குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, February 06, 2014

குண்டலினி சக்தி 04: Serpent Power by Arthur Avalon

குண்டலினி யோகம் பற்றிய மேலைத்தேய சாதகர்களின் புரிதல் - தியோசபிக்கல் சொசைட்டியை சேர்ந்த சி. டபுள்யூ. லீட்பீட்டர் அவர்களின் கருத்துப்படி

இது தொடர்பாக தியோசபிக்கல் சொசைடியினை சேர்ந்த ஒரு ஆசிரியரது(10) கருத்தினை காண நேர்ந்தது, அவர் "விசை மையங்கள்" மற்றும் "குண்டலினி நெருப்பு" எனவும் தனது சுய அனுபவத்தினூடகவும் எழுதுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் யோக சாஸ்திரத்தினையும் மேற்கோள் காட்டியிருந்தார், அவருடைய கருத்து மிகச்சரியானதாகவோ இந்திய யோக மரபினை சார்ந்ததாகவோ காணப்படவில்லை. (அவர் தன்னுடைய யோக வழியில் சரியாக இருந்தபோதும் ஏதோ ஒருவிடயத்தில் தவறுகின்றார்) அவர் சில கருத்துக்களை தனது சொந்தக்கருத்துக்களாகவும் சுய அனுபவங்களாகவும் முன்வைக்கின்றார் (ஆனால் அவை இந்திய தத்துவ மரபிலிருந்து கடன் வாங்கப்பட்டவை) அவருடைய அனுபவம் வருமாறு; குண்டலினி நெருப்பு விழிப்படைந்தவுடன் சூஷ்ம மனப் பார்வை(11) தனக்கு உருவாவதாயும் (அவர் கூறியதன்படி), உடலில் உள்ள சக்கரங்கள் சூஷ்ம உலகில்(12) உள்ள ஆகாயதுணிக்கைகளால்(13) ஆக்கப்பட்டிருப்பதாகவும், அவை சரியான கோணத்தில் ஏழு சக்திகளாக அமையப்பட்டு சுழற்சியின் மூலம்  பிரபஞ்சத்திலிருந்து தெய்வசக்தியினை ஈர்த்து பௌதீக உடலிற்குள் செலுத்துவதாகவும் கூறுகிறார். இந்த ஏழு சக்திகளும் எல்லா சக்தி மையங்களிலும் காணப்படுவதாகவும், குறித்த மையத்தில் ஒரு சக்தி அதிகமாகவும் மற்றைய சக்தி குறைவாகவும் காணப்படும் எனவும் விபரிக்கிறார். உட்பாயும் இந்த சக்தி "ஆகாய இரட்டை (ஈதரிக் டபிள்) யின் மேற்புறத்தில் பரவுகிறது, இரண்டாம் நிலைச் சக்திகள் அவற்றிற்கு வலதுபுறமாக பரவுகிறது. பின்னர் முதன்மை சக்தி வலப்புறமாக நேர்கோடாக பரவிக்காணப்படுகிறது. இந்த முதன்மைச் சக்தியின் கதிர்ப்பே சக்கரங்களில் உள்ள தாமரை இலைகளாக உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி உருவான இதழ்கள் இரண்டாம் நிலை சக்தி உட்புகும் போது விரிடைகின்றது. இப்படி இந்து யோக நூற்களில் விவரித்துள்ளபடி தனது அனுபவமாக விவரித்துள்ளார். மேலும் இந்த தாமரைகளில் இலக்கங்களை இந்து தந்திர நூற்களில் இருந்து பெற்றுள்ளார், உதாரணமாக ஆறு இதழ்கள் உள்ள சுவாதிஷ்டான சல்லரத்தினை சதையியில் உள்ள சக்கரமாக குறிப்பிடுகிறார், தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தில்(14) சரியாக 960 இதழ்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். மேலும் இந்த ஈதரிக் மையங்கள் பௌதீக உடலை உயிர்ப்புடன் வைத்திருக்க சூஷ்ம உலகத்திலிருந்து சக்தியினை பெறுவதாகவும், அந்த சூஷ்ம உலகம் நான்கு பரிமாணம் உள்ள ஒரு தளம் எனவும் குறிப்பிடுகிறார். இவற்றுக்கிடையே ஒரு வலுவான பௌதீக திரை இருப்பதாகவும் அது பக்குவம் அற்றவர்கள் சூஷ்ம உலகத்துடன் தொடர்புகொள்வதை தடுப்பதற்காகவும் இருப்பதாக கூறுகிறார். இந்த தளங்கள் சரியான வகையில் திறக்கப்பட்டு விருத்தியடைந்தால் இந்தப்பாதையினூடாக உயர்ந்த சக்தியுள்ள உலகங்களுடன் தொடர்பு கிட்டும். இந்த ஒவ்வொரு சூஷ்ம மையங்களும் ஒவ்வொரு செயலினை ஆற்றலினை வழங்கும். உதாரணமாக நாபி மையம் உணர்ச்சிகளின் சக்தியினை கட்டுப்படுத்தும், சதையி மையம் விழிப்புணர்வுடன் கூடிய சூஷ்ம பயணத்தினை செய்யக்கூடிய சக்தியினை வழங்கும். இதயமையம் சூஷ்ம சக்திகளுடன் தொடர்புகொள்ளும் ஆற்றலையும் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் வழங்கும். தொண்டை மையம் சூஷ்ம சக்திகளை கேட்க்கும் ஆற்றலை தரும். புருவமத்தி சூஷ்ம பார்வையினை தரும். உச்சிக்குழி(15) சூஷ்ம தளத்தில் உள்ள அனைத்து ஆற்றல்களையும் தரும். இந்த விளக்கத்தின் மூலம் இந்த மையங்கள் சூஷ்ம உடலின் புலன் அங்கங்களாக கருதவேண்டியுள்ளது.

முதலாவது சக்கரத்தில், அதாவது முள்ளந்தண்டின் அடிப்பகுதியில் குண்டலினி நெருப்பு அல்லது குண்டலினி ஏழு மடிப்புகளாக அல்லது ஏழு வகையான சக்திகளாக உள்ளது(16). இதுவே சூஷ்ம ஆகாயம் பரிணமிக்கும் விதம். இதற்கு சமானமான பௌதீக சக்திகள் உலகத்தில் மின்சாரத்தினையும் மற்றைய சக்திகளையும் குறிப்பிடலாம். ஆனால் இவை பிராண சக்தி(17) எனக்குறிப்பிடமுடியாது. இந்த சூஷ்ம மையங்கள் குண்டலினி நெருப்பால் விழிப்படையச் செய்யும் போது சில வேளைகளில் அந்த மையங்கள் தொடர்பு பட்ட பௌதீக உணர்ச்சிகளும், அவற்றின் தன்மையும் விழிப்படையலாம். இந்த மையங்கள் குண்டலினி சக்தியால் உயிர்ப்பிக்கும் போது அவை ஸ்தூல உடலிற்கும் சூஷ்ம உடலிற்கும் தொடர்பு படுத்தும் வாசல்களாக உருப்பெறுகின்றன. இந்த சூஷ்ம மையங்கள் ஆரம்பத்தில் விழிப்படையும் போது அது பௌதீக உணர்விற்கு  தெரிவதில்லை. ஆனால் இந்த புலன் உணர்வு கொண்ட உடல் இந்த மையங்களை விழிப்பிக்கச்செய்யும் பயிற்சியினை அல்லது செய்முறையினை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அவற்றை பௌதிக உணர்வின் மூலமும் அறிந்துகொள்ளலாம். இதனை செய்வதற்கு ஒருவன் தனது இச்சாசக்தி கொண்டு மூலாதாரம் எனப்படும் முள்ளந்தண்டின் அடியில் உறங்க்கிக்கொண்டிருக்கும்(18) குண்டலினி நெருப்பினை குறித்த மையத்திற்கு செலுத்துவதன் மூலம் சாதிக்கலாம். இதை செய்து முடிக்கும் போது ஒவ்வொரு மையமும் உயிர்ப்படையும், படிப்படியாக ஒவ்வொரு மையத்துடனும் தொடர்புடைய சக்தி வளர்ச்சியடைந்து பௌதீக உணர்விற்கு வரும்.

சுருக்கமாக ஒருவன் சூஷ்ம உலகத்தில் வாழ ஆரம்பித்தல் அவனுக்கு அனுகூலமானதல்ல, அது சுவர்க்கத்தினை நோக்கிய பிரவேசம் அல்ல, இந்த உலக வாழ்க்கையின் முடிவு (19). ஆதலால் இரண்டாவது மையம் விழிப்படையும் போது ஒருவன் எல்லாவிதமான சூஷ்ம உணர்வுகளையும், நன்மையானதும், பயமுறுத்துவதுமான உணர்வுகளை அது ஏன் நடக்கின்றது என்று அறியாமலே பெறுகிறான். மூன்றாவது மையத்தில் ஞாபகப்படுத்த முடியாத சூஷ்ம பயணங்களை அனுபவங்களை, அதாவது ஒருவித இன்ப நிலையில், வானத்தில் மிதப்பது போன்ற நிலைகளை பெறுகின்றான். நான் காவது மையம் விழிப்படையும் போது அடுத்தவர்களுடைய இன்ப துன்பங்கள், உணர்வுகளை அறியும் தன்மை பெறுகிறான், சில வேளைகளில் அடுத்தவர்களுடைய வலி, துன்பங்களை தானே எடுத்துக்கொண்டு அனுபவிக்க கூடியவன் ஆகிறான். ஐந்தாவது மையம் விழிப்படையும் போது அவனை வழி நடாத்தி செல்லக்கூடிய அசரிரி வார்த்தைகளை கேட்கும் ஆற்றலைப் பெறுகிறான். சில சமயம் சூஷ்மமான ஒலியினை கேட்கும் தன்மை(20) உடையவனாகிறான். ஆறாவது மையம் விழிப்படைவதால் சூஷ்ம திருஷ்டியும் சூஷ்ம உலகத்தினையும் பார்க்ககூடிய ஆற்றல் பெறுவான். அது சில வித்தியாசமான நில அமைப்புகளையும், நிறங்க்களையும் காணக்கூடியதாக இருக்கும், இங்கு ஆசிரியர் குறிப்பிடுகிறார் சூஷ்ம ஆகாயம் உருப்பெருக்கி கண்ணாடியினால் பார்ப்பதைப் போன்று ஒரு பாம்பு உடலினூடாக, நீண்ட குழாய்களின் ஊடு சென்று வருவதைப்போல் இருக்கும் என்கிறார். இந்த நுண்மையான பாம்பினை விரிப்பிப்பதற்கும், சுருக்குவதற்குமான ஆற்றலே புராதன நூற்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இச்சா சக்தியால் உடலை சிறிதாக்குவதும் பெரிதாக்குவதுமான சித்தி என்கிறார்.(21) இந்த நிலையில் பிரிட்யூட்ரி சுரப்பியினை சரியான நிலையில் வைத்திருந்தால்  இது சூஷ்ம உலகுடன் இணைப்பினை ஏற்படுத்தி குண்டலினி நெருப்பு ஆறாவது மையத்தினை அடையும் போது முற்றாக உயிர்ப்பித்து, குருவினுடைய குரலினை கேட்பிக்கும் (அதாவது சாதகனை விட உயர்ந்த ஒரு அறிவு சக்தியுடன் தொடர்பு ஏற்படும்). ஏழாவது சக்கரத்தினை விழிப்படையச் செய்தால் உடல் முழுமையான உணர்வு நிலையினை அடையும். இந்த குண்டலினி நெருப்பு குறித்த ஒரு ஒழுங்கில் இந்த மையங்களை தாண்டி சென்றால் (இது நபரிற்கு நபர் வேறுபடும்) இந்த சூஷ்ம உலக அனுபவத்தின் இறுதியில் உணர்வு சுவர்க்க உலகத்தினை சென்றடையும்(22).

இவரது கருத்துக்கும் யோகசாஸ்திர நூற்களுக்கும் ஒற்றுமைகளை காணலாம். ஆசிரியர் பொதுவாக குறிப்பிடுவதனைக் கொண்டு அவருக்கு இது அனுபவத்தின் மூலம் கிடைத்த ஒன்று எனவும் அது அவரது எழுத்தில் வந்திருக்கின்றது என்பதனையும் அனுமானிக்கலாம். இவர் விபரித்த ஏழு மையங்களில் ஒன்று தவிர்ந்த மற்றையவை சக்கரங்களுடன் பொருந்தி வருகின்றது. ஆசிரியர் மேலும் கூறுகிறார் அவற்றிற்கு கீழே மேலும் மூன்று சக்கரங்கள் இருப்பதாகவும் அவற்றினை ஏகாக்கிரப்படுத்துவது ஆபத்தில் முடியும் என்றும், அதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. நான் அறிந்த வகையில் மூலாதாரத்திற்கு (இந்த பெயரே அடியில்/இறுதியான சக்கரம் என்ற பொருளில் அமைந்துள்ளது) கீழே எந்தவொரு சக்கரமும் இருப்பதாக தெரியவில்லை. இந்த சக்கரத்திற்கு மிக அருகில் இருப்பது ஆபஸ்(ஜல்/நீர்) தத்துவ மையமான சுவாதிஷ்டானம் மட்டுமே அவரது கணக்கீட்டில் விடுபட்டுள்ளது. இந்துக்கள கூறும் குண்டலினியை - குண்டலினி நெருப்பு மூலாதாரத்தில் உறைந்துள்ளதாகவும், அதனை ஒருவன் தனது இச்சா சக்தி(யோக பலம்)(23) மூலம் விழிப்படைய வைப்பதன் மூலம் சுவர்க்க உலகத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பௌதீக உணர்வினை உயர்த்திக் கொள்ளலாம் எனக்கூறுகிறார். இந்த வேளையில் இந்து தத்துவமுறைப்படி பார்த்தால் ஷட்சக்ட பேதனம் எனும் ஆறாதாரங்களின் விழிப்பின் இலக்கும் நோக்கமுமே யோகம், இது பரம்பொருளுடன் ஒன்றச்செய்யும் செயன்முறை. ஆனால் யோகத்தில் உடலும் உணர்வும் இயற்கையான நிலையில் இருக்கின்றது, அப்படி இல்லையானால் இருப்பு என்பது இல்லாமல் போய்விடும். உணர்வு ஒவ்வொருபடி மேலே செல்வதும் யோகமே, கைவல்ய முக்தி அடைவதற்கு முன்னர் உணர்வு பலபடிகளை தாண்டும். இந்த நிலை மேற்குறிப்பிட்ட ஆசிரியர் குறிப்பிடும் சுவர்க்கத்திலிருந்து பலபடிகள் மேலானது. யோகிகள் சுவர்க்கம் மேல் ஆசை இல்லாதவர்கள், அதற்கும் மேலே உள்ளதை தேடுபவர்கள், அப்படி சுவர்க்கத்தினை தேடுபவர்களாக இருந்தால் அவர்கள் யோகிகள் இல்லை.

இவருடைய கோட்பாட்டின் படி புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால்; இந்தப்பயிற்சியின் மூலம் இந்த சக்தியினை உணர்பவர்களுக்கு மனம் புத்தி என்பன வலிமைப்படுத்தப்படுகிறது, ஆனால் அந்த அனுபவம் உண்மையான நிலையினை விட சற்றுக்கீழான நிலையில் காணப்படுகிறது. இந்த யோகம் ஆரோக்கியத்தையும், வலிமை, இச்சாசக்தி, மரணமற்ற தன்மை இவற்றை அடைவதற்கு செய்யப்பட்டாலும், சக்கரங்களை விழிப்பித்து உயிர்ப்பிப்பதற்கு முதலில் சுத்தி செய்து வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. மேலும் நான் மஹா நிர்வாண தாந்திரம்(24) முதற்பதிப்பில் குறிப்பிட்டதுள்ளது போல், யோகிகள் பிரம்ம கிரந்தி அல்லது முடிச்சினை(25) பிளக்கும் போது நாபிக்கமலச் சக்கரத்தில் மனதை ஏகாக்கிரப்படுத்துவது போல் அல்லாது பெரும் வலியினை உணர்கின்றதாக சொல்கிறார்கள். சிலவேளை அங்கஹீனம், பெரு நோய்கூட உருவாகின்றது என்கிறார்கள்.


இந்து முறைப்படி இந்த யோகத்தினை உண்மையான வழியில் செய்வதற்கு சாதகனின் தகுதி (அதிகாரத்துவம்) குருவின் மூலம் அடையாளம் காணப்படவேண்டும். இந்தப்பாதையில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் இந்த ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் இதற்கு மேல் உள்ள விடயங்கள் இந்தியர்களால் தமக்கு கூறப்பட்டதாகவும் அவர்கள் பொதுவாக "ஆண்குறி தந்திரம்(Phallic sorcery)(26)" பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இந்த விடயம் பற்றி ஆசிரியம் மேலும் குறிப்பிடும் போது மேலைத்தேய கருப்பு வித்தை சார்ந்தவர்கள் தமது காம மையத்தினை செயற்படுத்துவதற்கு குண்டலினியை விழிப்பிப்பதாக கூறியுள்ளார்கள். அடுத்து இன்னுமொரு மேலைத்தேய ஆசிரியர் இதுபற்றி குறிப்பிடும் விடயத்தினைப் பார்ப்போம்

அடிக்குறிப்புகள் 
(10) அக வாழ்க்கை, சி. டபுள்யூ. லீட்பீட்டர் பக்கம் 443-478, முதல் தொகுதி
(11) சக்கரங்கள் மேல் நோக்கி விழிப்படையும் போது அதீத சித்திகள் வாய்க்கும்
(12) இது மேற்கத்தைய கருதுகோள்
(13) ஒவ்வொரு சக்கரங்களும் பிராணசக்தியாலும் பஞ்ச பூதங்களாலும் ஆக்கப்பட்டிருக்கும், ஒவ்வொரு மையத்திலும் குறித்த பூதம் அதிகமாக காணப்படும்.
(14)  ஆயிரம் எனக்குறிப்பிடப்படுவது ஒரு குறியீட்டு விளக்கமே
(15) ஒவ்வொரு மையமும் விழிப்படையும் போது குறித்த சில சித்திகளை தரும், ஆனால் சகஸ்ராரம் எனப்படும் தலை உச்சியில் உள்ள மையம் சித்திகளுக்கும் சூஷ்மதளத்திற்கும் அப்பாற்பட்டது, அது சமாதி என்று சொல்லக்கூடிய அதீத உணர்வுடன் ஒன்றும் நிலையினை தரும்.
(16) பராசப்த எனப்படும் குண்டலினி ஏழுவிதமான சப்தவடிமாக மூலாதாரத்திலிருந்து பிந்து வரை பரிணமிக்கிறாள் (இவையே இசையில் உள்ள சப்த ஸ்வரங்கள் - சுமனன்)
(17) குண்டலினி என்பது சப்தபிரம்மன் அல்லது உடலில் இருக்கும் தனது சுயஸ்வரூபத்தினையும், தூய உணர்வினையும், சகல சக்திகளையும்(ஸர்வசக்திமயி) கொண்ட "வாக்" சக்தி, குண்டலினி என்பது உடலில் உறைந்துள்ள பிரபஞ்ச சக்தி அதுவே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருப்பது, ஆதலால் அது அதிலிருந்து தோற்றம் பெற்ற எந்த சக்திக்குள்ளும் அடங்கவில்லை.
(18) குண்டலினி பாம்பாக (புஜங்கினி) உருவகிக்கப்படுகிறது. மூலாதாரத்தில் அவள் உறங்குகிறாள், அவள் ஓய்விற்காக அங்கே உறங்குகிறாள், அந்த நிலையில் மனிதனின் உணர்வு பௌதீக உலகத்தினை நோக்கி இருக்கின்றது, அவளுடைய படைப்புகள் அனைத்திலும் அவள் உறைந்திருக்குக்கிறாள். மனிதனில் அவள் விழிப்படையும் போது அவனது பௌதீக உணர்வு உறக்கத்திற்கு வந்து பேரின்ப உணர்வு விழிப்படையும், இதனால் யோகம் பூர்த்தியாகும்.
(19) குண்டலினி யோகத்தின் இறுதி இலக்கு எல்லாவித சூஷ்ம உலகங்களையும் தாண்டி எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் காரணியுடன் இணைவது. எந்த ஒரு யோகியும் சுவர்க்கத்தினை வேண்டுவதில்லை.
(20) ஷட் சக்ர நிருபணத்தின் படி சூஷ்ம ஒலிகளை கேட்கும் தன்மை நான்காவது மையமான அநாகதம் விழிப்படையும் போது ஏற்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது.
(21) மேற்குறிப்பிட்ட பாம்பு பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை, அணிமா சித்தி என்பது இவ்வாறான விடயங்களினை சார்ந்த ஒன்றல்ல, அது ஒருவரது உணர்வினை சிறியதுடனோ, பெரியதுடனோ செலுத்தி சாதிப்பது.
(22) குறிப்பு 19 இனைப்பார்க்கவும்.
(23) ஆசனங்கள், பந்தங்களின் உதவியுடன் உடலினை தூய்மைப்படுத்திய பின்னர்.
(24) மஹா நிர்வாண தந்திரம் CXXIV, முதற்பதிப்பு
(25) குண்டலினி செல்லும் பாதையில் மூன்று முடிச்சுகள் காணப்படுகின்றன. அவை குண்டலினியின் வலிமை அதிக காணப்படும் போது துளைத்துக்கொண்டு செல்கிறது.
(26) இது ஆண்குறி வழிபாட்டுடன் தொடர்புடைய மேலைத்தேய தாந்திரீக முறை (சுமனனுடைய குறிப்பு)

4 comments:

  1. உலகத்தை ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க?

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு பழனிச்சாமி ஐயா அவர்களே!

    இதில் என்ன ஏமாற்று இருக்கிறது என்று விபரமாக சொல்லலாமே?

    தகுந்த ஆதாரங்களை தராமல், உங்களுடைய கருத்துக்களை முன்வைக்காமல், பொது வெளியில் இப்படி ஏக வசனத்தில் கருத்திடுவது தங்களை போன்ற கற்றறிந்தவர்களுக்கு அழகன்றே!

    ஆகவே தகுந்த ஆதாரங்களுடன் என்ன ஏமாற்று என்பதனை பதிவிடவும்!

    உங்களுடைய எந்த வித கேள்விக்கும் பதிலளிக்க நாம் தயார்!

    அன்புடன்

    சுமனன்

    ReplyDelete
  3. ஏக வசனத்தில் எழுதியதற்கு மன்னிக்கவும்.

    குன்டலினி யோகத்தை அப்பியசித்து இறவா வரம் அல்லது நூறு ஆண்டு வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?

    இது ஒரு ஏட்டுச்சுரைக்காய் என்பது பலர் கருத்து. நடைமுறைக்கு உதவாத ஆன்மிகம் எதற்கு?

    அன்புள்ள, பழனி.கந்தசாமி

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய பழனி. கந்தசாமி ஐயா அவர்கட்கு,
    வயதில் பெரியவராகிய தாங்கள் ஏக வசனத்தில் எழுதியமை இங்கு விடயமில்லை! அதற்கு தாராளமாக அனுமதி இருக்கிறது. கூறவந்த கருத்தே முக்கியம்!
    ஒரு விடயத்தினை மறுப்பதற்கும், ஏற்பதற்கும் ஆய்வினால் நிருபிக்கப்பட்ட ஆதாரங்கள் (experimental evidence) அல்லது குறைந்தது தர்க்க ரீதியான வாதங்களை (logical reasoning) முன்வைக்க வேண்டும் என்பது அறிவியல் சார்ந்த முறையாகும். பல்வேறு ஆராய்ச்சிக்கட்டுரைகள் சமர்பித்து முனைவர் பட்டம் பெற்ற உங்களுக்கு இவற்றை நான் கூறவேண்டிய அவசியமில்லை.
    குண்டலினி யோகம் என்பது எனக்கு தெரிந்தவகையில் இறவா வரம் பெறவோ, நூறாண்டு காலம் வாழ்வதற்கான ஒன்றோ அல்ல! இப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய கட்டுரைத்தொடர் இப்படியாக குண்டலினி யோகத்தினை பற்றிய் கட்டமைக்கப்பட்ட கற்பிதங்களை ஆராய்ந்து உண்மை நோக்கம் என்ன என்பதனை கூறவே வருகிறது. அதனை அறிவதற்கு கட்டுரை முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
    எனினும் இதனை எனக்கு கூறித்தந்த பெரியவர் திரு செல்லத்துரை சாமி அவர்கள் தனது 92 வயதுவரை கோல் ஊன்றாமல், கண்ணாடி பாவிக்காமல், தினசரி நடையும் தோட்ட வேலைகளும் செய்து ஆரோக்கியமாக நிம்மதியாக இறந்தார்.
    அடிப்படையில் குண்டலினி யோகம் மனிதனின் உணர்வு எனப்படும் Consciousness உடன் தொடர்புடையது. இதன் பொருள் விக்கிபீடியாவினால் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது. Consciousness is the quality or state of being aware of an external object or something within oneself. It has been defined as: sentience, awareness, subjectivity, the ability to experience or to feel, wakefulness, having a sense of self hood, and the executive control system of the mind. it connotes the relationship between the mind and the world.
    குண்டலினி யோகத்தில் சாதாரண நிலையில் வெளி உலகில் திரும்பி இருக்கும் உணர்வினை (objective consciousness) மெதுவாக உடலின் பாகங்களில் (அதற்கு இசைவான சக்கரங்களில்) செலுத்தி அதனூடாக சாதாணர மனதினூடாக அறியப்படும் உணர்வில் இருந்து வேறுபட்ட உணர்வு நிலையினை அடைதலே நோக்கம்! இப்படிப்பட்ட உணர்வு நிலை மனிதனது அடிப்படை பிரச்சனைகளான சக்தியை விரயம் செய்யும் பயம், காமம் போன்ற உணர்ச்சிகளில் இருந்து மனதினை விடுபடச் செய்யும். இப்படி மனிதன் சாதாரண உணர்வு நிலையில் இருந்து பிரபஞ்ச உணர்வு நிலையினை மனித உடலில் இருந்த வண்ணம் அடையும் வழியே குண்டலினி யோகம்.
    ஒவ்வொரு துறைக்கும் துறை சார்ந்த கலைச்சொல் இருக்கிறது, அதனை புரிவதற்கு அது சார்ந்த அறிவு அவசியம். Cash Crop என்ற வார்த்தையை விவசாயத்துறை சாராத நபரிற்கு சொன்னால் எதோ பணம் காய்க்கும் செடி போல என்று நினைத்துக்கொள்ளும் நிலைதான் இன்று எமது சமூகத்தில் குண்டலி யோகம், மந்திரங்கள் எல்லாம் சாதாரண நிலை தாண்டிய அமானுஷ்யம் என்ற நினைப்பு!
    மேலு ஏட்டுச்சுரக்காய் எனக் கூறுவதற்கு நீங்கள் பயிற்சித்து பலனளிக்கவில்லை என்று கண்டு உணர்ந்தீர்களா? ஒன்றை நாங்கள் முயற்சித்து பார்த்து அனுபவிக்காமல் வெறுமனே கருத்து சொல்வது சரியல்லவே!
    நடைமுறைக்கு உதவாத ஆன்மீகம் எதற்கு என்று எப்படி பொதுவாக முடிவு செய்யலாம்? சிலவேளை இது உங்களுக்கு பொருந்தாத வழியாக இருக்கலாம், அதற்காக அது போலி! பொய் என்று கூறுவது சரியல்லவே! ஒரு சட்டை எனக்கு அளவு இல்லை என்றால் உலகில் உள்ள சட்டைகள் எல்லாம் சரியில்லை என்பது போலல்லவா இருக்கிறது!
    இங்கு நான் உங்கள் கருத்தினை எடுத்துக்கொண்டு உரையாடுவதன் காரணம், நீங்கள் சமூகத்தில் மிக உயர்ந்த கல்வியினை பெற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர், ஆக நீங்கள் கூறும் கருத்து எளிதாக மற்றவர்களை "இதுதான் உண்மை" என சிந்திக்க வைக்கும். ஆகவே உங்களைப்போன்ற பெரியவர்கள் பொறுப்புடன் கருத்து கூறவேண்டும். இப்படியான கருத்துக்கள் எமது முன்னோர்கள் கூறிய விடயங்களை சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் ஏளனமாக பார்க்கு நிலையினை மேலும் ஊக்குவிக்கும்.
    குண்டலினி யோகம் என்பது புரட்டு அல்ல! அதன் பெயரால் புரட்டு நிகழலாம்!இது உலகில் இருக்கும் நியதி! எதிலும் உண்மையும் உண்டு! போலியும் உண்டு!
    அன்புடன்
    சுமனன்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...