குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 30, 2017

காலநேமியும் நமது வாழ்க்கையும், யோக சாதனையும்!

இராமயணம், மகாபாரதத்தில் வரும் ஒரு இராக்ஷத கதாப்பாத்திரம் கால நேமி! புராணங்கள் என்பது எங்கோ எப்போதோ நடந்த அற்புதக்கதைகள் அல்ல! முற்காலத்தில் மனிதனது வாழ்வியலை விளங்கிக்கொள்ள சுவைபடக் கூறப்பட்ட கதைகள்தான் புராணங்கள். இதில் ஒரு மனிதன் தனக்குள்ளும், சமூகத்துடனும் நடாத்தும் போராட்டங்களை, நல்ல குணத்தை தேவராகவும், தீய குணத்தை அசுரர் எனவும் குறித்துக்காட்டினார்கள். 

இனி கால நேமியின் முக்கியத்துவத்தை பார்ப்போம். 

கால நேமியின் முதலாவது சாதனை: கும்பகர்ணன் (அறிமுகம் தேவையில்லை) சிறந்த யோக சாதகன். ஆறுமாதங்கள் விழித்து சாதனை செய்து ஒரு நாள் உறக்கத்துடன் மீண்டும் ஆறுமாதம் யோக சாதனை செய்ய வரம் வேண்டி தவம் புரிகிறான். ஸ்கந்த புராணத்தின் படி தபஸ் பூர்த்தியாகும் நேரத்தில் காலநேமி கும்பகர்ணணை குழப்பி நித்திரை வரம் வாங்க வைத்து விடுகிறான். இப்படி நடந்திருக்காவிட்டால் சிறந்த யோக சாதகனும் ஞானவானுமான கும்பகர்ணன் இராவணனிற்கு சிறந்த மதியுரையாளனாக இருந்திருக்க இராவணனின் அழிவு நடந்திருக்காது. 

இரண்டாவது மாரீசன், மாரீசன் தவத்தின் மூலம் தனக்கு ஸ்வர்க்க பதவி கிடைக்க வரம் வேண்ட கால நேமியின் தூண்டலால் ஸ்வர்ணம்ருங்க (பொன்மான்) வரம் கேட்டு இராமபாணத்தால் அழிந்தான். 

காலநேமி (காலநேமியே கம்சன்) பூதனா எனும் அரக்கிக்கு பிள்ளை இல்லாத மனக் குறையை பாவித்து குட்டி கிருஷ்ணனுக்கு பாலூட்ட வைத்து அரக்கியான பூதனாவின் உடலில் உள்ள விஷத்தால் பிள்ளையை கொல்ல திட்டமிடுகிறான். இறுதியில் பூதனா கிருஷ்ணனால் கொல்லப்படுகிறாள். 

அடுத்து சூர்ப்பணகைகைக்கு இராமன் மேல் ஆசையை தூண்டி விடுகிறான். இறுதியில் சூர்ப்பணகைக்கு நடந்தது என்ன என்பது பற்றி இராமாயணம் படித்த அனைவருக்கும் தெரியும். 

மந்தாரா எனும் கூனியை குழப்பி கைகேயி மூலம் இராமனை வன வாசம் அனுப்பியது கால நேமியே!

இனி இந்த புராணக்கதைகளின் உண்மை விளக்கத்திற்கு வருவோம். இந்த கதாப்பாத்திரம் ஒவ்வொரு மனதிற்குள்ளும் இருக்கும் வில்லனையே குறிக்கிறது. எம் எல்லோருக்குள்ளும் மிக நுண்மையான குழப்பமாக எப்போதும் காலநேமி வசித்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையை அவர்களே ஆராய்ந்து பார்த்தால் இந்தக்  காலநேமியால் இழந்த்து எவ்வளது என்பது நன்கு தெரியும்.  

கட்டுபாடு அற்றது, கவனம் அற்ற, நல்ல செயல்களில் ஆர்வம் அற்ற மனம் கால நேமியின் ஆளுகைக்கு உட்பட்டது. இது அசுர குணங்களையும், தீய இலக்குகளையும், உடல் இச்சைகளையும் வாழ்வின் இலக்காக்கி கொண்டு ஒருவனை அழிக்கும். புராணங்களில் கால நேமியின் செயற்பாட்டினை பார்த்தால் நல்ல முயற்சி செய்பவனை தீய எண்ணத்தை எழுப்பி மனதை குழப்பி அழிவில் செலுத்தும் செயலையே செய்பவனாக வர்ணிக்கப்படுகிறான். இந்த கால நேமியே நல்ல குருவிடம் உபதேசம் பெற்றவர்களை சாதனை செய்ய விடாமல் குரு காட்டிய வழியில் செல்ல விடாமல் மனதை குழப்புவது.

சரி கால நேமி எங்கே இருக்கிறான்? இவன் எங்கோ வானத்திலோ, நரகத்திலோ இருக்கும் அசுரன் அல்ல, ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணங்களாக மறைந்திருந்து கூடவே இருந்து செயற்படுகிறான். ஒருவன் தனது உணர்ச்சிகளையும், மன எண்ணங்களையும் கவனமாக ஆராய்ந்து தான் குருகாட்டிய வழியில் சென்றுகொண்டு இருக்கிறேனா என்று ஒவ்வொரு கணமும் ஆராயாமல் எவரும் காலநேமியின் ஆளுகைக்குள் இருந்து தப்ப இயலாது. இவனது ஆற்றல் எந்த வயது மனிதனையும் எந்த நேரத்திலும் மாயையில் ஆழ்த்தி செயல் புரியவைத்து துன்பபடவைப்பது. 

ஆகவே யோகம் பயில்பவர்களும் சரி, சாதாரண வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் சரி காலநேமி பற்றி கவனமாக இருக்க வேண்டும்!

15 comments:

  1. குருவேசரணம் யாம் புதிதாக கேள்விப்படுகிறோம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பதிவு நம்மிடம் எல்லாவற்றிலும் அனைத்து சூழல்களிலும் காலநேமியுடன்தான் வாழ்கிறோம் அதைகண்டுணர்ந்து வெற்றிபெற குருஅருள்புரிய வேண்டுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. கடைசிப்பந்தியில் கால நேமி எவரை பீடிப்பான் என்பது தரப்பட்டுள்ளது! எவருக்கு நல்ல எண்ணங்களில் விருத்தி செய்ய நோக்கம் இல்லையோ, இலக்கு இல்லையோ, விழிப்புணர்வுடன் தனது செயல்களையும் எண்ணங்களையும் தானே கவனிக்கவில்லையோ அவனே கால நேமியின் தாக்குதலுக்கு உள்ளாகிறான்.

      Delete
  2. ஐயா அருமையான பதிவு. காலநேமி சதகனின் மனதை தவறாக வழிநடத்தி சாதனையிலிருந்து நழுவ செய்து சாதகனை துன்பத்தில் தள்ளுகிறது. காலநேமி நமது தீய எண்ணங்கள் என்றால் நல்ல சாதகனின் மனதில் தீய எண்ணங்கள் (காலநேமி) தோன்றுவது யாரால்? சாதகனின் ஆழ்மனதில் அடக்கப்பட்ட ஆசைகளா அல்லது அவனின் விதிப்பயனாலா அல்லது அவனின் சாதனை உறுதி குறைவாக இருப்பதாலா?

    ReplyDelete
    Replies
    1. கடைசிப்பந்தியில் கால நேமி எவரை பீடிப்பான் என்பது தரப்பட்டுள்ளது! எவருக்கு நல்ல எண்ணங்களில் விருத்தி செய்ய நோக்கம் இல்லையோ, இலக்கு இல்லையோ, விழிப்புணர்வுடன் தனது செயல்களையும் எண்ணங்களையும் தானே கவனிக்கவில்லையோ அவனே கால நேமியின் தாக்குதலுக்கு உள்ளாகிறான்.

      Delete
    2. ஐயா தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் சூழ்நிலை காரணமாக சாதகனின் மனதில் தீய எண்ணங்கள் உருவாகிறது.உதாரணமாக சாதகன் நேர்மையாக நடக்கும் போது குறுக்கு வழி நடப்பவரின் செயல் கோபம் என்ற தீய எண்ணம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பது எவ்வாறு ஐயா.

      Delete
    3. யோகம் பயில்பவர் சாதானையின் ஒரு கட்டத்திற்கு பிறகு தானும் மனதும் வேவ்வேறானவை என்பதை விசாரத்தால் அனுபவத்தால் அறியும்போது கோபம் என்பது நாம் வைக்கும் பற்று எதிர்பார்ப்பு நிகழாத போது வரும் உணர்ச்சி என்பதை அறிந்து கொள்வார்கள். மேலும் மற்றவர்களை திருத்தவோ வழி காட்டவோ எவரும் வரவில்லை! நாம் செய்யும் செயலை சரியாக செய்வதால் நாம் செயலால் வழிகாட்டலாமே அன்றி எவருடனும் விவாதித்து அல்ல்!

      Delete
    4. அருமை. தெளிவடைந்தேன்.நன்றி ஐயா.சாதனை தொடர்கிறேன்.

      Delete
    5. அடுத்த பதிவில் விரிவான பதில் தரப்பட்டுள்ளது!

      Delete
  3. தடைகள் எல்லாம் கால நேமி எண்ணம் தான் போன்றுள்ளது . அவ்வாறு இருக்கும்போது கர்மா வினையும் அடங்குமா?

    ReplyDelete
    Replies
    1. கால நேமி என்ற அரக்கன் நாம் நல்ல செயலுக்காக அர்ப்பணித்து செயலாற்றும் போது எம்மை தவறான செயலில் தடுத்து, குழப்பும் எமக்குள் இருந்து வரும் எண்ணம். உதாரணமாக தினசரி சாதனை செய்யுங்கள் என்றால் நீங்கள் கூறும் எல்லாக்காரணங்களும் காலநேமிதான்! ஏனெனில் எல்லாப்பிரச்சனைக்களுக்கும் நாம் சாதனை மூலம் மனதை செம்மைப்படுத்துவதுதான் காரணம் என்றிருக்க அதை செய்யாமல் இருப்பது ஒருவித அறியாமை அல்லவா! இதையே கால நேமி என்ற குழப்பமாக புராணங்கள் குறிப்பிடுகிறது.

      Delete
    2. அன்புக்குரிய மகனே காலநேமியின் பதிவை ஒரு மானுடனின் வாழக்கைக்கு முக்கியமான ஒரு உண்ணதமான கருத்து காலநேமியின் வறலாற்று சான்று இத தவிர்த்து உலக அனுபவ கருத்தை வேறு மாற்று கருத்துக்களுக்கு ஈடு இணை இல்லை மகனே எவன் ஒருவன் உணர்வோடு இந்த கால நேமியின் சரித்த்தை படிக்கிறானோ அவனே பக்குவம் பெற்ற மனிதன் உங்களின் நேரம் காலம் பாராமல் அணத்து மானுடனின் நலம் கருதி உலகத்தில் வாழும் மனிதர்களின் மீது உள்ள பற்றோடு எங்களை வழி நடத்த்தும் ஸ்ரீ வித்யா குரு மண்டலத்தின் அணைத்து குருமார்களுக்கும் வழி காட்டி அணைவரையும் வழி நடத்தும் உங்களுக்கும் உங்களை சார்ந்தவரகளுக்கும் எமது நன்றிகள்........

      Delete
  4. காலநேமியின் பிடியில் இருந்து தப்பித்தி கொள்வதுதான் முக்கிய நோக்கமாக கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் பதிவு ஐயா...

    மிகவும் சரியான நேரத்தில் அளித்துள்ள பதிவு ஐயா மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. கால நேமியின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது?

      Delete
  5. தனக்குள் நடக்கும் எண்ண மாற்றங்கள் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதே காலநேமியை செயற்படாமற் செய்து வெல்வதற்கான வழி என்பதை உணர்ந்து கொண்டேன். நன்றி அண்ணா.

    ReplyDelete
  6. அன்புக்குரிய மகனே காலநேமியின் பதிவை ஒரு மானுடனின் வாழக்கைக்கு முக்கியமான ஒரு உண்ணதமான கருத்து காலநேமியின் வறலாற்று சான்று இத தவிர்த்து உலக அனுபவ கருத்தை வேறு மாற்று கருத்துக்களுக்கு ஈடு இணை இல்லை மகனே எவன் ஒருவன் உணர்வோடு இந்த கால நேமியின் சரித்த்தை படிக்கிறானோ அவனே பக்குவம் பெற்ற மனிதன் உங்களின் நேரம் காலம் பாராமல் அணத்து மானுடனின் நலம் கருதி உலகத்தில் வாழும் மனிதர்களின் மீது உள்ள பற்றோடு எங்களை வழி நடத்த்தும் ஸ்ரீ வித்யா குரு மண்டலத்தின் அணைத்து குருமார்களுக்கும் வழி காட்டி அணைவரையும் வழி நடத்தும் உங்களுக்கும் உங்களை சார்ந்தவரகளுக்கும் எமது நன்றிகள்........

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...