மனதின் செயல்முறை விஞ்ஞானம்: வாழ்க்கையில் ஏன் வேற்றுமைகள்?


சென்ற பதிவில் ஒவ்வொரு உயிரினதும் மனிதனதும் வாழ்க்கை நோக்கம் இன்பத்தினை நோக்கியதாகவே இருக்கிறது என்பது பற்றி பார்த்தோம். ஆனால் இன்பத்தினை நோக்கி செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இன்பத்தினை தருவதில்லை. இலாபம் தரும் என்று தொடங்கிய வியாபாரம் நஷ்டத்தினை தருகிறது. சுவைக்கு என அருந்தும் உணவு நோயினைதருகிறது. இன்பம் என்று எண்ணிய உறவுகள் துன்பத்தினை தருகிறது. இப்படி எண்ணுவது ஒன்றாக இருக்க விளைவு வேறாக இருக்கிறது.

இவை எல்லாம் ஏன் என்று தேடவிரும்பும் ஒருத்தன் கடவுள் மீது பழி போடுகிறான், கிரகதோஷம் என்கிறான், ஜாதகத்தில் கோளாறு என்கிறான், கர்மம் காரணம் என்கிறான், பில்லி சூனியம், செய்வினை காரணம் என்கிறான், செய்த பாவங்கள் காரணம் என்கிறான், இப்படி காரணங்கள் பலவாக இருந்தபோதும் எல்லோருக்கும் பொதுவான விடை எப்போதும் கிடைப்பதில்லை. ஏனெனினில் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் இதே துன்பங்களை அடைகின்றனர்.

இதனை தெளிவாக ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் இப்படிக்கூறுவார். “பிறப்பதற்கு முன் ஏற்பட்டதோ, பிறந்த பின் ஏற்பட்டதோ, கடவுள் கொடுத்ததோ, கர்மவினை அளித்ததோ, கிரகங்கள் விளைவித்ததோ, வேறேதேனால்லுண்டானதோ மனித வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், நன்மை, தீமைகள் அவனில் செயற்பட “மனிதன்” என்ற சொல்லில் கலந்திருக்கும் பலகருவிகளில் ஒரு கருவிதான் காரணம், அந்தக்கருவி “மனம்”, கடவுள் நன்மையோ தீமையோ செயற்படுத்த விரும்பினார், கிரகங்கள் தனது செயலை செயல்புரிய வேண்டுமாயின், எமது பூர்வ கர்மம் செயற்பட வேண்டுமானால் அவை மனதினூடாகத்தான் செயற்படவேண்டும்.

மனிதனின் முயற்சி, எண்ணம், செயல் எதுவானாலும் முதலில் மனதில் எண்ணமாக பரிணமிக்க வேண்டும், அதன் பின்னரே செயல் நிலைக்கு வரும். செல்வம் பெறவேண்டும் என்று எண்ணுபவன் தனது மனதில் முதலில் செல்வம் பெறவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கி, அதன் படி மனதினை செயற்படுத்தியே செல்வத்தினை பெறவேண்டும்.

இதைப்போல் மனிதருக்கு நடைபெறும் தீமைகளும் மனதில் எண்ணமாக பரிணமித்தே எமக்கு நடைபெறுகிறது. இதுபற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம். இந்த பதிவில் கூறவரும் உண்மை யாதெனில் “ எமக்கு நடைபெறும் நன்மைகள், தீமைகள் எதுவாக இருப்பினும் அது மனதினூடாகவே நடைபெறுகிறது” என்பதே!

ஆகவே மனதினூடாக இவை எப்படி செயற்படுகிறது என்பதனை நாம் அறிந்தால், கட்டுப்படுத்தும் முறைகள் தெரிந்தால், எமக்கு நடைபெறும் நன்மை, தீமைகளையும் நாம் மாற்றி அமைக்கலாம்.


மனதின் செயல்முறை விஞ்ஞானம் மேலும் தொடரும்.. 

Comments

  1. நன்றி
    மேலும் தொடர வாழ்துக்கள்

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு