குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 20, 2017

சித்த ஆயுள் வேத மருத்துவமும் அறிவியல் முறையும் (Scientific Method)


தமிழகத்தில் நிலவேம்பு குடி நீர் பற்றிய விவாதாங்கள் வழமையான குழப்ப சூழ் நிலையை உருவாக்குகிறது. Facebook இல் வரும் வாதப்பிரதிவாதங்களை பார்க்கும்போது “வதந்தியும், மனம்போன போக்கில் கருத்து தெரிவிக்கும் விதண்டாவாதங்களும், அறிவியல் முறை (Scientific Method) என்றால் என்ன என்ற புரிதலற்ற அரைகுறை அறிவும், வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மூடத்தனமும், மக்களின் அறியாமையை காசாக்கும் கயமையும் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
இனி சித்த – ஆயுள் வேத மருத்துவம் (எவரும் சித்தமருத்துவம் வேறு ஆயுள் மருத்துவம் வேறு என்று கொடிபிடித்து போராட வரவேண்டாம், இரண்டின் அடிப்படைதத்துவம் ஒன்று, ஆயுள்வேத வட நாட்டில் வளர்ந்த்து, சித்த மருத்துவம் தென்னாட்டில் வளர்ந்தது) என்பன அறிவியல் தன்மைக்கூடாக பரிசோதிக்கப்பட்டதா? என்ற வாதப்பிரதி வாதங்கள் நடைபெறுகின்றன.
இந்தக்கேள்விக்கு பதில் கண்டு பிடிக்க முன்னர் அறிவியல் முறை (Scientific Method)  என்றால் என்ன என்பது பற்றி சற்று விரிவாக பார்ப்போம். அறிவியல் என்பது மனிதன் புதிய அறிவைப் பெறுவதற்குரிய உத்திகளைக் கொண்ட ஒரு சிந்தனைப்பொறிமுறை. இந்த வரைவிலக்கணத்தை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் என்பது அமெரிக்காகாரன் சொல்வதோ, WHO சொல்வது மட்டுமல்ல! எந்த ஒரு மனிதனும் இயற்கையை (Nature) அவதானித்து (Observation) அந்த அவதானங்களை தொகுத்து, கேள்விகளை (Questions) உருவாக்கி, அந்தக்கேள்விகளுக்குரிய அனுமானப்பதில்களான கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதிக்ககூடிய எதிர்வுகூறல்களை (Testable prediction) பரிசோதித்து பின்னர் அதற்கான தரவுகளை தொகுத்து ஆராய்ந்து (Data analysis) முடிவுகள் பெறப்படுகின்றன. இந்த முடிவுகள் தொடர்ந்தும் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப்பட்டு மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படும்போது கோட்பாடுகள் (Theory) உருவாக்கப்படுகிறது. மேலே கூறிய அத்தனை படிகளுமே அறிவியல் முறை எனப்படுகிறது.
அடுத்தது அனுமானங்களை உருவாக்குவதற்குரிய அடிப்படை சிந்தனை தர்க்க ரீதியாக சரியாக இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இந்த அடிப்படையில் சித்த ஆயுள் வேதத்தின் நோய் என்பது தோஷங்களின் சம நிலை இன்மையால் உடலின் இயக்கத்தில் ஏற்படும் தடைகள் ஆரம்ப நிலையாகவும், இந்த நிலை நீடிக்கும்போது அது உடலின் அடிப்படை அலகுகளான தாதுக்களை தாக்குவதும் நோய் என வரையறுக்கப்படுகிறது. நோயின் பிரதான காரணம் மனிதன தனது அகத்தில் உண்டாக்கும் சம நிலை இன்மை, அல்லது புறத்தாக்கத்தால் ஏற்படும் அகச்சம நிலை இன்மை. இந்த வரைவிலக்கணம் பல ஆயிரம் ஆண்டு பழமையான வரைவிலக்கணம்.
நவீன மருத்துவம் நோய் என்பது உடலின் சாதாரண நிலை பாதிப்படைவது நோய் எனப்படும் என வரையறுக்கிறது. இதற்கான காரணங்கள் நுண்கிருமிகள், பாரம்பரியம், எனப்புறக்காரணிகளை கொண்டு வரைவிலக்கணப்படுத்துகிறது.
இரண்டு வரைவிலக்கணங்களையும் கவனமாக வாசித்தால் இரண்டு முறையும் ஒரே பிரச்சனையை எப்படி அணுகுகிறது என்பது விளங்கும். சித்த ஆயுர்வேதத்தில் நோயிற்கான ஒரே காரணம் “மனிதன் தனது சம நிலையை இழத்தல்” ஆகவே காரணம் தெளிவானது ஆகவே விடை எளிதானது. உனக்கு நோய் வந்தால் இழந்த சம நிலையினை பெறுவதற்கு முயற்சி செய்! இந்த முயற்சிக்கு மருந்துகள் வெளியில் இருந்து தரப்படும் சுத்திகரிப்பான் மட்டுமே, மற்றவை உடலிற்கு என்று ஒரு பேரறிவு இருக்கிறது, அது மற்றவற்றை பார்த்துக்கொள்ளும் என்று பதில் தரும்.
ஆனால் நவீன மருத்துவம் நோயிற்கு உரிய காரணம் நுண்கிருமிகள் என்று வெளியே தேட ஆரம்பிக்கிறது. உடலுக்கு வெளியே மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே எப்போதும் நோய்க்கு மருந்து இல்லை. இதனாலேயே நவீன மருத்துவம் மருந்தில்லா நோய்கள் என்ற ஒரு பகுப்பை வைத்திருக்கிறது.
மேலும் சித்த ஆயுள் வேதத்தின் மூல நூற்கள் பல ஆயிரம் வருடங்களாக இயற்கையை (Nature) அவதானித்து (Observation) அந்த அவதானங்களை தொகுத்து, கேள்விகளை (Questions) உருவாக்கி, அந்தக்கேள்விகளுக்குரிய அனுமானப்பதில்களான கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதிக்ககூடிய எதிர்வுகூறல்களை (Testable prediction) பரிசோதித்து பின்னர் அதற்கான தரவுகளை தொகுத்து ஆராய்ந்து பெறப்பட்ட முடிவுகளையே அகத்தியர் வைத்திய காவியம், சரக சம்ஹிதை (சம்ஹிதை என்றால் தொகுப்பு என்று பொருள்) சுசுருத சமிதை, தேரையர் காப்பியம், குணபாடம் என்பவை. இப்படி அறிவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட அறிவைனை இழந்து விட்டு இன்று முட்டாள்களாக எதை நம்புவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.
இப்படி பாரம்பரியமாக பல்லாயிரம் வருடங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட அறிவு நிச்சயம் சமூகத்திற்கு பலனளிக்கும். எனினும் சமூகம் சரியான விழுமியம் இல்லாமல் இப்படி இலகுவாக கிடைக்கும் விஷயத்தையும், மக்களின் மரண பயத்தையும் பணமாக்க முயலும் கயவர்களாலேயே போலிகள் பெருகி உண்மை நிலையும் நிலைக்க முடியாத தன்மை உருவாகிவிட்ட்து.
இதற்கு மனிதனின் சிந்தனை முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். முற்காலத்தில் தனது தேவை எது என்பதை வரையறுத்து அதற்கு மேல் எதையும் அபகரிக்காத மக்கள் இருந்தார்கள். வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகள் சாப நிவர்த்தி செய்து, இயற்கையின் அனுமதியுடன் பறிக்கப்பட்டன். இதனால் சமூகத்தின் வளம் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையுடன் இருந்தது. ஆனால் இன்று அனைவரும் அனைத்தையும் அடையவேண்டும் என்ற மாயையும், மக்களின் அறியாமையும். இன்று புனித தலங்கள் என்று தமது பேராசைகளை நிறைவேற்றவும், பாவங்களை தொலைக்கிறோம் என்று மலைகளுக்கு செல்லும் பெருந்திரளான மக்கள் தமது பாவத்தையும் போக்காமல் இயற்கைய அழிக்கும் பாவத்தையே செய்கிறார்கள்.
இறுதியாக சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் அறிவியல் ரீதியாக சரியானது. பல ஆயிரம் வருடம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த சமூகத்தின் கண்டுபிடிப்புகள் இவை. இவற்றை சரியாக கற்று, தெளிந்து, அனைவருக்கும் பயன்படும் வகையில் பிரயோகிப்பது அனைவரது கடமையும் கூட. அதேவேளை இந்த எளிமையான ஆனால் உயர்ந்த அறிவை சுய நலமிகள் தமது அதிகார, பொருளாசைக்கு பயன்டுத்தும்போது அது குழப்பங்களை விளைவிக்கும்.
இந்த கூற்றை அறிவியல் என்பதன் வரைவிலக்கணம் தெரியாமல் WHO ஏற்றுக்கொண்டுள்ளதா? போன்ற மூடக்கேள்விகளுக்கு பதில் தந்து நாம் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.





No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...