பரராசசேகரம் - யாழ்ப்பாணத்து அரசர்களின் இராஜ வைத்திய நூல்

யாழ்ப்பாண இராசதானியின் அரச வைத்திய நூல். 

இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத்திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம் பற்றியும், மூன்றாம் பாகத்திற் சுரரோக நிதானம், சன்னிரோக நிதானம், வலிரோக நிதானம், விக்கல்ரோக நிதானம், சத்திரோக நிதானம், ஆகியன பற்றியும், நான்காம் பாகத்தில் வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம் ஆகியன பற்றியும், ஐந்தாம் பாகத்தில் மேகரோக நிதானம், பிளவைரோக நிதானம், பவுத்திர ரோக நிதானம், வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி, ஆகியன பற்றியும், ஆறாம் பாகத்தில் உதரரோக நிதானம் பற்றியும், ஏழாம் பாகத்தில் மூலரோக நிதானம், அதிகாரரோக நிதானம், கிரகணிரோக நிதானம், கரப்பன்ரோக நிதானம், கிரந்திரோக நிதானம், குட்டரோக நிதானம் என 8000 செய்யுட்களுடன் 1928 ‍ 35 இற்குள் ஏழு பாகங்களாக ஏழாலை ஐ. பொன்னையபிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது. 

இப்போது வடமாகாணசபை சுதேச வைத்திய திணைக்களத்தினால் நான்கு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதனை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்த வடமாகாணசபைக்கும், மூலகாரணமாக இருந்த திணைக்கள ஆணையாளர் Shyama Thurairatnnam
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். 

இந்தப் பணி தற்போது மருத்துவம் படிப்பவர்களுக்கும் , ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் மாற்றூக்கருத்து இல்லை!
பித்தரோக நிதானத்திற்கு நாம் உரை எழுதிய பகுதியான பதிவுகள் எம்மால் 2016 மே மாதமளவில் எமது வலைத்தளத்தில் பதியப்பட்டது. http://sumananayurveda.blogspot.com/2015/05/01.html

இந்த நூல் ஒவ்வொரு தமிழரும் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக தம்முடன் வைத்திருக்க வேண்டிய நூல். 

இன்று தமிழ் ஆயுர்வேத ‍சித்த வைத்தியம் கற்பவர்களிடம் காணப்படும் மிகுந்த குறைபாடு மூல நூற்களை தொடர்ந்து கற்றலும், அதற்கான பொருள் கோடலும்.

எதிர்வரும் காலத்தில் இதனை மாகாண சபை சுதேச வைத்திய திணைக்களத்தின் உதவியுடன் இணைந்து பட்டதாரி வைத்தியர்களுடனும், துறைசார் புத்தி ஜீவிகளுடனும் சேர்ந்து பொருள் கண்டு ஒரு கற்கை வட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பயிற்சியில் கொண்டுவரவேண்டும்.
இந்த முயற்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய முடியும்.

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு