ஆட்ட கோட்பாடும் ஜோதிடமும் (Game theory & astrology)

ஆட்ட கோட்பாடும் ஜோதிடமும் (Game theory & astrology) 
*****************************************************************************
ஆட்ட கோட்பாடு (விதி என்ற பிரயோகம் law என்று பொருள் படுமாதலால் இங்கு கோட்பாடு என்ற பதம் பாவிக்கப்படுகிறது) என்பது எல்லா அறிவியல் விதிகளைப்போலவும் தனது எல்லைகளை கொண்டுள்ளது. சினிமாக்களில் ஆட்ட விதி பற்றி படம் எடுக்கும்போது அது தெரிந்த கதாநாயகன் எப்போதும் வெற்றி பெறுவான் என்ற மயக்கத்தை தருகிறார்கள். ஆனால் இந்த கோட்பாடு அடிப்படையில் வெறுமனே ஒரு சுருக்க புரிதலை (abstract understanding) தருவதாகும். ஒரு சந்தர்ப்பத்தை ஆட்ட கோட்பாட்டின் அடிப்படையில் மாதிரியுருவாக்கம் செய்யும்போது அது அந்த சந்தர்ப்பம் பற்றிய சுருக்க புரிதலை தருமே அன்றி நூறு சதவீதம் யதார்த்த உண்மையினை பிரதிபலிக்காது. யதார்த்தத்தினை பிரதிபலிக்க மாதிரி உருவாக்கம் செய்பவரது அறிவின் ஆய்வு திறனும் அனுபவமும் முக்கியமானவை. முதல் நிலையில் இது குறித்த சந்தர்பத்தின் தர்க்க ரீதியான தொடர்பினை விளங்குவதற்கு உதவும். இந்த மாதிரியுருவாக்கம் அது உள்வாங்க கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்வாங்காமல் அதன் யதார்த்தம் எப்போதும் சரியாக இருக்காது.

இந்த ஆட்ட கோட்பாட்டில் ஆட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களை ஆட்ட காரணிகள் என்று கூறலாம். ஆங்கிலத்தில் players, இவர்கள் தமது தனித்த முடிவினால் ஆட்டத்தின் போக்கினை மார்ரகூடியவர்களாக இருப்பார். இந்த ஆட்ட காரணிகள் தனி நபர், குழு, நிறுவனம், அரசாங்கம், இயற்கை என்பவையாக இருக்கலாம். இதில் இயற்கை ஆட்ட காரணியாக எடுத்துக் கொள்ளப்படும்போது அது விதியின் சந்தர்ப்ப ஆட்டம் (Game by laws of chance) எனப்படும். உண்மையில் ஆட்ட கோட்பாடு இந்த இயற்கையினை விட்டு விட்டு மனித காரணிகளால் நடைபெறும் ஆட்டத்திலேயே கவனம் வைக்கிறது.
இனி நாம் ஜோதிடத்திற்கு வருவோம். ஜோதிடம் என்பது ஒன்பது கிரகங்கள், இருபத்தியேழு நட்சத்திரம் கொண்ட பன்னிரண்டு இராசிகளில் ஆட்டம் எனக்கொள்ளலாம். விஞ்ஞானம் இதனை laws of chance என்று ஒதுக்கும்போது எமது முன்னோர்கள் இதனை தந்திரோபாய ஆட்டமாகவே (Game of Strategy) கணித்திருக்கிறார்கள். உதாரணமாக முகூர்த்த ஜோதிடம் ஒரு தந்திரோபாய ஆட்டமாகும். பிரபஞ்சத்தின் நுண்மையான செல்வாக்கு மனிதனில் எப்படி விளையாடுகிறது என்று புரிந்து கொள்ளுவதற்கான ஒரு ஆட்ட கோட்பாடாக நாம் ஜோதிடத்தை எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. இது இராவணன் தனது இந்திரஜித் பிறந்தபோது அவனிற்கு மரணம் ஏற்படாமல் இருக்க எப்படி நவக்கிரகங்களுடன் தந்திரோபாய ஆட்டத்தினை ஆடினார் என்பதனையும் அதனை வெல்ல சனி மாந்தி என்ற புது உபகிரகத்தை தோற்றுவித்த கதையினையும் உதாரணமாக கொள்ளலாம்.
ஜோதிடம் கணிதத்தை அடிப்படையாக கொண்டுள்ளது என்பது ஜோதிடத்திற்கும் ஆட்ட கோட்பாட்டிற்கும் உரிய தொடர்பினை வலுப்படுத்தும். மேலும் ஜோதிடம் என்பது பிரபஞ்ச செல்வாக்கு மனிதனின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதனை விளக்கும் ஒரு ஆட்ட கோட்பாடு (branch of game theory) என்பதும், ஜோதிடத்தின் மூலம் ஆட்டத்தின் விளைவினை அனுமானிக்க முடியும் என்பதும், நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை யதார்த்தம் இல்லை என்பதும், நடப்பதை கணிப்பது கணிப்பவரது அனுபவம், அறிவாழம் சார்ந்தது என்பவற்றையும் புரிந்து கொள்ளலாம். 
ஆக ஆட்ட கோட்பாடு எமது பண்டைய அறிவு சார் விடயங்களில் மேலதிக புரிதலை ஏற்படுத்தும் ஒன்றாகவும் விளங்கிறது

Comments

 1. ஐயா,
  நன்றி
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete
 2. ஐயா,
  நன்றி
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு