கீழ்வரும் முறையில் இன்றிலுருந்து தினசரி உங்கள் வசிப்பிடத்தில் சாதனையை மானசீகமாக தொடருங்கள்.
இந்த சாதனா முறை ஆழ்மனமாகிய சித்தத்தினை சுத்தி செய்து தெய்வ குணத்தை வளர்த்து தெய்வ சக்தியை படிப்படியாக வளர்க்கச் செய்யும்.
உங்கள் தினசரி சாதனா ஒழுங்கு,
- சித்த வித்யா குரு மண்டல நாமாவளி - ஒன்பது சுற்று
- அகத்தியர் குரு மந்திரம் - 108 தடவை
- காயத்ரி மந்திர ஜெபம் - முதல் வாரம் 27 தடவை, இரண்டாவது வாரம் - 54 தடவை, மூன்றாவது வாரம் -108,
- உச்சரிப்பினை ஆடியோ கோப்பில் தெரிந்து கொள்ளவும். https://soundcloud.com/sumanenthiran-thava/voice-003
- காயத்ரி ஜெபத்தின் பின்னர் காயத்ரி சித்த சாதனை மூன்று தடவை மனம் ஒன்றி அமைதியாக படித்து மனதில் கிரகிக்கவும். https://drive.google.com/…/0B_q1uZTstapZSmxYOUZHTG1nd2s/view
சாதனை முடிவில் கீழ்வரும் கருத்து வாக்கியங்களை ஒவ்வொன்றையும் 21 தடவை கூறவும் - - குருவின் அருளாலும், அன்னை காயத்ரியின் பிராண சக்தியாலும் எனது மனமும் உடலும் ஆரோக்கியமுடையவளாகிறேன்.
- பின்னர் கீழ்வரும் பிராத்தனையினை செய்யவும்
- அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும்
பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா,
ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு
தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
- 45 நாட்கள் தினசரி தொடர்ச்சியாக பயிற்சித்துவிட்டு ஏற்பட்ட மாற்றங்களை மின்னஞல் மூலம் அறியத்தரவும்.
ennu naraiya viseyam thyrithukulla aasi padoohiran
ReplyDelete