குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 28, 2018

இயற்கை தரும் ஞானம்!

இயற்கையின் சம நிலையை காட்டிலிருந்து கற்றுக்கொள்ளலாம். காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொண்டு துணையாக ஒத்திசைவாக வாழுவதே காட்டின் நியதி. சம நிலையை குலைக்கும் செயலை எந்த ஒரு உயிரினமும் செய்வதில்லை.
மேலும் காட்டில் ஒரு உயர்வு படி நிலை (hierarchy) காணப்படும். இது பொதுவாக ஒரு சம நிலையடைந்த காட்டுச் சூழலில் ஐந்தடுக்காக காணப்படும். இந்த ஐந்தடுக்குகளும் மேலே உள்ளது கீழே உள்ள தாவரத்த்திற்கு போசிக்கும் நிலையையும், மழையின் வேகத்தை குறைத்து நீரை மண்ணில் தேக்குவதாகவும், அதீத சூரிய ஒளியை தடுத்து வெப்பத்தின் பாதிப்பை குறைப்பதாகவும் இருக்கும்.
இப்படி ஒன்றுக்கொன்று ஒன்றி வாழும் பண்பால் சுட்டெரிக்கும் சூரியனையும், மண்ணை கரைத்து வளத்தை அழிக்கும் மழையையும், தம்மை துடைத்தெறியும் காற்றினையும் தமக்கு சாதகமாக காடு மாற்றிக்கொள்கிறது.
இப்படி உயர்வுப்படி நிலை இருப்பதால் மட்டுமே பெரும் அழிவு சக்தியான இயற்கை காட்டிற்கு சாதகமான வளப்படுத்தும் உள்ளீடாக மாறுகிறது.
இதுவே இயற்கை மனிதனிற்கு தரும் ஞானம்!
இங்கு மனிதன் ஒரு வினோதமான ஆணவம் பிடித்த மிருகம்! இயற்கையை உள்ள வாறே புரிதலை விட தான் கற்பனை செய்யும் வகையில் புரியும் வினோத பிராணி! மனித மனத்தின் குறைபாடே இன்றைய சூழல் பிரச்சனைகள்!

Tuesday, February 27, 2018

மனதின் சம நிலை பற்றிய கருதுகோள்


காயத்ரி குப்த விஞ் ஞானம் - பாடம் 08 & 09

இந்த வாரத்திற்குரிய பாடம்: பாடம் 08 & 10


காயத்ரி குப்த விஞ்ஞானம் என்பது காயத்ரி மந்திரம் பற்றிய அனேக ரிஷி பாரம்பரிய இரகசியங்கள் அகத்திய மகரிஷி குரு பாரம்பரியத்தில் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் இலங்கை காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு ஸ்வாமிகளுக்கு கற்பிக்கப்பட்டு, பின்னர் முருகேசு சுவாமிகளிடம் ஸ்ரீ ஸக்தி சுமனன் குருமுகமாய் பயின்ற சாதனா பாடங்களின் தொகுப்பு. 

இந்தப்பாடங்கள் கொழும்பில் வாரம் தோறும் வகுப்புகளாகா நடாத்தப்படுகிறது. எதுவித கட்டணமும் இல்லை. பங்குபற்றுபவர்கள் குரு - அகத்திய - காயத்ரி சாதனை செய்பவர்களாக இருக வேண்டும். 

பாடத்தின் ஒலிக்கோப்புகள் இங்கே பதியப்படுகிறது:

Thursday, February 15, 2018

காயத்ரி மந்திர சாதனை மூலம் பலனைப்பெறுவதற்கான நிபந்தனைகள்

காயத்ரி மந்திரத்தை தரப்பட்ட நிபந்தனைகளுடன் சாதனை செய்ய குறித்த பலன் களைப்பெறலாம் என்பது அனுபவ சாதகர்களின் அனுபவம். 

பலன்: உயர்ந்தோரின் தொடர்பினை பெறுதல்
நிபந்தனை: உயர்ந்த எண்ணத்துடன் காயத்ரியை ஜெபித்தல்

பலன்: செழிப்பும் ஆனந்தமும்
நிபந்தனை: நம்பிக்கையும் பக்தியுடனும் காயத்ரியை ஜெபித்தல்

பலன்: மனோசக்தி அதிகரிப்பு
நிபந்தனை: உணவுக்கட்டுப்பாட்டுடன் சாத்வீக உணவினை உட்கொள்ளல்.

பலன்: உயர்ந்த ஞானத்தைப் பெறல்
நிபந்தனை: தெய்வ சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையும் அந்த சக்தி எமது அந்தராத்மாவினூடாக உள்ளுணர்வாக எம்மை வழி நடாத்துகிறது என்ற நம்பிக்கை.

பலன்: உடலில் உள்ள சூக்ஷம் சக்கரங்களினை விழிப்பித்தல்
நிபந்தனை: ஒரு நாள் விடாமல் தினசரி உணவைப்போன்று காயத்ரி ஆன்மாவிற்கான உணவு என்பதை உணர்ந்து பயிற்சித்தல்.

பலன்: அம்ருதத்துவம் பெறல்

நிபந்தனை: நான் என்ற ஆங்காரம் இன்றி எனது செயல்கள் யாவும் உயர்ந்த ஞானசக்தியின் வழி நான் நடக்கிறேன் என்பதை உணர்ந்து செயலாற்றுதல். 

காயத்ரி மந்திரம் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மையும்


கட்டுக்கதை#01: காயத்ரி மந்திரம் அதீத ஆற்றல்களை உடனடியாக விழிப்பிக்கும்
உண்மை: காயத்ரி அதீத ஆற்றல்களை பெறுவதற்கான பக்குவத்தையும், மனிதனது பரிணாமத்தை தெய்வ நிலை நோக்கி விரைவாக முன்னேற்றும் ஆற்றலையும் தரும் மந்திரம். இது ஒருவனுக்கு தன்னை கட்டுப்படுத்தும் சுய ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாட்டையும், ஆன்ம விழிப்பையும் தந்து, இயற்கையில் ஆற்றலையும் ஒழுங்கையும் புரிந்து கொண்டு பரிணாமத்தில் உயரவைக்கும் மந்திர சாதனை.

கட்டுக்கதை#02: காயத்ரி மந்திரம் பிராமண ஜாதியினருக்கும் மாத்திரம் உடையது.
உண்மை: பிராமணன் என்பது வேதம் கூறும் உயர்ந்த ஞானத்தை அடைய தனது வாழ்வின் இலக்காக நிர்ணயித்தவன் என்று பொருள். ஆகவே எவராவது அந்த பிரம்ம ஞானத்தை அடைய தமது வாழ்வின் இலக்காக நிர்ணயித்தால் அவர்களுக்குரியது காயத்ரி மந்திரம்.

கட்டுக்கதை#03: காயத்ரி மந்திரம் மற்றவர்கள் காதுகளுக்கு கேட்காமல் தனிமையில் இருந்து மட்டுமே அப்பியாசிக்க வேண்டும்.
உண்மை: பலர் இணைந்து ஜெபித்தால் பிரபஞ்ச பிராண சக்தி இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கையின் மடங்காக குறிந்த இடத்தில் விழிப்படையும். ஆகவே பலர் இணைந்து கூட்டு ஜெபம் செய்வது துரித முன்னேற்றத்தை ஏற்படுத்த வல்லது.

கட்டுக்கதை#04: மனதால் மட்டுமே காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
உண்மை: மானசீக ஜெபம் செய்ய ஒருவன் தனது மனதின் எண்ணங்களை கட்டுப்படுத்தி குறைத்திருக்க வேண்டும். விழிப்புணர்வு நிலை அதிகமாக இருக்க வேண்டும். ஸ்தூல உடலில் காயத்ரியின் 24 சக்தி கேந்திரங்களை விழிப்படையச் செய்ய வாயால் உதட்டை அசைத்தோ அல்லது உரக்கவோ பயிற்சித்துப் பழக வேண்டும்.

கட்டுக்கதை#05: காயத்ரி மந்திரம் முறையாக தீட்சை பெற்றவரகள் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.


உண்மை: சென்ற நூற்றாண்டில் ரிஷிகளின் திட்டத்திற்கமைய பண்டிட் ராம் சர்மா ஆச்சார்ய, அகத்திய மகரிஷி யின் ஆணைக்கமைய பண்டிட் கண்ணைய யோகி, மற்றும் எண்ணிறைந்த யோகிகள் பல கோடி ஜெப புரச்சரணம் செய்து காயத்ரியின் ஆற்றல் பிரபஞ்ச மயமாக்கி அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியுள்ளனர். ஆகவே எவர் ஒருவர் சித்த வித்யா குருமண்டல நாமாவளியும், அகத்திய மூல குரு மந்திரமும் ஜெபிக்கிறார்களோ அவரகளுக்கு காயத்ரி சாதனை செய்வதற்குரிய பக்குவத்தை பிரபஞ்ச சக்தி ஏற்படுத்தி கொடுக்கும். 

Friday, February 09, 2018

ஆற்றலை வளர்த்துக்கொள்ள யோகமுறை

இன்று பலரும் யோகம் தியானம் என்பவை நோய்க்கு மருந்தாகவும், மனக்கவலைக்கு தீர்வாகவும் எண்ணியே கற்கின்றனர். யோக முறைகளை கற்றால் இவை நடக்கிறது என்பதன் நுண்மையான அடிப்படை இந்தப்பயிற்சிகள் ஒருவனின் ஆற்றலை வளர்க்கின்றது என்பதே. 

ஒரு மனிதனிற்கும் பௌதீக ஆற்றல் தூல உடலின் மூலம் வெளிப்படுகிறது. அவனது ஆன்ம ஆற்றல் பிராணாக்னியாகவும், அந்தக்கரணங்கள் மூலமும் வெளிப்படுகிறது. ஒருவன் தனது அந்தக்கரணங்கள் மூலமும் தனது பிராணனை அக்னி மயமாக்கி செலுத்த வல்லவனாக இருக்கிறானோ அவனே தெய்வ ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான். 

சாதரண மனிதனை விட ஆற்றல் உள்ளவர்களில் பிராணன் அக்னியுடன் சேர்ந்து பிராணாக்னியாக செயற்படுகிறது. இந்த பிராணாக்னி ஒருவனுக்கு சங்கல்ப சக்தியையும் ஆத்ம பலத்தையும் தருகிறது. 

எப்படி இரசவாதத்தால் சிந்தாமணிக்கல் பட்ட இரும்பு தங்கமாக மாறுகிறதோ அதுபோல் ஆத்ம பலம் உள்ளவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தாங்களும் அதுபோல உருமாறுகிறார்கள். 

ஆற்றல் என்பது வானத்தில் இருந்து இலவசமாக ஏதோ வரமாக கிடைப்பதென்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. இது அகத்தில் இருக்கும் ஆற்றலை ஒருவன் தன்னில் ஒழுங்குபடுத்திக்கொள்வதன் மூலம் வெளிப்படும் ஒரு செயல் முறை. 

எவர் ஒருவர் தைரியத்துடன் தன்னை ஒழுங்குபடுத்தி திட்டமிட்டுக்கொள்கிறார்களோ அவர்களில் ஆற்றல் வெளிப்படத்தொடங்குகிறது. 

இன்றைய மனித வளத்தின் தேவை ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு அறிவுக்கூர்மையை பெறுவது. அறிவுக்கூர்மை உடையவனை தேஜஸ்வி என்று சமஸ்க்ருதத்தில் கூறுவார்கள். இதன் நேரடிப்பொருள் ஒளிமிகுந்தவன். ஆற்றல் விழிப்படைந்தவனை பிராணவான் என்று கூறுவர். 

ஒருவன் தன்னை பிராணவான் ஆக்கிக்கொள்ள ஒருவன் இரண்டு தளத்தில் போராட வேண்டியுள்ளது.
  1. தன்னிடமுள்ள தேவைக்கதிகமான, குள்ள நரித்தனமான, தேவையற்ற மனப்பண்புகள் { ஒருவரைப்பற்றி தவறான சிந்தனை, பிரயோசனமற்ற விஷயங்கள் மனதினை ஓட விடுதல், கேளிக்கை, தவறான பழக்க வழக்கம்}
  2. புதுமையாக எண்ணங்களுடன், உலகத்திற்கு தேவையானவற்றை படைக்க திட்டமிட்டு செயலாற்றும் பண்பு. 
இப்படி தன்னை பிராணவான் ஆக்கிக்கொண்ட ஒருவன் துன்பங்களுடன் போரிட்டு வளங்களையும், மக்களையும் ஒன்றிணைத்து வெற்றி பெறக்கூடியவன். 

மனப்பண்புகளை கொண்டு மனிதர்களை பிரிக்கலாம். 

  1. ஒட்டுண்ணிகள்: இவர்கள் எவருக்கும் எதையும் கொடுப்பதற்கு மனமோ, ஆற்றலோ, பொருளோ இல்லாமல் மற்றவர்களை சுரண்டி, துன்புறுத்தி வாழ்பவர்கள். 
  2. அறிவுள்ள குறுகிய மனமுள்ள சுய நலமிகள்: இவர்கள் வசதியும், அறிவும், பணமும் உள்ளவர்கள், ஆனால் உலகைப்பற்றியோ, மற்றவர்களைப்பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாதவர்கள். 
  3. ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்: இவர்கள் தமது பணம், வசதி என்பவற்றை நிறைவாக அடைவதோடு மற்றவர்களுக்காகவும் அவற்றை விஸ்தரிக்க விரும்புபவர்கள். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்பவர்கள் இந்த பகுப்பில் அடங்குபவர்கள். 
  4. தெய்வப்பிறவிகள்:  இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஆனால் தமது ஆற்றலை பொருளையும் பௌதீக இன்பகளை உருவாக்க பயன்படுத்தாமல் தன்னை அறிவதற்கும், பல்லாயிரம் நபர்களுக்கும் தன்னையறியும் அறிவை கொடுப்பதற்கும் தமது ஆற்றலை பயன்படுத்துபவர்கள். 

வரங்கள் நிலத்திலிருந்து அசுத்தமாகவும், ஒளியற்றதாகவும், கடின முயற்சியுடனும் எடுக்கப்பட்டு பின்னர் பட்டை தீட்டப்பட்ட பின்னரே ஒளியையும் பெறுமதையையும் பெறுகின்றது. இந்த செயற்பாட்டில் வைரத்திற்கு ஒளியை பட்டைதீட்டுவதால் தரப்படுவதில்லை. ஆனால் பட்டை தீட்டுவதால் வைரம் ஒளிரத்தொடங்குகிறது. இதைப்போலவே ஒருவன் தனது ஆற்றலை வளர்க்கும் செயல்முறையும். 
  1. முதல் நிபந்தனை ஆற்றல் தனக்குள் அசுத்தமான, பட்டைதீட்டப்படாத வைரம் போல் எனக்குள் ஒளிந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். 
  2. பின்னர் வைரத்தை பட்டை தீட்டுவதுப்போ தனது மன, உடல் பிராணனின் பண்புகளை முயற்சியுடன் மாற்ற வேண்டும். 
  3. இந்த செயன் முறை மூலம் தனது அந்தக்கரணத்தை சுத்தி செய்து பிராணவானாக உயர வேண்டும். 
  4. இந்த முயற்சிக்கு எவரும் கல்லூரிகளில் பயிற்சி அளிக்க முடியாது. தானாகவே முயல வேண்டும். தனது ஆற்ற்லை வெளிப்படுத்தும் சூழலில் தன்னை இருத்திக்கொள்வதன் மூலம் ஒருவன் தனக்குரிய வாய்ப்பினை உருவாக்க வேண்டும். சூழல் சரியாக அமைய, ஒருவனின் முயற்சியும் கைகூட ஒருவனது ஆற்றல் வெளிப்படத் தொடங்கும். 
  5. ஆற்றலுக்கான விதை எல்லோரிடமும் உள்ளது, அவற்றை விழிப்படையச் செய்து ஒழுங்காக பயிற்சிபதன் மூலம் ஒருவன் ஆற்றலை அடையலாம். இதற்காக ஒருவன் எவரிடமும் கையேந்த தேவையில்லை. 
  6. ஒரு மனிதனின் ஆற்றல் மூன்று முனைகள் உடையது. 
  7. உடல் ஆற்றல் ஓஜஸ்
  8. அறிவாற்றல் தேஜஸ்
  9. அந்தக்கரணங்களின் ஆற்றல் வர்ச்சஸ் 
  10. இந்த மூன்று ஆற்றல்களையும் சரியான முறையில் சுத்தி செய்து விழிப்படையச் செய்வதே ஒருவன் ஆற்றலை முழுமையாக அடைவதற்குரிய வழி. 
  11. உடலின் அனைத்துப்பாகங்களையும் சரியான வழியில்  ஒருங்கிணைத்து உபயோகிப்பதன் மூலம் ஓஜஸினை பெறலாம். 
  12. ஒரு பணியை மன விருப்பத்துடன் எடுத்து, மன ஒருமையுடன், முழுமையான அர்ப்பணிப்புடன் அதைப்பற்றி முழுமையாக புரிதலும் விழிப்புணர்வுடன் இருத்தலும் தேஜஸினை தரும். 
  13. ஒரு இலக்கில்/இலட்சியத்தில் தனது உயிரையும் தரும் தியாகம் அந்தக்கரணங்களின் சக்தியை அந்த இலக்கில் செலுத்தி வர்ச்சஸினை தரும். 
  14. இப்படிப்பெறும் ஆற்றலை ஒருவன் இரண்டு விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ரிஷிகள் சொல்லியுள்ளார்கள். அவை தீமையை அழிப்பதும், நன்மையை உருவாக்குவதும். 
  15. இதை ஒருவன் தனக்குள்ளேயே உருவாக்க வேண்டும், தனது மனம், உடல், புத்தியில் உள்ள தீமைகளை களைந்து தன்னில் நன்மைகளை உருவாக்குவதற்கு முதலில் பழக வேண்டும். 
  16. இதற்குரிய பண்டைய ரிஷிகளின் அறிவியல் சேதன விஞ் ஞானம் அல்லது யோக சாதனா அல்லது தபஸ் எனக்கூறப்பட்டுள்ளது. 
  17. இவை உடலையும்,  மனதையும், பிராணாக்னியையும் ஒழுங்குமுறைப்படுத்தும் அறிவியலைக் கூறுபவை.  

Thursday, February 08, 2018

காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடங்கள் 07 & 09

இந்த வாரத்திற்குரிய பாடம்: பாடம் 07 & 09 

காயத்ரி குப்த விஞ்ஞானம் என்பது காயத்ரி மந்திரம் பற்றிய அனேக ரிஷி பாரம்பரிய இரகசியங்கள் அகத்திய மகரிஷி குரு பாரம்பரியத்தில் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் இலங்கை காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு ஸ்வாமிகளுக்கு கற்பிக்கப்பட்டு, பின்னர் முருகேசு சுவாமிகளிடம் ஸ்ரீ ஸக்தி சுமனன் குருமுகமாய் பயின்ற சாதனா பாடங்களின் தொகுப்பு. 

இந்தப்பாடங்கள் கொழும்பில் வாரம் தோறும் வகுப்புகளாகா நடாத்தப்படுகிறது. எதுவித கட்டணமும் இல்லை. பங்குபற்றுபவர்கள் குரு - அகத்திய - காயத்ரி சாதனை செய்பவர்களாக இருக வேண்டும். 

பாடத்தின் ஒலிக்கோப்புகள் இங்கே பதியப்படுகிறது:

Tuesday, February 06, 2018

கேள்வி பதில்: சாதனையை தொடர முடியாதவாறு பணிச்சுமை, குடும்பபொறுப்புகள் தடைபடுத்துகின்றதே?

சாதனையை தொடர முடியாதவாறு பணிச்சுமை, குடும்பபொறுப்புகள் தடைபடுத்துகின்றதே ஐயா? 

நீங்கள் இறைசாதனை எதுவும் தொடங்கி குறித்த காலத்திற்கு மேல் செய்ய முடியாமல் தடை ஏற்பட்டால் அதற்கு பொதுவாக வேலை, குடும்பச்சுமை இப்படியான காரணங்கள் வெளிப்புறமான சரியான காரணமாக இருந்தாலும் உண்மையில் அகத்தில் நீங்கள் செய்யும் சாதனையில் உருவாகும் தெய்வ சக்தியை ஏற்றுக்கொள்ளும் பண்பு உங்களுக்கு இல்லாமல் இருக்கிறது என்பதும், அதற்காக நீங்கள் முயற் சிக்கவில்லை என்பதுமே சூக்ஷம காரணம்.

ஆகவே அகத்தூய்மையை கவனமாக குருபக்தியுடன் பேண வேண்டும்.

Monday, February 05, 2018

கேள்வி பதில்: மனம் ,புத்தி ,சித்தம்,அகங்காரம் ஆகிய அந்தகரனங்களுக்குள் உள்ள தொடர்பை விளக்குங்கள் ஐயா.

மனம் ,புத்தி ,சித்தம்,அகங்காரம் ஆகிய அந்தகரனங்களுக்குள் உள்ள தொடர்பை விளக்குங்கள் ஐயா.

டெய்சி

மனம் புலன் வழி பௌதீகத்தை உணரும் பகுதி, சரியாக சொல்வதானால் மேல் மனம், சித்தம் இப்படி உணருபவற்றை சேர்க்கும் சேகரிப்பு கிடங்கு (storage), புத்தி இப்படி சேகரிக்கப்பட்டதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு வெளி அனுபவத்தினை ஒப்பிட்டு முடிவெடுக்கும் பகுதி, அகங்காரம் இதையெல்லாம் செய்வதற்கு ஒரு மையம் தேவை, அந்த மையமே அகங்காரம் எனப்படுகிறது.

கேள்வி பதில்: மனம் எவ்வாறு செயல் படுகிறது. மனதை துய்மையாக என் வைத்துக் கொள்ள வேண்டும்?

மனம் எவ்வாறு செயல் படுகிறது. மனதை துய்மையாக என் வைத்துக் கொள்ள வேண்டும்?

ஆதேமலன் ஈஸ்வரன் 

மனம் உடலில் மூளையும், நரம்புத்தொகுதியும் இணைந்த சிக்கலான உடல் இரசாயன தாக்கத்தின் விளைவாக செயற்படுகிறது, அதே வேளை உடலிற்கு அப்பாற்பட்ட உணர்வு (இதையே ஆன்மா என்று தத்துவவியல் கூறும்) இதற்குரிய சக்தியை வழங்குகிறது. மனம் சார்ந்தத்ன் வண்ணமுடையது, ஆகவே தூய்மையாக வைத்திருக்க தூய கருத்துக்களை, எண்ணங்களை சிந்தனைகளை சார்ப்பாக வைத்திருப்பதன் மூலமே மனதை தூய்மையாக வைத்திருக்கலாம்.

Thursday, February 01, 2018

கேள்வி பதில்: தீட்சை பெற எவ்வளவு சார்ஜ் ? எங்கே வரனும் ?

தீட்சை பெற எவ்வளவு சார்ஜ் ? எங்கே வரனும் ? 

இந்த கேள்விக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னில் உருவானதற்கான காரணம் புரிதல்களை ஏற்படுத்துவதற்காக. 

முதலாவது தீட்சை என்பது என்ன என்பது பற்றிய புரிதல் அவசியம். 

தீட்சை என்பது அறியாமையை அழிப்பதற்கான அறிவினை/ஆயுதத்தினை தரும் செயல். 

இந்த செயல் ஒரு யுத்தபிரகடனத்தின் பின்னர் தயாரான போர்வீரனுக்கு ஆயுதம் வழங்கு செயல்முறையுடன் ஒத்தது. 

அஞ்ஞானம், அறியாமை, மனதின் தீய ஒழுக்கம் என்பவற்றை அழிப்பதற்கு உறுதிபூண்ட மாணவனுக்கு ஞானம் எனும் தீயை/ஆயுதத்தை தரும் செயல்முறைதான் தீட்சை. 

ஆகவே மாண்வனுக்கும் தாம் எதற்காக தீட்சை கேட்கிறோம் என்ற தெளிவு முதல் நிலை, இரண்டாவது வாங்கப்போகும் ஆயுதத்தை நாம் பயன்படுத்தும் அளவிற்கு வலிமை வாய்ந்தவரா என்ற பக்குவம் இரண்டும் முக்கியமானது.

இரண்டாவது தீட்சை பெறுவதற்கு நாம் பக்குவம் உடையவர்களா என்பதை எப்படி அறிவது, எதையும் தேடிப்போகாமல் தனது பக்குவத்தை வளர்ப்பதை மாத்திரம் இலக்காக கொண்டு செயல் புரிவது. 

பக்குவம் இருந்தால் தானாக கிடைப்பதுமட்டும்தான் தீட்சை! கட்டணம் கட்டி, வேடங்கள் இட்டு, ஆடம்பரமாக நடாத்துவதல்ல தீட்சை! 

ஆகவே அன்பரே, நீங்கள் இறைவழியில் முன்னேற விருப்பம் இருப்பின் உங்கள் பக்குவத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள், எங்கும் பரந்திருக்கும் இறைசக்தி உங்களுக்கு அந்த பக்குவத்தை தந்து தீட்சையும் தந்தருளும். இதற்காக எங்கும் வரத்தேவையில்லை. 

இந்த பக்குவத்தை ஏற்படுத்துதான் குரு- அகத்திய-காயத்ரி சாதனை உபதேசம், இந்த நூலை பெற்று அதில் காட்டியபடி உங்கள் சாதனையை தொடருங்கள். மற்றவை தானாக நடைபெறும்.  




புளியம்பழ ஞானம்

Image may contain: food



பழம் பழுக்க ஓடு கழரும்,
மனம் பழுக்க பற்று கழரும்!
ஒட்டாத பற்றாத புளியைப்போல் 
பழுத்த மனம் பெறுதல் வேண்டும் குரு நாதா 
ஓட்டில் பற்றிருக்க 
காயின், சுவையோ சுவைக்கமுடியாத கார்ப்பு கலந்த புளிப்பு,
பழுத்து ஓடு கழர சுவையோ புளிப்புடன் இனிப்பு, 
பற்றுடன் கூடிய மனம் வாழ்வை துன்பம் (கார்ப்பு) என்ற பாவனையில் பார்க்கும், 
மனம் பழுக்க வாழ்வு இனிக்கும், 
என்றாலும் சம்சாரம்/வாழ்வு என்ற புளிப்பு 
உடல் உள்ளவரை மாறாது! 
பழுத்த புளி விதைக்க விருட்சமாகும்
பழுத்த மனம் பலருக்கு ஞான ஒளியேற்றும்!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...