குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 22, 2022

ஸ்ரீ வித்யா ஸ்ரீ குருபாதுகா மந்திர விளக்கம் -01

 ஸ்ரீ குருபாதுகா மந்திர விளக்கம் -01                                          

தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி அவரகளது விளக்கம்


ஸ்ரீ வித்யா ஸம்ப்ரதாயத்தில் குருபாதுகை மந்திரம் கீழ்வருமாறு


ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் / ஐம் க்லீம் ஸௌ;

ஹம்ஸ; ஸிவ ஸோஹம் / ஹஸ்க்ப்ரேம் 

ஹஸக்ஷமலவரயூம் ஹஸௌம்

ஸஹக்ஷமலவரயீம் ஸஹௌ;


ஸ்வரூப நிரூபண ஹேதவே ஸ்வகுரவே 

ஸ்ரீ அமுகாம்பா ஸஹித

ஸ்ரீ அமுகானந்த நாத 

ஸ்ரீ குரு ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ


இந்த மந்திரத்தின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு முதலில் இந்த மந்திரத்தின் அமைப்பினைப் புரிந்துகொள்ளவேண்டும். ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தொடக்கம் ஸஹக்ஷமலவரயீம் ஸஹௌ; வரையுள்ள பகுதி பீஜ மந்திரங்கள் உள்ள உணர்வினை உயர்த்தும் மந்திர சக்தியைப் பிறப்பிக்கும் பாகம். 


ஸ்வரூப நிரூபண என்று தொடங்கி தர்ப்பயாமி நமஹ என்பது இப்படி உணர்வு உயர் நிலையை எம்மை அடைவிக்கும் குருவைப் பற்றிய விளக்கத்தை சொல்லும் பகுதி. இந்தப் பகுதியின் சுருக்கமான விளக்கம்: நான் எனது உண்மையான ஸ்வரூபத்தைப் ( நான் உடல் அன்று, மனமன்று, புத்தியன்று எனப்) புரியவைத்து சாதனையால் அனுபவிக்க வைத்த எனது குருவினதும், குருவின் ஸக்தியினதும் பாதங்களை வணங்கி திருப்தியடைகிறேன் என்பது இதன் பொருள். 


இதில் அமுகாம்பா என்ற இடத்தில் அவரவர் குருவின் ஸக்தியும், அமுகானந்த என்ற இடத்தில் அவரவர் குருவின் தீக்ஷா நாமமும் அவரவர் பெற்ற உபதேசத்தின் படி வரும். 


இனி பீஜமந்திரங்களின் பொருள் விளக்கம் வருமாறு;


1. முதல் பீஜ மந்திரத் தொகுதி : ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 

ஒவ்வொரு பீஜத்தினதும் விளக்கம் சொல்ல முன்னர் பீஜ மந்த்ரங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிய மந்திர சாஸ்திர விளக்கம் அவசியம். 


பீஜ மந்திரங்கள் என்பவை அன்னையின் ஒவ்வொரு ஆற்றல்களையும் விதை வடிவில் வைத்திருக்கும் சப்தங்களாகும். இந்தச் சப்தங்களை குருமூலம்  நாம் பெறும் போது அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லும்  போது அது பிரபஞ்ச ஆற்றலின் குறித்த பகுதியை எமது உடலில் தூண்டி அந்தப் பண்பினை எமக்குள் ஆகர்ஷிக்கும் தன்மையுடையவை. 


ஐம் என்பது அறிவினைத்தரும் சக்தியினை ஆகர்ஷிக்கும் சொல்; ஐம் என்ற சக்தி எமது அந்தக்கரணங்களில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் வாய்க்கத் தொடங்கும். இதை நாம் சரஸ்வதி கடாக்ஷம் என்று சொல்லுவோம். 


என்ன நோக்கத்திற்கான அறிவு வேண்டும் என்பதை அடுத்த பீஜ மந்திரம் கூறும்;


ஹ்ரீம் - இது ஒரு செயலைச் வரையறைக்கு உட்படுத்தும் சக்தி; 


ஸ்ரீம் - இது இறைவனின் பரிபூரண கடாக்ஷத்திற்குரிய பீஜ மந்திரம். 


ஆகவே இந்த ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்ற மூன்று பீஜமந்திரங்களும் கூறவரும் செய்தி ஒரு சாதகன் இறைவனிலிருந்து ஹ்ரீம் பீஜத்தின் ஆற்றலால் பிரிக்கப்பட்டிருக்கிறான், அவன் தனது உண்மையான தெய்வத் தன்மையை உணர மீண்டும் இறைத்தன்மையைப் பெற தான் எப்படிப் பிரிக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிந்துகொள்ளும் அறிவு அவசியம். இதை அறிந்து கொண்டால் அவன் மீண்டும் இறைத்தன்மை அடையலாம். இந்த ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்பது ஸ்ரீ சக்ர பூஜையில் அனைத்து மந்திரங்களிலும் முதலில் சேர்த்துக்கொள்ளப்படும். இதன் அர்த்தம் "தேவி எனக்கு எனது வரையறைகளையைப் புரிந்து, அதிலிருந்து வெளிவந்து உண்மையான இறைத்தன்மையை அறியக்கூடிய ஆற்றலும் அறிவும் தா" என்பதே ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் என்பதன் விளக்கம். 


ஆகவே ஒரு ஸ்ரீ வித்யா உபாசகனின் முதன்மை நோக்கம் தான் மாய பீஜத்தால் ஆக்கப்பட்ட பௌதீக உலகம், ஆன்ம தத்துவங்களால் தான் எல்லைப்படுத்தப்பட்டு உண்மையான இறைத்தன்மையை அடைய முடியாமல் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு முதலில் இது எப்படி நடக்கிறது என்பதைப் புரியும் அறிவினை ஐம் பீஜத்தின் மூலமும், பிறகு அதை வெல்வதற்குரிய ஆற்றலை ஹ்ரீம் பீஜம் மூலமும், இறுதியாக இறை நிலையான ஸ்ரீம் இனை அடைவதும் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்பதால் எல்லாவற்றிலும் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சேர்க்கப்படுகிறது. 




No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...