எமது பதிவுகளை படித்துவரும் அன்பர்கள் பலர் எமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு சித்தர்களின் வித்தைகளை கற்பதற்கு வழிகாட்டும் படி கேட்டவண்ணம் இருக்கிறார்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருமூலர் வாக்குக்கமைய நாம் எமது குருநாதரிடம் கற்றவற்றை ஆரவமுள்ள அனைவரும் கற்று பயன்பெற இந்த வலைப்பதிவில் பதிந்து வந்தோம். ஆனாலும் நாம் முழுநேரம் இந்த தொண்டில் ஈடுபடமுடியாதவண்ணம் நளாந்த மற்றைய கடமைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன, பல கட்டுரைகள் முழுமையடையாமல் பாதியில் நிற்கின்றன. ஒரு பதிவு எழுதுவதற்கு கணிசமான அளவு நேர அவகாசம் தேவை. இப்படியொரு நிலையில் எமது பதிவுகளை படித்து மானச, யோகசாதனை செய்யவேண்டும் என எண்ணும் அன்பர்களுக்கு உதவுவதற்கான வழி என்ன என்று சிந்தித்த போது குருநாதர் ஒரு எண்ணத்தினை மனதில் உதிப்பித்தார். அதன் படி எமது பதிவுகளை படித்து சித்தர் வழியில் சாதனை புரிய வேண்டும் எனற் தீராத்தாகம் உடைய அன்பர்களுக்கு இங்கு முன்மொழியப்படும் வழிமுறை உதவுவதாக இருக்கும். அது என்ன?
எந்த ஒரு விடயத்தினை கற்பதற்கு சுயபடிப்பு அவசியம், ஏன் எமது குருநாதரும் சரி, அவருடைய குருநாதரும் சரி ஒரு வித்தையினை கற்பிப்பதற்கு முன்னர் அதற்குரிய அடிப்படை கொள்கைகளையும், செய்முறைகளையும் பாடங்களாக எழுதி கொடுத்துவிடுவார்கள், அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கற்று ஆழ்மனதில் பதிப்பித்துகொண்ட பின்னரே அதனை பயிற்சி செய்யவேண்டும். ஆக இந்த வித்தைகள் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் இந்த சுய கற்றலை செய்தல் அவசியமாகும்.
இப்பொழுது உங்கள் மனதில் "சரி நாங்கள், கற்கிறோம், ஆனால் அவற்றினை தருவது யார்?" என கேள்வி எழுவதை நாம் உணர்கிறோம், அதற்கான பதில் "ஆம், எமது குருநாதர் எழுதிய பாடத்தொகுப்புகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் உள்ளது, ஆர்வம் உடைய யாரும் பெற்றுக்கொள்ளலாம். விருப்பமானவர்கள் இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
இந்த பாடத்தொகுப்புகளில் உள்ளடங்கிய பாடங்கள் என்ன?
1. காயத்ரி குப்த விஞ்ஞானம்: இந்த பாடத்தொகுப்பு காயத்ரி மந்திர தீட்சை பெற விரும்பும் சாதகனுக்கு போதிக்கப்படுவது, காயத்ரி சாதனையின் அடிப்படையில் இருந்து, காயத்ரி பிரணாயாமம், காயத்ரி தியானம், காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு, காயத்ரி யாகசெய்முறை போன்ற விளக்கங்கள் எளியதமிழில் பாடங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. இதனை கற்று பயிற்சி செய்யும் ஒருவர் காயத்ரி சாதனையின் மூலம் பல பௌதீக, ஆன்மீக நன்மைகளை பெறும் வழிகளை அறிவார்.
2. எளிய ராஜயோகப்பயிற்சிகள்: பதஞ்சலி யோகம் கூறும் அஷ்டாங்க யோகமான இயம,நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றினை மிக எளிய முறையில் சாதிக்கும் எளிய பயிற்சிகள் அடங்கிய பாடத்தொகுப்பு.
3. இரகசிய வித்யா சாதனை பயிற்சி: குப்த வித்தை என சித்தர்களால் தமது சீடர்களிற்கு கற்பிக்கப்பட்ட அரிய ஞானம், மொத்தம் 23 பாடங்கள், உள்ளடக்கம் வருமாறு: வரவேற்பும் உறுதியும், வித்தியயின் பழமை, பிரபஞ்ச மூலம், பரபஞ்சம் உணர்வுமயம், நினைப்பின் தத்துவம், எண்ணத்துருவங்கள், மன அலையின் செயல்முறை, மூன்று மனங்கள், சாதனை வகைகள்,சாதனைப்பண்பு, இரகசிய வித்யா தளர் சாதனை, இரகசிய வித்யா பிரணாயாமம், சூனிய தாரணை, மனப்பார்வை வளர்ச்சி, மனக் கருத்து வாக்கியங்க்கள், சாதனை தேர்வு, சாதனைக்குறிப்புகள், உடல் சாதனைகள், ஆக்கப்பேறுகள், செழிப்பு சாதனைகள், மனத்தொடர்பு சாதனைகள், கால ஞான சாதனைகள், சூஷ்ம சாதனைகள், முடிவுரை.
4. எளிய தியானப்பயிற்சிகள்: இதில் அடங்கும் பாடங்கள், தியானம் என்றால் என்ன? தியானத்தின் பலன், தியானமும் மனமும், தியானமும் தாரணையும், தியானம் செய்வதற்கான நியமங்கள், தியானத்தேர்வு, உடல் உறுப்பு தியானம், அறாதார விழிப்பு தியானம், காய்த்ரி தியானம், குண்டலினி தியானம், பக்தி தியானம், பிரணவ தியானம், உள்முக தியானம், செயல் தியானம், பிரம்ம லய தியானம்
5. இருதய நோய்க்கு யோக சிகிச்சை: மானச, யோக, சித்த மருத்துவத்தின் மூலம் இருதய நோயினை குணப்படுத்தும் வழிமுறைகள்.
6. ஆண்மை சக்தியிற்கு யோகப்பயிற்சிகள்: மானச, யோக, சித்த மருத்துவத்தின் மூலம் ஆண்மை சக்தியினை பெறும் பயிற்சிகள்.
இப்படி பல நூறு தலைப்புகளில் பாடங்கள் உண்டு, ஆர்வமுடையவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்,
இவற்றை பெற்று நீங்களாகவே கற்றுக்கொண்டு இதுதொடர்பான கருத்துப்பரிமாறல்களை கீழ்வரும் சித்த வித்யா விஞ்ஞான முகப்புநூல் குழுமத்திலும், எமது FACEBOOK கணக்கிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவற்றை எழுதியவர் யோக மஹாரத்னா, டாக்டர். பண்டிட், ஜீ. கண்ணைய யோகியார், அவரது வரலாறு இங்கு காணவும்.
அடுத்த பதிவுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றைய பாடங்களின் விபரங்களைக் குறிப்பிடுகிறோம்.
நன்றி
ReplyDelete