குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 30, 2023

கஞ்சி வைத்தியம்

அண்மையில் ஒரு சம்பவம்
ஒரு மாணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு!
அண்ணா, சரியான வயிற்றுக்குத்து தாங்க முடியாம ஹொஸ்பிட்டலில் அட்மிட் ஆகிட்டேன்; என்ன செய்வது என்றார்.
தம்பி, இனி வேறென்ன செய்வது, வைத்தியர் தரும் ஆலோசனையைப் பின்பற்றி நடவுங்கள்; எப்போதும் இரட்டைத் தோணியில் கால்வைக்கக் கூடாது! பொறுமையாக எல்லா செக்கப்பும் முடித்த பின்னர் ஆலோசிப்போம் என்றேன். 
தம்பி கொஞ்சம் மெத்தப் படித்தவர்; பெரிய ஆராய்ச்சிப் பதவியில் இருப்பவர்; இந்த கூகுள் தந்த கோதாரி அறிவில் தனக்கு வயிற்றில ஏதோ பெரிய பிரச்சனை என்று மனப்பயம்! 
அடுத்த நாள் மாலை மீண்டும் அழைப்பு கடைசிப் பரிசோதனையும் முடிந்துவிட்டது; அறிக்கைகள் எல்லாம் பார்த்து ஒரு பிரச்சனையும் இல்லை டாக்டர் சொல்லிவிட்டார் வீட்ட போகப்போகிறேன்; ஆனால் வயிற்றில் வலி இருக்கிறது என்றார். 
சரி இனி நமது ஆலோசனையை ஆரம்பிப்போம் என்றேன்! 
இப்போதிருந்து சாப்பாடு கஞ்சி, இஞ்சி, வெள்ளைப்பூடு, பெருஞ்சீரகம், சீரகம், பத்து மிளகு போட்டு அளவா உப்பு போட்டு கஞ்சி மூன்று நேரம்; நல்லா தண்ணி குடிக்கோணும்! 
இவ்வளவுதான் மருந்து! 
அடுத்த நாள் சற்று வலி குறைந்திருக்கிறது; ஒழுங்காக மலம் செல்லத்தொடங்கியிருக்கிறது. 
நல்லது இன்று நாளைக்கும் இதே இதே மாதிரி கஞ்சியே சாப்பிடுங்கோ! 
மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்கு! 
சரி அண்ணா! 
இன்று "அண்ணா, பூரணமாக குணமாகிவிட்டது"
நான் - எனது consultation fee நீங்கள் வைத்தியசாலைக்கு கட்டியதன் இரண்டு மடங்கு அனுப்பி வையுங்கோ!
   
நீதி:
எந்தப் பிரச்சனைக்கும் எடுத்தவுடன் முதலில் பெரிதாக பயப்படக்கூடாது; எளிமையாகச் சிந்தித்து தைரியமாக அணுக வேண்டும். 
உடல் பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் நல்லா சம்பாதித்து ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும். 
குறிப்பு: 
மேற்குறித்த வைத்திய ஆலோசனை சொல்வதற்கு நான் தகுதி பெற்ற அனுபவமுள்ள பதிவு பெற்ற சித்தாயுள் வேத மருத்துவன். 
மேற்குறிப்பிட்ட பதிவு கருத்துச் சொல்ல சிலேடை அணியுடன் சொல்லப்பட்டது; இதை வைத்திய ஆலோசனை என்று எடுத்துக்கொண்டு எவரும் உங்கள் வயிற்றுவலிக்கு அதிமேதாவி வேலை பார்த்தால் அதற்கு கொம்பனி பொறுப்பாகாது.

அகத்திய மகரிஷி சௌமிய சாகரம்

அகத்திய மகரிஷி சௌமிய சாகரம் எனும் நூலில் மிக அழகிய முறையில் ஆறாதார சாதனைகளை வகுத்து தந்துள்ளார்.
இவற்றை அனைவரும் பயிற்சி செய்யும் முறைகள் சிருஷ்டி தனது வகுப்பின் மூலம் வழிகாட்டி வருகிறது.
வரும் குருப்பூர்ணிமா அன்று தொடங்கி 10 நாட்கள் நிகர் நிலையாக இந்த தியான சாதனை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் +94742837401 text message மாத்திரம் அனுப்பவும். அழைக்க வேண்டாம்.
முதலாவது மூலாதார சாதனை:
இதன் பயனாக அகத்திய மகரிஷி கூறுவது
- பிராணகலை சுத்தி எனப்படும் நாடிகள் சுத்தி
- உடல் உறுதி, ஆசன சித்தி
- உடல் ஆரோக்கியம்
03ம் திகதி ஜூலை தொடங்கி 13ம் திகதி 10 நாட்கள் அதிகாலை 04:30 - 05:00 IST மணி வரையுள்ள பிரம்ம முகூர்ந்த நேரம் சாதனை நடைபெறும்.
ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும். 
https://chat.whatsapp.com/KCr4exvTsxsLA2B7Ls8gw0

அகத்திய மகரிஷி சௌமிய சாகரம்

அகத்திய மகரிஷி சௌமிய சாகரம் எனும் நூலில் மிக அழகிய முறையில் ஆறாதார சாதனைகளை வகுத்து தந்துள்ளார்.
இவற்றை அனைவரும் பயிற்சி செய்யும் முறைகள் சிருஷ்டி தனது வகுப்பின் மூலம் வழிகாட்டி வருகிறது.
வரும் குருப்பூர்ணிமா அன்று தொடங்கி 10 நாட்கள் நிகர் நிலையாக இந்த தியான சாதனை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் +94742837401 text message மாத்திரம் அனுப்பவும். அழைக்க வேண்டாம்.
முதலாவது மூலாதார சாதனை:
இதன் பயனாக அகத்திய மகரிஷி கூறுவது
- பிராணகலை சுத்தி எனப்படும் நாடிகள் சுத்தி
- உடல் உறுதி, ஆசன சித்தி
- உடல் ஆரோக்கியம்
03ம் திகதி ஜூலை தொடங்கி 13ம் திகதி 10 நாட்கள் அதிகாலை 04:30 - 05:00 IST மணி வரையுள்ள பிரம்ம முகூர்ந்த நேரம் சாதனை நடைபெறும். 

hacking

எனது கணக்கை hack செய்து எனது 15 க்கும் மேற்பட்ட பதிவுகளை அழித்த அந்த புண்ணியவான் யார்?
ஏன் இந்த விளையாட்டு?  
ஜூன் 19ம் திகதி வரை பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. 
நண்பர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தியின் மூலம் அவதானமாக இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். என்னுடன் உரையாடாமல் எனது பெயரில் இருந்து வரும் எந்த வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். 
இது தவிர எனது பெயரில் வேறு முக நூல் கணக்குகள் எதுவும் நான் பாவிக்கவில்லை! 

Sunday, June 25, 2023

Reading

Reading - Hills - River - this avatar is approximately resembling my preference

வாசித்தல் - மலைகள் - ஆறு : இந்த அவதாரம் தோராயமாக எனது மனவிருப்பத்தை ஒத்திருக்கிறது!

Saturday, June 24, 2023

சாதனை அனுபவ அறிக்கை


சித்த வித்யா குருகுல வழிகாட்டலில், அகஸ்திய மகரிஷியை மூல குருவாக கொண்டு, அகஸ்திய  குலபதி ஸ்ரீ சக்தி சுமனன் அவர்கலின் வழி நடத்தலில், 2018 ஜனவரி முதல் காயத்ரி சாதனை செய்து வருகிறேன்; நான் தேவி மற்றும்  குரு அருளால் 5 ½  ஆண்டுகள் சாதனை ஜூன் 2023 உடன் முடிந்துள்ளேன்எனது சாதனையின் மூலம் என்னுள் பெற்ற மாற்றங்க்ளை நான் இங்கு பகிர்ந்த்துள்ளேன்.

 சாதனை குறிக்கோள்

நன்மை / தீமை ; ஏற்றம்/ இறக்கம் ; இன்பம் துன்பம் எனும் இருமைகளை கடந்து நான் ஆன்மா என்பதனை அறியவேண்டும்.

குரு மண்டல அருளால் கிடைக்கும் சாதனை வழிகாட்டலை அதன்வழி  செய்தல்.

சாதனை வழி பெற்ற குண மாற்றங்களை நிலைத்து இருக்க செய்தல்.

சாதனை மூலம் பெற்ற பலன் கொண்டு கரும வழி இந்த பிறவி கடமைகளை செய்து எனக்கும் பிறர்க்கும் பயனுள்ளவாறு வாழ்ந்திட வேண்டும்.

என்னுள் நான் உணர்ந்த மாற்றங்கள் 

  1. மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.
  2. திட்டமிட்டு அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்து முடித்து விடுவது எனது இயல்பு . ஆனால் பல வேளைகளில் செய்த காரியத்தில் திருப்தி இன்மை அல்லது முடிவில் மிகவும்  சோர்வாகிவிடும். திட்டமிட்டவாறு வேலைகளை செய்து முடிக்காவிடில் மனவருத்தத்திற்கும் ஆளாகிவிடுவேன்இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு செய்யும் காரியங்களின் அனைத்து படிமுறைகளிலும் கவனத்தை செய்வதனால் மனம் திருப்தியாக உள்ளது. திட்டமிட்டவாறு காரியங்கள் நிறைவுறாவிடினும் மனம் தளராது அடுத்த காரியத்தை நோக்கி செல்லும் பக்குவம் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்காரியத்தில் ஈடுபடினும் மனம் எவ்வித சலனம் இன்றி அமைதியாக உள்ளது.
  3. எனக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை சமமாக பார்க்கும் பாவம் ஏற்பட்டுள்ளது. நன்மை தீமை எனது சித்தத்தில் ஏற்படுத்தியுள்ள பதிவு என்பதனை உணர்கிறேன். ஆகையால் நல்ல அனுபவங்கள் மூலம் பெற்ற ஞானத்தை தொடர்ந்து எடுத்து செல்கிறேன். தீய அனுபவங்கள் என்னுள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை உணர வைக்கும் வழிகாட்டியாக பார்க்கிறேன்.
  4. மனம் ஏகாக்கிர நிலையில் ஒரு பொருளில் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றுள்ளது. இதனால் மனம் அலைபாயும் தன்மை குறைந்துள்ளது.
  5. மனதில் உறுதியுடனும் துணிவுடனும்  செயல்படுவது அதிகரித்துள்ளது.
  6. நான் குறைகள் அதிகம் உடையவள் என என்னை தாழ்த்தி கொள்வது அதிகம். ஆகையால் எதிலும் perfection எதிர்பார்ப்பேன், அனால் குறை நிறைகளுடன் நிறைந்ததே  வாழ்க்கை என்பதனை உணர்ந்து, எதையும் இலகு பாவனையோடு கையாளும் பக்குவம் அதிகரித்துள்ளது.
  7. தற்போது நான் தெய்வ குணங்கள் நிறைந்தவள், தெய்வ சக்தியுடையவள், தீமைகள் அண்டாதவள் என உணர்வதால். என்னிடம் உள்ள தெய்வ குணங்கள் சக்தி வெளிப்படும் விதமாக எனது செயல்களை அமைத்துக்கொள்கிறேன். தீயவை அணுகாமல் இருக்க தேவையானதை செய்கிறேன்.
  8. முன்னர் எனது கருத்துக்களை குடும்பத்தாரோ அல்லது அலுவலகத்திலோ முன்னிறுத்துவதில் மிகவும் சிரமமப்பட்டுள்ளேன்இப்பொழுது சரியான முறையில் புரியும் வண்ணம் கூறுவதால்

பிரார்த்தனை

இந்த பிறவிக்கு வெளிப்பட்ட  பிராரப்த கருமங்களை தேவியின் அருளால் முடித்து ஆன்ம முன்னேற்ற பாதையில் செல்லவேண்டும்.

 

ஜெபம் முடித்துள்ள  விபரம்

சாதனை நாட்கள்

1,912

காயத்ரி ஜெப எண்ணிக்கை

1,013,788

தினம் 5 மாலைகள்

நாராயண காயத்ரி ஜெப எண்ணிக்கை

113,,869

 

சித்த வித்யா குருமண்டலம்

16,493

அகத்தியர் குரு மந்திரம்

239,827

 

கணபதி மூல மந்திர ஜெபம்

102,304

மகாலஷ்மி மந்திர ஜெபம்

13,137

மஹாலட்சுமி காயத்ரி

151,527

 

ஸ்ரீ மஹாலட்சுமி  மூல மந்திரம்

134,012

கணபதி காயத்ரி

41,072

ப்ராஹ்மி மாதா :

24,804

சனீஸ்வர காயத்ரி

17,246

சந்திர காயத்ரி சாதனை

16,623 

பிரஹஸ்பதி  காயத்ரி சாதனை

18,518

செவ்வாய்   காயத்ரி சாதனை

18,306

சுக்கிரன் காயத்ரி சாதனை

14,279

ராகு காயத்ரி சாதனை

22,266

சூர்ய காயத்ரி சாதனை

116906

புத காயத்ரி சாதனை

16,906

கேது  காயத்ரி சாதனை

16,000

 ம்ருத்யுஞ்ஜய மந்திர அனுஷ்டானம்

157,830

துர்கா மூல மந்திரம்

109,892

ஸ்ரீ ராதா காயத்ரி

100,494

வராஹி அனுஷ்டானம்

116,000

 

 

 

Monday, June 19, 2023

யோகாசன வகுப்புகள்

Online யோகாசன வகுப்பு தொடங்கினால் எத்தனை பேர் கற்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?
உண்மை ஆர்வமுடையவரகள் பதிலளியுங்கள் - ஒரு திட்டமிடலுக்காக!

Friday, June 16, 2023

ஆன்மீகம்

நான் அடிப்படையில் ஒரு system and structure ஐ அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பவன், பணியாற்றுபவன்; எனது ஆன்மிகமும், வழிகாட்டலும் அப்படித்தான் இருக்கும்! மனம் போனபோக்கில் ஆன்மீகம், கடவுள், அற்புதம் என்று தமது மனதைச் செம்மைப்படுத்தாமல் கற்பனைக் கதையளப்பவர்கள் என்னிடம் வழிகாட்டல் பெறுவது சிரமம்! 
இறைவன் விதிப்படி இயங்குபவன்; பிரபஞ்சம் விதிப்படி இயங்குகிறது; ஆகவே நாம் எந்தவொரு ஆன்ம சாதனையைப் பயிற்சிப்பதானாலும் நாம் அதற்குரிய விதிப்படியே இயங்கவேண்டும்; அது மந்திர சாதனையாக இருந்தாலும் சரி, தந்திர சாதனையாக இருந்தாலும் சரி, யோக சாதனையாக இருந்தாலும் சரி! 
இப்படி பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் தான் பெற்ற நன்மைகளைப் பட்டியலிட்டு அனுப்பியுள்ளார்; மற்றவர்களும் உத்வேகம் பெற இங்கு பதிவிடுகிறேன். 
Spiritual practice is for transforming our personality - நாம் புறவேடங்களை மாற்றிக் கொண்டு மற்றவர்கள் மதிப்பைப் பெறுவதல்ல ஆன்மீகம்! எம்முள்ளே பண்பில், குணத்தில் உருமாற்ற பெறுதலே சாதனை. 
ஒருவரின் வாழ்க்கை நிலையை எம்மால் உயர்த்த முடியுமாக இருந்தால் அதுவே உலகில் எமக்குக் கிடைக்கக் கூடிய உச்ச பட்ச சந்தோஷம்! அப்படியொரு சந்தோஷம் கீழே! 
*******************************************
இதுவரை செய்த சாதனையில் நீங்கள் பெற்ற நன்மைகள் பற்றிய உங்கள் அவதானிப்பு கருத்து
When I started my Sadhana I was like a basic human with a lot of Greediness soon after I started my life started changing in an unexpected way 
1. Started seeing everyone in the same as me ( there is no upper class or lower class everyone should be equally treated )
2. Stopped Smoking 
3. Stopped Drinking 
4. More Concerned about my family 
5. Started accepting things as it is (No Complaints)
6. When I make a decision start focusing on the Good and bad outcome 
7. More attachment to god 
8. increased Humbleness 
9. Increased Memory Power 
10. Increased Concentration 
11. Started Spreading Love instead Hate 
12. Learnt How to live a life in a Simple way 
Kindly Find the details Required Anna 
Thanks, Anna  

சதாசிவ மூர்த்த தியான பலன்

நாம் உருவங்களை கண்களால் பார்த்து மனக்கண்களில் காணும் போது எமது ஆழ்மனமாகிய சித்தத்தில் குறித்த எண்ணங்கள் சிந்தனைகள் தூண்டப்படுகிறது. 
துன்பத்தையும் தீமையையும் பார்த்தால் சித்தத்தில் துன்பமும் தீமையும் தூண்டப்படும். இப்படித் தூண்டப்படும் எண்ணங்களினால் எமது மனமும் புத்தியும் செல்வாக்குச் செலுத்தப்படும் போது நாம் அந்த வழியிலேயே நடந்து துன்பத்தை அடைய ஆரம்பிக்கிறோம். 
நாம் சதா காலமும் மங்களத்தையே அடைய வேண்டும் என்றால் நாம் தியானிக்க வேண்டிய ரூபம் சதாசிவம் - எக்காலத்திலும் மங்களமான நிலை. 
இறைவனின் உண்மையான நிலை மனம், வாக்குக்கு அகப்படாத பரசிவ நிலை; இந்த நிலையை ஆரம்ப நிலை சாதகர்கள் பெற முடியாது என்பதால் இறைவனின் ஆற்றலை மானிடர்கள் பெறக்கூடிய நிலை சதாசிவ நிலை. 
இந்த சதாசிவ நிலை பஞ்ச பிரம்ம நிலைகளின் ஒன்றிணைவு. சிவலிங்கம் என்பது இந்த பஞ்ச பிரம்ம நிலைகளும் ஒன்றிணைந்த ஒளி ரூபமான நிலை. 
இவை சாதகனுக்கு பயன்படும் நிலையில் வெளிப்படும் போது 
சத்யோஜாதம்
வாமதேவம்
அகோரம்
தத்புருஷம்
ஈசானம்
என்று ஐந்து நிலைகளாக வெளிப்படுவதே சதாசிவத்தின் ஐந்து முகங்கள்.
சதாசிவருடைய உடல் வித்யா தேகம் எனப்படுகிறது; சகல வித்தைகளையும் உள்ளடக்கியது. 
எமக்கு குறித்த ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாத போது நாம் அந்தப் பொருளினால் எல்லைப் படுத்தப்படுகிறோம். குறித்த பொருளைப் பற்றிய பரிபூரண அறிவு வாய்த்தால் நாம் அந்த எல்லைகளைத் தாண்டிச் செல்கிறோம். எமது அறிவு பெருக பெருக நாம் எமது எல்லைகளைக் கடக்கிறோம். சதா சிவ தத்துவம் என்பது நாம் எப்போதும் மங்களமாக இருக்க எல்லாவற்றையும் பற்றிய அறிவு - வித்தையினைப் பெற வேண்டும் என்பதாகும். 
சதாசிவ தியானம் சகல வித்தைகளையும் அருளக்கூடியது.

Thursday, June 15, 2023

காயத்ரி சாதனை

எவருக்காவது காயத்ரி சாதனை என்றால் என்ன என்று புரிந்து கொள்ள விரும்பினால் யுகரிஷியின் சுயசரிதை என்ற இந்த நூலைப் பரிந்துரைக்கிறேன். 
இதைப் படிப்பதன் மூலம் இறை சாதனை என்பது வெறுமனே கண்களை மூடி ஏதோ கற்பனை செய்யும் சடங்கல்ல! எமது ஆளுமையை தெய்வீகத் தன்மையுடையதாக்கும் ஒரு படிமுறையான பயிற்சி என்ற தெளிவு கிடைக்கும். 
ஒரு தொகுதி நூலை பலவருடங்களுக்கு முன்னர் வாங்கிக்கொண்டுவந்து பலருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மாணவர் வீட்டில் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தது அப்படியே மறந்து போய்விட்டது. 
இன்றுதான் வெளிப்பட்டது;
கொழும்பில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். 
புத்தகம் இலவசம் 
பெற விரும்புவர்கள் உள்பெட்டியில் விண்ணப்பியுங்கள்! 
15 புத்தகங்கள் உண்டு! முதலில் வருபவருக்கு முன்னுரிமை!

STEM கல்வி வளர்ச்சியை எப்படி அமுல்படுத்துவது - சில சிந்தனைகள்

மலையகத்தில் STEM கல்வி முன்னேற்றத்தை Dr. Kumaravelu Ganesan Dr. Nava Navaratnarajah Dr. Nishānthan Ganeshan ஆகியோர் STEM-Kalvi ஊடாக முன்னெடுக்கிறார்கள். மாத்தளை பாடசாலை அதிபர்கள் குழுவில் பகிர்ந்து கொண்ட சில சிந்தனைகள் அனைவருக்குமாக! 
அதிபர்களே, ஆசிரியர்களே 
நாம் மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்கு சில அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. அவற்றை நான் இங்கே கீழே பட்டியலிட்டுள்ளேன். 
இது தொடர்பாக உங்கள் பாடசாலை விஞ் ஞான, தொழில் நுட்ப ஆசிரியர்களுடன் மேலதிகமாக கலந்தாலோசித்து அறிவுரைகளை வழங்கக் காத்திருக்கிறோம். 
இயற்கை அறிவியல், உயிரியல், பௌதீகவியல், கணிதம், புள்ளிவிபரவியல், சமூக அறிவியல், அரசறிவியல், பொருளியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பரந்த பொருளில் நாம் அறிவியலை - விஞ்ஞானத்தைக் குறிப்பிட முடியும். 
மேற்குறித்த துறைகள் அனைத்திலும் அறிவைப் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் முறை அறிவியல் முறை - scientific methods என்று சொல்லப்படுகிறது. 
நாம் ஏன் அறிவியல் முறைகளை படிக்க வேண்டும்? விஷயங்கள் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது, கணிப்புகளைச் செய்வது நடகப்போவதைக் கணிப்பது மற்றும் தவறுகளைத் தடுப்பது மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு நம்பகமான முறை அறிவியல் முறையாகும். இந்தச் சிந்தனை மாணவர்களிடையே தூண்டப்பட வேண்டும். 
ஆராய்ச்சியில் மிக முக்கியமான கருவி எப்போதும் மனிதனின் மனதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை (பெவரிட்ஜ், 1957). ஹக்ஸ்லியின் (1863) கூற்றுப்படி, விஞ்ஞான விசாரணையின் முறை மனித மனதின் செயல்பாட்டின் வெளிப்பாடே தவிர வேறில்லை. 
விஞ்ஞான முறை என்பது அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்து அறிவைப் பெறும் முறையாகும். 
விஞ்ஞான முறை என்பது நிகழ்வுகளை ஆராய்வதற்கும், புதிய அறிவைப் பெறுவதற்கும், அல்லது முந்தைய அறிவை சரிசெய்து ஒருங்கிணைப்பதற்குமான நுட்பங்களைக் குறிக்கிறது (Goldhaber and Nieto 2010).
நியுட்டனின் கருத்துப்படி ஒரு அறிவு விஞ்ஞானம் என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு விசாரணை முறையானது, குறிப்பிட்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு உட்பட்டு கவனிக்கத்தக்க, அனுபவபூர்வமான மற்றும் அளவிடக்கூடிய ஆதாரங்களை சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் (நியூட்டன், 1726).
விஞ்ஞான முறை என்பது முறையான பரிசோதனை, அவதானிப்பு, அளவீடு மற்றும் உருவாக்கம், சோதனை மற்றும் கருதுகோள்களை மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கொண்ட செயல்முறைகளின் தொகுப்பாகும்.
இப்படியான சிந்தனை முறையை நாம் மாணவர்களிடையே வளர்க்க முடியுமா? அதற்கு என்ன செய்ய முடியும்?
அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

சிவ சீவ ஐக்கியம் - மெய்ப்பொருள் இரகசியம் - 02

சிவஞானசித்தியாரிற்கு மாதவச் சிவ ஞானயோகிகள் எழுதிய உரைப்பாயிரத்தில் "சிவ சீவ சம்பந்தத்திற்கான 13 உவமைகளை இங்கு எளிய தமிழில் காண்போம்:
அடுத்து அறியப்படும் நிலை பற்றிய உவமைகள்.... 
எள்ளாகிய சீவனின் சிவம் நெய்யாக இருக்கிறது என்று எண்ணி சீவனிற்குள் சிவம் இருக்கிறது என்று எண்ணி மயங்கிவிடக்கூடாது என்று அடுத்த உவமானம் தீ இரும்பு சொல்லப்படுகிறது. 
இங்கு தீ சிவம், இரும்பு சீவன்; எப்படி தீ இரும்பை உருக்கி தனது ஆற்றலை வெளிப்படுத்தி இரும்பைச் சுத்திக்கிறதோ அப்படி சிவம் உயிரிற்குள் இருந்தாலும் மலங்களை நீக்க வல்ல அக்கினி தத்துவமாய் இருக்கிறது. சிவத்தை சீவனுக்குள் உணரத்தொடங்கும் போது அது தீயாக ஒருவனில் வெளிப்படுகிறது. இரும்பை உருக்கும் போது அதனில் தீ வெளிப்பட்டாலும் அதைத் தனியாக உணர முடியாது. 
இதனால் உயிராகிய சீவன் இல்லாமல் சிவம் இல்லையா என்றால் அதற்கு உவமானம் "பாணியுப்பு" நீரில் கலந்த உப்பு! உப்பில்லாமல் நீர் தனித்து இருக்கும்! அதுபோல் சீவன் இல்லாமல் சிவம் இருக்கும் ஆனால் சிவத்தில் கலந்தால்தான் அது சீவன்! 
இப்படி உவமானம் சொன்னால் உப்புக்கலக்காத நீர் இருப்பதால் உயிர் சிவத்தின் தொடர்பில்லாத நிலை ஏதும் இருக்கிறதா என்றால் அப்படியொரு நிலை இல்லை என்பதற்கு உவமானமாக "விண்ண நிலம்" என்ற உவமானம் தரப்பட்டிருக்கிறது. காற்று எப்படி ஆகாயத்தைவிட்டு நீங்காமல் ஆகாயம் இடம் கொடுப்பதால் அசைகிறதோ அதுபோல் உயிரின் அசைவு என்பது சிவத்திற்குள்ளேயே இருக்கிறது. 
அடுத்த உவமானம் உடல் உயிர்; உடலை உயிர் எப்படிச் செலுத்துகிறதோ அப்படி உயிரை சிவம் அசைவிக்கிறது. உடல் இயங்குவதற்கு ஆதாரம் உயிர்; உயிர் இயங்குவதற்கு ஆதாரம் சிவம். உயிர் விழிப்பு நிலையில் ஸ்தூல உடலையும், கனவு நிலையில் சூக்கும உடலையும், சுழுத்தியில் காரண உடலையும் இயக்குவது போல் சிவமாகிய இறைவன் வெவ்வேறு நிலைகளில் உயிரை இயக்குவானோ என்ற கேள்விக்கு எக்காலத்திலிரும் நீரைவிட்டுப் பிரியாத நிழல் போன்று நீர் நிழல் உவமானம் கூறப்பட்டது; உடலை இயக்கும் உயிர் அவத்தை மாறுபடுவதற்கு ஏற்ப மாறுவது போல் உயிரை இயக்கும் சிவம் மாறுபாடுகளை அடைவதில்லை. 
உயிரை இயக்கும் சிவம் எக்காலத்திலாவது உயிரை விட்டு பிரிந்து நிற்குமா என்ற கேள்வி எழுந்தால் இல்லை அது நீருடன் நிழல் இருப்பது போல் பிரியாதது என்ற உவமை சொல்கிறார். இங்கு நீர் ஆன்மா நிழல் சிவம். 
நீரானது தனக்குள் உவர்ப்பு, கைப்பு முதலிய சுவைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு எப்படி நிழலைத் துணைகொள்வதில்லையோ அப்படி சீவன் தான் புலன் களால் செய்யும் கலப்பிற்கு இறைவன் உதவி தேவைப்படுவதில்லை. 
இப்படி கலப்பிற்கு இறைவனாகிய நிழலின் உதவி தேவைப்படாவிட்டாலும் அனுபவத்தை அறிவதற்கு இறைவனது உதவி தேவை என்பதை உச்சிப் பளிங்கு என்ற உவமையால் சொல்லுகிறார். சூரியனின் ஒளி அருகில் இருக்கும் போது பளிங்கு தன்னுள் ஏற்று தெறிப்படையச் செய்து பல வண்ணங்களை உருவாக்கி, சூரியன் உச்சியில் இருக்கும் போது சிதறல் இல்லாத எதையும் பற்றாத வெள்ளை ஒளி உருவாகுவது போல் சீவனுள் சிவம் புலன் களால் அனுபவத்தைப் பெற்று இயக்கும் போது சிதறுகின்ற வண்ண ஒளி போலவும், முக்திக்காலத்தில் இறைவனோடு உயிர் கலந்து வேறுபாடு அற்ற நிலையை அடையும் என்பதை உச்சிப் பளிங்கு என்ற உவமையால் கூறுகிறார். 
உச்சிப்பளிங்கு என்ற நிலையில் பளிங்கு தனது நிலையை இழப்பதில்லை; அப்படியென்றால் முக்தி நிலையில் சீவன் சிவத்தினுள் அடங்குவதில்லையா? என்ற கேள்விக்கு முக்திக்காலத்தில் சீவனுக்கு தான் என்ற தனித்த அறிவு நிலை இல்லாமல் போய் சிவத்துள் மறையும் என்பதற்கு உவமானமாக பகல் விளக்கு என்ற உவமை தரப்பட்டுள்ளது. பகலில் விளக்கேற்றினாலும் அது சூரிய ஒளி இருப்பதால் பிரயோசனம் இல்லாதது போல் முக்தி நிலை அடைந்த சீவனது தனித்த நிலை புலப்படாது. 
அப்படியென்றால் பகல் காலத்து விளக்கு பயனற்றது போல் முக்தி அடைந்துவிட்டால் உயிருக்கு இன்ப அனுபவம் எதுவும் இல்லையா என்ற கேள்விக்கு பதிலாக பால் நீர் என்ற உவமை தரப்படுகிறது. எப்படி பால் நீரை தனக்குள் எடுத்துக்கொண்டு நீரிற்கு பாற்ச் சுவையைத் தருகிறதோ அப்படி சிவம் சீவனைத் தன்னுள் அடக்கி சிவமாக்கி விடுகிறது. 
இப்படிச் முக்தியனுபவத்தில் சிவமாகி அனுபவிப்பதால் சிவத்திற்கு நிகராக ஒளியுடையதா உயிர் என்று எண்ணி மயங்கி விடாமல் இருக்க, எப்படி கண் வெளியில் சூரியனதும் புற ஒளி இன்றியும் பிரகாசிக்காதோ அப்படி உயிரிற்கு சிவமின்றி ஒளியில்லை! ஆகவே கண்ணிரவி உவமை குறிப்பிடப்பட்டது. 
கண்ணொளியும் சூரியனொளியும் கலந்து நின்றாலும் கண்ணும் சூரியனும் வெவ்வேறு இடத்தில் இருப்பதால் உயிரின் அறிவும் சிவத்தின் அறிவும் கலந்தாலும் இரண்டும் வேறு வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றுபவர்களுக்கு கண்ணுக்குள் உண்மையில் இருந்து பார்ப்பது உணர்வும் அதிலிருந்து வரும் ஒளி என்ற உண்மையை உணர உணர்வொளி என்ற உவமானம் சொல்லப்பட்டது; இறைவன் உயிரிற்குள் உணர்வு ஒளியாய் நிற்பதால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது என்று கூறினார். 
உடல் உயிர்
நீர் நிழல்
உச்சிப் பளிங்கு
பகல் விளக்கு
பால் நீர்
கண்ணிரவ் 
உணர்வொளி
ஆகிய ஏழு உவமைகளும் சிவமும் சீவனும் உடனாய் நிற்றலை விளக்குபவை.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...