குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 31, 2021

அநீதிகளைக் கண்டு பொங்குதல்

சில நாட்களாக ஒரு பிரபல அரசியல்வாதியின் வீட்டில் ஒரு ஏழைச்சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு பொங்கும் இளைஞர்களைப் பார்க்கிறோம்! 

ஆத்திரம் ஒரு அரிய ஆற்றல்! அதை பால் சட்டியில் பொங்கி வழிந்து அடங்கி கருகுவது போல் பாவிக்கக்கூடாது! எமது சமூகத்தில் ஒரு சிறுமிக்கு அப்படியொரு நிலை ஏன் ஏற்பட்டது என்று சிந்திக்க வேண்டும்! 

மேலும் கிளப் ஹவுஸில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று அரட்டை அடிப்பதில் பயன் எதுவுமில்லை. செயல் வேண்டும்!

எதிர்காலத்தில் எமது சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இருக்க வேண்டும். 

நாம் பெருந்தோட்டத்தில் வாழும் எமது உறவுகள் மேம்பட எமது தகுதிக்குள் என்ன உதவி செய்கிறோம் என்று பார்க்க வேண்டும்! 

எங்கள் மனம் எப்படி இயங்குகிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்! தோட்டத்திலிருந்து படித்து வந்தபின்னர் மீண்டும் எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தினை முன்னேற்ற நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். 

சிறு மாத வருமானத்தை ஈட்டக்கூடிய சிறிய தொழில்கள் உருவாக்கப்படவேண்டும். பணமுள்ள பணக்காரர்கள் முதலிட வேண்டும். 

ஆலயங்களில் சேரும் பெருந்தொகையான பணத்தினை வீண் ஆடம்பரத்திற்கு சேர்க்காமல் சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு பாவிக்க வேண்டும்! 

தனது தேவையற்ற தேவைகளை அகற்றி பணத்தை சமூக முன்னேற்றத்திற்குப் செலவிட வேண்டும். 

கற்றறிந்தவர்கள் தமது நேரத்தை சமூகம் முன்னேறத் தரவேண்டும். 

1) கல்வி முன்னேற்றம்

2) பொருளாதார முன்னேற்றம்

3) அடிப்படை உட்கட்டமைப்பு வசதி

இந்த மூன்று தளங்களிலும் எல்லா வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும்படி திட்டம் வகுக்க வேண்டும்! 

இவற்றை மேம்பட அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு பிச்சைக்கார அரசியல் செய்யாமல் எம்மிடம் இருக்கும் தொழிலதிபர்கள், பணவசதி படைத்தவர்களின் ஆற்றல் ஒன்றிணைக்கப்பட்டு சமூகத்திற்குச் செலுத்தப்பட வேண்டும். 

internet coverage இல்லை, மாணவர்கள் படிக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்று facebook இல் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அதைத் தீர்க்க டயலோக், SLT இன் சிரேஷ்ட பொறியலாளருடன் ஆலோசனை செய்து பிரச்சனையைத் தீர்வு செய்யவேண்டும்! coverage இல்லாத ஊரிற்கு coverage கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்குரிய மாற்று யோசனை என்னெவென்று செயற்பட வேண்டும்!

தலைவன் வருவான், எம்மைக் காப்பாற்றுவான் என்று பொன்னியின்செல்வன் மனப்பாங்கில் இருக்காமல் பிரச்சனைக்குத் தீர்வு தர ஒவ்வொரு இளைஞனாலும் முடியும்; அதற்குரிய அடிப்படை அறிவும் திறனும் என்னவென்று பயிற்றுவிக்கப்பட வேண்டும்! 

நாம் ஒவ்வொரு முறை அநீதி நடக்கும் போதும், அழிவு நடக்கும் போதும் அதை இட்டுப் புலம்புவதையே வாடிக்கையாக்குகிறோம்! தூர நோக்குடன் அந்த சந்தர்ப்பம் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையானதை செய்யாமலிருக்கிறோம்!


Wednesday, July 28, 2021

ஊர்கூடி தேர் இழுத்தலும் மனித சக்தியும்

எனக்கு மாத்தளையில் மாரியம்மன் கோவில் தேரைப் பார்கும் போதும், நல்லூர் தேர் எனும் போதும், 07 அடுக்கு 400 தொன் எடையுள்ள திருவாரூர் ஆழித்தேர் எனும் போதும் எப்போதும் கேள்வி வரும்? 

இவ்வளவு பெரிய தேர் எதற்காக என்று? 

சூழலியல் படித்த பின்னர்தான் விளங்கியது நாம் தனியாக இயங்கவில்லை, எப்போதும் ஒரு தொகுதியாகத்தான் இயங்குகிறோம் என்று! சமூகம் ஒன்று கூடி ஒத்திசைந்து இயங்கத்தான் தேரிழுப்பது என்று! 

சூழலில் சூரியனிலிருந்து வரும் ஆற்றலை தாவரம் கவர்ந்து கொள்ள தாவரத்திலிருந்து தாவர உண்ணி கவர்ந்துகொள்ள, தாவ உண்ணியை ஊனுண்ணி கவர்ந்துகொள்ள, இறுதியாக இவை எல்லாம் மண்ணிற்குள் சென்று சக்தி சேமிப்பாக மாறி இந்த பூமியை இயக்கிக்கொண்டிருக்கிறது. 

ஒவ்வொன்றும் மற்றையதில் தங்கியிருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றயது இல்லை! 

ஒரு சூழற்றொகுதி ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றுக்கொன்று உதவியாக ஒத்திசைந்தே சூழற்றொகுதிகள் உருவாகின்றன! 

மனிதன் வித்தியாசமானவன்! மனம் என்ற கருவியும் இது விரிவடைந்து புத்தி என்ற கருவியும், விகாரமடைந்து "நான்" என்ற அகங்காரத்தையும் உடையவன். மனிதன் தன்னையே சூழற்றொகுதியின் மையமாக நினைப்பவன்! தான் நடப்பதற்கு, வாழ்வதற்கு மரங்கள் இடையூறாக இருக்கிறது என்று காடழிப்பவன்! தான் தொழிற்புரட்சி, தொழில்நுட்ப புரட்சி செய்கிறேன் என்று 300 மில்லியன் வருடங்களாக உருவாகிய நிலத்தடி எண்ணெயை தோண்டி எடுப்பவன். வானமும், பூமியையும் அறிந்து இயற்கைக்கு போட்டியாக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதை அடக்க வேண்டும் என்று உத்வேகம் கொண்டவன். 

இந்த நான் என்ற இயல்பு இயற்கைக்கு முரணானது! செயற்கையானது! மனிதன் தனது ஆற்றலிற்குள் தன்னை உச்சமாக செயற்படுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட மையப்புள்ளி இது! எப்போதும் நான் செய்கிறேன், நான் தான் சிறப்பானவன்! நாம் மட்டும்தான்! என்ற உத்வேகத்தால் ஆர்வமாகச் செயற்படத்தொடங்கும் அவன் சிறிதுகாலத்தில் நான் மட்டும்தான் அறிவானவன், நான் மட்டும்தான் சிறப்பானவன் என்ற எண்ணம் உருவாகத்தொடங்க அவன் உருவாக்கிய வலையிலேயே மாட்டிக்கொள்கிறான். 

இந்த ஆணவத்தை உருவாக்கத்தொடங்கும் மனித குழுக்கள் ஒன்றுக்குள் ஒன்று ஒத்திசைந்து வலிமை பெறும் மார்க்கத்தினை இழந்து விடுகிறது! பிரச்சனைகளைத் தீர்க்க நான் என்ற சிந்தனை நாம் என்று குழுவாக மாறி மைய நாட்ட விசையை உண்டாக்க வேண்டும்! பிரச்சனையின் ஒருபகுதி எனக்குப் புரிகிறது; மறுபகுதியைப் புரிந்தவரை இணைத்தால்தான் என்னால் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற பரந்த பார்வை வேண்டும்! 

இப்படி ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைந்து, உதவி செய்து குழுவாக வலிமை பெறும் ஆற்றலை விட நான் பெரியவன், எனக்குத்தான் மற்றவர்களை விட அறிவு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்க்கும் சமூகத்தில் மைய நீக்க விசை அதிகமாகி அந்த சமூகம் சிதறிப்போகிறது. நீர்த்துப் போகிறது. 

ஏக தலைவன் கொண்ட குழுக்கள் அழிந்து போவதற்குரிய காரணம் இயற்கையில் ஆற்றல் ஒரு மையத்தில் குவிக்க முடியாது என்பதுதான்! சூழலியலில் சக்திப் பாய்ச்சலைப் புரிந்துகொண்டால் சக்தி ஒவ்வொரு தளமாக கீழிறங்கி, சூழற்றொகுதி ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்து வாழ்வதைப் புரிந்துகொள்வதால்தான்! 

ஏன் தேரை பெரிதாகச் செய்து தேரிழுக்க வேண்டும்? ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற முடிவிற்கு முற்காலத்தில் வந்திருப்பார்கள் என்பதை இப்படி விளங்கிக்கொள்ளலாம். 

இயற்கை சூழற்றொகுதியைப் பார்த்த புத்திசாலித் தமிழன் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் பலம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிந்துகொண்டான்! 

ஆனால் " நான்" "எனது சாதி" "எனது ஊர்" என்ற வலிமையான அகங்காரம் எண்ணம் கொண்டவனை ஒன்று சேர்க்க ஒரு வழிமுறை தேவை! அனைவரையும் இழுக்க வைக்க வேண்டுமென்றால் தேர் மிகப்பெரிதாக இருக்க வேண்டும்! ஊரே கூடி தேரிழுக்க வேண்டும். ஒற்றுமையும் ஒத்திசைவும் வேண்டும்!


Tuesday, July 27, 2021

சூழலியற் பிரச்சனைகளும் யானை தடவிய அந்தகர்களும்

இன்று அனைவருக்கும் சூழலியல் பிரச்சனைகளில் ஆர்வம் இருக்கிறது. அதேபோல் தமது பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. 

மனிதன் பரிணாமத்தில் எப்போது சூழலைக் கட்டுப்படுத்தி விவசாயத்தைச் செய்ய ஆரம்பித்தானோ (அண்ணளவாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) அப்போதே இயற்கையில் ஒத்திசைந்து வாழ்வதை விடுத்து இயற்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான். 

இதிலிருந்து தொழில்புரட்சி, அறிவியல் புரட்சி, தொழில்நுட்ப புரட்சி என்று இயற்கையை மீறி கட்டுப்படுத்தும் சக்தியை வலுப்படுத்திக்கொண்டு வருகிறான். 

இப்படி தனது இயல்பே இயற்கைக்கு எதிராக இருக்கும் மனிதன் இயற்கையைப் பாதுக்காக்கிறோம் என்று செய்ய முயலும் விஷயங்கள் யானை தடவிய அந்தகன் போன்ற நிலை! 

யானையின் காதைத் தடவிய அந்தகன் யானை சுளகு போன்றது என்பான்,

யானையின் காலைத்தடவிய அந்தகன் யானை உரல் போன்றது என்பான், 

யானையின் துதிக்கையை தடவிய அந்தகன் யானையும் பாம்பு போன்றதென்பான்!

இப்படித்தான் சூழலியல் பிரச்சனைகளை பகுதியாக ஆராய்பவர்களது நிலை. 

ஒரு குளம் என்பது மனிதன் மேலதிகமான மழை நீரை சேமித்து நிலத்தடி நீரிற்கும் பாய்ச்சி தனது விவசாய, இதர தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான அமைப்பு! 

இந்த செயற்கையான அமைப்பை சரியாக மனிதன் முகாமைத்துவம் - மேலாண்மை செய்யாவிட்டால் இயற்கை தனக்கு உகந்த வகையில் அந்த இடத்தை நிரப்புவதற்குரிய சூழலியல் இயக்கத்தை ஆரம்பிக்கும். 

அதாவது மண்ணை வெட்டி ஆழமாக்கப்பட்ட நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர இயற்கை தனது மீள்கட்டமைப்பு பொறிமுறையை உருவாக்கும். 

குளத்தினுள் நீர்க்களைகள் எனப்படும் சல்வேனிய, தாமரை, அல்லி இவை எல்லாம் பெருகி குளத்தின் ஆழத்தினைக் குறைத்து மெதுவாக குளத்தை நிலமாக்கும் சூழலியல் இயக்கத்தை ஆரம்பிக்கும். 

இந்த நிலை ஆரம்பித்தவுடன் மனிதன் தனது நோக்கமாகிய நீரை நிரப்புவது தடைபட்டுவிடாமல் இருக்கச் சரியான காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தி, தாவரங்களை அகற்றி முகாமைத்துவம் செய்து கொண்டு வர வேண்டும். 

இனி யானை தடவிய அந்தகன் கதைக்கு வருவோம்;

குளத்தின் முக்கியத்துவத்தை விவசாயி நீரின் அடிப்படையில் பார்ப்பார்!

அழகிய பறவைகளின் வாழிடமாக குளம் சிலருக்குத் தெரியும்.

மீன்பிடிப்பவருக்கு மீன்களின் வாழிடமாகத் தெரியும்!

முகாமைத்துவம் செய்யும் நகரசபைக்கு பொழுதுபோக்கு தலமாக்கி எப்படி வருமானம் ஈட்டலாம் என திட்டமிடுவர்.

நுளம்புகளின் தேக்கமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தெரியும்.

அறிவற்றவர்களுக்கு குப்பை கொட்டும் இடமாகத் தெரியும். 

அரசியல் பார்வை கொண்டவர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் ஏதோ அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகிறது என்று சந்தேகப்படுவார்கள்! 

இவையெல்லாம் அந்தப்பிரச்சனை என்ற யானையின் துதிக்கை, கால், காது, வால் போன்றவை! 

இவை எல்லாவற்றையும் பொருத்தி அதில் எமது உயிர்பல்வகைமை பாதிக்காமல், சாக்கடையாகாமல், அரசியல் பகடையாகாமல், மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படாமல், பொருளாதார ரீதியில் சிறப்பான திட்டம் வகுப்பது என்பது இயற்கைக்கு முரணான மனதைக் கொண்ட மனிதனிற்கு கடினமானது! 

இப்படிப்பட்ட முரணான மனதை வைத்துக்கொண்டு மனிதன் காட்டும் சூழலியல் அக்கறை என்பது தனது சொந்த நலம் சார்ந்த ஒன்றுதான்!


Sunday, July 25, 2021

தலைப்பு இல்லை

ஸ்ரீ ராதையைத் துதிக்காதவன் கிருஷ்ணரை வழிபட அருகதையற்றவன். ஸ்ரீ ராதை கிருஷ்ணனின் பிராண சக்தி! 

ஸ்ரீ தேவிபாகவதம்    

அறியாமையில், துன்பத்தில் உழலும் ஜீவனை பக்குவப்படுத்தி அவித்தை - இந்த ப்ரக்ருதி உலகத்தின் மீதான பற்றினை - தனது ஆற்றல்களால் நீக்கி கோலோகப் ப்ருந்தாவனத்தில் அந்த ராதா ராணியின் பாதங்களை அடைவிக்கும் பொறுப்பை ஸ்ரீ கிருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறான். 

தேவியானவள் தனது ஹ்லாதினி சக்தியால் ஒற்றைப் பார்வையால் ஜீவனின் மனதை தெய்வீக உணர்வு பெறச் செய்விக்கிறாள்!


தலைப்பு இல்லை

Very important useful morning to listen system ecologist view on eco system!

Understanding the nature's dynamics is the key for the wisdom!

Analog forestry is the knowledge Sri Lankan ecologist Dr. Ranil Senanayake developed through his long years of experience!

His message is simple - learn how the ecosystem Is functioning. Copy it!

Saturday, July 24, 2021

தலைப்பு இல்லை

கடந்த வாரத்துடன் 102 வாரங்கள் தினகரன் சைவமஞ்சரியில் வாராந்தம் 01 பக்க கட்டுரையாக 102 அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன! 

ரிஷி சிந்தனை என்ற தலைப்பில் 72 வாரங்கள்

ஹம்ஸ யோகம் என்ற தலைப்பில் 30 வாரங்கள்

மொத்தம் 102 வாரங்கள்

சாதனைக்குரிய மனப்பக்குவத்தைப் பற்றி இந்த வாரத் தொடர் உரையாடுகிறது!


தலைப்பு இல்லை

அண்மையில் ஒரு திரைப்படத்தில் ஒரு கிராமப்புற மாணவி ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியரின் வழிகாட்டலில் IIT நுழைவுத் தேர்விற்கு தோற்றி வெற்றிபெற்று வாழ்க்கையில் இலட்சியத்தை சாதிப்பதை படமாக்கியிருந்தார்கள்! 

அதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மாணவிக்கு கூறும் அறிவுரை தேர்வில் சித்தி பெற உன்னிடம் CUP இருக்க வேண்டும்! 

C - Concentration 

U - Understanding 

P - Practice 

படிக்கும் பாடத்தில் மனதை ஒருமைப்படுத்தி ஒவ்வொரு பாடத்தையும் புரிந்த பின்னர் அந்தப் பாடங்களில் எப்படி கேள்விகள் வரும் என்பதை மீண்டும் மீண்டும் செய்து பார்க்கும்போது பரீட்சையில் வெற்றி நிச்சயம்! 

இப்படி மீண்டும் மீண்டும் பயிற்சித்து பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் விஞ்ஞானத்துறைக்கு ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது. 

பரீட்சைக் களம்

குறித்த பாட அலகுகளைக் குறிப்பிட்டு அதை மன ஒருமையுடன் படித்து புரிந்துவிட்டு இந்த பரீட்சைக் களத்தில் வந்து பயிற்சி செய்ய வேண்டும்! 

மலையகம், வடக்கு, கிழக்கு, மேலும் தமிழில் உயிரியல் பாடம் எடுக்கும் அனைத்து மாணவர்களும் இந்த மாதிரிப்பரீட்சையில் பங்குபற்ற பெற்றோர்களே, ஆசிரியர்களே உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்!

இதை நடாத்துபவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அனுபவமுடைய ஆசிரியர்கள்! 

இது மாத்தளையில் கல்விகற்று பட்டதாரிகளான பிரஜைகளின் சமூகப் பங்களிப்பு!


Friday, July 23, 2021

தலைப்பு இல்லை

இவ்வளவு காலமும் தமிழில் மாத்திரம் எழுதிக்கொண்டிருந்தவனை இந்தக் குருப்பூர்ணிமாவுடன் ஆங்கிலத்திலும் பகிர்ந்து கொள் என்று குரு ஆணை தந்திருக்கிறார். 

இன்று ஆங்கில மாணவர்களுடன் சாதனா நூல் வெளியீடு!


தலைப்பு இல்லை

இன்று மாலை அனைவருமாகச் சேர்ந்து குருகீதை கற்போம்! 

குரு தத்துவம் புரிந்து கொள்வோம்! 

ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம்! 

குரு கீதை ஒரு உயர்ந்த மந்திர சாஸ்திர நூல், 

குரு யோகம் எனும் தந்திர சாஸ்திர நூல்!

இந்த நூலை குருவருள் நிறையும் இந்நன்னாளில் புரிந்துகொள்ளும் முயற்சியே இந்தக்கலந்துரையாடல்!

இன்றைய உரையின் உள்ளடக்கம்

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85340140939...

Meeting ID: 853 4014 0939

Passcode: 064413

இன்று மாலை 7.00 pm


Thursday, July 22, 2021

தலைப்பு இல்லை

குருப்பூர்ணிமா தினத்தில் குரு கீதையினை படிக்கத் தொடங்க ஒரு உரையாடல்! ஆர்வமுள்ள சாதகர்கள் இணையலாம்! 

Topic: குருகீதை

Time: Jul 23, 2021 07:00 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85340140939...


Monday, July 19, 2021

தலைப்பு இல்லை

நேற்றைய நிகழ்ச்சி முழுமையாக, இலங்கையைச் சூழ உள்ள கடல் எப்படி இயங்குகிறது? அண்மைய X - press pearl கப்பலில் கடலிற்குள் மூழ்கிய பொருட்கள் என்ன? 

அவை எப்படியான பாதிப்பினை ஏற்படுத்தும்?

கடல் மாசு எங்குவரை பயணிக்கும்?

கடல் மீனைச் சாப்பிடலாமா? 

இலங்கையில் கப்பல் மூழ்கிய பகுதியில் மீன் பிடிக்கப்படுகிறதா? 

கடல்வாழ் உயிரினங்கள் என்ன பாதிப்பை எதிர்கொள்ளும்?

எம்மிடம் இருக்கும் கரையோர இயற்கை வளங்கள் எவை?

அவற்றை எப்படிப் பாதுகாப்பதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கலாம்?

இப்படி சாதாரண பொதுமகனின் கேள்விகளுக்கு ஆய்வறிஞர்கள் தெளிவளிக்கிறார்கள்! 

தமிழில் சூழலியல் விஞ்ஞானற்கான அறிவியல் களம்! 

https://www.youtube.com/watch?v=7GFXRd32L-4

பொருளடக்கம்

*****************

@01: 12 – வரவேற்புரை திரு G நவீந்திரக்குமார் – சிரேஷ்ட விரிவுரையாளர், பெரும் பொருளாளர், சூழலியல் கழகம், பிரயோக விஞ்ஞான பீடம். 

@05: 56 – பிரதம விருந்தினர் உரை - Dr. T. மங்களேஸ்வரன், துணைவேந்தர், வவுனியா பல்கலைக்கழகம் 

@12:40 – தலைமையுரை Dr. ஜெயகௌரி நிமலன், துறைத்தலைவர், உயிரியல் துறை, பிரயோக விஞ்ஞான பீடம். 

@16:22 –சிறப்பு விருந்தினர் உரை Dr. அனந்தினி நந்தக்குமாரன், பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம்.

@24:13 – நெறியாளர் உரை, Dr. T. சுமனேந்திரன் (ஸ்ரீ ஸக்தி சுமனன்) - சூழலியலாளர்

@29:20 – முதல் அமர்வு: இலங்கையின் கடற்சூழல் தொகுதியும் கடல் வளமும் எதிர்கொண்டுள்ள தற்போதைய சவால்கள் - உயிர்பல்வகைமை Dr. S. Wijeyamohan

@32:00 – கடல் உயிர்ப் பல்வகைமையின் சூழலியல் முக்கியத்துவம், தாவர பிளாந்தன்கள், 

@37:53 – மீன்களின் பூக்களைக் கொண்டு கடல் மாசினை அறியும் முறை

@47:52 – இலங்கையும் திமிங்கிலங்களும்

@48:32 – இலங்கையின் பவளப்பாறைகள்

@51:42 – X-press Pearl கப்பல் விபத்தின் பின்னர் ஏற்பட்ட கடல் ஆமை, திமிங்கில, டொல்பின் இறப்புகளுக்கான காரணங்கள் பற்றிய கருதுகோள்கள்

@01:01:16 – இரண்டாவது அமர்வு : இலங்கையின் கரையோர வளங்கள் பேராசிரியர் T. ஜெயசிங்கம் 

@01:04:20 – வட கிழக்கு இலங்கையின் கடல் வளங்கள்

@01:19:40 – கடல் கப்பல் விபத்துக்களால் இலங்கையின் கடல் வளங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், சேது சமுத்திர திட்ட ஆலோசகராக கண்டறிந்த உண்மைகள்

@01:27:16 – மூன்றாவது அமர்வு: இலங்கையின் கடல் நீரோட்டம் பற்றிய புரிதலும் அது கடற் சூழற்தொகுதியில் ஏற்படுத்தும் இயக்கமும் 

@01:28:16 – இந்திய சமுத்திரத்தின் கடல் நீரோட்ட சிறப்புகள்

@01:50:19 – X-Press Pearl விபத்தின் எதிர்கால விளைவுகள்

@01:55:22 – X-Press Pearl கப்பலில் இருந்த மாசாக்கிப் பொருட்கள்

@01:56:36 – X-Press Pearl கப்பல் விபத்திற்கு பிறகு மீன்பிடி தடைசெய்யப்பட்ட இடங்கள்

@01:58:12 – இலங்கையில் தற்போது கிடைக்கும் மீன்களை உண்ணலாமா?

@01:58:20 – கடலில் உள்ள நெகிழி மாசுக்களின் பரம்பல்

@02:01:56 – X-Press Pearl கப்பலில் காணப்பட்ட எரிபொருள் என்ன ஆகியது?

@02:03:41 – கடல் வாழ் உயிரினங்களுக்கான பாதிப்பு

@02:06:54 – மீள்கட்டமைப்பு

@02:17:30 – கடல்களுக்குள் பாவிக்க முடியாத பஸ்ஸுகளை இறக்குவது நன்மையானதா? கலாநிதி சிவக்குமார் அவர்களின் கருத்துப்பதிவு

@02:29:51 – கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்களின் தடைகள்

@02:41:10 – அல்காக்களின் பரவல்

@02:43:30 – மருந்துகள், ஹோமோன் பதார்த்தங்கள் நீரில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றிய கருத்துக்கள் – கலாநிதி பாலா விக்கினேஸ்வரன் அவர்கள் கருத்துபதிவு. 

@02:53:36 – தொண்டைமனாறு கடல் நீரேரியினை நன்னீராக்குவது சூழலியல் இயக்கத்தின் படி சரியானதா? 

@02:57:21 – தொகுப்புரை Dr. T. சுமனேந்திரன் (ஸ்ரீ ஸக்தி சுமனன்)

@02:59:53 – நன்றியுரை – திரு. T. கீர்த்தனராம் – இறுதியாண்டு மாணவன்


தலைப்பு இல்லை

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do"

அறிந்தால் மாத்திரம் போதாது; நாம் அறிந்ததை பிரயோகிக்கும் ஆற்றல் வேண்டும்.

ஒரு செயலில் இஷ்டமிருந்தால் போதாது; அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்!


தலைப்பு இல்லை

வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞான மாணவர்கள் ஏற்பாடு செய்த மக்களுக்கான சூழலியல் விஞ்ஞானம் என்ற நிகழ்வின் முதல் நிகழ்வு வெற்றிகரமாக 125+ பார்வையாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

முதலாவது நிகழ்வு இலங்கையின் கடற்சூழல் தொகுதியும் கடல் வளமும் எதிர்கொண்டுள்ள தற்போதைய சவால்கள் என்ற தலைப்பில் நிகழ்ந்தது. 

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி மங்களேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்!

பீடாதிபதி கலாநிதி அனந்தினி நந்தக்குமாரன், கலாநிதி ஜெயகௌரி நிமலன், திரு நவீந்திக்குமார் அவர்கள் அங்குரார்ப்பண நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெயசிங்கம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் தலைமை விஞ்ஞானி கலாநிதி அருளானந்தன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விஜயமோகன் ஆகிய மூவரும் கடல் சூழல் சார்ந்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

அவுஸ்திரேலியாவிலிருந்து கலாநிதி விக்கினேஸ்வரன், கலாநிதி சிவக்குமார் அவர்கள் இருவரும் கலந்து கொண்டு உரையாடல்களை உற்சாகமாக்கினார்கள். 

நிகழ்ச்சி நெறியாளுகை என்னால் செய்யப்பட்டது.


Saturday, July 17, 2021

இலங்கையின் கடற்சூழல் தொகுதியும் கடல் வளமும் எதிர்கொண்டுள்ள தற்போதைய சவால்கள்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சூழலியல் விஞ்ஞான மாணவர்களின் சூழலியல் கழகத்தின் ஏற்பாட்டில் மக்களிற்கான சூழலியல் விஞ்ஞானம் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18. 07. 2021) காலை 0900 மணிக்கு Zoom வழியாக நடைபெற உள்ளது.

இது பொதுமக்களுக்கு சூழலியல் பிரச்சனைகளை அறிவியலுடன் அணுகுவதற்கான அறிவினை தமிழ் பரப்பில் பகிர்வதற்கான எமது முயற்சி!


ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும்

இன்று ஆடிப்பிறப்பு, ஆடிப்பிறப்பு என்றால் ஆடிக்கூழும் சுவையான ஆடிக்கூழ் பாட்டும் ஞாபகம் வருவது இயல்பானது! 

நவாலியூர் சோமசுந்தரப்புலவர், அம்மம்மா வழியில் உறவினரும் கூட! ஆடிப்பிறப்பிற்கு அவர் எழுதிய பாடல்கள் ஆடிக் கூழை விட சுவையானவை! பனையின் மகிமை பற்றி தாலவிலாசம் என்ற அரிய நூல் எழுதியிருக்கிறார். நூலகம் தளத்தில் இருக்கிறது.

இலங்கையின் பழைய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகத்தின் கத்தரித்தோட்டத்து மத்தியில் காவல் புரிகின்ற சேவகா என்ற பாடல் அனைவருக்கும் பரீட்சயமானது! பதினையாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார்கள். அனைத்தும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை! 

இவர் மகன் சோ. நடராசனார் பெரும் அறிஞர்; வல்பொல ராகுல தேரரின் நூற்கள், இலங்கை சரித்திரம் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்தவர். 

சோமசுந்தரப்புலவர் சடாட்சர மந்திர உபதேசம் பெற்று முருகப்பெருமானை உபாசித்த தமிழறிஞர்! தமிழ் முருகனால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்ட மொழி என்பது வழக்கு!

ஆடிப்பிறப்பிற்கு சோமசுந்தரப்புலவரின் பாட்டு

********************************************

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தம் தோழர்களே!

கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்

பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,

வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரில் சக்கரையுங்கலந்து,

தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி

சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி

வெல்லக் கலவையை உள்ளே இட்டு

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டு மாவுண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே

குத்து விளக்குக் கொளுத்தி வைத்து

அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்த மானந்தந் தோழர்களே

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்


Thursday, July 15, 2021

தலைப்பு இல்லை

வவுனியா வளாகமாக எமது நிகழ்ச்சி தொடங்கி வவுனியா பல்கலைக்கழகத்தில் வளரப்போகிறது என்ற பெருமகிழ்வுடன், 

ஸ்ரீ ஸக்தி சுமனன் என்ற T. சுமனேந்திரனாகிய நானே நிகழ்ச்சியின் நெறியாளனாக பங்கேற்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, ஆர்வமுள்ள அனைத்து தமிழ் பேசும் சூழலியளாலர்களையும் அழைக்கிறோம்.


Tuesday, July 13, 2021

தலைப்பு இல்லை

இயற்கையின் அனைத்துப்பாகங்களும் உயிருள்ளவை, உயிரற்றவை, தாவரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு செம்மையான நிலையில், ஒத்திசைவில், சம நிலையில் வாழ்கிறது!

மனிதன் மாத்திரமே இந்தச் சமநிலை இல்லாமல் குழப்பமுறுவான்! 

அவனது ஆணவம் இதன் பெருங்காரணம் 

எப்போதும் ஆணவம் அவனை இயற்கையுடன் முரண்பட வைக்கிறது!

நாம் எமக்குள் சமநிலையை, ஒத்திசைவைப் பெறுவது எப்படி என்பதைக் கற்க வேண்டும்!

தீமை நடக்கும்போது அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரிய வேண்டும்!

இயற்கையுடன் எமது விழிப்புணர்வின் மூலம் எப்படி சரியான, ஒத்திசைவான, ஒன்றிணைந்த பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்க வேண்டும்.


Monday, July 12, 2021

தலைப்பு இல்லை

தமிழில் சூழலியல் விஞ்ஞானத்திற்கான உரையாடல் களம்! 

எமது பிரயோக விஞ்ஞானபீடத்தின் சூழலியல் மாணவர்களின் சூழலியல் சங்கம் பொதுமக்களுக்கு சூழலியல் பிரச்சனைகளின் அறிவியல் நோக்கினை பகிர்வதற்கு வரும் ஞாயிறன்று பொது நிகழ்வொன்றை zoom வழி நடாத்துகிறது. 

இலங்கையின் கடல் சூழற்றொகுதியும் கடல்வளங்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ற தலைப்பில் மூன்று அறிவியலாளர்கள் உரையாட உள்ளார்கள்.


Saturday, July 10, 2021

தலைப்பு இல்லை

அடுத்த மாதமளவில் இலங்கையில் எமது யோகமும் இயற்கையும் நூல் கிடைக்கும்படி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. 

இலங்கைக்குள் வசிப்பவர்கள் மாத்திரம், 

நூல் தேவைப்படுபவர்களும், zoom வழி அறிமுக விழாவிற்கு பங்குபற்ற விரும்புபவர்களும் கீழ்வரும் படிவத்தினை நிரப்பும்படி வேண்டுகிறோம். 


Friday, July 09, 2021

தலைப்பு இல்லை

#மொழிபெயர்ப்பு

ஊர்த்⁴வானாயதந்த்ரத்தில் சிவபெருமான் பார்வதிக்கு கூறிய

ஸ்ரீ ராதா க்ருபா கடாக்ஷ ஸ்தவ ராஜம் 

01

************

முனீந்த்³ரவ்ருʼந்த³வந்தி³தே த்ரிலோகஶோகஹாரிணி

ப்ரஸன்னவக்த்ரபங்கஜே நிகுஞ்ஜபூ⁴விலாஸினி.

வ்ரஜேந்த்³ரபா⁴னுநந்த³னி வ்ரஜேந்த்³ரஸூனுஸங்க³தே

கதா³ கரிஷ்யஸீஹ மாம்ʼ க்ருʼபாகடாக்ஷபா⁴ஜனம் 

முனீந்திரர்களும் வணங்கும் தேவியே!

மூவுலகிலும் சோகம் நீக்கும் தேவியே!

அலர்ந்த தாமரை வதனி!

வனத்தில் காதல் புரியும் நாயகி!

வ்ரஜேந்திர ராஜ வ்ருஷபானுக நந்தினி!

வ்ரஜேந்திரின் பூரணத்துவமுடைய புத்திரி!

எப்போது உன் கருணை நிறை க்ருபா கடாகஷம் என்மீது விழும்?

இது மொழிப்புலமை சார் வேலை இல்லை;


தலைப்பு இல்லை

Book Intro Album 

Coming Soon in Sri Lanka - Maybe in a month!


Friday, July 02, 2021

தலைப்பு இல்லை

Privilege to talk about Career development in orientation program for our new students in faculty of applied science; 

at present, I am Career Guidance Facilitator to the faculty of applied science also a past student of the faculty! 

Dean Dr. Ananthini Nanthakumaran appeared and encouraged us.

Dr Wijayamohan headed the event and Dr. Kirushanth hosted the program.

today we introduced some of our past students who excelled in a career, to tell their career stories as mentors to give some inspiration to newcomers. 

Dr. Shelton Varapragasam - Postdoctoral scientist 

Madusanka Premaratne - successful IT entrepreneur 

Erandra Jayasundara - recent past out who performed academically and got a good career

Dinith Sithunaash - Pending result first-class student, who got his job offer in campus interview before he completes the course. 

*****************

Some of the new student’s feedback as follows;

"Thank you all sir today’s session was very important to us it motivated us"

"Thankyou all for this wonderful session. I didn't had any knowledge t about what will happen after entering vavuniya campus? Is this useful? I had many questions like this but today I got a clear idea for my all questions. Hope all the other students also had a good experience. So thank you so much for giving us an inspirational session"

"thank you all sir todays session was very important to us it motivated us!"

"Thank you all of you. It’s very help to us and motivated. Thank you all of you dedication. I hope all are supporting our studies and career. We want your guide .please help us of our life basement. Again thank you sir and seniors."


Thursday, July 01, 2021

தலைப்பு இல்லை

இன்று யோகம் பயிலவேண்டும் என்று ஆர்வமுறுபவர்கள் அனேகர் தமது பௌதீக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாகத்தான் அகமுகப்படுகிறார்கள். 

தனக்கோ, உறவினர்களுக்கோ தீராத நோய்!

வேலையில்லாப் பிரச்சனை! 

இப்படிப் பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக யோகசாதனை பார்க்கப்படுகிறது! 

இல்லையென்றால் யோகத்தின் மூலம் அற்புத ஆற்றல்களைப் பெறலாம் என்று தேடலுறுபவர்கள் அனேகர்! 

இப்படி எந்தக் காரணமாக இருந்தாலும் தன்னையறியாமல் யோகசாதனையில் சித்தியில்லை என்பதை இந்த வாரத்தின் ஹம்ஸ யோகப் பகுதி முன்வைக்கிறது! 

குருவருளால் 27 வது வாரம் - 07 மாதங்கள் பூர்த்தி!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...