குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Wednesday, September 20, 2017

தெய்வ சாதனைக் கலைமுற்காலத்தில் ரிஷிகளின் வழி வந்த சமூகத்தை சேர்ந்தவர்களது வாழ்க்கையில் தெய்வ சாதனை என்பது ஒருவித நுண்கலையாக (fine arts) ஆக அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அத்தகையை தெய்வ சாதனை கலை தற்போதைய சமூகத்தில் பெரிதும் மறைந்து விட்டதால் அதன் பலன் களும் அறியமுடியாதவாறு ஆகிவிட்டது. இசை, நாட்டியம் என்பன மனைதையும் உடலையும் ஒருவித ஒழுங்கில் இயக்குவதன் மூலம் மன திற்கு இன்பம் தரும் உத்திகளை கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் தெய்வ சாதனை கலையின் நோக்கம் மனதை நுண்மைப்படுத்தி உயர் சக்திகளை பெற்று தெய்வ நிலை அடைதலாகும். 
இதற்கான அடிப்படை சாரம் சுய ஒழுக்கம். தெய்வ சாதனையினை செய்பவனை சாதகன் என்று குறிப்பிடுவோம். சாதகன் முதலில் ஒரு தெய்வத்தை தானாகவோ அல்லது அவனது வழிகாட்டி கூறியபடியோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தெய்வம் அவன் தனது மனதை ஒழுங்குபடுத்தி, ஆற்றலை அதிகரித்து தன்னில் விழிப்படையச் செய்யப்போகும் சித்திகள் மற்றும் ரித்திகளுக்கான குறியீட்டு விளக்கங்களே. ஆக தெய்வ உருவங்கள் என்பவை ஒருவன் தன்னில் விழிப்பித்துக்கொள்ள வேண்டிய தெய்வ குணங்கள், ஆற்றல் பற்றிய மறைபொருள் குறியீடுகள் மட்டுமே. இப்போது சாதனையின்  நோக்கம் அந்த தெய்வ உருவத்தில் குறிக்கப்பட்டு தன்னில் மறைந்து இருக்கும் தெய்வ சக்திகளை விழிப்படையச் செய்தலாகும். 
எப்படி ஒருவன் தன்னில் தெய்வ சக்தியை விழிப்படையச் செய்வது? முதலில் சுய-ஆன்ம சுத்தி, பின்னர் தான் இந்த ஸ்தூல உடல் தாண்டிய சூக்கும சரீரம் உடையவன் என்பதை அனுபவ பூர்வமாக உணர்தல் ஆகிய இரண்டையும் அனுவத்தில் கொண்டுவருதலுக்கு கடும் சிரத்தை முயற்சியுடன் கூடிய பயிற்சி. 
ஒரு விவசாயிற்கு சாதனைக் கலை இலகுவாக விளங்கும். அல்லது தெய்வ சாதனைக்கலையினை விளங்க விவசாய கலையின் அடிப்படை உதவி செய்யும். ஒரு விவசாயி நிலத்தில் பலன் பெற வேலை செய்வது மிக்க்கடுமையான உழைப்பு. நிலத்தை உழ வேண்டும், பின்னர் மண்ணை பதப்படுத்தி உரமூட்ட வேண்டும், பின்னர் சரியான விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த பின்னர் நன்கு வளரும் வரை அதீத வெயிலில், மழையில் இருந்து காப்பாற்ற வேண்டும், நிலத்தில் களைகள் வளர்ந்து பயிரின் சத்தினை உறிஞ்சிவிடாமல் இருக்க வேண்டும். நோய்களில் இருந்து காப்பாற்றவேண்டும். இயற்கை பொய்காமல் உதவ வேண்டும். இவை அனைத்தையும் சரியாக செய்து முடித்தால் நல்ல விளைச்சலைப் பேறமுடியும். 
தனது விளைச்சல் நிலத்தை எப்படி பாதுகாப்பது?, எப்படி உழுவது, எந்த நேரத்திற்கு நீர் பாய்ச்சுவது, உரம்போடுவது இவை எல்லாம் ஒருவன் தனது அனுபவ ஞானத்தினூடாக தனக்குள் இருந்து பெறுவது. விவசாயத்தில் பலனைப்பெற நீண்ட காலம் பிடிக்கும். சிலவேளை விவசாயி எல்லாவற்றையும் சரியாக செய்தாலும் இயற்கை அனர்ந்தங்கள் அவனது முயற்சியை வீணடிக்கச் செய்யும். அவன் செய்யும் முயற்சிக்கு உடனடியாக பலன் எதுவும் கிடைக்காது. இவ்வளவு சவால்களையும் பொறுமையாகவும், விரக்தியடையாமலும் ஏற்றுக்கொண்டு கிடைக்கப்போகும் விளைச்சலை மட்டும் கருத்தில் கொண்டு மெய்வருத்தி தனது இலக்கில் முயற்சித்து வெற்றி காணும் பண்புள்ள விவசாயி மட்டுமே விவசாயத்தில் வெற்றி காணமுடியும். அவன் தினசரி தனது நிலத்தில் வரும் பிரச்சனைகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு தன்னிடம் உள்ள அறிவு, ஆற்றல், வளங்களை கொண்டு வென்று சாதிக்கிறான். அவன் தனது நிலத்தின் பிரச்சனைகளை மறுத்து சோம்பலுடன் உறங்குவதில்லை. அப்படி உறங்கினால் விளைச்சல் கெட்டுப்போய்விடும். இப்படி சிரத்தையாக பாடுபட்டு பலன் கிடைக்கும்போது இயற்கைக்கு நன்றி தெரிவித்து பெற்றுக்கொள்கிறான். 
இந்த முயற்சியை அவன் தனது வாழ் நாளின் இறுதி வரை சிரத்தையாக செய்கிறான். எவரையும் எதிர்பார்ப்பதில்லை. சோம்பலடைவதில்லை. இதுவே சாதனைக் கலையில் அடிப்படை. 
தனது மனதையும், உடலையும் தெய்வ சக்தியினை வளர்க்கக் கூடியவாறு பக்குவப்படுத்தி சுத்தி செய்து தெய்வ குணங்களை வளர்த்து, தனது மன, புத்தி, பிராண ஆற்றல்களை வளர்ப்பதன் மூலம் ஒருவன் தெய்வ சாதனைக் கலையில் தேர்ச்சி பெறலாம். இதில் முன்னேறுவதற்கு ஒரு விவசாயியைப்போன்று பலனை உடனடியாக எதிர்பார்க்காத மனப்பாங்கு, தொடர்ச்சியாக தளவுறாமல் செயல் புரியும் செயலூக்கம், இன்னல் கண்டு கலங்கி சாதனையினை விடாத பண்பு என்பவை அவசியம்.

கடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்

இன்று காலை ஒரு சுவாரசியமான உரையாடல்,  எமது பிரச்சனைகளுக்கு கடவுளை அழைத்தால் இறுதியில் அவர் எல்லோருக்கும் சங்கு ஊதி விடுவார் என்றேன். ...