குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 14, 2018

கடுவெளிச்சித்தர் சாதகர்களுக்கு சொல்லிய அறிவுரைகள் - பகுதி 03




இப்படி அம்ருதம் உண்டு உன் சாதனையில் களித்து இருக்கும் காலத்தில் உன் ஆற்றல் பெருகும், இந்த ஆற்றலை அடைந்து விட்ட பின்னர் நீ கடைப்பிடிக்க வேண்டியவை எவை என்பதை கூறுவேன்.
  • பிழைப்புக்காக வேதங்களை வியாக்கியானம் சொல்லும் போதகர்கள் கூறும் வழியை உண்மை வழி என்று எண்ணி அவர்கள் சொற்படி அறிவினை மயங்கவிடாதே.
  • மயக்கும் பெண்களை சாராதே, துர்குணமுடையவரகள் கூட்டத்தில் கலந்து கொண்டாடாதே,  உன்னை தூற்றுபவர்களை கூட வைத்திராதே, இந்த உலகமே பொய் சொன்னாலும் நீ பொய் சொல்லாதே, விளையாட்டாக பறவைகளுக்கு கல்லெறிந்து துன்பப்படுத்தாதே,
  • சிவமன்றி வேறு எதையும் வேண்டாதே, எவருக்கும் தீங்கு பயக்கும் சண்டைகளை தூண்டாதே,
  • உன் தவ நிலையை விட்டு தாண்டாதே, நல்ல சன்மார்க்கமில்லாத நூற்களை படிக்காதே,
  • குண்டலினியை எழுப்புகிறேன் என்று அறியாமல் முயற்சி செய்யாதே.
  • உன்னிடம் அன்புடன் வாழ்க்கையில் ஒருபாகமாக இருக்கும் மனைவியரை எக்காரணம் கொண்டும் பழிக்காதே.
  • உலகில் கசப்பான சிந்தனைகளை எவருக்கும் ஊட்டாதே, உனது ஆணவத்தை காட்ட எந்த செயலையும் செய்யதே.
  • வீணான ஆடம்பர சடங்குகளை செய்யதே, உன்னைப் புகழ்பவர்களிடம் எக்காரணம் கொண்டும் நன்மைகள் எதையும் பெற எண்ணாதே.
  • உனது வாழ்வில் கிடைத்த புகழை மனதில் எண்ணி வாழாதே, மற்றவர்கள் தாழும்படி எந்த தாழ்வையும் நீ செய்யாதே.
  • கஞ்சாபுகை பிடிக்காதே, வெறியூட்டி மதிமயக்கும் கள்ளு குடிக்காதே, உயிர்கள் எதையும் கொல்லாதே, புத்தி குறைந்த ஞானம் புரியாதவனுக்கு ஞான நூற்களை சொல்லாதே,
  • பக்தி என்ற உடலை நாட்டி,  நன்மை, தீமை, உயர்வு தாழ்வு என்று இருமையுறும் தொந்தங்களான பந்தங்களை அற்றதான இடத்தை பார்த்து அங்கு உன் கவனத்தை நீட்டி, சத்தியத்தை உனக்குள் சேர்த்து, சமயங்கள் போதிக்கும் உன் தழைகள் ஓட்டி உண்மையை உன் வசமாக்கிக் கொள்.
  • உலகில் வாழும் போது சொல்லமுடியாத மோகங்கள் எம்மை மயக்கும் அவையெல்லாவற்றையும் சீ என்று ஒதுக்கி திடமான விவேகம் கொண்டு, ஒப்பரிய அட்டாங்க யோகம் நன்றாக ஆழமாக அறிந்து உண்மையான சம்போகம் எது என்பதை அறிவாய்.
  • எல்லாவகையான நல்ல நீதிகளையும் கற்று அவற்றை மற்றவர்களுக்கு  போதிக்க வேண்டும்.
  • நாம் பலவித சாதிகளை வைத்து பகுத்துப்பார்க்கும் மனிதர்கள் எல்லோரும் ஒன்றே என்று அறியவேண்டும், கள்ள உடம்பினை உனது அறிவால் கண்டுபிடித்து அதனுள் இருக்கும் உண்மையை கண்டுபிடி, இல்லாமல் பல புனித நதிகளில் நனைத்து உயர்வு பெறலாம் என்று எண்ணாதே.
  • எதையும் கொள்ளை கொள்ள நினையாதே, நட்பு கொண்டு பிரிந்தா அந்த நட்பின் மீது கோள் சொல்லாதே.
  • எங்கும் வெற்றி தரும் பிரகாசமாக இருப்பவன், அன்பர்களுக்கு உயர்வினை தரும் அடிவர்களின் அடிமை, தன்னை துதிப்பவர்களுக்கு பேரொளி நிலை அருளும் ஈசன்.

              
பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
     போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே - துன்
     மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.       
வைதோரைக் கூடவை யாதே - இந்த
     வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே - கல்லை
     வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.              
சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
     தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே - நல்ல
     சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே.             
பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
     பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
     வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே.   
போற்றுஞ் சடங்கைநண் ணாதே - உன்னைப்
     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே - பிறர்
     தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே.          
கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
     காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி
     அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.              
பத்தி யெனுமேனி நாட்டித் - தொந்த
     பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி - நாளுந்
     தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.        
செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
     சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
     ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.         
எவ்வகை யாகநன் னீதி - அவை
     எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி - யாவும்
     ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.            
கள்ளவே டம்புனை யாதே - பல
     கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே - நட்புக்
     கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே.             
எங்குஞ் சயப்பிர காசன் - அன்பர்
     இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
     துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...