அப்போகலிப்ஸ் அன்சீல்ட்
(the apocalypse unsealed)(27) என்ற நூலின்
படி;
இந்த ஆசிரியர் "தற்காலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆண்குறி தந்திரத்தின்
பிழையான வழிகாட்டுதலால் தமது
ஆன்மாவினை தவறான வழிக்கு
இட்டுச் செல்கின்றனர். இந்தப்போலியான
மறையியலில் ஈடுபடுபவர்கள் தமது
முதிர்ச்சியற்ற ஆன்மீகத்தினால் தமது
அறிவினை குழப்பி கற்பனையான
போலி உலகத்தில் வாழ்வதற்கு
தள்ளப்படுகின்றனர்" என கருத்து
தெரிவிக்கின்றார். மேற்கூறிய அனுபவமும்
இதனைச் சார்ந்ததா? காம
மையத்தின் மீதான பிழையான
அல்லது தவறான ஏகாக்கிரம்
மேற்குறிப்பிட்ட நிலையினை
ஏற்படுத்தலாம் என்பதினை மறைமுகமாக
குறிப்பிடுகிறார் என
நினைக்கிறேன். உரையாசிரியர் லக்ஷ்மிதாரா
உத்தர கௌலாச்சாரத்தின் குண்டலினி
விழிப்பு சாதனையினைப்பற்றி கூறும்
போது இதனை மறைமுகமாக
குறிப்பிடுகிறார். அவர்கள் குண்டலினியினை
மூலாதாரத்தில் இருந்து எழுப்பி
உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள், அவர்கள்
யோகம் அடைய விரும்பும்
அதற்கு மேற்பட்ட நிலையான
பேரின்பத்தினை அடைய விரும்பவில்லை.
இப்படியானவர்களை இரு
சமஸ்கிருத வார்த்தை "இப்படியானவர்களே உண்மையான விபச்சாரிகள்"
எனக்குறிப்பிடுகிறது. எவ்வாறாயினும் நான்
இந்திய மரபில் இத்தகைய
விடயத்தினை கேள்விப்பட்டதில்லை, ஏனெனில்
சாதாரணமாக யோகம் என்பதன்
அர்த்தத்திற்கு இவை பொருந்திவருவதில்லை.
ஏனெனில் இந்த யோகத்தினை
பயிற்சிப்பதற்கு ஸ்திரமான
ஒழுக்கம் அவசியமானதாகும், இதில்
அவர்களது இலக்கு, விருப்பு
வெறுப்புகள், சாத்தியக்கூறுகள் என்று
எதுவும் இருப்பதில்லை. இந்த
யோகத்திலோ மற்றைய யோகங்களிலோ
சாதனைபுரியும் இந்திய சாதகர்கள்
ஒருபோதும் மறையியல் ஆர்வமோ,
சூஷ்ம சித்திகளை பெறுவதோ
அல்லது அத்தகைய அனுபவத்தினை(28)
பெறுவதையோ இலக்காக கொள்வதில்லை.
அவர்களுடைய மனப்பாங்கு பிரம்மத்தில்
ஆழ்ந்த நம்பிக்கையுடைய (ஸ்திரநிஷ்டா)
இறையுடன் ஆழ ஒன்றும்
சாதனை மட்டுமே, அதுவே
முக்தி அல்லது ஆன்ம
விடுதலை என்பது.
தாந்திரீகம் கற்பதற்கான தகுதி (தாந்திர சாஸ்திர அதிகார)
தாந்திரீகம் கற்பதற்கான
தகுதி கந்தர்வ தந்திரத்தின்
இரண்டாவது அத்தியாயத்தில் கீழ்வருமாறு
விபரிக்கப்பட்டுள்ளது. சாதகன் எனப்படுபவன்
- நூண்ணறிவு உடையவனாக
இருத்தல் வேண்டும் (தக்ஷ)
- புலன் களை
அடக்கியவனாக (ஜிதேந்திரிய)
- எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாதவனாக (ஸர்வஹிம்சவிநிர்முக்த)
- எல்லோருக்கும் நல்லதினை
செய்பவனாக (ஸர்வபிராணிஹிதே ரதஹ)
- தூய்மையானவனாக (சுஷி)
- வேதங்களில் நம்பிக்கையுள்ளவனாக
(அஸ்திகா)
- பிரம்மத்தில் நம்பிக்கை
உடையவனாக, பிரம்மத்தில் அடைக்கலம்
அடைந்தவனாக (பிரம்மிஷ்தா, பிரம்மவதி,
பிரம்மி, பிரம்ம பாராயணா)
- பிரம்மம் ஆன்மா
வேறு அல்ல ஒன்றே
என்ற இருமைகள் அற்ற
அத்வைதியாக (துவைதாஹீன)
இத்தகையவனே சாதகன்,
இந்த பண்புகள் அல்லாதவன்
சாதகன் அல்ல எனக்
கூறுகிறது. மேற்கூறிய மனப்பாங்குடன்
மேலே கூறிய இந்திய
உரையாசிரியர் (லக்ஷ்மிதாரா) குறிப்பிட்டபடி கீழ் மையங்களில்
மனதினை ஒருமைப்படுத்தி இச்சைகளை
நிறைவேற்றுக்கொள்ளலாம் எனத்தெரிகிறது.
மற்றோருபுறத்தில் சாதகனது
மனப்பாங்கு, சாதனை, நோக்கம்
என்பனவும் பலனினைதரமுடியும். எப்படியாயினும் காம மையத்தில்
ஏகாக்கிரப்படுத்துவது தவறான
வழியிற்கு இட்டுச் செல்லும்,
ஏனெனில் இந்த சக்கரங்கள்
ஸ்தூல உடலில் இல்லை,
ஏகாக்கிரம் சூஷ்ம உடலில்
உணர்வுடன் செய்யப்படுவது, இவை
எவ்வாறாயினும் ஸ்தூல உடலுடன்
மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
காம மையத்துடனும், மனச்சக்தி
மையத்துடனும் குண்டலினி சக்திக்கு
தொடர்பு உண்டு என்பது
சந்தேகமற்ற ஒன்று, இந்த
குண்டலினி சக்தி மேல்
நோக்கிய பாய்ச்சலில் இந்த
மையங்களுடன் தொடர்பு கொள்ளும்
போது மனதிற்கும் உடலிற்கும்
அதீத சக்தி(29) கிடைக்கின்றது.
இந்த நிலையில் ஒரு
மையத்தில் சக்தியினை நிறுத்தி
அதனை தனது இச்சைக்கு
ஏற்ப பழக்கி முறைப்படுத்த
தெரிந்த ஒருவன் எதனையும்
இழக்காமல் அனைத்து சக்திகளையும்
பயன்படுத்துகிறான். நான் கூறியபடி
சில அனுபவமுள்ள சாதகர்கள்
இந்தவழியில் ஆபத்துகளும் தடங்கல்களும்
இருப்பதை கூறியுள்ளார்கள். ஆதலால்
முழுமையான பக்குவம் (அதிகாரி)
இல்லாமல் இந்த யோகத்தில்
பயிற்சிக்க விரும்புவது உசிதமானதல்ல.
ஆகவே மற்றொரு
புறத்தில் இந்த யோகம்
தொடர்பாக குறிப்பிடத்தக்க வேறுபட்ட
கருத்துக்கள், கருதுகோள்கள் ஒரு
சாரரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய
சொற்பிரயோகம், கருத்தாக்கங்கள், பாகுபடுத்தல்
என்பன "தியோசபிக்கள்"(30) எனும்
பெயரால் வழங்கப்படுகிறது. இவர்களது
கருத்துடனும் இந்திய சொற்பிரயோகத்துடனும் பரீட்சயமான ஒருவரால்
இவற்றின் இடைத்தொடர்புகளை சரியாக
புரிந்து கொள்ளமுடியும் என
நினைக்கிறேன். இவற்றில் பல
இடங்களில் சமமான பதங்கள்
என்று குறிப்பிடப்படுவதை விட
அதே சொற்கள் என்பதுதான்
சரியானது. "தியோசபிக்கல்" கருத்துக்கள்
இந்திய கருத்துக்களால் தாக்கம்
பெற்றவை. இவர்கள் கூறும்
வார்த்தைகளின் கருத்துகள் இந்தியர்கள்
கொள்ளும் கருத்தில் இருப்பதில்லை.
சிலவேளைகளில் தவறானதாகவும் பிழையான
வழியில் செலுத்துவதாகவும் அமைகிறது.
இந்த அமைப்பினை சேர்ந்த
எல்லா எழுத்தாளர்களும் அவர்களுடைய
தனிப்பட்ட அமைப்பு சார்ந்த
சொற்பதங்களையும் வரைவிலக்கணங்களையுமே பாவிக்கின்றனர்.(31) ஆகவே
இந்த இடத்தில் எமது
கருத்துக்களை உருவகப்படுத்த "தளம்"
என்ற வார்த்தையே வசதியானது,
ஆதலால் இவற்றை "தத்துவங்களாக"
பிரிக்கப்பட்டு பாவித்தல் உண்மையினை
உணர்வதற்கு மிகவும் அண்மையில்
இருக்கும். தியோசபிக்கல் கருத்துகளையும் இந்தியக்கருத்துக்களை மிகச்சரியான
விதத்தில் தொடர்பு படுத்தி
ஒரு கருத்தாக விளங்கவைப்பது
என்பது கடினமான விடயம்.
எப்படியாயினும் அவர்களால்(32) ஸ்தூல
உடல் என்பது இரு
பகுதிகளை கொண்டது எனச்
சொல்லப்பட்டிருக்கிறது. அவையாவன "அடர்த்தியான"
"ஈதர் தன்மையுடைய" உடல்கள்.
இவை இரண்டும் அன்னமய,
பிராணமய கோசத்துடன் தொடர்பு
படுத்தமுடியும். சூஷ்ம உடல்
"விருப்பு" சார்ந்த மனோமய
கோசத்துடன் தொடர்பு படுகிறது.
மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில்
"ஈதரிக் மையங்கள்" அல்லது
"சக்கரங்கள்" என்பவை சக்திமயமான
பிராண வாயு அல்லது
பிராணனின் இருப்பிடத்தில் இருக்கவேண்டும்.
அதேவேளை இந்த தாமரைகள்
பிரபஞ்ச உணர்வுமையங்களும் கூட.
குண்டலினி என்பது உடலில்
உறைந்துள்ள நிலையான ஆக்க
சக்தி, இது எல்லாவற்றிற்க்கும் ஆதாரமான சக்தி,
பிராணனிற்கும் ஆதாரமான சக்தி.
மேற்குறிப்பிட்ட ஆசிரியரின்
(குறிப்பு 32 இன்படி) கருத்துப்படி
குண்டலினி என்பது பிராணசக்தியிலும் வேறான ஒரு
சக்தியாக கருதுகிறார். பிராணன்
என்பது உயிர்ப்பு சக்தி
அல்லது உயிர்தத்துவம், அது
வெளியிலிருந்து உட்புகுந்து சிறு
பிராணன்களுடன் சேர்ந்து உடலில்
பல்வேறு செயற்பாடுகளை நடாத்துகிறது.
இவையனைத்தையும் சேர்த்த பொதுவான
பெயரே "பிராணன்" எனப்படுகிறது.
சுலோகம் 10 அல்லது 11 குண்டலினியைப்பற்றி குறிப்பிடும் போது
" எல்லாவற்றிற்கும் காரணமாகவும்
காரியமாகவும் இருந்து எல்லாவற்றையும் படைப்பவள்" என்கிறது.
அவள் பிராண தேவதை,
அவளே ஸ்ருஷ்டி-ஸ்திதி-லய
ஆத்மிகா, அனைத்து சக்திகளும்
அவளுக்குள் அடக்கம். உடல்களில்
சப்தபிரம்மமாக இருக்கிறாள். சக்கரங்க்களினது பண்பினையும், உயிர்ப்படையச்
செய்தலும் நாம் இங்கு
கலந்துரையாடப்பட்ட கோட்பாடுகள்
யோகிகளது அனுபவத்திலிருந்து விலகுகிறது.
மேற்குறிப்பிட்ட ஆங்கில
ஆசிரியரது கருத்துப்படி எல்லாச்
சக்கரங்களும் ஈதரினால் ஆன
சுழற்சியுறும் அமைப்புகள். இது
முன்னர் கூறிய ஏழு
மடிப்புள்ள கடவுளின் சக்தி
வெளியில் இருந்து சக்கரங்களுக்கு பாய்ந்து உயிர்ப்பிக்கும் கருத்தினை ஒத்ததாக
இருக்கிறது, ஆனால் ஒவ்வொரு
சக்கரத்திலும் ஏழு சக்திகளில்
கூடிக்குறையும் அளவுகள் பற்றி
குறிப்பிடப்படவில்லை. மேலும் இவரது
கருத்துப்படி பார்த்தால் சூஷ்ம
உடலின் மனோமய கோசப்பகுதி
இந்த சக்கரங்கள் உயிர்ப்படையும் போது
காமிக சக்தி எனப்படும்
இச்சைகள் வலிமையடைந்து அதிகரிக்க
வேண்டும். இந்து தத்துவத்தின்
படி இந்த சக்கரங்கள்
வித்தியாசமான உணர்வு, பிராண,
தத்துவ மையங்கள், கீழே
உள்ள ஐந்து மையங்களும்
ஒவ்வொரு தத்துவத்துனதும் முழுமையான
மையம். அதனால் தான்
அந்த தத்துவம் அல்லது
தன்மாத்திரை உயிர்ப்புறும் போது
அது குறித்த மஹாபூத்தினை
அறியும் தன்மையினை பெறுகிறான்.
ஆறாவது மையம் சூஷ்ம
மனத்தினுடைய மையம். ஏழாவதான
சகஸ்ராரம் சக்கரம் எனப்படுவதில்லை,
மேலே குறிப்பிடப்பட்ட சதையி
மையம் இந்த ஆறு
சக்கரங்களின் பாகுபாட்டிற்குள் வரவில்லை.
இந்திய பாகுபாட்டில்
சக்கரங்களில் உள்ள இதழ்களின்
எண்ணிக்கை சமஸ்கிருத அரிச்சுவரியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு சமனானது.
ஒரு சக்கரத்திற்கான இதழ்களின்
எண்ணிக்கை அதனைச் சூழ
உள்ள சூஷ்ம நாடிகளினால்
அறியப்படுகிறது. இந்த இதழ்கள்
சூஷ்மமான சப்தத்தினையும் கொண்டுள்ளன,
அவை ஐம்பது (அல்லது
ஐம்பத்தியொரு) ஒலிகள் சமஸ்கிருதத்தின் அட்சரங்களினால் அறியப்படுகிறது.
சமஸ்கிருத மூல
நூற்கள் இந்த சக்கரங்களை
தியானிப்பதால் பெறப்படும் பலன்கள்
பற்றிக்கூறுகின்றன. சிலது பொதுவானது,
அவையாவன நீண்ட ஆயுள்,
பற்றற்ற தன்மை, பாவங்களில்
இருந்து விடுபடுதல், புலன்
களை அடக்குதல், அறிவு,
பேச்சாற்றல், புகழ் என்பன.
இவற்றில் சிலது ஒரு
சக்கரத்தில் மனதினை ஓருமைப்படுத்துவதாலோ அல்லது பல
சக்கரங்களில் தியானிப்பதாலோ கிடைக்கக்கூடியவை.
மற்றையவர்கள் இவற்றை ஒரு
சக்கரத்தினை தியானிப்பதன் மூலம்
பெறமுடியும் எனக்கூறுகின்றனர். ஒருகுறித்த
சக்கரத்தினை தியானித்து அவற்றை
பெற்றதாக சரியாக கூறமுடியாவிடினும் மேற்கூறிய கருத்துக்கள்
சுய கட்டுப்பாட்டினால் (ஸ்துதி
வாத)
சாதிக்கமுடியும். மேலும் ஸ்லோகம்
21 இல் நாபி பத்மத்தில்
தியானிப்பதினால் வரும்
யோக சக்தியினால் உலகை
ஆக்கவும் அழிக்கவும் வல்ல
சக்தி கிடைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த
சக்கரத்தில் தியானித்து சித்தி
பெறுவதன் மூலம் அந்தந்த
சக்கரத்திற்கு மூலமான தத்துவத்திற்குரிய சித்திகளை பெறமுடியும்
எனக்கூறப்பட்டுள்ளது. இவை நிருபிக்கப்பட்டும்(33)
உள்ளன. பண்டிட் அனந்த
சாஸ்திரி(34) கீழ் வருமாறு
கூறுகிறார்; "நாளாந்த
வாழ்கையில் நாம் காணும்
எல்லோரும், வீதியில், பஸாரில்
உள்ளவர்கள் எல்லோரும் உயர்ந்த
பேரின்பத்தினை அனுபவிக்கவே விரும்புகின்றனர்,
ஆனால் முயற்சிக்கும் பலர்
சூஷ்ம உலகத்தின் பிடியில்
சிக்கிக்கொண்டு மாயையில் மூழ்கி
விடுகின்றனர்; ஆறாதரங்களில் ஒன்று
அல்லது சில சக்கரங்களில்
மட்டும் நின்று விடுகின்றனர்.
அவர்கள் எல்லோரும் தமது
நிலைகளில் வேறுபட்ட நிலைகளை
அடைந்துள்ளார்கள். சாதாரண புத்திசாலி
மனிதனில் இல்லாத ஒரு
அரிய ஆற்றலை பெறுவதற்கு
முனைகின்றனர். இந்த செயன்முறை
உளவியல் இந்திய சமூகத்தில்
நன்கு வேலைசெய்கிறது இந்த
நாட்டின் பலபாகங்களிலும் மனிதர்கள்
அலைகிறார்கள்". குண்டலினியினை
எழுப்புவதற்கு முயற்சிக்கும் பெரும்பான்மையினர் ஆன்ம ஈடேற்றத்திற்காக செய்ய முனைவதில்லை.
உயர் யோக தன்மையில்
இருந்து பார்க்கும் போது
குண்டலினி ஆஞ்ஞாவினை கடக்கும்
வரை உண்மையான யோகம்
ஏற்படுவதில்லை. மேலும் சாதகனது
ஆத்மா இந்த சக்கரத்தில்
தியானிப்பதால் "மூன்று உலகத்திலும்
படைத்தல், காத்தல், அழித்தல்
ஆகியவற்றை செய்வதற்குரிய தன்மையினை
பெறுகிறான்" இதுபற்றி உரையாசிரியர்
கருத்து (சுலோகம்-34) " இதுவே
ப்ரஸ்ஹம்ஸ வாத அல்லது
ஸ்துதி வாத அல்லது
உயர்ந்த சுயகட்டுப்பாடு, சமஸ்க்ருத
நூற்களில் குறிப்பிடப்படும் சாதாரண
வாழ்க்கையில் அனுபவிக்ககூடிய உண்மையின்
சூன்ய தன்மை இதுதான்.
இதன் மூலம் மேலும்
சில விடயங்களை அறிந்து
கொள்ளலாம். இந்த மையத்தில்
எல்லா தத்துவங்களும் ஒன்றுபடாமல்
சஹஸ்ராரத்தில் ஞானம்(35) உருவாக
மாட்டாது. இந்த ஞானமே
ஒரு யோகியின் சாதனை
இலக்கும் நோக்கமுமாகும். மறுபிறப்பினை
தடுத்தல் ஒருவன் தனது
சிவஸ்தானத்தில் உள்ள சித்தத்தினை
ஏகாக்கிரப்படுத்துவதன் மூலம்
சாதிக்க முடியும். குண்டலினி விழித்தவுடன்
மிக இலகுவாக ஒருவன்
யோகியாகி யோகத்தின் இறுதி
இலக்கினை அடைந்து விட
முடியாது, மற்றைய வேறுபாடுகளை
வாசகர் தானாக அறிந்து
கொள்ள வேண்டுகிறேன். அதில்
நான் தலையிட விரும்பவில்லை,
இங்கு எனது நோக்கம்
சுருக்கமாக இந்திய குண்டலினி
தத்துவம், மற்றும் நவீன
மேலைத்தேய கருத்து ஆகிய
இரு கருத்துக்களுக்கும் உள்ள
முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதாகும். அதனால்
இந்த வித்தியாசங்களை ஆழமாக
ஆராய விரும்பவில்லை. இந்த
இரு கருத்துக்களும் மாறுபடும்
விதம் சுருக்கமாக எடுத்துரைக்க
கூடிய அளவில் காணப்படவில்லை.
எப்படியாயினும் இந்திய மரபினையும்
நவீன கருத்துக்களையும் அறிந்தவர்கள்
விரைவாக இதனை புரிந்துகொள்வார்கள்.
இந்த நூலின் பிற்பகுதி
இந்த அகவிளக்கம் சார்ந்த
எல்லா செய்முறைகளையும் விளக்குவதற்கு
ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை
சாதனை அடிப்படியில் தேவையான
செய்முறை விளக்கங்களும் தரப்பட்டுள்ளது.
இந்திய கோட்பாடுகள்
மிகவும் தத்துவரீதியிலானவை. இதற்கு
உதாரணமாக ஒரு விடயத்தினை
கூறுவோம். லீட்பீட்டர் குறிப்பிட்டது
போன்று தமது இச்சாசக்தியினை உபயோகித்த நெற்றிக்கண்ணின் மூலம் சிறிய
நுணுக்கு காட்டிபோல் மனக்கண்ணால்
ஆகி சிறிதாவதும் பெரிதாகும்
சித்தியினை இந்துக்கள் எல்லாச்
சித்துக்களும் ஈஸ்வரன் அல்லது
ஆக்க உணர்வினுடைய அனுபூதி
என்பார்கள். இதனுடன் ஜீவாத்மா
எவ்வளவு தூரத்திற்கு ஒன்றியிருக்கிறதோ அந்தளவு உணர்வினை
ஜீவன் பெறும். சக்தியும்
எந்த அளவிற்கு உணர்வு(34)
ஒன்றப்பட்டுள்ளதோ அந்தளவிற்கு
கிடைக்கும்.
இதுவே இந்திய
மரபின் பொதுவான பண்பு,
அது உணர்வினையும் அதன்
நிலைகளையும் பற்றிய ஆழமான
கருத்துக்களை கொண்டிருக்கிறது. உணர்வின்
இந்த நிலைகளின் போதே
உலகின் ஆக்கல், காத்தல்,
அழித்தல் ஆகிய நிலைகளை
உருவாக்குகிறது. பிரம்மா,
விஷ்ணு, சிவன் என்பவை
ஒரே பேருணர்வின் வெறுபட்ட
தொழில் நிலைகள். யோகத்தில்
சாதிக்க நினைப்பது, யோகத்தின்
பலனும் இந்த உணர்வினை
கீழ் நிலையில் இருந்து
மேல் நிலைக்கு மாற்றும்
செய்முறையே ஆகும். எனினும்
இந்த விடயத்திலும் சரி,
மற்றைய விடயத்திலும் சரி
இந்த கோட்பாட்டுகளின் பயிற்சி
மற்றும் அனுபவத்தினை பிரித்தறிய
வேண்டும். ஓரே அனுபவம்
பல்வேறு பயிற்சிகளால் அடைய
முடியுமானவை. இந்த நிலையில்
அனுபவம் மட்டுமே உண்மையானவையாக
கொள்ளப்படும். இந்த நிலையில்
கூறப்பட்ட கோட்பாடுகள் எல்லாம்
பிழையானவை ஆகும் நிலை
ஏற்படும்.
அடிக்குறிப்புகள்
(27) James Morgan Pryse என்பவர் தியோசபிக்கல் சொசைட்டியில் இருந்து பின்னர் Gnostic Society எனும் ஆன்மீக அமைப்பினை தோற்றுவித்தவர், இவரது the apocalypse
unsealed என்ற
நூல் பைபிளில் காணப்படும் தாந்திரீக மறையியலை விளக்கும் ஒரு புத்தகம் ஆகும், இந்தப்புத்தகத்தின் பக்கம் 62 இலிருந்து
ஆர்தல் ஆவலோன் இந்தப்பகுதியினை எடுத்தாள்கிறார் (சுமனனுடைய குறிப்பு)
(28) மேற்குறிப்பிட்ட சாதனையினை செய்பவர்கள் கீழ் சக்கரங்களிலேயே பயிர்சிக்கிறார்கள், இவை பிரயோகங்கள் எனப்படும், இந்த பயிற்சிகள்
நாயிக சித்தி எனப்படும் இட்டுச் செல்லும், இத்தகையவர்கள் ஆரம்பத்தில்
பெண் ஆவிகளை கட்டுப்படுத்தி வேலைகளை செய்வார்கள். ஆனால் இங்கு நாம் உரியாடுவது ஆன்ம விடுதலைக்கான படிமுறைகள் பற்றி, இதில் காமம்
சார்ந்த கறுப்பு வித்தைகள் எதுவும் இல்லை.
(29) மனம், மூச்சு, காம எழுச்சி
ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. யோகியின் இலக்கு
தனது விந்தினை உயர் நிலைக்கு செலுத்துவது, இதனை ஊர்த்துவரேதஸ் என்பர், இதற்கு விபரீத
முத்திரை பயன்படுத்தப்படும்.
(30) நான் அறிந்தவகையில் தியோசபிக்கல் சொசைட்டியானது எதுவித உத்தியோகப்பூர்வ தத்துவார்த்தமும் இல்லாதது. தியோசபிக்கல் என
நான் கருதுவது எல்லாக்கோட்பாடுகளையும் கலந்து அவர்களுடைய அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, நான் மேற்கோள்
குறிக்குள் இடும் வார்த்தைகள் அவர்களால் கூறப்பட்டது என்பதனை குறிக்கவே, பொதுவாக அவை
அவர்களால் முழுமையாக அடையாளம் காணப்படாத ஒன்று.
(31) அதாவது, தியோசபிக்கல் சொசைட்டியை
சேர்ந்த சமஸ்கிருத ஸ்ரீஷா சந்திர வாஸன் தன்னுடைய "யோக தத்துவ அறிமுகம்" எனும் நூலில் லிங்க சரீரம் என்ற பதத்தினை "ஆகாய இருமை - etherical duplicate" எனக்குறிப்பிடுகிறார் (பக் -35). சாதாரண இந்தியர்
ஒருவர் லிங்க சரீரம் - தன்மாத்திரைகளால் ஆன அந்தக்கரணங்களும், இந்திரியங்களும் சேர்ந்த சூஷ்ம உடம்பு அல்லது இன்னுமொரு கருத்துப்படி ஐந்து பிராணன்களை குறிக்கிறது என்பதனை இலகுவாக விளங்கிக்கொள்வார், இன்னுமொரு இடத்தில் (பக்-51)
சூஷ்ம சரீரம் என்ற பதம்சக்கரங்களுடன் தொடர்பு படுத்தி கூறியுள்ளார். அவை நான் இங்கு உரையாடும் நூலுடன் தொடர்பற்ற விடயமாகும்.
(32) புராதன ஞானம், பக்
- 176, டாக்டர். ஏ. பெஸண்ட்
(33) யோக தத்துவ உப நிஷத் பார்க்க, பூமி தத்துவ
சக்கரத்தில் தியானிக்கும் போது பூமிதத்துவத்தின் மீதான சித்திகள் கிடைக்கின்றது. அதே வேளை இந்த சித்திகள் சாதகனுக்கு இடையூறானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(34) ஆனந்த லஹரி பக்-35
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.