- எமக்கு நன்மை தராத இன்பம் தரும் கலைகளில் மனத்தை செலுத்தி நடவாதே, நல்ல புத்தியை பொய்யான வழியில் நடத்தாதே, ஏனென்றால் இங்கிருக்கும் எதுவும் உடலை விடும்போது கூட வரப்போவதில்லை. புழுவாகப்போகும் உடல் கூடு ஏற்கனவே தொல்லைகள் பல செய்துகொண்டு இங்கு உலாவிக்கொண்டு இருக்கிறது.
- நாம் தேடுவதற்குரிய எல்லை மோக்ஷம், அதை தேடும் வழியை எவருமே தெளிவதில்லை. ஐம்பூதங்கள் சூழும் இந்த உடலாகிய காட்டில் அந்த ஐவரையும் தகுந்த சதனையால் அவர்கள் நாடாகிய பஞ்சகோசத்தில் சேர்த்துவிட வேண்டும்.
- இந்த வழிமுறையை வருந்தி தேடு, அப்படி தேடி அதன் மூலத்தை அறிந்திட வாய்க்குமே முத்தியாகிய வீடு, அந்த ஐந்துபேர் சூழ்ந்த காட்ட்டில் மனம் , புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற நான் கு வகை கோட்டையிருக்கிறது.
- இந்த நான்கு கோட்டைகளையும் பகை ஏற்படுத்தாமல் பிடித்திட்டால் ஆளலாம் இந்த உடலாகிய நாட்டை.
- இந்த நாட்டை காடாகமாற்றும் கள்ளப் புலன் ஐந்தையும் வெட்டி, அக்னியாகிய தபஸில் இட்டு எரித்திட்டால் காடாகிய உடலிற்குள் மறைந்திருக்கும் இறைவன் வாழும் வீட்டைக்காணலாம்.
- காசிக்கு ஓடிப்போனால் செய்த வினைகள் எல்லாம் போகுமா? கங்கையில் குளித்தால் நல்ல கதி கிடைத்திடுமா? என்னுடைய பூர்வ கர்மம் இது என்று அறிந்து பேசிக்கொண்டிருந்தால் மட்டும் அதனால் விளையும் துன்பங்கள் போகுமா? பல பேதங்கள் ஏற்படுத்தி வைத்து விட்டு ஒருவரை ஒருவர் போற்றிக்கொண்டிருந்தால் அந்தப்பேதங்கள் இல்லாமல் போய்விடுமா? ஒருவரை முகஸ்துதிக்காக பொய்யாக பாராட்டி இப்படி எம்மை நாமே ஏமாற்றி செய்யும் வேலைகள் எல்லாம் இந்த உடல் போகும் காலத்தில் எம்மை நாமே எப்படி எல்லாம் ஏமாற்றினோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
- உண்மையான சுத்த ஜாலம் என்னவென்று கூறுகிறேன் கேள், இதைப்புரிந்து கொண்டால் இந்த உலகவாழ்க்கையில் என்ன அனுகூலம் என்று சொல்லுகிறேன் கேள். இதைப் புரிந்துகொண்டால் சந்தகமே இல்லாமல் இது தங்கத்தை விட உயர்ந்த பொக்கிஷம் என்பதை உணர்.
- அதை சார்ந்து எம்முடைய தினசரி பயிற்சி ஆக்கிக்கோண்டால் அது தாழ்வில்லாத மகிழ்ச்சியை தரும். முடிவில்லாத எங்கும் நிறைந்த மகிழ்வைத்தரும் அந்த உயர்வான அந்த பரிசுத்தத்தை பெற இந்த உலகில் உயர்ந்த செய்கையான பக்தியை கைக்கொள்.
- அந்த பக்தியை பற்றினவர்க்கே முக்தியும் சித்தியுன் சாத்தியமாகும். அப்படி பக்தி உன்னில் உண்டாக அந்த சிவனின் செயலே காரணம்.
- அன்பென்ற மலரை உன் மனதில் தூவி தேவியின் பாதார விந்தங்களை குருபாதங்களாக தியானித்து, இன்பமாய் மனமகிழ்வுடன் உன் உடல் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, உன்னை நீ ஈடேற்ற வேண்டும் என்று நீ உன் உடலினுள் இருக்கும் ஆறு வீடுகளையும் கண்டு அதனை எப்படி இயக்குவது என்ற வழியையும் அறிந்து கொண்டு, மனதை தேவையற்ற எண்ணங்களால் கொதிக்க விடாமல் தொண்டு செய்துகொண்டு
- ஆதிசிவனின் இருப்பிடத்தை அறிய, உடலில் ஆன்மா இருந்தால்தான் உடலின் ஆட்டம் என்பதை அறிந்து கொண்டு, அது அற்றபோதே உடல் வாட்டமடைந்து இறக்கிறது என்று அறிந்து,
- வான் கதி என்று மகா பிராண சக்தியில் நாட்டம் வைத்து, உன் சாதனையை தொடர, அதன் பயனாக உனது அகத்தில் உண்டாகும் எல்லையற்ற மகிழ்ச்சியால் எப்போது கொண்டாட்ட மன நிலையில் இருப்பாய்.
- எட்டும் இரண்டும் எங்கிருக்கிறது என்று அறிந்து, அதை உனக்குள்ளே தெளிவாக ஏகமாய் அறிந்து, அவை எல்லாம் தோன்றும் வெட்டவெளியை சார்ந்து தியானித்து, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மிகுந்த களிப்புடன் உலகத்தில் உள்ள எதிலும் இச்சை வையாமல், ஒவ்வொரு நாளும் சிரசில் இருந்து வழியும் செந்தேன் போன்ற அம்ருதத்தை மொள்ளு, சிந்தை தித்திக்க தெவிட்டாமல் இதை உட்கொள்ளு!
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Tuesday, August 14, 2018
கடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 02
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.