குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Sunday, November 05, 2017

அர்த்த சாஸ்திரம் – 005: அரசன்/தலமை நிர்வாகி அறியவேண்டிய வித்யா எவை ? 
ஆன்விக்ஷிகி, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதிஷ்சேதி வித்யா
த்ரயீ வார்த்தா தண்ட நீதிஷ்சேதி மாநவா;
த்ரயீ விசேஷோ ஹ்யாந்வீக்ஷி கீதி
வார்த்தா தண்ட நீதிஷ்சேதி பாரஸ் ப்ருத்யா:
ஸம்வரண மாத்ரம் ஹி த்ரயீ லோக யாத்ராவித இதி:
தண்ட நீதிரேகா வித்யேத் யௌஷ நஸா:
தஸ்யாம்ஹி ஸர்வ்வித்யாரம்பா: ப்ரதிபத்தா இதி:
சதுஸ்ர ஏவ வித்யா இதி கௌடில்ய:
தாபிர் தர்மார்தௌ யத் வித்யாத் வித்யா நாம் வித்யாத்வம்:

மூன்று வேதங்கள், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்றுமே சில அறிஞர்களால் அறிய வேண்டிய வித்தையாக ஏற்கப்பட்டுள்ளது ஆன்விக்ஷிகி வித்தையாக ஏற்கப்படவில்லை.

பொருளாதாரம், அரசியல் ஆகிய இரண்டும் மட்டுமே அறிய வேண்டிய வித்தையாக ப்ரஹஸ்பதி அர்த்த சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் த்ரயீ என்ற வேதங்கள்
 
உலக விவகாரங்களுக்கு தேவையில்லை, அது ஆத்ம ஞானத்திற்கு மட்டுமே போதுமானது அவர்களைப் பொறுத்த வரையில் தம்மை நாத்திகர் என்று மற்றவர்கள் கூறக்கூடாது என்பதற்காக போர்த்திக்கொள்ளும் விஷயமே வேதங்கள், வேதங்கள் உலக வாழ்க்கைக்கு உதவாதவை என்ற பிளவு சிந்தனை உள்ளவர்கள்

தண்ட நீதி மட்டுமே வித்யா என்பது ஔஷநசர்கள் எனும் சுக்ர நீதியை பின்பற்றுபவர்கள் கூற்று. தண்ட நீதி என்ற நிர்வாக அமைப்பு சரி இல்லை என்றால் எதுவும் ஒழுங்காக இருக்காது என்பது அவர்கள் கருத்து

ஆனால் கௌடில்யரின் அபிப்பிராயம் ஆன்விக்ஷிகி, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி ஆகிய நான்கும் வித்யாகளே! ஏனெனில் வாழ்வின் இலக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு புருடார்த்தங்கள். இந்த நான்கையும் அடையும் வழியை கூறுபவை வித்யா! ஆகவே இந்த நான்கும் வித்தைகளே

இந்த சுலோகம் கௌடிலியரின் அறிவாற்றல் – ஆன்விக்ஷிகியின் ஆழத்தைக் காட்டுகிறது. இன்றைய காலத்தில் ஒருவர் தனது துறையில் முனைவர்/கலாநிதி பட்டம் பெற்றால் அந்த துறையில் கற்பிக்கும் அறிவாழம் உள்ளவர் என்ற தகுதி பெறுகிறார். ஏனெனில் தனது அறிவாழத்தால் அந்த துறையில் புதிய அறிவை உருவாகியதன் காராணமாகவே அவருக்கு PhD பட்டம் வழங்கப்படுகிறது. இந்த பட்ட்த்தை பெற அவர் தனக்கு முன்னர் அதே துறையில் இருந்த அறிஞர்களில் அபிப்பிராயங்களை தனது அபிப்பிராயத்துடன் ஆராய்ந்து, தனது ஆய்வுடன் பெற்ற தகவல்களை ஒப்பிட்டு தனது கருத்தை சொல்ல வேண்டும். 

இந்த சுலோகம் அரசன் அறிய வேண்டிய வித்யாக்கள் எவை என்பது பற்றி அலசுகிறது. முதல் வரி கௌடில்யர் தனது கண்டுபிடிப்பினை வரையறை செய்கிறார். ஆன்விக்ஷ்கி, த்ரயீ, வார்த்தா, தண்ட நீதி இந்த நான்கும் வித்யா என வரையறுத்து, பின்னர் சில அறிஞர்கள் ஆன்விக்ஷிகி என்ற காரணத்தை கண்டுபிடிக்கும் அறிவின் நுண்ணாற்றலை வித்யாவாக ஏற்றுக்கோள்ளவில்லை எனக் கூறி, தனக்கு முன்னர் வழக்கில் இருந்த பிரகஸ்பதியின் நீதி நூலில் இப்படிச் சொல்லியுள்ளது, சுக்கிரனுடைய ஔச நச நீதியில் இப்படிச் சொல்லியுள்ளது ஆனால் கௌடில்யரின் அபிப்பிராயம் இந்த நான்குமே வித்யாக்கள் தான் என முடிக்கிறார். 

அர்த்த சாஸ்திரத்தில் தான் பிரயோகித்து வெற்றிகண்டு சந்திரகுப்த மௌரியன் மூலம் ஸ்தாபித்த மௌரியப்பேரசின்  வெற்றியின் அடிப்படையில் தனது அனுபவத்தை பகிர்கின்றார். மற்றைய எல்லா அறிஞர்களையும் விட அரசனிற்கு ஆன்விக்ஷிகி என்ற “காரணத்தை கண்டுபிடிக்கும் நுண்ணறிவு அவசியம்” என்ற அடிப்படையை அடுத்து வரும் ஸ்லோகங்களில் வரையறை செய்கிறார். 

இறுதி வரியில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்குமே வாழ்வின் இலக்கு என்பதால் இந்த நான்கையும் அறியாத அரசன் மனித வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாதவன், அவனால் மனிதர்களுக்கு தலைவனாக இருக்க முடியாதவன் என்பதை ஆழமாக உணர்ந்து இந்த சூத்திரத்தை வரையறை செய்கிறார். 

இன்று ஒவ்வொருவரும் வேலை செய்யும் நிறுவனத்தை ஒரு அரசு என்று எடுத்துக்கொண்டு நிறுவனத்தலைவர் அரசன் என்று ஒப்பிட்டால் இந்த நிலையை சரியாக விளங்கிக்கொள்ளலாம். நிறுவனத்தலைவரிற்கு அர்த்தம் என்ற பணத்தை சேர்ப்பது மட்டும் இலக்கு என்றால் அவரிற்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களின் நிலை என்ன ஆகும். அவரது வாழ்க்கையும் என்னவாகும்? பணத்தை சேர்க்க ஊழியர்களை அதிக நேரம் உழைக்கச்சொல்லுவார், இதனால் ஊழியரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் நிம்மதி இழக்கலாம். அவரது குடும்ப வாழ்க்கையும் குழம்பிப்போய்விடும். தர்மம் தவறி செல்வம் சேர்க்க முயன்று தண்டனைக்கு உள்ளாகலாம். மோக்ஷத்தை பற்றிய சிந்தனை இல்லாத தலைவன் தான் என்ற அகங்காரத்திற்கு உள்ளாகி மற்றவர்களை ஆணவத்துடன் துன்புறுத்துவான். இதனால் நாடு/நிறுவனம் குழப்பத்திற்கு உள்ளாகும். ஆகவே ஒரு தலைவனாக மற்றையவர்களை வழி நடாத்த வேண்டுபவர்கள் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ (அறம், பொருள், இன்பம், வீடு) மாகிய நான்கிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இதையே இந்த சுலோகத்தில் குறிப்பிடுகிறார். வித்யா என்பது ஒரு விடயத்தை அறிந்து, புரிந்து, தெளிந்த அறிவு. இதை அரசன்/தலைமை நிர்வாகி பெற்றிருத்தல் அவசியம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்? இப்படி பலசாதகர்க...