இந்தப்பதிவில் வாசகர்கள் பாடலை படிப்பதற்கு முன்னர் சிந்தனையை இக்கால மனத்திற்கு ஏற்றவகையில் வரிசைப்படுத்தி தொகுத்திருக்கிறோம். இதை வாசித்து மனதில் ஏற்றியபின்னர் பாடலை அவரவர் விருப்பத்திற்கேற்ற தாளத்தில் படித்து மகிழலாம்.
இனி பாடலில் பொருள் சுருக்கமாக:
- மனம் ஒன்றை வைத்துக்கொண்டு அனைத்தையும் செய்கிறோம், அதில் பாவம் என்று சமூகத்திற்கும், எமக்கும் தீமை தரும் செயல்களை விலக்க வேண்டும்.
- ஏன் பாவத்தை விலக்க வேண்டும் என்றால் எப்போது நாம் இந்த உடலை விடுவோம் என்ற நிச்சயம் எவருக்கும் தெரியாது, ஏனெனில் இதுவரை எவருமே இந்த உடலை நிலையாய் வைத்திருக்க வில்லை. அப்படி நிலையில்லாத உடலில் இருந்து கொண்டு நிலையான பேரொளி நிலையை பெற வேண்டி முயற் சிக்க வேண்டுமே அன்றி மீண்டு மனிதப்பிறவி எடுக்க முடியாத செயல்களை தவிர்க்க வேண்டும்.
- எமது துன்பங்களுக்கு மற்றவர்களை தூற்றி சாபம் கொடுத்தலும் ஒரு பாபமே, அவரவர் செய்த வினைகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று எமது மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க பழகவேண்டும்.
- நாம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் அணுவிலும் சிறிய புள்ளி, இந்த ஒட்டுமொத்த இயக்கத்தின் விளைவுகளின் ஒரு பாகமே எமது வாழ்க்கை, இதில் நடைபெறும் அனைத்தையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடிந்தது எமது எண்ணமும், செயலும் மட்டுமே. ஆகவே விதிப்படி நடக்கும் செயல்களை நாம் தடுக்க முடியும் என்று மனம் புலம்புவதை விடுத்து, நடப்பதை ஏற்று, எதிர்காலத்தை நிகழ்காலத்தில் செயல் புரிவதன் மூலம் கட்டமைக்க வேண்டும்.
- இப்படி நிலையில்லாத வாழ்க்கையில் மற்றவர்களை கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடம் கோபம் தொடுத்து, ஆசைகளை ஊட்டி கருத்துக்களை செய்யலாமோ என்று கேட்கிறார்.
- சூது, பொய், மோசம் இவைகளை செய்தால் எமது சுற்றம் அழிந்து நாசமாகும். இந்த உணர்வுகளை மனதில் கொள்ளாது நல்ல இறை மீது பக்தியும், விசுவாசமும் கொண்டு எல்லா மனிதர்களுக்கும் நன்மை தரும் செயல்களை செய்ய அன்பு பெருகும்.
- ஒரு நீர்க்குமிழி எப்படி ஒரு கணத்தில் தோன்றி மறைகிறதோ அதுபோன்றதே முழுப்பிரபஞ்ச இயக்கத்துடன் ஒப்பிடும் போது எமது இந்த உடல் வாழ்க்கை. எப்போதும் எமது உடலை விடும் நிலை ஏற்படலாம்.
- உலகில் வாழும் போது எமது மனதை அன்பால் நிரப்பி, செயல்களில் பற்று இல்லாமல் செய்யும் செயலை எல்லாம் நன்றாக செய்யும் மன நிலையுடன் மனதை வைத்திருந்து செயல் புரிய வேண்டும்.
- உலகாகிய நந்தவனத்தில் ஒரு ஆண்டி பத்து மாதமாய் ( நாலு + ஆறு =10) குயவனாகிய இறைவனை வேண்டி கொண்டுவந்தான் மண்குடம் போன்ற உடலாகிய தோண்டியை கோண்டுவந்தான், பின்னர் அதை அதன் பயன் தெரியாமலே கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தான்.
- மற்றவர்களை தூஷணை செய்யும் வார்த்தைகளை சொல்லாதே. சேர்க்கும் சொத்துக்கள் எதுவும் நீ உடலை விட்டு செல்லும்போது நில்லாதே. மண், மக்கள், மனைவி ஆகிய மூன்று ஏடணையும் உன்னை மீண்டும் மீண்டு பற்றில் பிணைக்கும் பொல்லாதவை என்பதை அறி.
- ஆனால் சிவத்தின் மீது இச்சை வைத்தால் எமலோகம் உன்னைக் கண்டு அஞ்சும்.
- எப்போதும் உனது வாழ்க்கையில் நல்ல வழிதனைத் தேடு, பரமனை எப்போதும் ஆனந்த மிதப்பில் தேடு.
- சிவத்தை அறியும் முயற்சியில் உள்ள வல்லவர்களாகிய சாதகர்கள் கூட்டத்திலே எப்போதும் நட்பு வைத்திரு. மனதிலே உலகின் வள்ளல் ஆகிய பரமனை வைத்து கொண்டாடு.
- எப்போதும் நல்லவர்கள் நட்புக்கிடைத்தால் அதை ஒதுக்கி விடாதே, பன்னிரெண்டு வகையான அறங்களில் உன்னால் கடைப்பிடிக்க கூடிய அறங்கள் எவை உள்ளதோ அவற்றை கட்டாயம் கடைப்பிடி.
- எவரையும் பொல்லாங்கு சொல்லாதே, பொய் கோள் சொல்லும் பண்பு கொள்ளாதே.
- உண்மையினை அறியும் அறிவினை கூறும் வேதங்களின் வழி நில்லு, இறையை அறியும் நல்லோர்கள் வழியையே பின்பற்று.
- பொல்லாத ஒதுக்கப்படவேண்டிய கோபத்தை கொன்று விடு. எவரிடமும் கையேந்தி பிச்சை எடுக்காதே. பெண்ணை அடையவேண்டும் என்று அலைந்து இறக்காதே. அந்த ஆசை உன்னை ஆளாமல் பார்த்துக்கொள்.
- எப்போதும் உனது முயற்சி மெய் ஞானப்பாதையில் ஏறுவதாக இருக்க வேண்டும். அதன் இலக்கு சுத்த வேதாந்த வெட்ட வெளியாகும்.
- அஞ் ஞானத்தில் உன்னை ஆழ்த்தும் வழிகளைய் எல்லாம் ஆராய்ந்து தவிர்த்து, உன்னை அண்டி வருபவர்களுக்கெலாம் நீ அறிந்த மெய் ஞான மார்க்கத்தை கூறு.
- உனக்கு மெய் ஞானத்தை கூறித்தரும் குருவின் சொல் மீறி எதுவும் செய்யாதே. உன்னால் இயன்ற நன்மைகளை மென் மேலும் செய்துகொண்டிரு.
இனி பாடலில் வரிகளை தாளத்துடன் படித்து மகிழுங்கள்....
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.