பலரும் நாம் பக்தி செய்கிறோம்;
மந்திரம் ஜெபிக்கிறோம்; இறைவன் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறோம்; பக்தியுடன் இருக்கிறோம்
என்றெல்லாம் தம்மைப்பற்றி நம்பிக்கொண்டிருந்து இதன் மூலம் நன்மை பெறலாம் என
எண்ணுகிறார்கள். இவற்றை நாம் சமய வழிபாடுகள், நம்பிக்கைகள் என்று கூறலாம்.
ஆனால் சாதனா மார்க்கம் என்பது இப்படியான நம்பிக்கைகளைக் குறிப்பதல்ல; சாதனா என்ற சமஸ்க்ருத அர்த்தத்தின் வேர்ச் சொல் "இலக்கை நோக்கிய நேரிய பயணம்" என்று பொருள் தரும்.
சாதனை என்பது ஒரு இலக்கினை நிர்ணயித்து அதை அடைவதற்குரிய முயற்சி என்று அர்த்தம்.
இலக்கினை
அடைவதற்கு ஏற்கனவே பயணித்தவர்களிடமிருந்து அதை எப்படி அடைய முடியும், அதற்கான
நிபந்தனைகள் என்ன? செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என்பது பற்றிய
தெளிவினைப் பெறவேண்டும்.
பின்னர்
இலக்கினை அடைவதற்குரிய பயணத்திற்கு நாம் தயாரானவர்களாக இருக்கிறோமா? அதற்குரிய
வலிமை எம்மில் இருக்கிறதா? சோர்ந்துவிடாமல் முயற்சிக்க எம்மிடம் தகுந்த ஆற்றல்
இருக்கிறதா? இல்லை என்றால் எப்படி அவற்றைப் பெறுவது இவை எல்லாவற்றையும் பற்றிய
புரிதல் தெளிவாக எமக்கு இருக்க வேண்டும்.
யோக
சாதனை என்பது அகப் பரிணாமத்தை துரிதப்படுத்தி மனிதன் தனது மனதின் தாழ் உணர்வு
மையங்களை உயர் தெய்வசக்தியுள்ளதாக மாற்றி உயர்நிலை அடையும் இலக்கினை உடையது!
ஆகவே
சாதனா மார்க்கத்தினைத் தேர்ந்தெடுப்பவர்கள் தமது இலக்கு என்ன என்பது பற்றிய தெளிவு
இருப்பது அவசியம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.