ஆன்விக்ஷிகி இரண்டு விடயத்துடன் தொடர்பு படுகிறது. ஒன்று ஆன்மாவை அறிதல், மற்றது காரியங்களுக்கான காரணத்தை அறிதல்.
கௌடில்யர் அரசன் அல்லது தலமை நிர்வாகி ஆன்மாவை அறிந்த ஞானியாகவும், சரியான தர்க்க ரீதியாக கேள்வி கேட்கக்கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசன் அறிய வேண்டிய வித்தைகளில் ஆன்விக்ஷிகி முதன்மை வித்தையாக குறிப்பிடுகிறார்.
ஆன்விக்ஷிகி என்பது தர்க்க ரீதியாக கேள்வி கேட்டு ஒரு விஷயத்திற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல்.
ஒரு விஷயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும்போது மட்டுமே அதனது தர்க்கத்தை அறிய முடியும். தர்க்கத்தை அறிந்தால் மட்டுமே புத்தி ஏற்றுக்கொள்ளும். புத்தி ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனம் உள்வாங்கும். மனம் உள்வாங்கினால் மட்டுமே செயல் சிறப்பாக நடைபெறும்.
ஆகவே ஒருவன் தனது ஆன்விக்ஷிகி ஆற்றலை வளர்த்துக்கொள்ளாமல் எந்த சாஸ்திரப்படிப்பையும் முழுமையாக புரிந்து பயன் பெறமுடியாது.
இன்று வேதங்கள், சாஸ்திரங்கள் மூட நம்பிக்கையானதற்கு சமூகம் ஆன்விக்ஷிகி ஆற்றலை இழந்ததுதான் காரணம்.
ஒருவன் ஆன்விக்ஷிகியில் சிறந்தால் உண்மையை மயக்கம் இன்றி தெளிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையிலேயே முற்காலத்தில் மனதை புத்தியை பயன்படுத்துபவரகளுக்கு புத்தியை ஒளியூட்டும் காயத்ரி சாதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.
உயர்ந்த ஞானத்தைப்பெற வேண்டியவர்கள் அறிய வேண்டிய அறிவியல் ஆன்விக்ஷிகி.
இதுவே ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆகிய எமது அபிப்பிராயம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.