குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, February 09, 2018

ஆற்றலை வளர்த்துக்கொள்ள யோகமுறை

இன்று பலரும் யோகம் தியானம் என்பவை நோய்க்கு மருந்தாகவும், மனக்கவலைக்கு தீர்வாகவும் எண்ணியே கற்கின்றனர். யோக முறைகளை கற்றால் இவை நடக்கிறது என்பதன் நுண்மையான அடிப்படை இந்தப்பயிற்சிகள் ஒருவனின் ஆற்றலை வளர்க்கின்றது என்பதே. 

ஒரு மனிதனிற்கும் பௌதீக ஆற்றல் தூல உடலின் மூலம் வெளிப்படுகிறது. அவனது ஆன்ம ஆற்றல் பிராணாக்னியாகவும், அந்தக்கரணங்கள் மூலமும் வெளிப்படுகிறது. ஒருவன் தனது அந்தக்கரணங்கள் மூலமும் தனது பிராணனை அக்னி மயமாக்கி செலுத்த வல்லவனாக இருக்கிறானோ அவனே தெய்வ ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான். 

சாதரண மனிதனை விட ஆற்றல் உள்ளவர்களில் பிராணன் அக்னியுடன் சேர்ந்து பிராணாக்னியாக செயற்படுகிறது. இந்த பிராணாக்னி ஒருவனுக்கு சங்கல்ப சக்தியையும் ஆத்ம பலத்தையும் தருகிறது. 

எப்படி இரசவாதத்தால் சிந்தாமணிக்கல் பட்ட இரும்பு தங்கமாக மாறுகிறதோ அதுபோல் ஆத்ம பலம் உள்ளவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தாங்களும் அதுபோல உருமாறுகிறார்கள். 

ஆற்றல் என்பது வானத்தில் இருந்து இலவசமாக ஏதோ வரமாக கிடைப்பதென்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. இது அகத்தில் இருக்கும் ஆற்றலை ஒருவன் தன்னில் ஒழுங்குபடுத்திக்கொள்வதன் மூலம் வெளிப்படும் ஒரு செயல் முறை. 

எவர் ஒருவர் தைரியத்துடன் தன்னை ஒழுங்குபடுத்தி திட்டமிட்டுக்கொள்கிறார்களோ அவர்களில் ஆற்றல் வெளிப்படத்தொடங்குகிறது. 

இன்றைய மனித வளத்தின் தேவை ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு அறிவுக்கூர்மையை பெறுவது. அறிவுக்கூர்மை உடையவனை தேஜஸ்வி என்று சமஸ்க்ருதத்தில் கூறுவார்கள். இதன் நேரடிப்பொருள் ஒளிமிகுந்தவன். ஆற்றல் விழிப்படைந்தவனை பிராணவான் என்று கூறுவர். 

ஒருவன் தன்னை பிராணவான் ஆக்கிக்கொள்ள ஒருவன் இரண்டு தளத்தில் போராட வேண்டியுள்ளது.
  1. தன்னிடமுள்ள தேவைக்கதிகமான, குள்ள நரித்தனமான, தேவையற்ற மனப்பண்புகள் { ஒருவரைப்பற்றி தவறான சிந்தனை, பிரயோசனமற்ற விஷயங்கள் மனதினை ஓட விடுதல், கேளிக்கை, தவறான பழக்க வழக்கம்}
  2. புதுமையாக எண்ணங்களுடன், உலகத்திற்கு தேவையானவற்றை படைக்க திட்டமிட்டு செயலாற்றும் பண்பு. 
இப்படி தன்னை பிராணவான் ஆக்கிக்கொண்ட ஒருவன் துன்பங்களுடன் போரிட்டு வளங்களையும், மக்களையும் ஒன்றிணைத்து வெற்றி பெறக்கூடியவன். 

மனப்பண்புகளை கொண்டு மனிதர்களை பிரிக்கலாம். 

  1. ஒட்டுண்ணிகள்: இவர்கள் எவருக்கும் எதையும் கொடுப்பதற்கு மனமோ, ஆற்றலோ, பொருளோ இல்லாமல் மற்றவர்களை சுரண்டி, துன்புறுத்தி வாழ்பவர்கள். 
  2. அறிவுள்ள குறுகிய மனமுள்ள சுய நலமிகள்: இவர்கள் வசதியும், அறிவும், பணமும் உள்ளவர்கள், ஆனால் உலகைப்பற்றியோ, மற்றவர்களைப்பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாதவர்கள். 
  3. ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்: இவர்கள் தமது பணம், வசதி என்பவற்றை நிறைவாக அடைவதோடு மற்றவர்களுக்காகவும் அவற்றை விஸ்தரிக்க விரும்புபவர்கள். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்பவர்கள் இந்த பகுப்பில் அடங்குபவர்கள். 
  4. தெய்வப்பிறவிகள்:  இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஆனால் தமது ஆற்றலை பொருளையும் பௌதீக இன்பகளை உருவாக்க பயன்படுத்தாமல் தன்னை அறிவதற்கும், பல்லாயிரம் நபர்களுக்கும் தன்னையறியும் அறிவை கொடுப்பதற்கும் தமது ஆற்றலை பயன்படுத்துபவர்கள். 

வரங்கள் நிலத்திலிருந்து அசுத்தமாகவும், ஒளியற்றதாகவும், கடின முயற்சியுடனும் எடுக்கப்பட்டு பின்னர் பட்டை தீட்டப்பட்ட பின்னரே ஒளியையும் பெறுமதையையும் பெறுகின்றது. இந்த செயற்பாட்டில் வைரத்திற்கு ஒளியை பட்டைதீட்டுவதால் தரப்படுவதில்லை. ஆனால் பட்டை தீட்டுவதால் வைரம் ஒளிரத்தொடங்குகிறது. இதைப்போலவே ஒருவன் தனது ஆற்றலை வளர்க்கும் செயல்முறையும். 
  1. முதல் நிபந்தனை ஆற்றல் தனக்குள் அசுத்தமான, பட்டைதீட்டப்படாத வைரம் போல் எனக்குள் ஒளிந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். 
  2. பின்னர் வைரத்தை பட்டை தீட்டுவதுப்போ தனது மன, உடல் பிராணனின் பண்புகளை முயற்சியுடன் மாற்ற வேண்டும். 
  3. இந்த செயன் முறை மூலம் தனது அந்தக்கரணத்தை சுத்தி செய்து பிராணவானாக உயர வேண்டும். 
  4. இந்த முயற்சிக்கு எவரும் கல்லூரிகளில் பயிற்சி அளிக்க முடியாது. தானாகவே முயல வேண்டும். தனது ஆற்ற்லை வெளிப்படுத்தும் சூழலில் தன்னை இருத்திக்கொள்வதன் மூலம் ஒருவன் தனக்குரிய வாய்ப்பினை உருவாக்க வேண்டும். சூழல் சரியாக அமைய, ஒருவனின் முயற்சியும் கைகூட ஒருவனது ஆற்றல் வெளிப்படத் தொடங்கும். 
  5. ஆற்றலுக்கான விதை எல்லோரிடமும் உள்ளது, அவற்றை விழிப்படையச் செய்து ஒழுங்காக பயிற்சிபதன் மூலம் ஒருவன் ஆற்றலை அடையலாம். இதற்காக ஒருவன் எவரிடமும் கையேந்த தேவையில்லை. 
  6. ஒரு மனிதனின் ஆற்றல் மூன்று முனைகள் உடையது. 
  7. உடல் ஆற்றல் ஓஜஸ்
  8. அறிவாற்றல் தேஜஸ்
  9. அந்தக்கரணங்களின் ஆற்றல் வர்ச்சஸ் 
  10. இந்த மூன்று ஆற்றல்களையும் சரியான முறையில் சுத்தி செய்து விழிப்படையச் செய்வதே ஒருவன் ஆற்றலை முழுமையாக அடைவதற்குரிய வழி. 
  11. உடலின் அனைத்துப்பாகங்களையும் சரியான வழியில்  ஒருங்கிணைத்து உபயோகிப்பதன் மூலம் ஓஜஸினை பெறலாம். 
  12. ஒரு பணியை மன விருப்பத்துடன் எடுத்து, மன ஒருமையுடன், முழுமையான அர்ப்பணிப்புடன் அதைப்பற்றி முழுமையாக புரிதலும் விழிப்புணர்வுடன் இருத்தலும் தேஜஸினை தரும். 
  13. ஒரு இலக்கில்/இலட்சியத்தில் தனது உயிரையும் தரும் தியாகம் அந்தக்கரணங்களின் சக்தியை அந்த இலக்கில் செலுத்தி வர்ச்சஸினை தரும். 
  14. இப்படிப்பெறும் ஆற்றலை ஒருவன் இரண்டு விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ரிஷிகள் சொல்லியுள்ளார்கள். அவை தீமையை அழிப்பதும், நன்மையை உருவாக்குவதும். 
  15. இதை ஒருவன் தனக்குள்ளேயே உருவாக்க வேண்டும், தனது மனம், உடல், புத்தியில் உள்ள தீமைகளை களைந்து தன்னில் நன்மைகளை உருவாக்குவதற்கு முதலில் பழக வேண்டும். 
  16. இதற்குரிய பண்டைய ரிஷிகளின் அறிவியல் சேதன விஞ் ஞானம் அல்லது யோக சாதனா அல்லது தபஸ் எனக்கூறப்பட்டுள்ளது. 
  17. இவை உடலையும்,  மனதையும், பிராணாக்னியையும் ஒழுங்குமுறைப்படுத்தும் அறிவியலைக் கூறுபவை.  

2 comments:

  1. விரிவான பல அரிய ஞானம் தந்துள்ளீர்கள்! படித்து புரிந்து எமது வாழ்வின் அடிப்படை விடயங்களின் ஒன்றாய் சித்தத்தில் இவற்றை ஏற்றிக்கொள்கிறேன் குருவே!

    ReplyDelete
  2. Understood that first we should learn to removes the negatives within us and strngthen us to work towards our goal......

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...