ஸோஹம் சாதனை என்பது காயத்ரியின் யோக சாதனை என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Tuesday, April 27, 2021
Friday, April 23, 2021
தலைப்பு இல்லை
புத்தகங்கள் எனக்கு போதைப் பொருள்!
புத்தகக் கடைக்குள் போனால் குடிகாரன் சாராயக்கடைக்குள் போனதுபோல்!
என்னுடன் புத்தகக் கடை வந்து விரக்தியாகியவர் பலர்!
வாசிப்பது ஆனந்த மது குடிப்பது!
நூல் படிப்பது என்பது எழுதியவர் மனம் படித்தல்
நூல் படிப்பது என்பது மனதை ஒருமுகப்படுத்தல்
நூல் படிப்பது என்பது ஆசிரியன் அனுபவத்தைக் கவர்தல்!
நூல் என்பது ஒருவன் அனுபவத்தை அறிவை அழியாமல் அடுத்த சந்ததிக்கு கடத்தல்!
படித்தல் மூளையை இளமையாக்கும் கலை!
தலைப்பு இல்லை
அக்கினி எப்போதும்
ஊர்த்துவமுகமானது! தன்னில் சேர்பவை அனைத்தையும் மேல் நோக்கியே செலுத்துவது!
எண்ணத்தை உயர்வாக வைத்திருக்க விரும்புபவன் அக்கினியை குருவாகக் கொள்ள வேண்டும்!
அக்கினியை கூர்ந்து கவனிக்க
கவனிக்க உடலை, மனதை எப்படியெல்லாம் சுத்தி செய்து ஆற்றலுள்ளதாக்கலாம் என்பதை
நுண்மையாகச் சொல்லித்தரும்.
சாதகர்கள் அனைவருக்கும்
வசந்த நவராத்ரி வாழ்த்துக்கள்!
Monday, April 19, 2021
தலைப்பு இல்லை
இன்றைய சைவ மஞ்சரியில் ஹம்ஸ யோகம் 16வது பகுதி வெளிவந்துள்ளது!
நான்கு மாதங்கள் தொடராக
குருவருளால் வெளிவந்துள்ளது. எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் எழுதி முடித்து
தவறாமல் வெளிவருகிறது.
மெய்ப்புப் பார்க்கும் பணி
ஆதித்தன் மனமுவந்து குருபணியாகச் செய்வது இன்னுமொரு கையிருக்கும் ஆறுதல்! வேகமாகத்
தட்டச்சி செய்து அனுப்பினாலும் எழுத்துப்பிழை செம்மையாக்கும் பணி தம்பியினுடையது!
இந்தப்பகுதியில் காயத்ரி
சாதனைக்கும் ஹம்ஸ யோகத்திற்குமிடையிலான தொடர்பு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.
சாதகர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கும்படி வேண்டுகிறோம்.
Saturday, April 17, 2021
குருவிடம் வித்தை பயிலும் நான்கு வகை மாணவர்கள்
எமது சித்தயோக தீக்ஷை
வகுப்பில் ஒரு மாணவர் பைபிளில் இருக்கும் கதையின் இரகசியத்தை சித்த
யோகதத்துவத்தில் நாம் தீக்ஷை என்று உரையாடுவதுடன் பொருத்தி விளக்கம் பெறலாமா என்று
கேட்டார்;
கதை வருமாறு;
யேசுபிரான் கடவுளின்
இராச்சியத்தின் நற்செய்தியைப் பரப்புவதற்காக ஒவ்வொரு நகரமாகவும், கிராமமாகவும்
சென்று கொண்டிருந்தார். 12 சீடர்கள் அவருடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அதில்
இருவர் பெண்கள்; மேரி மக்டெலினாவும் ஜோஆன்னாவும்.
ஒரு கிராமத்தை அடைந்தவுடன் பெருந்தொகையான மக்கள் அவரை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு உபதேசமாக ஒரு கதையை யேசுபிரான் கூறுகிறார்.
ஒரு கமக்காரன் விதைப்பதற்குச் சென்றான். அவன் விதைக்கும்போது சில விதைகள்;
1) நடக்கும் பாதையில்
விழுந்தன; அவை கால்களில் நசிந்துபோயின; பறவைகள் உண்டுவிட்டன.
2) சிலது கற்கள் மேல்
விழுந்தன; முளைத்தபோது அது பற்றுவதற்கும், வாழ்வதற்கும் தகுந்த ஈரலிப்பு இல்லாமல்
இறந்துபோயின.
3) சிலது முட்கள்
நிறைந்த புதரிற்குள் விழுந்தன. ஆனால் அவை முட்களிற்குள் சிக்கிக்கொண்டு மேலும்
வளரமுடியாமல் போயின.
4) சிலதோ நல்ல வளமுள்ள மண்ணில் விழுந்தது. அவை நன்கு வளர்ந்தன. விளைச்சலைத் தந்து பயனுள்ளதாகியது. அந்த விளைச்சல் விதைத்ததை விட நூறு மடங்கு அதிகமாகத் தந்தது.
இதை சொல்லிவிட்டு ஒரு வாக்கியம் சொல்கிறார்; "காதுள்ளவன் கேட்கக் கடவன், உடனே அவருடைய சீடர்களும் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க யேசுபிரான் "இந்தக்கதையின் மூலம் இறைவனின் இராச்சியத்தின் இரகசியம் தரப்பட்டுள்ளது, புரியக்கூடியவன் அதைப் புரிந்துகொள்வான்; மற்றவர்கள் அதைக் கதையென்பார்கள்"
இந்தக்கதையை நாம் யோகசாதனையில்
குருவிடம் வித்தை பயிலும் மாணவர்களுக்கு நல்ல உவமானம் ஆக்க முடியும்;
குருவிடம் வித்தையைப்
பெற வேண்டி வரும் மாணவர்கள் நான்கு வகை;
1) சிரத்தையற்றவர்கள்:
குரு கூறும் எதையும் மனதிலோ, எழுத்திலோ சேமித்துக்கொள்ளாமல் கவனயீனமாக பாதையில்
கிடைத்த விதையை வீசிவிட்டுச் செல்லும் வகையினர். இவர்கள் வெறும் ஆர்வக்கோளாறுகள்;
வகுப்புகள், குருமார்கள் என்று அனேகரிடம் அலைபவர்கள்; குரு கொடுத்தாலும் அதை
வெளியே வரும்போது பாதையில் வீசிவிட்டு வருபவர்கள்.
2) ஆணவம்
மிகுந்தவர்கள்: ஆர்வமுடன் குருவிடம் வித்தை கற்கச் செல்வார்கள். ஆனால் எதையும்
உள்வாங்கிக்கொள்ள முடியாமல் தம்மிடம் ஏற்கனவே இருக்கும் அறிவினால் மனதைக்
கல்லாக்கிக் கொண்டு உள்வாங்க முடியாதவர்கள். குருவிடமிருந்து பெறுவது எதுவும்
இவர்களுடைய இறுகிய ஆணவம் மிகுந்த மனதினால் உள்வாங்க முடியாமல் கருகிவிடும்.
3) நுண்மையான ஆணவம்
மிகுந்தவர்கள்: சிலமாணவர்களுக்கு குருவிடம் உண்மையான உளமார்ந்த பக்தியிருக்காது.
ஆனால் வெளித்தோற்றத்தில் வித்தையை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக குருவிடம்
மரியாதை செய்வது போல் நடிப்பார்கள். அதன் மூலம் வித்தையைப் பெற்றுக்கொண்டு
பயிற்சிக்கும் போது அவர்கள் சித்தத்தில் இருக்கும் ஆணவம், பொறாமை, தந்திரபுத்தி
இவை எல்லாம் முட்புதர்களாக விதைக்கப்பட்ட ஞானத்தையும் விட வேகமாக வளர்ந்து ஆன்ம
முன்னேற்றத்தைத் தடைப்படுத்திவிடுவார்கள்.
4) வளமான மண்: இவர்களே
வித்தைக்குரியவர்கள்; தமது மனதை குருபக்தி, ஞானத்தில் தீராத ஆவல், சமம், தமம்,
கிட்டாதாயின் வெட்டென மற, சகிப்பு, சிரத்தை ஆகிய யோகம் பயில்வதற்குரிய பண்புகளாகிய
உரத்தினால் நிறைந்து மனமாகிய மண்ணை வளப்படுத்தி விதைகளைப் பெற்று வளர்த்து பல
நூறுமடங்காக்கக் கூடிய ஆற்றலுள்ள சாதகன்.
ஒவ்வொரு சாதகனும் தான் இந்த நான்கில் எந்த வகை என்பதை அறிந்து வளமான மண்ணாக இருந்தால் மாத்திரம் தான் குருவிடமிருந்து பெறும் தீக்ஷை என்ற சக்தி வளரும் என்பதைப் புரிந்து சாதனை செய்ய வேண்டும்.
இப்படி இறை ஆற்றலைப் பெற்று வளர்க்கக்கூடிய மாணவர்களின் தன்மையையும், குருவாகிய கமக்காரன் விதைகளை வீசும்போது இப்படி நான்கு வகை மாணவர்கள் இருப்பார்கள் என்பதையும் இந்தக் கதை உருவகமாக விளக்கிற்று!
disclaimer:
இந்தப்பதிவு எந்தவிதமான மதம் சார்ந்த நோக்கத்துடனும் எழுதப்படவில்லை;
குறிப்பிடப்பட்ட கதை யோகத்தத்துவத்தினை விளக்குவதற்குரிய உருவகமாக இருப்பதால்
எடுத்தாளப்பட்டுள்ளது.
Friday, April 16, 2021
தலைப்பு இல்லை
உனது வாழ்க்கை அதிஷ்டம்
நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் நீ அதிஷ்டத்தை
உருவாக்கு!
உனது வாழ்க்கை அமைதி நிறைந்ததாக
இருக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் வாழ்க்கையில் நீ அமைதியை உருவாக்கு!
உனது வாழ்க்கையில் அறிவு நிறைய
வேண்டும் என்றால் மற்றவர்கள் அறிவை அடைய பணி செய்!
மற்றவர்களுக்கு
வாய்ப்பை உருவாக்கு. உனக்கு வாய்ப்புகள் தேடிவரும்!
எதை நீ கொடுக்கிறாயோ
அது பலமடங்காகத் திரும்பி வரும்!
இப்படிச் செய்யும்போது உனது
ஆணவத்தில் கவனம் வை!
ஆணவம் எதைக்கொடுத்தாலும்
பலமடங்காகத் திருப்பி வரும் என்ற விதியை நேர்விகித சமனாக உனக்குத் தரக்கூடியது!
Tuesday, April 13, 2021
தலைப்பு இல்லை
இன்று காலை சக்தி டிவியில் 0700 மணிக்கு சித்திரைப் புத்தாண்டு
சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான நேர்காணல்! தம்பி ஹரிசன் மொபைலில் பதிவு செய்து
அனுப்பிய version!
எவராவது
பார்த்திருந்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன்!
Monday, April 12, 2021
தலைப்பு இல்லை
இன்றைய தினகரனில்
ஹம்ஸயோக சாதனை - 15 வாரக் கட்டுரை.
யோக சாதகர்கள்,
யோகத்தின் ஆழமான பயிற்சி விளக்கங்கள் பெற விரும்புபவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை.
Sunday, April 11, 2021
தலைப்பு இல்லை
எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும் என்று ஔவையார் கூறியது வெறுமனே எழுதப்படிக்கத் தெரியவேண்டும் என்று
கூறிவிட்டுச் சென்றுவிட்டார் என்று எடுக்க முடியாது.
ஜெர்மன் தத்துவவியலாளர்
Paul Carus கூறுகிறார்;
"There is no
science that teaches the harmonies of nature more clearly than mathematics, and
the magic squares are like a magic mirror which reflects the symmetry of the
divine norm immanent in all things, in the immeasurable immensity of the cosmos
not less than in the mysterious depths of the human mind."
எண்கள் பிரபஞ்சத்துடன் ஒரு
ஒத்திசைவை (harmoney) ஏற்படுத்த பயன்படுத்தப்படுபவை; இன்று இயற்கையை வசப்படுத்தச்
செய்யப்படும் அனைத்து நவீன அறிவியல் விதிகளும் கணிதத்திற்கு சுருக்கப்பட்டு
(abstraction) விதிகளாக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது.
எழுத்துக்கள் சப்தத்தை ஏற்படுத்தி பிரபஞ்சத்தின் நாத தத்துவத்துடன் ஒத்திசையச் செய்யும் ஆற்றலுள்ளவை. இங்கிருந்துதான் மந்திர சாஸ்திரமும், மனிதனின் மொழிவழித் தொடர்பாடலும் உருவாகிறது.
கண்கள் எமக்கு பௌதீக உண்மையை நேருக்கு நேர் எப்படித் தெரிவிக்கிறதோ அதைப்போல் சூக்ஷ்ம பிரபஞ்சத்தின் உண்மைகளை எண்களையும், எழுத்துக்களையும் வைத்துப் புரிந்து கொள்ளலாம் என்பதைத்தான் ஔவையார் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்று சொல்லி வைத்தார்!
அதாவது எமது பௌதீகக் கண்கள்
காண்பதைத் தாண்டி இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஒருவன் அறிய
விரும்பினால் பௌதீக அறிவியலைக் கற்கக்கூடிய கணிதவியல் அறிவும், மொழி அறிவும்
இருக்க வேண்டும். அதைத்தாண்டி சூக்ஷ்ம பிரபஞ்சத்தின் விதிகளைப் புரிய வேண்டின்
மந்திரங்கள் என்ற எழுத்தும் யந்திரங்கள் என்ற கணிதமும் தெரிந்திருக்க வேண்டும்
என்று ஔவையாரின் வாக்கினை பொருள் கோட முடியும்!
Saturday, April 10, 2021
குபேர யந்திரமும் Algebra Matrix உம்
அட்சர கணிதத்தில் (Algebra) Matrix operation என்பது சில பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்படும் ஒரு முறை.
உதாரணமாக ஒரு வியாபாரத்தில்
மூன்று பொருட்கள் வருடத்தின் நான்கு காலாண்டில் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது
என்ற அட்டவணை 3X4 matrix ஆக எடுத்துக்கொள்ளலாம். கீழே காட்டப்பட்டவாறு,
Q1 Q2 Q3 Q4
பொருள்-01 100 240 450
600
பொருள்-02 120 200 340
550
பொருள் -03 100 120 200
300
ஒரு வருடத்தில்
நடைபெற்ற மொத்த விற்பனை என்றால் அனைத்துக் கட்டங்களையும் கூட்டி மொத்தமாக 3320
பொருட்கள் என்று விடை கிடைக்கும்.
பொருள் - 01 இன் விலை
100 ரூபாய் என்றால் Q1 இல் வருமானம் என்பது 100 x 100 =10000 என்பது பெறப்படும்.
இந்த நிலையில் matrix
என்பது மூன்று நிரற்காரணியும் (Row factor) நான்கு நெடுவரிசைக் காரணியும் (Column
factor) இடைத்தொடர்பு அடையும் ஒரு தரவினைத் தருகிறது.
இனி குபேர
யந்திரத்திற்கு வருவோம்;
குபேரன் என்றால் சங்க
நிதி, பதும நிதி உடையவன் என்று அர்த்தம்
சங்கம் என்பது
கோடிகளின் கோடி (ten million x ten million = 100 Million)
பதுமம் என்பது
நூறுகோடிகளின் கோடி 10000 million x 10000 Million.
குபேரனின் செல்வம்
என்பது = சங்கம் + பதுமம்
இந்த சங்க பதும
நிதிகளுக்குரிய எண்ணை 10000M x 10000M x 100M இனை குபேர யந்திரத்தின் matrix இற்கு
சமமாக எடுத்தால் குபேரனை வசப்படுத்தும் உத்தி கிடைக்கும் என்று இதை decode
செய்யலாமா?
27 20 25
குபேரன் = 22 24 26
23 28 21
என்று
எடுத்துக்கொண்டால் குபேர யந்திரத்தின் 3 x 3 matrix இல் இருக்கும்
குபேரத்துவத்தைத் தரும் நெடுவரிசை, நிரற் காரணிகள் எவை எனக்கேள்வி வருகிறது.
இங்கிருக்கும் கணித
வல்லுனர்கள் குபேர யந்திரத்தை 3x3 matrix ஆக எடுத்துக்கொண்டு அது கூறவரும்
இலக்கங்களை matrix algebra மூலம் தீர்க்க முடியுமா என்று கூறுங்களேன்!
இதைத் தீர்த்தால் குபேர
சம்பத்தினை அடைந்துவிடுவோமா? எலன் மாஸ்கிற்கும், பில்கேட்ஸிற்கும் இது
தெரிந்திருக்குமோ?
சாதனா மார்க்கம்
பலரும் நாம் பக்தி செய்கிறோம்;
மந்திரம் ஜெபிக்கிறோம்; இறைவன் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறோம்; பக்தியுடன் இருக்கிறோம்
என்றெல்லாம் தம்மைப்பற்றி நம்பிக்கொண்டிருந்து இதன் மூலம் நன்மை பெறலாம் என
எண்ணுகிறார்கள். இவற்றை நாம் சமய வழிபாடுகள், நம்பிக்கைகள் என்று கூறலாம்.
ஆனால் சாதனா மார்க்கம் என்பது இப்படியான நம்பிக்கைகளைக் குறிப்பதல்ல; சாதனா என்ற சமஸ்க்ருத அர்த்தத்தின் வேர்ச் சொல் "இலக்கை நோக்கிய நேரிய பயணம்" என்று பொருள் தரும்.
சாதனை என்பது ஒரு இலக்கினை நிர்ணயித்து அதை அடைவதற்குரிய முயற்சி என்று அர்த்தம்.
இலக்கினை
அடைவதற்கு ஏற்கனவே பயணித்தவர்களிடமிருந்து அதை எப்படி அடைய முடியும், அதற்கான
நிபந்தனைகள் என்ன? செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என்பது பற்றிய
தெளிவினைப் பெறவேண்டும்.
பின்னர்
இலக்கினை அடைவதற்குரிய பயணத்திற்கு நாம் தயாரானவர்களாக இருக்கிறோமா? அதற்குரிய
வலிமை எம்மில் இருக்கிறதா? சோர்ந்துவிடாமல் முயற்சிக்க எம்மிடம் தகுந்த ஆற்றல்
இருக்கிறதா? இல்லை என்றால் எப்படி அவற்றைப் பெறுவது இவை எல்லாவற்றையும் பற்றிய
புரிதல் தெளிவாக எமக்கு இருக்க வேண்டும்.
யோக
சாதனை என்பது அகப் பரிணாமத்தை துரிதப்படுத்தி மனிதன் தனது மனதின் தாழ் உணர்வு
மையங்களை உயர் தெய்வசக்தியுள்ளதாக மாற்றி உயர்நிலை அடையும் இலக்கினை உடையது!
ஆகவே
சாதனா மார்க்கத்தினைத் தேர்ந்தெடுப்பவர்கள் தமது இலக்கு என்ன என்பது பற்றிய தெளிவு
இருப்பது அவசியம்.
Monday, April 05, 2021
தலைப்பு இல்லை
ஹம்ஸ யோகம்
பற்றி உபநிஷதங்கள் கூறும் கருத்துக்கள் இந்தவாரக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. எப்படி
ஸோஹம் என்ற ஒலியில் மூழ்கிவரும் மனம் தனது அழுக்குகளை நீக்கி உயர் ஆற்றல் பெறுகிறது
என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.
Friday, April 02, 2021
பஞ்சபூத பஞ்சீகரணமும் நீர் பற்றிய அறிவியலும்
சித்தர் தத்துவத்தில்
எப்படி உலகத்தின் பௌதீகப் பொருட்கள் தோற்றம் பெறுகிறது என்பதற்குப் பாவிக்கப்படும்
மாதிரியுருவை பஞ்சபூத பஞ்சீகரணம் என்று சொல்லுவார்கள். இது சுருக்கமாக
அனைவருக்கும் விளங்கும் மொழியில் கூறுவதானால்;
பிரபஞ்சம் ஆரம்பத்தில் (சிவம்
என்ற) ஒரு புள்ளியில் இருந்து அதிரத்தொடங்க (vibration) நாதமும் (Sound)
விந்துவும் (ஒளியும் - light) தோற்றம் பெற அவை இணைந்து சதாசிவம் என்ற ஆற்றலினூடாக
பஞ்ச பூதங்களாகத் தோற்றம் பெற்றது. பஞ்சபூதங்கள்;
ஆகாயம் - Space
வாயு - Air
அக்கினி - fire
நீர் - water
பிருதிவி - Earth or
Solid
ஆகாயத்திலிருந்து வாயுவும்,
வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து பிருதிவியும்
தோன்றியதாக எழுதி வைத்திருக்கிறார்கள்; இது நிற்க!
1783 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த
ஒரு இரசாயனவியல் - இயற்பியல் விஞ்ஞானி ஹென்றி கவெண்டிஷ் மின்சாரத்தினை பலவிதமான
திரவங்களுக்குள் செலுத்தி என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். இதில்
அடைக்கப்பட்ட குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது திடீரென நீர் ஆவியாகி மறைவதைக்
காண்கிறார். பலமுறை ஆராய்ந்த பிறகு குழாயினுள் துரிதமாக எரியக்கூடிய வாயுவும்,
அதைவிட பாரம்கூடிய வாயுக்களும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதை மீண்டும்
மீண்டும் ஆராய்ந்து கவெண்டிஷ் கீழ்வரும் முடிவிற்கு வந்தார்;
நீர் என்பது உண்மையில் நீரல்ல!
இது மணமற்ற, நிறமற்ற, சுவையற்ற பதார்த்தம் மாத்திரம் அல்ல! இது மூலகமும் அல்ல!
இரண்டு சுயாதீன மூலகங்களால் ஆக்கப்பட்ட மூலகங்கள். இதில் ஒரு மூலகம் எரியும்
பொருளாகவும், மற்றையது எரிக்கும் பொருளாகவும் இருக்கிறது. இந்த இரண்டும் இணைந்து
உருவாகும் பதார்த்தமாகிய நீர் தாகத்தையும், நெருப்பினையும் அணைக்கும் பதார்த்தமாக
மாறுகிறது என்று குறிப்பு எழுதி வைத்தார்.
இதை அடிப்படையாக வைத்து லாவோசியர்
நீரில் ஹைட்ரஜன், (இதன் அர்த்தம் நீரை உற்பத்தி செய்வது) ஒட்சிசன் ஆகிய இரண்டு மூலகங்கள்
இருப்பதாக கண்டுபிடித்து பெயரிட்டார்!
எனினும் ஹென்றி கவெண்டிஷின் ஆய்வு
முடிவு விளக்கிய விதம் சுவாரசியமானது; சித்தர்களின் பஞ்சீகரண விளக்கத்தை தொட்டுச்
செல்கிறது.
சித்தர் தத்துவத்தில்
பிருதிவிக்குள் மற்ற நான்கு பூதங்கள் (Elements) உள்ளன. அதேபோல் நீரில் மற்றைய
மூன்றும் - ஆகாயம், வாயு, அக்னி ஆகிய மூன்றும் உள்ளன. நீரிலுள்ள ஒட்சிசன்
எரிக்கும் அக்னி தத்துவமாகவும், ஹைட்ரஜன் எரியப்படும் வாயுதத்துவமாகவும்
விளங்கப்படுத்தலாம்.
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...