக இருப்பதற்குப் பதிலாக, எனது உரிமையை இதுபோன்ற எல்லைக்கு உட்பட்ட பார்வைக்குக் கட்டுப்படுத்திவிட்டேன். நான் ஒரு கார் வாங்குவதற்கு முன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கார்களும் என்னுடையது என்ற நிலையில் அனைத்துக் கார்களையும் நான் இரசிக்கலாம்; நான் ஒரு காரை வாங்கிய பிறகு, உலகில் உள்ள மற்ற எல்லா கார்களின் உரிமையையும் இழந்து அந்த ஒரு கார் மட்டும் என்னுடையதாக மாறிவிட்டது என்ற உணர்விற்குள் செல்கிறோம்.
இறுதியாக நாம் பொறாமை அல்லது அசூயை பற்றிப் பார்ப்போம். இந்த உணர்ச்சியானது ஒருவனது மகிழ்ச்சியை இல்லாமல் ஆக்க க்கூடியது. இங்கு பிரச்சனை என்னவென்றால் ஒருவன் தன்னிடம் ஒரு பொருள், நல்லவிஷயம் இருக்கிறது, இல்லை என்பதால் துன்பமுறாமல் மற்றவனிடம் தன்னை விட உயர்ந்த ஒன்று இருக்கிறது என்பதால் வரும் உணர்ச்சி. உதாரணமாக, உரிமை பற்றிய கருத்து, எனக்கு உரிமையான் மனைவி அல்லது கணவன் மூன்றாம் தரப்பினரின் சிற்றின்ப ஈர்ப்புகளுக்கு தற்காலிகமாக அடிபணிந்ததால், அது மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிதைத்துவிடும். உண்மையில் ஒரு துணைவர் தனக்கு அதிகமாக மகிழ்ச்சியைத் தேடுவதற்கு அவர் முனைந்திருக்கிறார். இது இன்பத்தைத் தருவதற்கு மாறாக பொறாமை, பேராசை, உடமையாக்குதல் எல்லாம் சேர்ந்து ஒரு அழிவுசக்தியாகச் சேர்ந்து இன்பத்தைத் தருவதற்குப் பதிலாக விவாகரத்தினை நோக்கிச் செல்லும். 
மேலே கூறப்பட்ட பகுப்பாய்வினைச் செய்தால் எமது துன்பங்கள், இன்பத்தைப் பெறுவதற்கு தடையாக இருக்கும் மூலகாரணி நாம் காண்பவற்றை எம்மிலிருந்து வேறானவை என்று எண்ணுவதால் ஏற்படும் மயக்கம் என்பது தெரிய வரும். எனவே ஒருவன் இந்த யோசனயை தன் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் முழுவதும் தான்னுடைய வெளிப்பாடு என்பதாக மாற்றியமைக்க முடிந்தால் பிறவுபட்ட, அழிவுச் சக்திகளின் பிடிவுகளில் இருந்து ஒருவன் வெளிவந்து வலிமையடைந்து இறுதியில் அந்த பலவீனத்திலிருந்து முழுமையாக வெளிவரவும் முடியும். ஆனால் இந்த யோசனை மிகவும் யதார்த்தம் இல்லாத தும், அனுபவத்திற்கு முரணானதும் போன்றும் தோன்றும். எப்படி நான் பார்க்கும் இந்த உலகம் நான் என்று நம்புவது? எனது கையை நான் கிள்ளினால் வலிக்கிறது என்று என்னால் உணர முடிகிறது; உங்களுடைய கையை எவராவது கிள்ளினால் எனக்கு வலிக்க வில்லை! சில வேளைகளில் உங்களுக்கு வலிக்கிறது என்று நான் சந்தோஷப்படவும் முடியும். இந்தக் கருத்தை இன்னுமொரு விதமாக விளக்குவோம்; என்னிடம் மில்லியன் டாலர் இருக்குமாக இருந்தால் என்னால் பலவற்றை வாங்க முடியும். ஏழையான உங்களால் எதையும் பெற முடியாது. எனக்கு வெளியே இருப்பதும் நான் தான்இந்த உலகம் முழுவதும் நான் நிறைந்திருக்கிறேன் என்று அனுபவமாக அறிய வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் புலன் களிலிருந்து வெளிவர வேண்டும். 
பகுதி – 02 இல் மிகுதி விளக்கங்கள் தொடரும்….

அரசியல்

நாம் அரசியல் தலைவர்களை நக்கலடிக்கிறோம், நையாண்டி செய்கிறோம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் அவர்கள் பெரும்பாலான மக்களின் குணங்களின் பிரதிபலிப்பே!
ஒரு கடத்தல் காரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவனைத் தெரிவு செய்த பெரும்பாலான மக்கள் அவனது கடத்தல் திறனை உள்ளூர இரசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்று அர்த்தம்! 
ஊழல்வாதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் அவனைத் தெரிவு செய்த பெரும்பாலானவர்கள் ஊழலை இரசிக்கிறார்கள் என்று அர்த்தம்! 
இங்கு நடப்பது மக்கள் ஆட்சி! மக்கள் என்ன தரத்தில் இருக்கிறார்களோ அந்த தரத்திலேயே மக்களின் பிரதி நிதிகள் இருப்பார்கள்! 
மக்களின் அகப்பண்பிற்கு ஏற்ற தலைவர்களே மக்களிற்கு வாய்க்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்றால் நாம் மக்கள் மனம் மாறி, உயர்ந்த இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். 
நல்ல விதையும் தீய மண்ணில் இட்டால் நோய் பிடித்த குறழ் தாவரம் வருவது போல் நல்ல எண்ணமுள்ளவன் இப்போதுள்ள அரசியலிற்குள் வந்து இது தான் இயல்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீய அரசியல் பண்பினைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண தேசத்தில் கோவணாண்டி கோமாளி என்ற நிலை உருவாகிவிடும் என்பதை அண்மையில் ஒரு அரசியல்வாதி மிகப்பெரிய ஊழல்வாதிகளுடன் நின்று எடுத்துக்கொண்ட படத்திற்கு தந்த விளக்கத்தைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம். 
நாம் ஊழல்வாதிகளை, கடத்தல் காரர்களை உள்ளே ஹீரோவாக இரசிக்கும் விழுமியமுடைய, யதார்த்தமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தில் தான் இருக்கிறோம் என்பதைப் புரியாமல் நக்கல் அடிப்பதும், கேலி பேசுவதும் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. 
மாற்றம் வரவேண்டியது மக்களின் மனதில்! அது நடந்தால் அந்தப் பண்பிற்குரிய தலைவர்கள் உருவாகுவார்கள். 
அறச்சிந்தனையுடைய எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதற்கு அதிகமான உழைப்பைச் செலுத்த வேண்டும்.

Thursday, May 25, 2023

ஜோதிஷம்

இந்த நூலின் படி எனது ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருக்கின்றதாம்! 
நல்ல அருமையான நூல்! நூலாசிரியர் மொத்தமாக 37 புராதன ஜோதிஷ நூல்களை ஆராய்ந்து பிழிந்து சாறாக விபரம் தந்துள்ளார்! 
ஜோதிஷம் என்பது ஒருவரின் அக உலகை subjective world of the person அளப்பதற்கு நல்லதொரு கலை! இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என்பதெல்லம் வீண் அகங்காரம்! கணிதமும் ஞானமும் வாய்த்தால் இப்படி நடக்கலாம் என்று கூறலாம்! 
ஜோதிஷம் பயில்வோருக்கு நல்ல நூல்!

Wednesday, May 24, 2023

பூபாலசிங்கம் புத்தகசாலை

நேற்று மிக நீண்ட காலத்திற்குப் பிறகு கொழும்பிற்கு சென்று வந்தேன். வாரம் ஆயிரம் கிலோ மீற்றர் காரில் இலங்கையை வலம் வந்து கொண்டிருந்த நான் கொரோனாவுடன் 10x10 அறையிலிருந்து கொண்டு கடந்த மூன்று வருடங்களாக உலகை வலம் வரத்தொடங்கிவிட்டேன். 
கொழும்பு போனால் கட்டாயம் பூபாலசிங்கம் புத்தகசாலை செல்லாமல் வருவதில்லை. Poobalasingham Sritharasingh ஸ்ரீதர் ஐயா எனக்குத் தேவையான புத்தகம் எதுவாக இருந்தாலும் பற்பல சலுகைகளுடன் தருவார்! புத்தகம் வாங்குவதுடன் அவருடன் அரைமணி நேரம் உரையாடுவதும் உற்சாகமான செயல்; 
அனேகமாக தேவையான அளவு புத்தகங்களும் வாங்கியாயிற்று; ஏதாவது புதுவரவுகள் இருக்கிறதா என்று பார்வையிட்ட போது ஸ்டீபன் ஹாக்கிங் இனது காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்து வந்திருக்கிறது. 
நான் நாகலட்சுமி சண்முகம் அவர்களின் பெரும் வாசகன்; அவரது மொழிபெயர்ப்பு உயிரோட்டமுள்ளவை; ஆங்கிலத்தில் படிக்கும் அதே சுவை இருக்கும். 
இந்த நூல் தமிழில் அறிவியல் வாசிப்பு வேண்டுபவர்களுக்கு மிக நல்ல பரிந்துரை. ஸ்டீபன் ஹாக்கிங் இனது பிரபஞ்சம் தொடர்பான வாதங்களைப் புரிந்துகொள்ள தமிழில் இருக்கும் அருமையான நூல். நூலில் பாவிக்கப்பட்ட தமிழ் இயற்பியல் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. 
இதே போன்ற நடையில் தமிழில் குவாண்டம் இயற்பியல், இரசாயனவியல், உயிரியல் நூல்கள் வெளிவருவது அவசியம்! தமிழில் அறிவியல் முறையாகப் பயிலாமல், தம்மை அறிவிய சிந்தனையில் பயிற்றாமல், அறிவியல் அடிப்படை இல்லாமல் பிதற்றுபவர்கள் பலர். ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னார் என்று யானை தடவிய குருடன் போல் யாராவது கூறிய ஒரு வரியைவைத்து வித்தை காட்டுபவர்கள் தமது புரிதலை மேம்படுத்த இப்படியான மொழிபெயர்ப்புகள் உதவும்.

Monday, May 22, 2023

சுமன்

எனது பெயர் சுமன் என்பதன் மூலம் எங்கு என்று ஆராய்ந்த போது அது பௌத்தத்துடன் ஒரு சுவாரசியமான தகவலைத் தந்தது. ஒரு தடவை நான் நிஜமான புத்தரின் முன்னால் இருந்து தியானம் செய்வதாக கனவு கண்டிருக்கிறேன்? என்னால் பௌத்த தியான இலக்கியங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். புத்தகோசரது விசுத்தி மார்க்கம் படித்து அதிலுள்ள கோட்பாடுகளை தொகுத்து வரைபடமாக்கியும் இருக்கிறேன். 

இந்தியாவின் மறக்கப்பட்ட தத்துவ ஞானி ஒருவர் இருக்கிறார்; அவரது பெயர் சுமன் , பாலி இலக்கியத்தில் உக்காமன் என்றும் அழைக்கப்படும் உக்காமன் என்பதன் அர்த்தம், வானத்தை மேல் நோக்கிப் பார்ப்பவர் என்று பொருள்படும். இது நிச்சயமாக ஒரு உருவக வெளிப்பாடு ஆகும். புத்தகோஷா தனது உண்மையான பெயர் சுமன் என்று கூறுகிறார். சுமனா என்று அழைக்கப்பட்ட அவரது தாயாரின் நினைவாக இந்தப் பெயர் வந்தது என்றும் வலியுறுத்தப்பட்டது. அவர் ஒரு தத்துவஞானி, ஆறாம் நூற்றாண்டு பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒரு தனிமனிதன்,

சுமன் தனது நெறிமுறைக் கோட்பாட்டைத் தெளிவாகவும் துல்லியமாகவும் நான்கு எளிய விதிமுறைகளாக வைத்ததாகக் கூறப்படுகிறது:

(i) உங்கள் உடல் எந்த பாவச் செயலையும் செய்யக்கூடாது.

(ii) நீங்கள் பாவமான பேச்சு எதுவும் பேசக்கூடாது.

(iii) உங்கள் மனம் எந்த பாவத்தையும் அனுபவிக்கக் கூடாது.

சிந்தனை மற்றும்

(iv) எந்த ஒரு பாவமும் செய்யாமல் உங்கள் வாழ்வாதாரத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டும்.

பண்டைய இந்திய வரலாற்றில் தூய நெறிமுறைகளைப் போதித்த ஒரே சிந்தனையாளர் சுமன் என்று தெரிகிறது. அவருடைய தத்துவத்தில் சொர்க்கத்திற்கும், பிற உலகத்திற்கும், முக்தி நிலைக்கும் இடமில்லை. அவரைப் பொறுத்தவரை, பாவத்தை நீக்குவது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உச்ச தீர்வாக இருந்தது. அது வாழ்வதற்கான வழி, நன்மைக்கான பாதை. ஒரு தனி மனிதனுக்கு சுமன் கூறும் ஒரே ஒரு செய்தி எப்போதும் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்பது தான்.

Source: 

SUMAN: THE ONLY PURE MORALIST IN THE HISTORY OF INDIAN THOUGHT

Author(s): Sadashiv Athavale

Source: Proceedings of the Indian History Congress , 1959, Vol. 22 (1959), pp. 73-77

Published by: Indian History Congress

Stable URL: https://www.jstor.org/stable/44304271

கல்வித் திட்டங்கள் சார்ந்த அவதானம்

கடந்த சில ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி சார்ந்த சமூக நிறுவனங்களை வளர்த்தெடுக்க உதவி புரிந்தவன் என்ற நிலையில் கீழ்வரும் அவதானங்களைப் பெற்றுள்ளேன்;
1) சமூக சேவை மிகவும் கவர்ச்சியானது, எனவே ஏதாவது ஒரு யோசனை முன்வைத்தவுடன் அனைவரும் அதனைப் பிரதி செய்து தாமும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பெறுகிறார்கள். இது மிக நல்லவிடயம் அதிகமாக இப்படியான எண்ணம் உடையவர்கள் உருவாக சமூகத்திற்கு நன்மை. 
2) இனி இந்த உத்வேகம் சரியாகச் செய்யப்படுகிறதா என்று கேட்டால் அதில் அனேக வழுக்கள் - தவறுகள் இருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது; அண்மையில் சாதாரண தர மாணவர்களுக்கு கருத்தரங்கு என்று சொல்லிவிட்டு மேடையில் 50 பேரை ஏற்றி உட்கார வைத்து மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுகிறேன் என்று அறுவை செய்து நேரத்தை வீணடிக்கும் பாங்கு காணப்படுகிறது. மாணவர்கள் மனம் fragile ஆனது; கல்வியைத் தவிர, கல்வியில் கவனத்தைத் ஏற்படுத்துவதை தவிர வேறு எதுவும் கருத்தரங்கு என்று சொல்லி தேவையற்ற அலம்பல்கள் இல்லாமல் சுருக்கமாக இருக்க வேண்டும். 
3) பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே அவசியமான உத்வேகம்; பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் நிபுணர்களை உதாரணமாக வழிகாட்டியாக காட்ட முடியும்; பாடசாலை மாணவனுக்குச் பாடவிதானமும், கற்பது எப்படி என்ற முறையும், கற்றல் ஒழுக்கமுமே பிரதானம். தேவையற்ற உத்வேகம் (motivation) இருக்கக் கூடாது. 
4) திட்டங்கள் பெரிதாக்கி, நிதிகள் அதிகமாகும் போது போட்டி, பொறாமை ஏற்பட்டு திட்டம் சிதறலாம்; ஒருவர் மாத்திரம் தலைமைத்துவத்தில் இருக்கும் போது ஒருவருக்கே புகழ் கிடைக்கிறது; நாம் கொடுக்கும் நிதியில் இவர் புகழ் பெறுகிறார் என்ற போட்டி, பொறாமை ஏற்படலாம்; இதற்கு நிதர்சனமான உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம். இப்படித் திட்டத்தைச் சிதறடித்து விட்டு குரங்கு கைகளில் கிடைத்த பூமாலை மாதிரி பதவியைக் கைப்பற்றிய பின்னர் என்ன செய்வது என்ற தெரியாமல் தடுமாறும் நிறுவனங்கள் இருக்கிறது. கல்வித்திட்டங்களில் மனப்பாங்கு மாணவர்கள் பயன்பெறுகிறார்களா என்பது மாத்திரமே; யாப்பு, ஆப்பு என்று தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகளைக் கெடுக்கக் கூடாது; தேவையான இடத்தில் ரூல்ஸ் பேசாமல் நன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்
5) கல்வித்திட்டங்களை கல்வியியலாளர்கள் மூளையாகச் செயற்பட பொருளாதார உதவியை எல்லோரும் தம்மால் இயன்ற நிலையில் செய்ய வேண்டும் என்ற தெளிவு சமூக சிந்தனை பரவலாக இருக்க வேண்டும். பொருளாதார உதவி செய்யும் அனேகர் தாமே திட்டத்தை வடிவமைக்க வேண்டும், தன்னை கௌரவப்படுத்தினால்தான் நிதி தருவேன், எந்தக் கலியாணம் என்றாலும் நான் தான் மாப்பிளையாக இருக்க வேண்டும், செத்த வீடு என்றால் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகப்பணியில் பெரும் தலைவலி பிடித்தவர்கள். 
6) பாடசாலை உதவிகள் கேட்கும் போது அவற்றை நிரல் படுத்த வேண்டும்; do the best with available policy பின்பற்றப் பட வேண்டும்; அடிப்படை வசதியுடன் நாம் உச்ச பட்ச விளைவைப் பெறக்கூடிய திறமை இருக்க வேண்டும். சில பாடசாலைகள் வசதிகளைக் கேட்கும் அளவிற்கு பெறுபேறுகளைத் தருவோம் என்ற உறுதி தரமுடிவதில்லை. 
7) பாடசாலையின் கல்வி வளர்ச்சி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்ற மூன்று பேரின் அக்கறை, அர்ப்பணிப்பில் பிரதானமாகவும்; அதிபர் இவற்றை ஒருங்கிணைத்து தலைமைத்துவம் வழங்கும் மையப்புள்ளியாகவும் இருக்க இவற்றிற்கு தேவையான வளங்களை, உதவிகளைத் தரும் தூண்களாக பழைய மாணவர்கள், சமூக நிறுவனங்கள் இருக்க வேண்டும். இந்த அமைப்பை மீறி பழைய மாணவர்கள், சமூக நிறுவனங்கள் அதிபரைப் போன்று, ஆசிரியர்களைப் போன்று தம்மை மிமிக்கிரி செய்யும் போது தேவையற்ற நிர்வாகக் குழப்பங்கள் உருவாகி பிள்ளையார் பிடிக்க குரங்கான சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளது. அவரவர் வேலையை அவரவர் சிறப்பாகச் செய்ய என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டும்; 
 பாடசாலை நிர்வாகத்தில் எப்போது பிஸியாக இருக்கிறேன் என்று அதிபர், ஆசிரியர்கள் கூறக் கேட்கிறோம்; இந்த பிஸியான தன்மை எந்த விளைவுகளைத் தருகிறது? நாம் முன்னேறிச் செல்வதற்காக பிஸியாக வேலைச் செய்கிறோமா? அல்லது எந்தவித திட்டமும், நோக்கமும் இன்றி எமக்குள் இருக்கும் பதட்டத்தை பிஸியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்பது ஆராயப்பட வேண்டியது. 
உங்கள் அனுபவங்கள் கருத்துக்களையும் பகிரலாம்.

யோகமும் இயற்கையும் தொகுப்பு நூல்

யோகமும் இயற்கையும் 146 சிறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். உள்ளடக்கம் கீழே தரப்பட்டுள்ளது. 
சிருஷ்டியினது பணிகள் என்ன என்பதும், எம்மைப் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலையும் தரக்கூடியது. 
அச்சிட்ட நூல்களின் இறுதித் தொகுதி நூல்கள் தமிழி பதிப்பகம் சிருஷ்டியின் மூன்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இலவசமாக வழங்க உள்ளது. கீழ்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளுங்கள். 
இலங்கை - இந்தியாவிற்குள் வசிப்பவர்களுக்கு மாத்திரமே இவை அனுப்பிவைக்க முடியும். 
குறிப்பிட்ட அளவு பிரதிகளே இருப்பதால் first come first basis அடிப்படையில் அனுப்ப படும். 
வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தபால் செலவினை அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும். 
படிவம் first comment இல்

Sunday, May 21, 2023

புராதன ஞானம்

எனது குருநாதரை நாடி வருபவர்களுக்கு தான் தந்த புராதன ஞானத்தைக் கற்பிக்கச் சொன்னதன் படி 2013ம் ஆண்டு சித்திராப் பௌர்ணமியில் ஒரு blogger வகுப்பு ஆரம்பமாகி அதில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து இந்தப் பணி ஆரம்பமாகியது;
இதே வருடத்தில் Vicknaverny Selvanathan அம்மையார் கேட்டுக்கொண்டதற்கிணங்க கொழும்பில் எனது அலுவலக நேரம் முடிய மாலை ஆறுமணிக்கு சிறு குழுவிற்கு அகத்திய மகரிஷியின் யோக ஞானப்பாடல்கள் விளக்கவுரை வகுப்புகள் ஆரம்பமாகியது. இது இப்போது முழுமையான நூலாக இருக்கிறது. 
அதன் பிறகு அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியாகிய போது முறையான வகுப்புப்புகள் ஆரம்பமாகியது. 
எனினும் நான் எனது பல்தேசியக் கம்பனி தொழில் வாழ்க்கையிலேயே எனது வாழ்வு செல்வதாக எண்ணிக்கொண்டு இந்த வகுப்புகளை முறைப்படுத்தி வளர்ச்சியுறச் செய்யும் ஆர்வம் எதுவும் அற்றவனாகவே இருந்தேன். மாணவர்கள் தொகை அதிகரித்துக் கொண்டு சென்றது. 
அன்னையின் திருவுளப்படி 2020 ம் ஆண்டு சிருஷ்டியாக உருப்பெற்றது. இதன் நோக்கம் நவீன மனதிற்கான புராதன ஞானம்; 
இன்று நான் காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
கடந்த மூன்று வருடங்கள் அண்ணளவாக 2000 மணி நேர வகுப்புகள் மனம், உடல் தத்துவம், பிராணதத்துவம், மந்திர சாஸ்திரம், பதஞ்சலி யோக சூத்திர விளக்கம், ஹடயோக பிரதீபிகை விளக்கம், சித்தயோகபாட தீக்ஷை, அகத்தியர் யோக ஞானத்திறவுகோல், ஆரோக்கிய ரகசியம், தந்திர சாஸ்திர அறிமுகம் என்ற தலைப்புகளில் கற்பிக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், போர்த்துக்கீசிய மொழிகளில் நடைபெறுகிறது. 
வரணாசியிலிருந்து பெருந்தொகையான ஆயுர்வேத, தந்திர, ஆகம சாஸ்திர நூல்கள் பெறப்பட்டு ஆய்வு நூலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 
பல உலகத் தரம் வாய்ந்த அறிவியலாளர்கலுடன் இணைந்து இந்தத் துறையில் ஆய்வு ஆலோசனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இதன் நோக்கம் நவீன தர்க்க மனதுடன் தடுமாறும் தற்கால மனிதனுக்கு மனம், உடல், பௌதீகம் தாண்டிய ஆற்றல்கள் பற்றிய அறிவினை தனது நாளாந்த வாழ்க்கையை முன்னேற்றி தனது அக வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கான வழிகளை கற்பிப்பதாகும். 
பல நூறு மாணவர்கள் தாம் பயன்பெற்றதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த படியாக பல ஆயிரம் மாணவர்களுக்கு இவை சென்றடைய உழைப்போம்!

Saturday, May 20, 2023

இசை

இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி! 
எனக்கு கற்றலில் பற்பல ஆசைகள் உண்டு; அதிலும் புராதன ஞானமாக இருந்தால் அதில் தீராக் காதல் உண்டு; 
கந்தர்வ வேதம் எனும் இசை எல்லோர் மனதினையும் மயக்குவது; இதைக் கற்க வேண்டும் என்று நான் நினைத்த போது எனது தர்க்க புத்தி மனதிற்கு பதில் தரக்கூடிய ஆசிரியர்கள் எவரும் வாய்க்கவில்லை! அவர்கள் எல்லோரும் தம்மளவில் வித்வானாகவே இருந்தார்கள்; எனக்கு எனது பக்குவத்திற்கு தக்க பரிமாறும் ஆசிரியர் எனக்கு வாய்க்கவில்லை; அன்னையின் அருளால் அத்தகைய இசையின் நுணுக்கங்களை தர்க்க மனதிற்கு விளக்கி, பின்னர் மனதை பயிற்சிமூலம் பதப்படுத்தி, குரலில் ஸ்வரத்தைக் கொண்டு வந்து இசை வருவிக்கும் திறனுடையவர் ஆசானாக வாய்த்தார். 
ஒரு வருடம், வாரத்தில் ஐந்து நாட்கள் வேணு எனப்படும் புல்லாங்குழலும், குரலிசையும் முறைப்படி கர்நாடக சங்கீதத்தில் குருவின் வழிகாட்டலில் பயிற்சி செய்தேன். 
ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக எதையாவது கற்று மூளையை இளமையாக வைத்திருப்பது என்ற எனது கோட்பாட்டிற்கமைய 2022 இலக்குகள். 
1) குரலிசை கற்றல்
2) வேணு எனும் புல்லாங்குழல் கற்றல்
நிறைவேறியது. இன்று காலை கந்தர்வ வேத இசைக்குரு நாதர் அழைத்து நீ பூர்த்திச் செய்த இசைப்பயிற்சிக்கு சான்றிதழ் அனுப்பியிருக்கிறேன், மின்னஞ்சலைத் திறந்து பார் என்றும் பிறந்த நாள் ஆசியும் கூறினார். 
எந்த வித்தை கற்றாலும் குருவின் அன்புக்கு பாத்திரமான மாணவனாக இருக்கும் பாக்கியம் அன்னையின் அருளால் வாய்ப்பது! 
இசையும் நாத சக்தியும் உன்னை விட்டு விலகாமல் எப்போது உன்னுள் இசை கற்கும் உத்வேகத்தைத் தூண்டிக் கொண்டிருக்கட்டும் என்று ஆசி கூறினார். 
எனது இசைக் கற்கும் நோக்கம் இசையை இரசிக்க அதன் இலக்கணம் தேவை என்பதும், நாத ஆற்றலை எப்படியெல்லாம் மனதிற்கு இன்பமாகப் பயன்படுத்தாலாம் என்பது! 
வீணை, மிருதங்கம், தாண்டவம் கற்க வேண்டும் என்பது ஆசை! அன்னை இன்னுமொரு சுற்றில் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புத் தருவாள் என நம்புகிறேன். 
பரத சாஸ்த்ரத்தின் அபிநய தர்ப்பணம், அபி நவபாரதி பற்றியெல்லாம், யோக தாந்திரீக நுணுக்கங்கள் உரையாடியிருக்கிறோம். 
எனது கந்தர்வ வேத குருநாதர் ஸ்ரீ நாட்டியாச்சார்யா ஸ்ரீ பாலச்சந்த்ர ராஜு அவர்கள்! 34 இசைக் கருவிகள் வாசிக்கும் ஆற்றலும், மற்றவர்களுக்கு கற்பிக்கும் ஆற்றலும் உள்ளவர். இவரது இராக பாவார்த்தம் என்ற நூலே பிரபலமான ருத்திர வீணைத் தொடரின் முதல் பகுதியில் ராகங்களின் ஆற்றல் பற்றி வரும் குறிப்பாகும்!
வெறும் முதல் வகுப்புத் தான் சித்தியடைந்திருந்தாலும் இன்றைய நாளில் இந்த ஆசி கிடைத்திருப்பது அன்னையின் ஆசியே!

Birthday gift

Birthday gifts  Sarasavi Bookshop (Pvt) Ltd
Who else like to send me the books ?

இணைந்த பிறந்த நாள் கொண்டாட்டம்

இருவரது பிறந்த நாட்களுக்கும் சில நாட்களே வித்தியாசம் என்பதால் இந்த வருடம் இணைந்த பிறந்த நாள் கொண்டாட்டம் அப்பாவின் பிறந்த நாளன்று! 
ஆம் இன்று எனது பிறந்த நாள்! 
கொண்டாட்டம் என்றால்,
மகளிற்கு கேக் எங்கே ஆடர்பண்ணி வெட்டுவது என்பது?
எனக்கோ இந்த வாரம் என்ன புத்தகம் வாங்குவது, வாசிப்பது, என்ன எழுதுவது என்பது பற்றிச் சிந்திப்பது! 
மனைவிக்கோ இந்த இரு திண்டாட்டங்களையும் எப்படிச் சமாளிப்பது என்பது?

Thursday, May 18, 2023

மலையகத்தின் கற்றல் நிலை

பெருந்தோட்ட மலையகத்தின் கல்வி நிலை பற்றி எமது சிங்கள சகோதரர் கயான் யதேஹி - ගයාන් යද්දෙහි இன் ஆய்வுக்கட்டுரை தமிழில் 
தலைப்பு: இலங்கையின் மற்ற பகுதிகளை விட பத்து மடங்கு பெருந்தோட்டப் பிள்ளைகள் படிப்பை நிறுத்துகிறார்கள்!
கட்டுரையைப் பகிர்ந்த மல்லியப்புசந்தி திலகர் திலகர் அண்ணாவிற்கு நன்றி! 
சுடச்சுட மொழிபெயர்ப்பு நல்கிய google translator இற்கு கோடானுகோடி நன்றிகள்!
பகுதி - 01
____________
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் கல்விச் செலவுகளை தாங்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் குறித்து தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செய்திகள் வந்தன. பெருந்தோட்டம் தொடர்பான கடுமையான சமூக நெருக்கடியாக இது மாறியுள்ளது. அது பற்றிய ஆய்வின் முடிவுதான் இந்தக் கட்டுரை.
___________________
இந்த ஆண்டு சிவானொளி பாதமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கல்விக்காக அதிக செலவு செய்யும் அளவுக்கு அம்மாவிடம் பொருளாதார பலம் இல்லாததால் பள்ளிக்கு விடைபெற்றார் ராமலிங்கம் ரமேஷ். ரமேஷ் குடும்பத்தில் மூத்தவர் மற்றும் ஐந்து இளைய சகோதரர்களைக் கொண்டிருந்தார். ரமேஷின் தந்தை நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே இருந்ததை அடுத்து, 42 வயதான தாய் குடும்ப பாரத்தை ஏற்றார். ரமேஷ் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, சிவானொளி பாதமலை யாத்ரீகர்களுக்கு 'கொடு பாக்கெட்' விற்கத் தொடங்கினார். 'கொடு பாக்கெட்' என்பது முதன்முறையாக சிறீபா யாத்திரிகர்களுக்கான ஊசிகள், நூல் மற்றும் சிறிய குச்சி உள்ளிட்ட உபகரணங்களின் தொகுப்பாகும். இவற்றை வாங்கிக் கொண்டு மோசடி செய்பவர்களில் பெரும்பாலானோர் தேர்வில் வெற்றி பெற பெற்றோர்களால் சிவானொளி பாதமலை யாத்திரைக்கு வரும் மாணவர்களே!
“சாதாரண தரம் வரைதான் படிச்சேன்..அதுக்கு மேல் செலவு செய்ய அம்மாவுக்கு சக்தி இல்லை.. அக்கா, அண்ணன் அஞ்சு பேரோட புத்தகம், இதர விஷயங்களுக்கு நிறைய காசு செலவாகும்.. எப்படியும் ஸ்கூலுக்கு அனுப்பணும்னு நினைச்சு நிறுத்திட்டேன். தோட்டத்தில் உள்ள பல பிள்ளைகள் படிக்க விரும்பினாலும் பாடசாலை செல்வதை நிறுத்த வேண்டியுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளே இதற்குக் காரணம்..."
ஒரு புத்தகத்தின் விலை Rs12,000!
காளி கணேசம்மாவுக்கு இன்னும் நாற்பது வயதுதான் ஆனாலும் அதைவிட வயது அதிகமாகத் தெரிகிறார். நான்கு பிள்ளைகளின் தாயான கணேசம்மா பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் தனது இளைய குழந்தையைப் பெற்றெடுத்தார். அவள் மஸ்கெலியாவின் நியூ ஃபாக் மோர் பிரிவில் சிரிபாத மலையை நோக்கிய உயரமான இடத்தில் ஒரு லைன் அறையில் வசிக்கிறாள்.அரணாலு பூமியை முத்தமிட்டு சூரிய அஸ்தமனத்தில் திரும்புவதற்கு முன்பு அவள் அன்றைய வேலைக்காக புறப்படுகிறாள். இதற்கு ஓராண்டுக்கு முன், கணேசம்மாவின் கணவர், தோட்டத்தில் மரங்களைப் பறித்து சம்பாதித்த பணம், உணவுக்கு போதாததால், கொழும்பில் கூலி வேலைக்கு சென்று விட்டார். தான் பட்ட துன்பங்களை தன் பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருக்க, அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று சக்சுதாவுக்குத் தெரியும், ஆனால் தீராத பொருளாதாரச் சிக்கல்கள் கணேஷம்மாவின் கனவுகளை மங்கச் செய்யும் அளவுக்கு வலுவாகிவிட்டன.
சந்திரா மோர்கன் சந்தியாவுக்கு 16 வயது. நியூ ஃபாக் மோர் தோட்டத்தில் 11ம் ஆண்டு படித்து வரும் அவள், இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்குத் தயாராகி வருகிறாள். “எனது வகுப்பில் 37 பேர் படிக்கின்றனர்.சுமார் ஐந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை.வீட்டில் பொருளாதார பிரச்சனையால் ஏதாவது வேலைக்கு செல்வதாக சொல்கிறார்கள்.வாரத்தில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களும் உண்டு. கூடுதல் வகுப்புக்கு சென்றால் மஸ்கெலியா நகருக்கு தான் செல்ல வேண்டும்.அண்டாளையில் இருந்து மஸ்கெலிக்கு பஸ்சில் செல்ல 120 ரூபாய்.அங்கு செல்ல 240 ரூபாய்.டியூஷன் வகுப்புகளுக்கு சென்றால் இன்னும் நிறைய பணம் வேண்டும். . தோட்டத்தில் வேலை செய்யும் என் அம்மாவால் செலவு செய்ய முடியாது, அதனால் அவர் வகுப்புகளுக்கு செல்லவில்லை." அவள் சொன்னாள்.
பெருமாள் கணேசன் (58) உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரால் வழக்கம் போல் தோட்டத்தில் விடாமுயற்சியுடன் வேலை செய்ய முடியாது. இவரது மகன் கணேசன் ரகுருவன் வயது 16. “என் மகன் காட்மோர் தமிழ் கல்லூரியில் படித்து கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதி, கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தோல்வியடைந்தான். மீண்டும் தேர்வு எழுத வேண்டுமானால் கூடுதல் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். செலவு செய்ய பணமில்லை. அதனால இப்போ என் மகன் தோட்டத்துக்கு வேலைக்குப் போறான்..." என்று சோகத்துடன் கூறுகிறார் கணேசன்.
இக்குழந்தைகளின் தலைவிதியை மாற்றியமைக்க நீண்டகாலமாக பாடுபட்டு வருகிறார் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு.பழனியாண்டி மோகன் (62). "எஸ்டேட் பள்ளிகளில் பல குழந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. பெரும்பாலான தோட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதன்மை பிரிவு மட்டுமே உள்ளது. அதையும் தாண்டி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் பஸ்சில் பள்ளிக்கு செல்ல வேண்டும். பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. கோவிட் காலத்தில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.பின்னர் டீசல்.பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது பேருந்து கட்டணம் இன்னும் உயர்ந்தது.இதனால் இன்று பேருந்தில் ஒரு நிறுத்தத்திற்கு 28 ரூபாய் வசூலிக்கின்றனர்.இதன் குழந்தைகள் தோட்டம் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு வரும்.தோட்டத்தில் உள்ள பள்ளிக்கு செல்லும் போது பஸ் கட்டணம் கிடையாது.அதை தாண்டிய வகுப்புகளில் தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நிறுத்துகின்றனர்.ஆறாம் வகுப்புக்கு.வயது வந்ததும். ,குழந்தைகளுக்கு குடும்ப பொருளாதார நிலை பற்றிய புரிதல் கிடைக்கும்.சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல ஆசைகள் இருக்கும்.இவற்றை நிறைவேற்ற பணம் வேண்டும்.வீட்டில் இருந்து பணம் கிடைக்காத போது அந்த பணத்தை வாடகை கொடுத்து சம்பாதிக்க இந்த குழந்தைகள் ஆசைப்படுகின்றனர். அவர்களின் பள்ளிப் பயணம் இப்படித்தான் முடிகிறது.
பெரும்பாலான மக்கள் பசியுடன் வருகிறார்கள்
அதிபர் சுப்பையா பிரபாகரன்
சாமிமலை ஓலாட்டன் கல்லூரி முதல்வர் சுப்பையா பிரபாகரன் கூறியதாவது: தற்போது உடற்பயிற்சி புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட உபகரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.மறுபுறம் போக்குவரத்து கட்டணமும் அதிகரித்துள்ளது.தோட்ட குடும்பங்களின் பெற்றோரால் முடியாது. இந்த கூடுதல் தொகையை வாங்குங்கள்.பள்ளி சீருடை வாங்க 1,500 ரூபாய்.2,000 செலவழிக்க வேண்டும்.பெரும்பாலும், குடும்ப பொருளாதார பிரச்னையால், பையன்கள் பள்ளி செல்வதை நிறுத்தி விடுகின்றனர்.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால், பெற்றோர். நால்வரையும் பள்ளிக்கு அனுப்பும் அளவுக்கு பண பலம் இல்லை.சில குழந்தைகள் பள்ளிக்கு வந்து மதிய வேளையில் உண்ணாவிரதம் இருக்க தாய்மார்கள் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும்.அப்பாவுக்கு பண வசதி இல்லை.இந்த குழந்தைகள் வகுப்பை விட்டு வெளியேறும் போது மற்ற குழந்தைகள் வகுப்பில் உள்ளனர். சாப்பிடுகிறார்கள். இது தொடரும் போது, அவர்கள் பள்ளி பயணத்திற்கு விடைபெறுகிறார்கள்."
பள்ளிக்கு செல்ல இந்த பஸ் கட்டணத்தை குழந்தைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் தாங்க முடியாது. நியூ கார்ட்மோர் கல்லூரியின் ஆசிரியை திருமதி தவ மனோஹரி கூறினார். "பள்ளிக்குச் செல்ல ஒரு நாளைக்கு 200 ரூபாய் செலவாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள் உள்ளனர். எனது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளுக்குச் செல்கிறது. பேருந்தைத் தவறவிட்டால் 1,000 ரூபாய் வீல் செலுத்த வேண்டும். காரணமாக. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் தாய்மார்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.வேலை தேடி கொழும்பு செல்கிறார்கள்.அப்படியானால் பிள்ளைகள் தாய் அல்லது தந்தையின் வயதான பெற்றோரிடம் வளர்கின்றனர்.குழந்தைகள் அவர்கள் சொல்வதை கேட்பதில்லை.காரணம். இதில், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அலைந்து திரியும் குழந்தைகள் ஏராளமாக உள்ளனர்.கடந்த முறை எங்கள் பள்ளியில் பொதுத்தேர்வுக்கு 47 குழந்தைகள் விண்ணப்பித்தனர்.ஆனால் 37 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.உறுதிப்படுத்த இதுவே சிறந்த சான்று. இடைநிலை வகுப்புகளில் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது..."
பெருந்தோட்டப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு.விஜய் சந்திரன் இந்தப் பிரச்சினை குறித்து பல முக்கியமான அவதானிப்புகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடரும்....

Wednesday, May 17, 2023

தாந்திரீக பிரம்மச்சாரியம்

மகாமண்டலேசுவரர் தாந்திரீகாச்சாரியர் அபினவகுப்தரின் கருத்துப்படி பிரம்மச்சாரி [பிரம்மச்சாரி]

"உடலுறவை - மைதுனா  இறைசெயலாக  மதிக்கிறவன் ஒரு பிரம்மச்சாரியாக கருதப்படுகிறார்".

தாந்த்ரீக தெய்வ உருவமாற்றத்தில்  பாலியல் ஆற்றலின் மாற்றம் என்பது கற்பின் ஒரு வடிவம் (பிரம்மச்சார்யமாக கருதப்படுகிறது. அபினவகுப்தா ஒரு பிரம்மச்சாரியை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

நிம்மதியாக இருப்பவர் , பாலுறவின் போது கூட, சரியான விழிப்புணர்வைப் பேணுபவர், பாலுறவின் போது அவரது உடல் மிகவும் அமைதியாக இருக்கும்; எந்த வக்கிரமான உடலசைவுகளையும் வெளிப்படுத்த மாட்டார்; தாந்திரீகப் பாரம்பரியம் படி எந்த நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முழுமையாக அறிந்தவர்; முழு அறிவொளி மற்றும் உண்மையான உணர்வுள்ளவர், எப்போதும் சுதந்திரமாக இருப்பவர், தன்னுணர்வுடன் இருக்க, தனது சொந்த உணர்வை அனுபவிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனைப் பெறுவதற்காக மட்டுமே உடலுறவைப் பேணுபவர், தனது பேராசையில் அல்ல, தான் இந்த உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டவர் என்ற பசுபாவம் அற்றவர் - தான் தேர்ந்தெடுத்த உயர் தெய்வீகப் பாதையில் நிபந்தனையின்றி அர்ப்பணித்தவர்.

உலக விவகாரங்களின் மத்தியிலும், வாமாச்சாரா சடங்குகளின் செயல்பாட்டின் போதும், அவரது நடத்தை தனது சுயத்தின் மீதான கவனத்தை விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறது, மைதுன சாதனையின் போது விந்து வெளியேறுவதை ஒருபோதும் அனுமதிக்காத ஆற்றல் இருக்க் வேண்டும். அதற்கு மேலும் விந்து வெளியேறுதல் நடந்தால்:

“விந்து வெளியேறும் தருணத்தில் மனம் தன்னிச்சையாக அமைதியடைந்தால் எண்ணத்தின் அனைத்து அதிர்வுகளும் நின்றுவிட்டால்), பேரின்ப உணர்வு உடனடியாக அதில் எழுகிறது. இதன் விளைவாக வரும் நிலை "பிரம்மனுக்கு உரியது" என்று முழுமையாக விவரிக்கப்படுகிறது. 

எனவே, பிரம்மச்சரியத்திற்கான முக்கிய அளவுகோல், முழுமையான (பிரம்மத்தில்) தொடர்ந்து மூழ்கியிருக்கும் உணர்வு நிலையாகும். உடலுறவில் இதைச் சாதிக்கத் தெரிந்ந்தல் அந்த சாதகன் பிரம்மச்சாரி என்று கொள்ளப்படுவான். 

-------------------------

1. மைதுனா - பாலின சேர்க்கை, இந்து மற்றும் புத்த தாந்த்ரீக மரபுகளில் உடலுறவு. மைதுனாவின் செயல்பாட்டில், ஒரு ஆணும் பெண்ணும் தெய்வீக ஜோடிகளாக மாறுகிறார்கள், தெய்வீக சாரங்களின் உருவகமாக அல்லது வெளிப்பாடாக உணரப்படுகிறார்கள். ஒரு நுட்பமான மட்டத்தில் - குண்டலினி சக்தியை எழுப்பி எழுப்பும் போது சஹஸ்ரார சக்கரத்தில் சிவன் மற்றும் சக்தியின் சங்கமம் நடைபெறும். .

எனது கொள்கைகள் சில

நண்பர்களே, இந்தக் கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
கொடுப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதும் நான் கடைப்பிடிக்கும் விதிகளில் ஒன்று. 
பெறுவது குறைவாக இருக்க வேண்டும் என்றால் எமக்காக தேவை என்று நாம் நினைத்து தேவையற்றவற்றைப் பற்றிக்கொண்டிருக்கக் கூடாது. 
நாம் செய்பவற்றிற்கு உடமை கொண்டாடக் கூடாது என்பது இரண்டாவது விதி; ஆரம்ப காலத்தில் நாம் எழுதுவதை பிரதி செய்து - சுய சிந்தனை இல்லாமல் பிரதி செய்வதையே தொழிலாகச் செய்து பெரும் அறிஞர்களாக மக்களை நம்பவைக்கும் பலர் இருக்கிறார்கள். அண்மையில் பேராசிரியர் ஒருவர் கூட தனது பதிவுகளை நன்றி கூறாமல் பிரதி செய்வதாக வருத்தப் பட்டு எழுதியிருந்தார்; எனது குரு நாதர் ஒரு விஞ் ஞானி தனது சேவைக்கால கண்டுபிடிப்புகள் எல்லாமே தேச நலனிற்கான பொதுப் புலமைச் சொத்திற்காகவே பணி புரிந்ததாகச் சொன்னார்; தன்னுடைய கண்டுபிடிப்பு என்று தனியாக உரிமை கொண்டாடும் திட்டங்களில் அவர் ஆர்வம் காட்டியதில்லை; அதே மனப்பாங்கை ஸ்ரீவித்யா கற்பிப்பதிலும் காட்டினார்; அறிவு, ஞானம், ஆற்றல் எல்லோருக்குமானது; காற்று, நீர், சூரிய ஒளிக்கெல்லாம் patent செய்தால் மனிதனோ, உயிர்களோ வாழ முடியுமா? என்பார். ஆகவே எத்தனை பேர் எம்மிடமிருந்து எமது சிந்தனைகளைப் பிரதி செய்து அதைத் தம்முடையதாக்குகிறார்களோ அவ்வளவிற்கு அந்த அறிவும், ஞானமும் பெருகும். பிரதி செய்தலே கற்றலின் முதல் படி - copiying and mimicking is the first step of learning. 
எவரையும் முத்திரை குத்தாமல், அவர்கள் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரச்சனைகள், துன்பத்திலிருந்து வெளிவருவதற்கு நாம் என்ன உதவி செய்ய முடியும் என்ற செயலை மாத்திரம் நாம் செய்ய முயற்சிக்க வேண்டும்; மற்றவர்களை தாழ்மைப் படுத்த, தண்டிக்க நாம் இங்கு வரவில்லை; எம்மால் இயன்ற உதவிகளைச் செய்து மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்!

Tuesday, May 16, 2023

முகநூல் பதிவு

தம்பி Nishānthan Ganeshan inspiration பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதும் முதல் கொமெண்டில். இந்தச் சொல்லின் அர்த்தம் எதையாவது செய்ய அல்லது உணர மனதளவில் தூண்டப்படும் செயல்முறை, குறிப்பாக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய! பதிவின் சாரம் நான் பலருக்கு inspiration ஆக இருந்திருக்கிறேன் என்பது! 
எனது மாணவர்களில் ஒருவர் எப்போது என்னிடம் பேசினாலும் ஒரே excitement - a feeling of great enthusiasm and eagerness ஆக இருக்கிறது. மனம் உத்வேகமடைகிறது என்பார்! 
இவற்றை ஒரு கணக்கீடு மூலம் தகவல் பெற கீழே கொமெண்டில் எத்தனை பேர் எனது எழுத்தால், தொடர்பால் Inspire ஆகியிருக்கிறீர்கள்? உங்கள் மனதில் என்ன உணர்வு பெற்றிருக்கிறீர்கள் கீழே பதிவிடுங்கள்!
post a comment on how I inspired you?

Monday, May 15, 2023

சதாசிவ தியானம் - அஜிதாகமப் படி

கீழே தரப்பட்டிருக்கும் ரூபத்தை கூர்ந்து கவனியுங்கள்; பின்னர் இந்த தியான வாசகத்தைப் படியுங்கள். 
“மானசீகமாக சிவனின் ஆசனத்தை அமைத்து, ஒரு பிடி மலர்களைத் தூவி நிலையான மனத்துடனும், தீர்க்க சுவாசம் - ஆழ்ந்த மூச்சினை எடுத்து புலன்களைக் கட்டுப்படுத்தி, 
ஐந்து தலைகள் கொண்ட,
அமைதியான, 
தூய ஸ்படிக நிறத்துடன் ஜொலிக்கும் 
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவனின் உடலைத் தியானிக்க வேண்டும். 
சிரிக்கும் முகங்களுடன், 
பத்து கோடி சூரியன்களின் பிரகாசம், 
இளைமையான தேகம், 
பத்து கரங்கள், 
மேல்நோக்கிச் சுருண்டிருக்கும் பளபளப்பான ஆடைகளின் முகடுகளால் பிரகாசம், 
ஒவ்வொரு முகமும் மூன்று ஒளிரும் கண்கள் 
அல்லது சக்திகள், 
ஞானத்தின் பிறை சந்திரனுடன் அவனுடைய முடி, 
எல்லா காரணங்களுக்கும் காரணமான மகா காரணராக, 
வலது கரத்தில்
அபய கரம்
கோடரி
வாள்
பாசம்
திரிசூலம்
இடது கரத்தில்
மணி
நாகம் 
வஜ்ராயிதம்
அங்குசம் 
நெருப்பு 
ஆகிய ஆயுதங்களைத் தாங்கி
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டது.
சந்தனதைல பூச்சு உடையதுமான 
மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 
உடலையுடைய எப்பொழுதும் மங்களத்தை அருளும் அந்த சதாசிவ மூர்த்தத்தைத் தியானிக்கிறேன். 
கண்களை மூடி இந்த ரூபத்தை மனக்கண்ணில் காண முயற்சியுங்கள். 
சில வினாடிகள் சாத்தியமானாலும் அற்புதமான உற்சாகம் ஆற்றல் மனதில் பெறுவீர்கள். 
சதாசிவம் என்றா சதா மங்களத்தை அருளும் நிலை என்று பொருள்! இந்த ரூபத்தை தியானிப்பதன் மூலம் எமது மனதில் உடலில் மங்கள் ஆற்றல் நிலைத்து நிற்கும். 
மனதில் கண்ட கண்ட குப்பைகளை எற்றும் நாம் சிறிது நேரம் இந்த சதா மங்களத்தைத் தரும் ரூபத்தைச் சிந்திப்பதம் மூலம் மனதில் அமைதியும் ஆற்றலும் பெறலாம். 
பயிற்சித்து முயற்சித்து பதிவிடுங்கள்.

சாதனா

இந்தப் பதிவு சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை என்ற நாமத்திற்குரிய சாதனா பாகம்:
லலிதா சாதனையின் மூலம் மனதை ஸமாதி அனுபவத்திற்கு கொண்டு செல்வது என்பது பற்றிய யோக விளக்கம் தரப்படுகிறது. 
சாதனா மந்திரம்: 
_________________________
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
இந்த நாமத்திற்குரிய சாதனை:
________________________________________
ஒரு சாதகன் எப்படி தனது அகத்திற்குள்ளே ஒரு பொருளைக் காணும் போது புலன் களால் அறியும் போது தனக்குள்ளே விருத்தியாக்கிகொண்டிருக்கும் தமக்குள்ளான மன உரையாடல்களை உருவாக்கும் வழமையான சிந்தனை முறையினை நிறுத்த முடியும்?
(குரு நாதர் internal monologue என்ற சொல்லைப் பாவித்துள்ளார்; மோனோலாக் என்பது ஒரு பாத்திரம் அவர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளின் தொகுப்பை உரக்க வெளிப்படுத்துவதற்காக வழங்கும் பேச்சு அல்லது வாய்மொழி விளக்கக்காட்சி ஆகும்)
ஒருவன் நீண்ட உழைப்பின் பின்னர் ஓய்வெடுக்க விரும்புகிறான். கடுமையான வேலைக்கு பிறகு ஓய்வெடுக்க விரும்புகிறான்; உடலுறவின் பின்னர் ஏற்படும் அதிகரித்த பதட்ட த்தினால் ஓய்வெடுக்க விரும்புகிறான். இந்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் ஓய்வு என்பது தான் செயலாற்றுவதிலிருந்து மகிழ்ச்சியாக விடுபடுவதுடன் தொடர்பு படுகிறது. பதட்ட த்திலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவது என்பது மகிழ்ச்சி ஆன ந்தம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கையில் செயற்பாடு என்பது பதட்ட த்துடனும் கவலையுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் உலகெங்கும் மனிதர்களால் ஓய்வுப் பயணங்கள் விரும்ப ப் படுகிறது. ஓய்வு பெற்ற மனம் செயலை விரும்புகிறது; அதிக செயற்பாடுடைய மனம் ஓய்வை விரும்புகிறது. ஓய்வு, செயல் இரண்டும் மனதில் செயற்படும் மைய நீக்க, மைய நாட்ட விசைகளாகும். 
நாம் மேலே விளக்கத்தில் உணர்ந்தறிதல் என்பது மனமானது நிச்சயமற்ற தன்மையிலிருந்து உறுதியான நிலைக்குச் செல்வது என்று அறிந்தோம். நிச்சயமற்ற தன்மை பதட்டத்தையும் உறுதியான நிலை ஓய்வினையும் வெளிப்படுத்தும். மனம் தனது பதட்டத்தைக் குறைத்து துரிதமாக ஓய்வு நிலைக்குச் செல்வதற்காக குறியீடுகளையும், சுருக்கப் புரிதல்களையும் (abstractions) உருவாக்கும். மனம் தான் புலன் களில் இருந்து பெறப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத தகவல்களில் நிலைத்து தன்னை நிலையற்ற தன்மையில் வைத்திருக்க விரும்புவதில்லை. எனவே உடனடியாக புலன் களால் பெறப்படும் தகவல்களை பெயரிட்டு, அதனை உணர்ந்து செயற்பட விரும்புகிறது. இதனால் மனம் உடனடியாக புலன்களால் பெறப்படும் தகவல்கள் மீது தனது சிந்தனையை உருவாக்க விரும்புகிறது. எமது சிந்தனையின் ஆணிவேர் எமக்கு தெரியாத தைப் பற்றிய பயம், இப்படித் தெரியாத பிரபஞ்சம் எமக்கு வெளியே இருப்பதாக நாம் நம்புகிறோம். எனவே எமக்கு அறியமுடியாத ஆழத்தில் இருக்கும் விடயங்களால் வரும் பயம், பதட்டங்களைக் குறைக்க நாம் அதுபற்றி சிந்தித்து முடிவிற்கு வருகிறோம். இதனால் பிரபஞ்சத்தை உள்ளதை உள்ளபடி அறியாமல் ஒரு மயக்கமான அறிவினை மாத்திரமே நாம் பெறுகிறோம். 
இப்படி நாம் மனதிற்கு புலன் கள் மூலம் தகவல்களைக் கொட்டிக்கொண்டிருக்கும் போது எமது சிந்தனை ஒரு பக்கச் சார்பாக ஏற்கனவே இருக்கும் பதிவுகளை அடிபடையாக வைத்துக்கொண்டு எமது மனதில் தோன்றும் பதட்டங்களைக் குறைத்துக்கொண்டிருக்கும். ஆகவே மனதிற்கு தகவல்கள் செல்லச் செல்ல சிந்தனையை நிறுத்துவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. பயம் என்பது அறவே அற்ற வீரபாவம் உள்ள ஒருவனால் தான் எவ்வளவு பதட்ட த்தையும், கவலையையும் வெளிச் சூழல் உருவாக்கினாலும் இயல்பாகவே எந்தவிதமான எண்ணச் சுழலையும் உருவாக்காமல் புலன்களை இயக்க முடியும். இப்படி புலன் களிலிருந்து மனதைப் பிரித்து அகமுகமாகச் செல்லும் போது சாதகனிடம் இருப்பவை பழைய ஞாபகங்களும் அதனுடன் சேர்ந்த எண்ண ஓட்டங்களுமே. இந்த நிலையில் எந்தவிதமான பயங்களாலும் எண்ண ஓட்டம் தூண்டப்படாமல் ஒருவன் முழுமையான ஓய்வை அனுபவிக்க முடியும். இந்த நிலையில் மனமானது சிந்திக்கத் தேவையில்லை என்ற நிலையை இயல்பாக அடைந்து ஓய்வுக்கு வரலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தூண்டலே ஓய்வினைப் பெறத் தூண்டும். இதனால் நாம் பெறும் ஓய்வானது மகிழ்ச்சியான ஓய்வாக மாறி ஸமாதி அனுபவம் பெறுவதற்குரிய ஒர் நல்லொழுக்கச் சூழல் அகத்தில் உருவாகிறது. நித்திரையில் நாம் பெறும் ஓய்வு என்ன நடக்கிறது என்று நாம் உணர்வதில்லை. ஆனால் ஸமாதி அனுபவத்தில் மறுதலையாக உணர்வை இழக்காமல் முழுமையான ஓய்வினைப் பெறுகிறோம். ஸமாதியின் முதல் அனுபவம் முழுமையான பேரான ந்தம்; எப்படி ஆர்கிமிடிஸ் குளியல் தொட்டியில் இருந்து குதித்துக்கொண்டு யுரேக்கா என்று கத்திக்கொண்டு பேரானந்தமாக ஓடினாரோ அப்படி ஒருவன் தன்னை மறந்த ஒரு ஆனந்த அனுபவத்தை அடைகிறான். கனவில்லா உறக்கத்தில் இருந்து எழும்பும்போது ஒருவருக்கு ஏற்படும் முழுமையான ஓய்வு பெற்றது போன்ற உணர்வு: என்றென்றும் நீட்டிக்கப்பட்ட உடலுறவின் உச்சக்கட்டத்தின் ஆனந்த தருணங்கள் போல ஸமாதி நிலையின் அனுபவத்தை அடைகிறான். 
ஒருவன் ஸமாதி அனுபவம் பெறவேண்டும் என்பதன் காரணம் சன்னியாசியாகி உலக இன்பங்களை விட்டு ஓடுவதற்காக அல்ல, மறுபுறம் இந்த உலகில் நாம் அனுபவிக்கக் கூடிய உச்சகட்ட மகிழ்ச்சியும் ஆனந்தமும் என்னவென்பதை நேரடியாக அனுபவிப்பதற்காக. ஒருவன் தனது புலன் களால் பெறக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமும் குறித்த எல்லைக்கு உட்பட்ட து. ஆனால் யோகத்தினது நோக்கம் புலன் களைத் தாண்டி தெய்வ உருமாற்றம் பெற்ற மகிழ்ச்சியைப் பெறுவதாகும். உடலுறவில் மீண்டும் மீண்டும் ஏக்கம் ஏற்படுவதற்கான காரணம் புலன்களால் அரைகுறையாக அனுபவிக்கப்படும் உச்சகட்ட இன்பம் மீண்டும் மீண்டும் அதை அடையத் துடிப்பதாகும். 
ஒருவன் தனது உடலுறவு உச்சகட்ட இன்பத்தை ஸமாதி நிலையில் தொடர்ச்சியாக அனுபவிக்க முடிந்தால் அவனது புற உடல் உணர்வும், அகத்தின் இருக்கும் அகங்கார உணர்வும் பெயர் சொல்லமுடியதபடி கரைந்து, அவன் நித்திய கடவுள் உணர்வு பெற்று அவனது மனதில் எழுந்துகொண்டிருக்கும் காம எண்ணங்களில் இருந்து விடுபடுவான். எப்படி திருவிழாவின் பேரொளியில் விளக்கொளியின் பிரகாசம் தோற்றுவதில்லையோ, 100 வாட்ஸ் மின் குமிழ் பகலில் சூரிய ஓளிமுன்னால் பிரகாசம் இல்லாமல் போவது போல் இறைவனின் பேரொளியை ஸமாதி அனுபவத்தில் அனுபவிக்கும் போது மனிதனின் எல்லாவித சிறுமை எண்ணங்களும் காணாமல் போகிறது. 
ஆகவே சாதனையில் ஒருவன் தியானம் செய்ய அமர்ந்தால் புலன் களில் இருந்து மனதைப் பிரிந்து ஆனந்த சவாரி செய்ய வேண்டும். தியானத்திற்கான முதல் படி அவன் தியானம் செய்வதன் மூலம் அவனது மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டும். எந்த விஷயம் தியானிப்பவரிற்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதையே தியானப் பொருளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் மீதான ஏற்கனவே பதித்துவைத்திருக்கும் மனத்தடைகள், குழப்பங்கள் ஆகியவற்றை நீக்கி மனமாகிய வனத்தில் ஆனந்தம் எனும் பச்சைப் புல்வெளியைத் தேட வேண்டும். இப்படி மனதை முழுமையான சுதந்திரத்துடன் விடும் போது அந்த மனமானது மெதுவாக அடங்கி தனக்கு அமைதியும் ஆனந்தமும் தரும் ஒரு எண்ணத்தில் அடங்கத்தொடங்கும். இப்படி அடங்கத் தொடங்கும் போது மனதின் வேகம் அதிகரிக்கத் தொடங்கும், இது இன்னும் உறுதியான அதிவேகமான ஒரு பம்பரம் அதனது அதிவேக சுழற்சியில் எப்படி பரிபூரண ஓய்வில் இருக்கிறதோ அதைப் போல் மனம் வேகமடைந்து உறுதியடையும். இந்த உறுதியடைந்த மனமே சிதக்னி குண்டம், ஸ்ரீ ல லிதா, தெய்வ உருமாற்றம் பெற்ற பேராந்தமும் மகிழ்சியும் ஒருவன் அனுபவிப்பான். இந்த நிலையில் மனம் மிகவும் தெளிவானதாக இருக்கும், இது உறக்கத்தால் வருவதல்ல; ஆனால் அதியுச்ச வேகத்தில், இறைவனின் வேகத்தில் மனம் இயங்குவதால் மனதிற்கு கிடைக்கும் ஆற்றல் தெளிவு இது. இந்த நிலையில் காணப்பட்ட தரிசனங்களின் ஆச்சரியத்தில் ஒருவர் மௌனமான செயலற்ற சாட்சியாக மாறுகிறார். 
ஒருவர் சும்மா அமர்ந்து கொண்டு மனதில் எழும் எண்ணங்களைக் கவனித்துக்கொண்டு அந்த எண்ணங்களை நிறுத்தலாம் என்று முயற்சிப்பதில் எந்தப்பலனும் இல்லை. எண்ணங்களை நிறுத்த நம் வசம் உள்ள ஒரே வழி சிந்தனை. நாம் அதைப் பயன்படுத்த வேண்டும், அதாவது நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்; வெளிப்புற புலன்கள் எதைக் கொண்டுவருகின்றன என்பதைப் பற்றி அல்ல, ஆனால் எமது ஞாபகத்தில் இருக்கும் மிகவும் மகிழ்ச்சியானதைப் பற்றி சிந்திக்க வேண்டும்; இப்படிச் சிந்திக்கும் போது ஒருவன் சிரமமின்றி மனோவேகம் பெற்று மனம் ஒருமுகப்பட்டு நிலைபெற ஆரம்பிக்கிறான். எப்போது இந்த முயற்சி பூச்சியமாகிறதோ அவனது தனிமனித சிந்தனை கடந்து இறைவனின் உணர்வில் ஒன்ற ஆரம்பிக்கிறது. இது ஒரு மிக நீண்ட செயல்முறை, ஆனால் கூறப்பட்ட முறையில் பயிற்சித்தால் கட்டாயம் வெற்றி கிட்டும். எமது மனதில் இருக்கும் சந்தேகம் போன்ற தடைகளும், ஸமாதி அனுபவத்தால் கிட்டும் பேரின்பம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் இதில் வெற்றிபெறுவதற்கு தடையாக இருக்கும். இதில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது மனமானது அதியுயர் வேகத்தில் இயங்கும் போது தியானிக்கப்படும் பொருள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பது. உயர் வேகத்தில் ஒரு பொருள் இயங்கும் போது அதில் ஏற்படும் சிறு அதிர்வு, விலகல் அதியுச்ச ஆற்றலை வெளிப்படுத்தும். இப்படியானவையே சித்திகள் எனப்படுகிறது. இவற்றைப் பற்றி ஒருவர் அதிகம் கேள்விப்படுகிறார், ஆனால் மிக க் குறைவாக்வே காண்கிறார். அத்தகைய சக்திகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தவும் முடியும். அத்தகைய சித்திகளைச் செய்யு போது ஒருவனுடைய தபஸ் செலவழிக்கப்படுகிறது. அதாவது இச்சா சக்தி மூலம் இது நடைபெறுகிறது. மனதின் வேகம், தெளிவு, செயல் ஆகியவை இத்தகைய சித்திகள் வெளிப்படுவதற்கு பங்களிக்கின்றது.

சாதனா

இந்தப் பதிவு சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை என்ற நாமத்திற்குரிய சாதனா பாகம்:
லலிதா சாதனையின் மூலம் மனதை ஸமாதி அனுபவத்திற்கு கொண்டு செல்வது என்பது பற்றிய யோக விளக்கம் தரப்படுகிறது. 
சாதனா மந்திரம்: 
_________________________
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
இந்த நாமத்திற்குரிய சாதனை:
________________________________________
ஒரு சாதகன் எப்படி தனது அகத்திற்குள்ளே ஒரு பொருளைக் காணும் போது புலன்களால் அறியும் போது தனக்குள்ளே விருத்தியாக்கி கொண்டிருக்கும் தமக்குள்ளான மன உரையாடல்களை உருவாக்கும் வழமையான சிந்தனை முறையினை நிறுத்த முடியும்?
(குரு நாதர் internal monologue என்ற சொல்லைப் பாவித்துள்ளார்; மோனோலாக் என்பது ஒரு பாத்திரம் அவர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளின் தொகுப்பை உரக்க வெளிப்படுத்துவதற்காக வழங்கும் பேச்சு அல்லது வாய்மொழி விளக்கக்காட்சி ஆகும்.)
ஒருவன் நீண்ட உழைப்பின் பின்னர் ஓய்வெடுக்க விரும்புகிறான். கடுமையான வேலைக்கு பிறகு ஓய்வெடுக்க விரும்புகிறான்; உடலுறவின் பின்னர் ஏற்படும் அதிகரித்த பதட்ட த்தினால் ஓய்வெடுக்க விரும்புகிறான். இந்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் ஓய்வு என்பது தான் செயலாற்றுவதிலிருந்து மகிழ்ச்சியாக விடுபடுவதுடன் தொடர்பு படுகிறது. பதட்ட த்திலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவது என்பது மகிழ்ச்சி ஆன ந்தம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கையில் செயற்பாடு என்பது பதட்ட த்துடனும் கவலையுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் உலகெங்கும் மனிதர்களால் ஓய்வுப் பயணங்கள் விரும்ப ப் படுகிறது. ஓய்வு பெற்ற மனம் செயலை விரும்புகிறது; அதிக செயற்பாடுடைய மனம் ஓய்வை விரும்புகிறது. ஓய்வு, செயல் இரண்டும் மனதில் செயற்படும் மைய நீக்க, மைய நாட்ட விசைகளாகும். 
நாம் மேலே விளக்கத்தில் உணர்ந்தறிதல் என்பது மனமானது நிச்சயமற்ற தன்மையிலிருந்து உறுதியான நிலைக்குச் செல்வது என்று அறிந்தோம். நிச்சயமற்ற தன்மை பதட்டத்தையும் உறுதியான நிலை ஓய்வினையும் வெளிப்படுத்தும். மனம் தனது பதட்டத்தைக் குறைத்து துரிதமாக ஓய்வு நிலைக்குச் செல்வதற்காக குறியீடுகளையும், சுருக்கப் புரிதல்களையும் (abstractions) உருவாக்கும். மனம் தான் புலன் களில் இருந்து பெறப்பட்ட ஒழுங்குபடுத்தப்படாத தகவல்களில் நிலைத்து தன்னை நிலையற்ற தன்மையில் வைத்திருக்க விரும்புவதில்லை. எனவே உடனடியாக புலன் களால் பெறப்படும் தகவல்களை பெயரிட்டு, அதனை உணர்ந்து செயற்பட விரும்புகிறது. இதனால் மனம் உடனடியாக புலன்களால் பெறப்படும் தகவல்கள் மீது தனது சிந்தனையை உருவாக்க விரும்புகிறது. எமது சிந்தனையின் ஆணிவேர் எமக்கு தெரியாத தைப் பற்றிய பயம், இப்படித் தெரியாத பிரபஞ்சம் எமக்கு வெளியே இருப்பதாக நாம் நம்புகிறோம். எனவே எமக்கு அறியமுடியாத ஆழத்தில் இருக்கும் விடயங்களால் வரும் பயம், பதட்டங்களைக் குறைக்க நாம் அதுபற்றி சிந்தித்து முடிவிற்கு வருகிறோம். இதனால் பிரபஞ்சத்தை உள்ளதை உள்ளபடி அறியாமல் ஒரு மயக்கமான அறிவினை மாத்திரமே நாம் பெறுகிறோம். 
இப்படி நாம் மனதிற்கு புலன் கள் மூலம் தகவல்களைக் கொட்டிக்கொண்டிருக்கும் போது எமது சிந்தனை ஒரு பக்கச் சார்பாக ஏற்கனவே இருக்கும் பதிவுகளை அடிபடையாக வைத்துக்கொண்டு எமது மனதில் தோன்றும் பதட்டங்களைக் குறைத்துக்கொண்டிருக்கும். ஆகவே மனதிற்கு தகவல்கள் செல்லச் செல்ல சிந்தனையை நிறுத்துவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. பயம் என்பது அறவே அற்ற வீரபாவம் உள்ள ஒருவனால்தான் எவ்வளவு பதட்ட த்தையும், கவலையையும் வெளிச் சூழல் உருவாக்கினாலும் இயல்பாகவே எந்தவிதமான எண்ணச் சுழலையும் உருவாக்காமல் புலன்களை இயக்க முடியும். இப்படி புலன் களிலிருந்து மனதைப் பிரித்து அகமுகமாகச் செல்லும் போது சாதகனிடம் இருப்பவை பழைய ஞாபகங்களும் அதனுடன் சேர்ந்த எண்ண ஓட்டங்களுமே. இந்த நிலையில் எந்தவிதமான பயங்களாலும் எண்ண ஓட்டம் தூண்டப்படாமல் ஒருவன் முழுமையான ஓய்வை அனுபவிக்க முடியும். இந்த நிலையில் மனமானது சிந்திக்கத் தேவையில்லை என்ற நிலையை இயல்பாக அடைந்து ஓய்வுக்கு வரலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தூண்டலே ஓய்வினைப் பெறத் தூண்டும். இதனால் நாம் பெறும் ஓய்வானது மகிழ்ச்சியான ஓய்வாக மாறி ஸமாதி அனுபவம் பெறுவதற்குரிய ஒர் நல்லொழுக்கச் சூழல் அகத்தில் உருவாகிறது. நித்திரையில் நாம் பெறும் ஓய்வு என்ன நடக்கிறது என்று நாம் உணர்வதில்லை. ஆனால் ஸமாதி அனுபவத்தில் மறுதலையாக உணர்வை இழக்காமல் முழுமையான ஓய்வினைப் பெறுகிறோம். ஸமாதியின் முதல் அனுபவம் முழுமையான பேரான ந்தம்; எப்படி ஆர்கிமிடிஸ் குளியல் தொட்டியில் இருந்து குதித்துக்கொண்டு யுரேக்கா என்று கத்திக்கொண்டு பேரானந்தமாக ஓடினாரோ அப்படி ஒருவன் தன்னை மறந்த ஒரு ஆனந்த அனுபவத்தை அடைகிறான். கனவில்லா உறக்கத்தில் இருந்து எழும்பும்போது ஒருவருக்கு ஏற்படும் முழுமையான ஓய்வு பெற்றது போன்ற உணர்வு: என்றென்றும் நீட்டிக்கப்பட்ட உடலுறவின் உச்சக்கட்டத்தின் ஆனந்த தருணங்கள் போல ஸமாதி நிலையின் அனுபவத்தை அடைகிறான். 
ஒருவன் ஸமாதி அனுபவம் பெறவேண்டும் என்பதன் காரணம் சன்னியாசியாகி உலக இன்பங்களை விட்டு ஓடுவதற்காக அல்ல, மறுபுறம் இந்த உலகில் நாம் அனுபவிக்கக் கூடிய உச்சகட்ட மகிழ்ச்சியும் ஆனந்தமும் என்னவென்பதை நேரடியாக அனுபவிப்பதற்காக. ஒருவன் தனது புலன் களால் பெறக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமும் குறித்த எல்லைக்கு உட்பட்ட து. ஆனால் யோகத்தினது நோக்கம் புலன் களைத் தாண்டி தெய்வ உருமாற்றம் பெற்ற மகிழ்ச்சியைப் பெறுவதாகும். உடலுறவில் மீண்டும் மீண்டும் ஏக்கம் ஏற்படுவதற்கான காரணம் புலன்களால் அரைகுறையாக அனுபவிக்கப்படும் உச்சகட்ட இன்பம் மீண்டும் மீண்டும் அதை அடையத் துடிப்பதாகும். 
ஒருவன் தனது உடலுறவு உச்சகட்ட இன்பத்தை ஸமாதி நிலையில் தொடர்ச்சியாக அனுபவிக்க முடிந்தால் அவனது புற உடல் உணர்வும், அகத்தின் இருக்கும் அகங்கார உணர்வும் பெயர் சொல்லமுடியதபடி கரைந்து, அவன் நித்திய கடவுள் உணர்வு பெற்று அவனது மனதில் எழுந்துகொண்டிருக்கும் காம எண்ணங்களில் இருந்து விடுபடுவான். எப்படி திருவிழாவின் பேரொளியில் விளக்கொளியின் பிரகாசம் தோற்றுவதில்லையோ, 100 வாட்ஸ் மின் குமிழ் பகலில் சூரிய ஓளிமுன்னால் பிரகாசம் இல்லாமல் போவது போல் இறைவனின் பேரொளியை ஸமாதி அனுபவத்தில் அனுபவிக்கும் போது மனிதனின் எல்லாவித சிறுமை எண்ணங்களும் காணாமல் போகிறது. 
ஆகவே சாதனையில் ஒருவன் தியானம் செய்ய அமர்ந்தால் புலன் களில் இருந்து மனதைப் பிரிந்து ஆனந்த சவாரி செய்ய வேண்டும். தியானத்திற்கான முதல் படி அவன் தியானம் செய்வதன் மூலம் அவனது மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டும். எந்த விஷயம் தியானிப்பவரிற்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதையே தியானப் பொருளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் மீதான ஏற்கனவே பதித்துவைத்திருக்கும் மனத்தடைகள், குழப்பங்கள் ஆகியவற்றை நீக்கி மனமாகிய வனத்தில் ஆனந்தம் எனும் பச்சைப் புல்வெளியைத் தேட வேண்டும். இப்படி மனதை முழுமையான சுதந்திரத்துடன் விடும் போது அந்த மனமானது மெதுவாக அடங்கி தனக்கு அமைதியும் ஆனந்தமும் தரும் ஒரு எண்ணத்தில் அடங்கத்தொடங்கும். இப்படி அடங்கத் தொடங்கும் போது மனதின் வேகம் அதிகரிக்கத் தொடங்கும், இது இன்னும் உறுதியான அதிவேகமான ஒரு பம்பரம் அதனது அதிவேக சுழற்சியில் எப்படி பரிபூரண ஓய்வில் இருக்கிறதோ அதைப் போல் மனம் வேகமடைந்து உறுதியடையும். இந்த உறுதியடைந்த மனமே சிதக்னி குண்டம், ஸ்ரீ ல லிதா, தெய்வ உருமாற்றம் பெற்ற பேராந்தமும் மகிழ்சியும் ஒருவன் அனுபவிப்பான். இந்த நிலையில் மனம் மிகவும் தெளிவானதாக இருக்கும், இது உறக்கத்தால் வருவதல்ல; ஆனால் அதியுச்ச வேகத்தில், இறைவனின் வேகத்தில் மனம் இயங்குவதால் மனதிற்கு கிடைக்கும் ஆற்றல் தெளிவு இது. இந்த நிலையில் காணப்பட்ட தரிசனங்களின் ஆச்சரியத்தில் ஒருவர் மௌனமான செயலற்ற சாட்சியாக மாறுகிறார். 
ஒருவர் சும்மா அமர்ந்து கொண்டு மனதில் எழும் எண்ணங்களைக் கவனித்துக்கொண்டு அந்த எண்ணங்களை நிறுத்தலாம் என்று முயற்சிப்பதில் எந்தப்பலனும் இல்லை. எண்ணங்களை நிறுத்த நம் வசம் உள்ள ஒரே வழி சிந்தனை. நாம் அதைப் பயன்படுத்த வேண்டும், அதாவது நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்; வெளிப்புற புலன்கள் எதைக் கொண்டுவருகின்றன என்பதைப் பற்றி அல்ல, ஆனால் எமது ஞாபகத்தில் இருக்கும் மிகவும் மகிழ்ச்சியானதைப் பற்றி சிந்திக்க வேண்டும்; இப்படிச் சிந்திக்கும் போது ஒருவன் சிரமமின்றி மனோவேகம் பெற்று மனம் ஒருமுகப்பட்டு நிலைபெற ஆரம்பிக்கிறான். எப்போது இந்த முயற்சி பூச்சியமாகிறதோ அவனது தனிமனித சிந்தனை கடந்து இறைவனின் உணர்வில் ஒன்ற ஆரம்பிக்கிறது. இது ஒரு மிக நீண்ட செயல்முறை, ஆனால் கூறப்பட்ட முறையில் பயிற்சித்தால் கட்டாயம் வெற்றி கிட்டும். எமது மனதில் இருக்கும் சந்தேகம் போன்ற தடைகளும், ஸமாதி அனுபவத்தால் கிட்டும் பேரின்பம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் இதில் வெற்றிபெறுவதற்கு தடையாக இருக்கும். இதில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது மனமானது அதியுயர் வேகத்தில் இயங்கும் போது தியானிக்கப்படும் பொருள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பது. உயர் வேகத்தில் ஒரு பொருள் இயங்கும் போது அதில் ஏற்படும் சிறு அதிர்வு, விலகல் அதியுச்ச ஆற்றலை வெளிப்படுத்தும். இப்படியானவையே சித்திகள் எனப்படுகிறது. இவற்றைப் பற்றி ஒருவர் அதிகம் கேள்விப்படுகிறார், ஆனால் மிக க் குறைவாக்வே காண்கிறார். அத்தகைய சக்திகள் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்தவும் முடியும். அத்தகைய சித்திகளைச் செய்யு போது ஒருவனுடைய தபஸ் செலவழிக்கப்படுகிறது. அதாவது இச்சா சக்தி மூலம் இது நடைபெறுகிறது. மனதின் வேகம், தெளிவு, செயல் ஆகியவை இத்தகைய சித்திகள் வெளிப்படுவதற்கு பங்களிக்கின்றது.

Sunday, May 14, 2023

பல்கலைக்கழகம்

நம்ம ஊர்ப் பையன் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் செல்கிறார். மாத்தளை இந்துக்கல்லூரியின் இந்த வருடம் பட்டம் பெற பல்கலைக்கழகம் செல்லும் கல்வி அறுவடைகளில் ஒருவர்! 
அதிபர் கணேசமூர்த்தி ஐயாவின் அரும்பெரும் வழிகாட்டலும், கல்வியில் துவண்டுவிடாமல் இருக்க அவர் தொடர்ச்சியாகக் காட்டிய ஊக்கத்தாலும் இன்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளார். 
பரிட்சைக்கு ஒருவருடம் இருக்கையில் அப்பாவிற்கு தான் சுமையாக இருக்க விரும்பவில்லை தொழில் செய்யப் போகிறேன் என்று பெரிய மனிதன் பேச்சு பேசிக்கொண்டு வழிகாட்டலுக்கு வந்தார், இதெல்லாம் பிறகு பார்க்கலாம் ஒவ்வொரு வாரமும் மூன்று பாடத்திலும் 50 MCQ செய்ய வேண்டும், மொத்தம் 1000 MCQ முடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து அதைக் கண்காணித்து கடுமை காட்டினேன். 
எனது அம்மாவின் ஊர்ப் பிள்ளைகளில் ஒருவர்! பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க என்று வந்தார்! பாட்டி வீட்டில் இல்லை! என்னிடம் மாட்டிக் கொண்டார் அடுத்த நான்கு வருடம் பல்கலைக்கழகத்தில் ஒழுங்காகப் படிக்க என்ன செய்யவேண்டும் என்ற எனது அறுவை உபதேசம் வாங்கிக்கொண்டு சென்றார்! 
வாழ்த்துக்களும் ஆசிகளும் ருஷாந்தன்!

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்

நம்ம ஊர்ப் பையன் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் செல்கிறார். மாத்தளை இந்துக்கல்லூரியின் இந்த வருடம் பட்டம் பெற பல்கலைக்கழகம் செல்லும் கல்வி அறுவடைகளில் ஒருவர்! 
அதிபர் கணேசமூர்த்தி ஐயாவின் அரும்பெரும் வழிகாட்டலும், கல்வியில் துவண்டுவிடாமல் இருக்க அவர் தொடர்ச்சியாகக் காட்டிய ஊக்கத்தாலும் இன்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளார். 
பரிட்சைக்கு ஒருவருடம் இருக்கையில் அப்பாவிற்கு தான் சுமையாக இருக்க விரும்பவில்லை தொழில் செய்யப் போகிறேன் என்று பெரிய மனிதன் பேச்சு பேசிக்கொண்டு வழிகாட்டலுக்கு வந்தார், இதெல்லாம் பிறகு பார்க்கலாம் ஒவ்வொரு வாரமும் மூன்று பாடத்திலும் 50 MCQ செய்ய வேண்டும், மொத்தம் 1000 MCQ முடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து அதைக் கண்காணித்து கடுமை காட்டினேன். 
எனது அம்மாவின் ஊர்ப் பிள்ளைகளில் ஒருவர்! பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க என்று வந்தார்! பாட்டி வீட்டில் இல்லை! என்னிடம் மாட்டிக் கொண்டார் அடுத்த நான்கு வருடம் பல்கலைக்கழகத்தில் ஒழுங்காகப் படிக்க என்ன செய்யவேண்டும் என்ற எனது அறுவை உபதேசம் வாங்கிக்கொண்டு சென்றார்! 
வாழ்த்துக்களும் ஆசிகளும் ருஷாந்தன்!

The teacher is a Role mode or Roll model? ஆசிரியர் என்பவர் முன்மாதிரியான வழிகாட்டியா?அல்லது நடிகரா?

அண்மையில் ஒரு சமூக அக்கறை கொண்ட ஊர்ப் பெரியவர் சமூகத்தில் நடைபெறும் ஒரு பிரச்சனை பற்றி உரையாடி எனது அபிப்பிராயம் வேண்டி வந்திருந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் சமூக நன்மை கருதி பதிவிட எண்ணுகிறேன். 
அவருடைய கேள்வியின் சாராம்சம் " ஒரு ஆசிரியர் தனிமனித ஒழுக்கத்தில் கேடுற்று அதனை தற்போது உள்ள நவீன தொழில் நுட்பம் பதிவு செய்து, gossip பேசும் சமூகம் அதைப் பரவலாக்கி கேட்டு இன்பமுறும் நிலையில் அந்த ஆசிரியர் எந்தவிதமான சமூகப் பொறுப்பையும் ஏற்கத் தகுதியுடையவரா? இதை நாம் சமூகமாக அங்கீகரிக்க முடியுமா? 
எனது பதில்: 
ஆசிரியத் தொழில் என்பது பண்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில் என்ற அடிப்படையில் ஆசிரியர் என்பவர் வகுப்பறையில் பாடத்தை மாத்திரம் வாசித்துவிட்டுச் செல்லாமல் மாணவனின் மனதை நல்வழியில் திசைதிருப்புபவர், மாணவருக்கு ஆதர்சன முன்மாதிரி வழிகாட்டியாக மாணவனின் மனதை உயர்த்துபவர் என்ற அடிப்படையில் - role model என்ற அடிப்படையில் ஆசிரியரின் சுய ஒழுக்கம் அதிமுக்கியமானது. உலகையும், அறிவையும் பண்பையும் மாணவன் ஆசிரியரிடமிருந்தே பெற்றுக்கொள்கிறான். 
மாணவர்கள் மனது பண்பற்ற ஆசிரியர்களின் செயலால் எப்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதற்கு எனது நண்பரின் மகன் ஆரம்ப கல்வியை ஒரு பாடசாலையில் கற்று ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு வேறு பாடசாலைக்குச் செல்லும் போது சில நாட்களில் அழுகையும், கல்வி மீது வெறுப்பும் காட்டத்தொடங்கினான். ஆராய்ந்து பார்த்ததில் அதுவரை அவன் கற்ற வகுப்பாசிரியர் அன்பு மிகுந்தவர் " வாங்க தங்கம், ஹோம்வேர்க் செய்துவிட்டீகளா செல்லம்" என்று அன்பாகவே நடத்தி வந்திருக்கிறார்; புதிய ஆசியர் மரியாதை இல்லாமல் "இங்கே வாடா, இருடா" என்று சொல்லத்தொடங்கியவுடன் அதிர்ச்சியாகிவிட்டான். 
நான் எனது பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் வகுப்பில் பலர் ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; அவர்களுக்கு personality test வைத்தால் ஆசிரியருக்குரிய உளம், மனப்பண்பு, சேவை எதுவும் இல்லை. ஆனால் இலகுவான வேலை, ஓய்வூதியம், நிறைய லீவு கிடைக்கும் இப்படியான சுய நலத்திற்கு இலகுவான தொழில் என்றவுடன் நான் அதிர்ந்து போனேன். 
ஆசிரியத் தொழில் என்பது எதிர்காலச் சந்ததியை உருவாக்கி நல்ல சமூகத்தை உருவாக்கும் உன்னதமான சேவை; அதிக பணம் உழைப்பதற்கு, ஓய்வெடுப்பதற்கு, சுய விருப்பத்திற்கு இங்கு இடம் இருப்பதில்லை! தியாக வாழ்க்கையே ஆசிரியத்தொழிலின் அடிப்படை! 
ஆனால் இப்போதுள்ள சிக்கல் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் பலர் பொதுவாக roll model - நடிகர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் சுய ஒழுக்கத்திற்கும் தாம் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருதுகிறார்கள்; தாம் இரகசியமாக சமூகம் செய்யகூடாது, அறப்பிறழ்வான செயல்களைச் செய்துவிட்டு மாணவர்கள் அவற்றைச் செய்யும் போது கண்டிக்கிறார்கள்; தற்கால தலைமுறை நுண்ணறிவு மிக்கது; எதிர் கேள்வி கேட்கும் தலைமுறை; தாம் கடைப்பிடிக்காத ஒழுக்கத்தை மாணவர்களுக்கு அழுத்திப் போதிப்பவர்களாக, வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே போட்டு அகத்தில் காம, க்ரோத, மதம், மாச்சர்யங்கள் நிறைந்தவர்களாக, தாம் பரீட்சை எழுதிப் பெற்ற தகுதியால் தம்மை ஆசிரியர்களாக நிலை நிறுத்துகிறார்களே அன்றி தமது அகப்பண்பால், ஒழுக்கத்தால் ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்துவதில்லை. இது சமூகத்திற்கு கேடானது. 
ஆசிரியர் ஒழுக்கக் குறைவாக இருக்கிறார் என்றால் அதை சரிசெய்யக்கூடிய நிர்வாகப் பொறிமுறை சட்டத்தில் இல்லாத போது சமூகத்திற்குள் அதற்கான பொறிமுறை இருக்க வேண்டும். 
இப்படியான பிரச்சனைகளை எவரையும் அவமானப்படுத்தி மன உளைச்சலை குறித்த நபருக்கோ, அவர் சார்ந்த குடும்பத்திற்கோ ஏற்படுத்துவது நோக்கமாக இல்லாமல் தவறு செய்தவர்களை ஆற்றுப்படுத்தி அதிலிருந்து வெளிவர உதவி செய்ய வேண்டும். 
தவறு செய்தவரை கருணையுடன் அணுகி அந்தத் தவறை மேலும் செய்யாமல் இருக்க அவருக்குத் தேவையான உள ஆலோசனைகளை வழங்க வேண்டும். 
சமூகமாக இப்படிச் சிந்திக்கிறோமா?

Saturday, May 13, 2023

அன்னை உபாசனை

4. சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தா
சாதனா மந்திரம்: 
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
வழிகாட்டல்:
****************************
இந்தப் பதிவை வாசிக்கும் போது அன்னையை உபாசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் எந்த மனத் தடங்கலும் இன்றி இங்கு தரப்பட்டுள்ள ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
மந்திரத்தை தினசரி 108 ஜெபித்து வாருங்கள்! தகுந்த நேரம் வரும் போது அன்னை தனது குருபரம்பரையில் ஒருவரை குருவாக அனுப்பி முறையான உபாசனையைக் கற்பிப்பாள்! அதன் பின்னர் உங்கள் குரு முறைப்படி தீக்ஷை அருளி எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளைச் சொல்லித்தருவார்!
ஸுதா ஸ்யந்திநீ பாஷ்யம்
_______________________________________
லலிதை உணர்வாகிய “சித்” இன் அக்கினியில் பிறந்தவள்; அக்கினி என்பது உராய்வுகளால் பெறபடுவது. ல லிதையின் உணர்வினைப் பெறுவதற்குரிய முறை, ஒருவன் தனக்குள் இறைவனைக் காண்பதற்கு அவனது உணர்வு அக்கினித் தன்மை அடைய வேண்டும். எப்படி உணர்வில் அக்கினித் தன்மை உருவாக முடியும்? மனதில் உராய்வினை உருவாக்குவதம் மூலம். மனதில் உராய்வினையும் அக்கினியையும் உருவாக்க மனதை அதன் வழமையாக அது தானாகச் செயற்படும் வழிமுறையிலிருந்து மனதை திருப்ப வேண்டும். 
மனம் எப்படி சாதாரண நிலையில் செயற்படுகிறது? மனம் தான் ஏற்கனவே சேர்த்துவைத்திருந்த ஞாபகம், தர்க்கப் புரிதல், தன்னை தொடர்பு படுத்தி வைத்திருந்த குறியீடுகளுடன், பிம்பங்களுடன், வழுக்களுடன் தொடர்பு படுத்தி எண்ணங்களை ஏற்படுத்துகிறது. ஞாபகம் என்பது கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் சேகரிப்பும் அதன் மீது எழுதப்பட்ட அண்மைக்கால நினைவுகளின் தொகுப்பு. 
எனவே ஞாபகம் என்பது ஒரு பூரணமற்ற பதிவாகும். இத்தகைய பூரணமற்ற பதிவுகளில் இருந்து மனிதன் தன்னை வெளிப்படுத்தும் குறியீடுகள் உருவாகின்றது. அத்தகைய பல்வேறு பட்ட குறியீடுகளுக்கான உதாரணம் வருமாறு; 
• மொழியியல், எழுத்துக்கள், ஒலிக்குறிப்புகள், சொற்கள், இலக்கணங்கள், வாக்கியங்கள் போன்ற குறியீடுகள்;
• • புள்ளி, கோடு, கோணம், முக்கோணம், சதுரம், வட்டம், கோளம், இடம், மேசை, மின்விசிறி, பனி, மரம், தேனீ போன்ற படங்கள் போன்ற குறியீடுகள்.
ஒருவனில் இருக்கும் ஞாபகப் பதிவுகளில் இருந்து ஒரு தொடர்ச்சி உருவாகி அவை ஒன்றிணைந்து ஒரு சுருக்க நிலைப் புரிதல் மூலம் குறியீடுகள் உருவாகிறது. பின்னர் இவை எண்ணங்களாக விரிந்து ஒப்பிட உதவுகிறது. மன ம் ஒன்றை அறியும் போது அது ஏற்கனவே இருந்த குறியீட்டுடன் ஒப்பிட்டு அதை உறுதிசெய்கிறது, மேலும் இன்னுமொரு முடிவினை, குறியீட்டினை உருவாக்கிறது. ஒரு குறியீடு இன்னுமொரு குறியீட்டினை உருவாக்குகிறது. இப்படி ஒரு குறியீட்டுடன் தொடர்புடைய பல்வேறு குறியீடுகள் ஒன்றிணைந்து உணர்வின் தளமாகவும், இவை எண்ண அலைகளாகவும், அறிவுத் தேக்கமாகவும் விரிவடைகிறது: அதனால்தான் நாம் ஒரு ஆணைப் பார்த்தவுடன் அந்த ஆணின் உருவம் எமது மனதில் இது ஒரு வளந்த ஆண் உருவம், குழந்தை அல்ல, இந்த ஆணின் முகம், கைகள், உடல் இப்படி இருக்கிறது என்ற மதிப்பீட்டை மெல்லியதாகத் தொடங்குகிறோம். இந்த மதிப்பீடு மெல்லியதான, உண்மையாக முழுமையாக அறியாமல் உணர்வின் விளிம்பினால் அறியப்படும் நிலையாகும். மனதின் பொதுவான இயக்கம் தான் ஏற்கனவே பதிவித்திருக்கும் ஆண் பற்றிய குறியீட்டுடன் தான் காணும் உருவத்தைப் பற்றிய எண்ணங்களை உருவாக்கும். உணர்ந்து அறிதல் என்பது மனமானது நிலையற்ற குழப்ப நிலையிலிருந்து ஸ்திரமான உறுதி நிலைக்குச் செல்வதற்கான பாதையாகும். இதன் மூலம் நாம் மனிதனைப் பார்த்தோம், அந்த மனிதனைப் பற்றிய பொதுவான அறிவினை புறவய உலகின் மூலம் அறிந்துகொண்டோம். மேற்கூறிய அனைத்தும் உணர்விற்கு கீழ் நிலையிலேயே நடைபெறுகிறது. அதனால் ஒரு ஆணைப் பார்த்து அவரை ஆண் என்று உறுதி செய்துகொண்டாலும் அங்கு அறியப்படாதவை இருக்கிறது. 
நாம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும், பார்த்துக்கோண்டிருந்தாலும், புற உலகை அனுபவித்துக்கொண்டிருந்தாலும் எமக்குள் ஆழத்தில் சித்தத்தின் இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியமாகும். நாம் புறவயமாக எதைச் செய்தாலும் சித்த த்தில் இருக்கும் சம்ஸ்காரங்களைக் கொண்டு புறவயமாக நடப்பவற்றை பகுத்து அறிந்துகொண்டே இருக்கிறோம். ஆகவே நாம் காணும் உலகம் என்பது உண்மையிலேயே வெளியே இருக்கும் உலகத்தின் உண்மை நிலை அல்ல; அது உண்மையான யதார்த்த நிலையும் எமது சித்த்தில் ஏற்கனவே இருந்த பதிவுகளினதும் கலவை - யதார்த்தத்தின் அகநிலை கலவையாகும். இதில் எமது கற்பனையின் சாரமும் இருக்கும். இந்த நிலை . நம்மையறியாமலேயே தொலைக்காட்சித் திரையில் தொடர்ந்து வண்ணப்பூச்சினைத் தெளித்துக் கொண்டு, நம்மைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் தொலைகாட்சிப் படத்தைப் பற்றிய ஒரு திரிபுபடுத்தப்படாத பார்வையை நாம் எப்போதும் காண்கிறோம் என்று நம்புவது போன்றது. பார்ப்பது நம்புவதற்கு சமமானது. இதை விட உண்மைக்கு புறம்பான அறிக்கை எதுவும் இருக்க முடியாது.
நாம் மனித மனம் எப்படித் தொழிற்படுகிறது என்பதைப் பற்றிய ஒர் சுருக்கப் புரிதலைப் பார்த்தோம். உள்ளதை உள்ளபடி யதார்த்த்தை எமது அக நிலையுடன் கலந்து திரிவுபடுத்தாமல், ஏற்கனவே சித்த்தில் பதிக்கப்பட்ட குறியீடுகளுடன் கலக்காமல் உள்ளதை உள்ளபடி காண்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். 
நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், நமக்குள் தடையின்றிச் செல்லும் அகப் பேச்சுக்களை நிறுத்தி தூக்கி எறிவது; பெயரிடுவதை, அங்கீகரிப்பதை, முன்னிறுத்துவதை, பகுத்தறிவு செய்வதை நிறுத்த முயலுங்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் மனச் செயல்படுவதற்கு இன்றியமையாத கடின மையமானது இயற்கையில் பழைய சித்தப் பதிவுகளுடன் இணைந்திருப்பதால், நாம் பார்க்கும், உணரும் அல்லது கேட்கும் எதையும் பற்றிய புதிய சிந்தனையின் வரியைத் தொடங்க எந்த கடந்த காலப் பதிவையும் அனுமதிக்காமல் இருப்பது. ஒருவரைக் காணும் போது அவர் அந்த நேரத்தில் உரையாடும் இருக்கு நிலையை மாத்திரம் அவதானிக்க வேண்டுமே அன்றி அவரைப்பற்றி நாம் ஏற்கனவே அறிந்து சித்தத்தில் பதிவு செய்து வைத்திருந்த விஷயத்தை தூண்டி அதனுடன் தொடர்பு படுத்தி எண்ணங்களை ஏற்படுத்தக்கூடாது. வேறு வகையில் சொல்வதானால் நாம் ஒரு செயலைச் செய்யும் போது அதனுடன் தொடர்புடைய பழைய ஞாபகத்தைத் தொடர்பு படுத்தக்கூடாது. எமது பார்வையை பழைய ஞாபகம் குழப்பக் கூடாது. 
நாம் உணர்வதை பெயரிடுதல், வகைப்படுத்தல், முத்திரையிடுதல் கூடாது. இந்த எழுத்தின் ஒரு எழுத்தை நீங்கள் அடையாளம் காண மாட்டீர்கள்; புரிதல் என்ற வார்த்தையில் நாம் சொல்வது போல் புரிதல் இருக்காது. புரிதல் என்ற வார்த்தையில் நாம் சொல்வது போல் புரிதல் இருக்காது. எந்தவிதமான உணர்ச்சிகளும் இருக்காது, எந்த அனுபவங்களும் இருக்காது; சுருக்கமாகச் சொன்னால் மனதில் எந்த வகையிலும் வேறுபாடு இருக்காது. காண்பவரும் காணப்பட்டுவதற்கு இடையிலும் எந்த வேறுபாடும் உணராத நிலையைப் பெறுவதே முக்கியமானது. 
பிறந்த குழந்தை காண்பவற்றை இதுதான் என்று உணர்ந்து அறிவதில்லை. உணரத்தொடங்குவது என்ற புள்ளியில்தான் காண்பதும் காணப்படுவதும் வேறு என்ற பிரிவு உருவாகிறது. நினைவு இல்லை என்ற நிலை இருக்காது; ஆனால் உணரும் நபர் இருப்பார். இப்படியான அறியப்படுவதும் அறிவது ஒன்றறக் கலக்கும் நிலையை சாதகன் அடையும் போதே சிதக்னி விழிப்படைகிறது. சாதகனுடைய மனம் நிற்கும் போது காண்பவன் காணப்படுவதுடன் ஒன்றுகின்றான். இந்த நிலையை அடையும் போது காணப்படும் பொருளிப் பற்றிய பரிபூரண அறிவினை நேரடி அனுபவத்தின் மூலம் அறிகிறான்; அறியப்படும் பொருள் பற்றி ஆராய்ந்து, தர்க்கித்து, காரணப்படுத்தி, உருவகப்படுத்தி நேரத்தை வீணாக்கும் நிலை அங்கில்லை. இதனால் உணர்வு மிக வேகமாகப் பயணிக்கிறது.
இப்படியான சித்க்னி நிலையிலேயே ஸ்ரீ லிலிதை பிறக்கிறாள். இதை ஸமாதி என்று யோக மொழியில் குறிப்பிடுவோம். இந்த நிலை கண்கள் திறந்திருக்கிறதோ, மூடியிருக்கிறதோ என்ற நிபந்தனை எதுவும் இல்லை. இந்த நிலையை ஒருவர் கண்களை மூடிக்கொண்டு பார்க்கிறார், ஒருவர் திறந்த கண்களால் பார்க்கமாட்டார் என்று சொல்லாம். உப நிஷதங்களில் ஒரு ஞானி உலகம் தூங்கும் போது அவர் விழித்திருக்கிறார்; உலகம் விழித்திருக்கும் போது அவர் தூங்குகிறார் என்று சொல்கிறது; 
"யா நிஷா சர்வ-பூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி சம்யமீ"
உலகம் தூங்குதல் என்பது உணர்வுவுடைய மனதால் அறியமுடியாத நிலை; அல்லது ஆழ்மனமாகிய சித்ததில் உலகை அறியும் நிலை. 
ஸ்ரீ லலிதை என்பது இருமைத் தன்மை அற்ற பேருணர்வு, அத்வைதம்; அவள் மனம் அற்ற ஸமாதி நிலையான சிதக்னியில் தோன்றுபவள். இந்த நிலை ஸாம்பவி முத்திரை என்று சொல்லப்படுகிறது. இறைவனின் ஆற்ற்லின் வேகத்தை மனதின் இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் அறியலாம். பார்ப்பவர் இந்த உலகத்தை மாயையான மனக் கணிப்புகள் மற்றும் குறியீடுகள் மூலம் பார்ப்பதில்லை, ஆனால் அவர் தன்னையும் உலகையும் பிரிக்காத நிலையை அடைகிறார். எனவே அவர் உலகத்தின் மாயையான பார்வைக்கு தூங்குகிறார்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...