குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, May 31, 2014

காயத்ரி சாதனை பெண்கள் செய்யலாமா?

இன்று காலை எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் தான் ஒரு சாஸ்திரங்கள் கற்றறிந்த பண்டிதர் ஒருவருடன் உரையாட நேர்ந்ததாகவும் அவர் பெண்கள் காயத்ரி சொல்லவே கூடாது என்று கூறியதாகவும், அதற்கான எமது பதில் என்ன என்பதனையும் கேட்டிருந்தார். 

என்னய்யா கேள்வி! நீங்கள் வணங்கும் காயத்ரி என்ற பிரபஞ்ச சக்தியையே பெண்ணாகத்தானே வணக்குகிரீர்கள்! தெய்வ சாதனையின் அடிப்படையினை விளங்கி கொண்டால் இந்த சந்தேகத்திற்கான விடை கிடைத்துவிடும். தெய்வ சாதனை குறித்த ஒரு ஜாதியினருக்கோ, ஆண் அல்லது பெண் என்ற பாலின வேற்றுமைகோ உட்பட்ட ஒன்று அல்ல! எவர் தேவை என நினைக்கிறாரோ அவர் அதன் பயனை பெறலாம். காயத்ரி என்பது மனித இனம் அனைத்துக்கும் பொதுவானது.

புராண காலத்தில் கார்கீ, மைத்ரேயி, அனுசூயா, அருந்ததி, தேவயானி, குந்தி தேவி, அகல்யா, மண்டோதரி, லோபாமுத்ரா, சகுந்தலா சாவித்திரி முதலான ரிஷி பத்தினிகள் காயத்ரி சாதனையினை பயின்று பலன் பெற்றிருக்கின்றனர்.

எமது குருநாதர் காயத்ரி சித்தர் டாக்டர் முருகேசு சுவாமிகளிடம் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் கணவன் மனைவியாக தீட்சை பெற்று காயத்ரி ஜெபம் செய்து பலன் பெற்று உள்ளார்கள்.

ஹரித்துவார் காயத்ரி பரிவாரில் அன்னையரே காயத்ரி தீட்சை செய்யும் அதிகாரம் பெற்று இருக்கின்றார்கள்.

இதற்கு உதாரணமாக கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யோகினி ஆனந்தமாயி தாயார் 1936 இல் தனது இரு பெண் சீடர்களுக்கு பகிரங்கமாகவே வாரணாசியில் காயத்ரி மந்திர தீட்சை அளித்தார். மிகவுயர்ந்த பிராமண பண்டிதர்கள் எவரும் இதற்கு சாஸ்திரத்தில் இடமில்லை என மறுத்து உரைக்கவில்லை. வேதகாலத்தில் பெண்களும் பூணூல் அணிந்து காயத்ரி சாதனை செய்தார்கள் என்பதனை வாரணாசி பண்டிதர்கள் ஏற்றுக்கொண்டு பெண்களுக்கு காயத்ரி தீட்சை தருவதற்கு மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

இடைக்காலத்தில் இந்த மந்திரத்தின் சக்தியை உணர்ந்த சுயநலமிகள் இத்தகைய அரிய ஆற்றல் உள்ள வித்தை பெண்களுக்கு, மற்றையவர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காக உருவாகிய போலி, சுயநல கட்டுக்கதைகளே பெண்கள் காயாத்ரி சொல்லக்கூடாது, குறித்த ஜாதியினருக்கு மட்டும் என்ற பேச்சுகள் எல்லாம்!காயத்ரி சொல்லுவதால் ஒருவன் பாவங்கள் நீங்கி அறிவுத்தெளிவு பெறுகிறான் என்பதே உண்மை! அப்படியாயின் ஒருவனுடைய மனைவியோ, மகளோ, தாயோ பாவங்கள் நீங்கி அறிவு சுத்தமாக கூடாது என்று அர்த்தம் ஆகி விடுமல்லவா! 

பெண்கள் காயத்ரி சாதனை செய்வதால் சமூகத்திற்குதான் அதிக நன்மை, ஒரு ஆணை உருவாக்கும் பெண் தெய்வ சக்தி உடையவளாக, பாவங்கள் அற்றவளாக, அறிவு விழிப்படைந்தவளாக இருந்தால் அந்த பெண்ணின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் நல்லவர்களாக பிறக்கும் என்பது உறுதி! 

ஆகவே இத்தகைய சுயநலமிகள் பேச்சினை கேட்டு மனங்கலங்கி காயத்ரி ஜெபம் செய்ய மாட்டேன் என்றால் அன்பரே நீங்கள் வெகு விரைவில் தெளிவு பெற்று பிரார்த்திக்கிறோம்!

உங்களுக்கு நம்பிக்கை வரும் படி செய்வதற்கு நாம் உறுதி கூறுகிறோம், உங்களது தீர முடியாத பிரச்சனை ஏதும் இருப்பின் நாம் வெளியிட்டுள்ள காயத்ரி சித்த சாதனை குறிப்பை எமது மின்னஞ்சலிற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொண்டு நாற்பது நாட்கள் அதில் கூறிய படி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தில் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் அனுபவத்தின் மூலமும், சுய பரிசோதனையின் மூலமும் பரிட்சித்து உண்மையினை அறிந்து கொள்ளுங்கள்!


எமது தளத்தினூடாக காயத்ரி அறிந்து ஜெபிப்பவர்கள் குருநாமத்தினை கூறி சாதனை தொடங்குவதால் அவர்களுக்கு மானசீக வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்பதற்கு உறுதி கூறுகிறோம். 

கலக்கம் வேண்டாம்! அன்னை காயத்ரியும் குருதேவரும் உங்கள் அனைவருக்கும் துணை இருப்பார்கள்!

2 comments:

  1. நீங்கள் கூறியதை நான் ஆமோதிக்கிறேன்....ஏனெனில் எனது மனைவி தினமும் காயத்திரி சொல்லும் பழக்கமுடையவர்...காயத்திரி சொல்லும்பொது பிரச்சினைகளுக்கு தீர்வும் தெளிந்த மனதும் கிடைப்பதாக எனது மனைவி அடிக்கடி கூறுவார்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...