குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 03, 2023

ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டீன்

ஸ்டீபன் ஹாக்கிங், ஐன்ஸ்டீன் போன்றவர்கள் ஏன் மிக உயர்ந்த அறிவியலாளர்களாக மதிக்கப்படுகிறார்கள் என்பதை தமிழில் அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும் என்றால் நாம் புரிந்து கொள்வது அவசியம். 
தமிழில் அறிவியல் உரையாடுவது சற்றுக் கடினமானது: தமிழில் அணிகள் அதிகம்; அணிகள் என்றால் இருப்பதை விட மிகைப்படுத்தி, புகழ்ந்து, சிலேடையாக பேசும் மொழி அதிகம். மேலும் தமிழர்களுக்கு தம்முடைய அறிவியல், பண்பாடு என்ற பெருமை எதுவும் இல்லை; எப்போதும் தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்த்தி மேற்கத்தைய விடயங்கள் மாத்திரம் தான் அறிவியல் என்ற மயக்கம் உண்டு; 
ஸ்டீபன் ஹாக்கிங் தனது " காலத்தின் சுருக்கமான வரலாறு" என்ற நூலில் - தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்தது; இவ்வாறு கூறுகிறார்;
நாம் ஒரு விநோதமான, அற்புதமான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். அதன் வயதையும் அளவையும் ஆக்ரோஷத்தையும் அழகையும் மெச்சுவதற்கு அசாதாரணமான கற்பனை வளம் தேவை. இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் வகிக்கின்ற இடம் முக்கியத்துவமற்றதுபோலத் தோன்றக்கூடும். எனவே, இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவும், இவற்றில் நாம் எங்கே பொருந்துகிறோம் என்பதைக் கண்டறியவும் நாம் முயற்சிக்கிறோம். சில பத்தாண்டுகளுக்கு முன், ஒரு பிரபல அறிவியலறிஞர் (அது பெர்ட்ரன்ட் ரசல் என்று சிலர் கூறுகின்றனர்), வானியல் குறித்துப் பொதுமக்களிடையே ஒரு சொற்பொழிவாற்றினார். பூமி எவ்வாறு சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும், அந்தச் சூரியன் எவ்வாறு எண்ணற்ற நட்சத்திரங்களை உள்ளடக்கிய நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது என்பதையும் அவர் விவரித்தார். அச்சொற்பொழிவின் முடிவில், அந்த அறையின் பின்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதிய பெண்மணி எழுந்து நின்று, அந்த அறிவியலறிஞரைப் பார்த்து, "நீங்கள் இவ்வளவு நேரம் எங்களிடம் கூறிய எல்லாம் அபத்தமானது. உண்மையில், ஒரு இராட்சதக் கடலாமை தன்னுடைய முதுகின்மீது தாங்கிப் பிடித்துள்ள ஒரு தட்டையான தட்டுதான் இவ்வுலகம்," என்று வாதிட்டார். அதைக் கேட்டு அந்த அறிவியலறிஞர் ஒரு பரிகாசப் புன்னகையை உதிர்த்துவிட்டு, "அந்தக் கடலாமை எதன்மீது நின்று கொண்டிருக்கிறது?" என்று அப்பெண்மணியிடம் கேட்டார். "இளைஞரே, நீங்கள் உண்மையிலேயே மிகவும் கெட்டிக்காரர்தான்," என்று கூறிய அப்பெண்மணி, "அந்தக் கடலாமைக்குக் கீழே இன்னொரு கடலாமை அதைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. அதற்குக் கீழே இன்னொரு கடலாமை. இப்படிக் கடைசிவரை கடலாமைகள் ஒன்றையொன்று தாங்கிப் பிடித்திருக்கின்றன," என்று விளக்கினார். 
நம்முடைய பிரபஞ்சத்தை முடிவற்ற ஒரு 
கோபுரமாகக் காட்சிப்படுத்திப் பார்ப்பது இன்று பெரும்பாலான மக்களுக்கு நகைப்புக்குரிய ஒரு விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் அப்பெண்மணிக்குத் தெரிந்திருந்ததைவிட நமக்கு அதிகமாகத் தெரியும் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? விண்வெளியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ, அல்லது உங்களுக்கு என்ன தெரியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதை ஒரு கணம் மறந்துவிடுங்கள். பிறகு, இரவுநேர வானத்தை ஏறிட்டுப் பாருங்கள். அங்கே தெரிகின்ற அந்த ஒளிப் புள்ளிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை சின்னஞ்சிறிய நெருப்புகளா? அவை உண்மையிலேயே என்னவென்று கற்பனை செய்வது கடினமாக இருக்கக்கூடும். ஏனெனில், அவை உண்மையில் என்னவோ, அது நம்முடைய வழக்கமான அனுபவத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு இருக்கிறது.
மேற்குறித்த சம்பவத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தை ஆமைகள் தாங்குகிறது என்பதைக் கேலி செய்யவில்லை! ஏனென்றால் மனிதர்களாகிய எம்மால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது என்பதும் அத்தகைய நிலையில் எமது அறிவிற்கு எட்டியவகையில் நாம் உருவகத்தை எற்படுத்திக்கொண்டு அறிவை ஸ்திரப்படுத்துகிறோம் என்பதையும் உணர்கிறோம்.
தமிழில் அறிவியல் - தமிழர்களின் அறிவியல் என்பதைப் புரிந்து கொள்ள அதன் ஆரம்பகாலச் சிந்த்னைகளை நாம் கேலி பேசாமல் புரிந்துகொள்வது அவசியமாகிறது. 
ஏன் என்றால் அறிவியலில் எமது ஆற்றல் வளர வளர முன்னையது மறுதலிக்கப்படுவது இயல்பானது! அப்படி மறுதலிப்பதற்கு எம்மிடம் மறுதலிக்கக் கூடிய ஒன்று ஏற்கனவே இருப்பதை நாம் உணர வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

ஸாதனா என்றால் என்ன?

  ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்ள இலகுவான, அழகான இயற்கையான வழி ஸாதனை எனப்படும். ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்வது என்பதன் இலக்கணம் இரு...