நிர்வாண ஷடகம்


மனோபுத்த்யஹங்காரசித்தாநி நாஹம் ந ச ச்ரோத்ரஜிஹ்வே ந ச க்ரணநேத்ரே |ந ச வ்யோம பூமிர்ந தேஜோ ந வாயுச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௧||

பொருள்:

நான் மனமில்லை, புத்தியில்லை, ஆங்காரமில்லை, நான் கேட்கும் செவியுமில்லை, சுவைக்கும் நாவுமில்லை, நுகரும் நாசியுமில்லை, காணும் கண்களுமில்லை, நான் ஆகாயமுமில்லை, பூமியுமில்லை, தேயுவுமில்லை, வாயுமில்லை

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்) 
***************************************************************

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்) ந ச ப்ராணஸம்ஜ்ஞோ ந வை பஞ்சவாயுர்ந வா ஸப்ததாதுர்ந வா பஞ்சகோசா: |
ந வாக்பாணிபாதம் ந சோபஸ்தபாயூ சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௨||

நான் பிராணன் இல்லை, பஞ்ச வாயுக்களில்லை, சப்த தாதுக்கள் இல்லை, பஞ்ச கோஸங்கள் இல்லை, நான் பேசும் நாவுமில்லை, நான் பற்றும் கையுமில்லை, நகரும் கைகளுமில்லை, நான் மலத்தை வெளியேற்றும் எருவாயுமில்லை,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


**************************************************************

ந மே த்வேஷராகௌ ந மே லோபமோஹௌ மதோ நைவ மே நைவ மாத்ஸர்யபாவ: |
ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மோக்ஷச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௩||

நான் வெறுப்புமன்று, நான் பற்றுமன்று, நான் பேராசையுமன்று, நான் மோகமுமன்று, நான் பெருமையுமன்று, நான் போறாமையுமன்று, நான் அறம், பொருள், இன்பம் , வீடு என்ற நான்கு புருடார்த்தங்களால் கட்டுண்ட வஸ்துவும் அன்று,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


****************************************************************
ந புண்யம் ந பாபம் ந ஸௌக்யம் ந து:கம் ந மந்த்ரோ ந தீர்தம் ந வேதா ந யஜ்ஞா: |
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௪||
 
நான் புண்ணியத்தால் கட்டுண்டவனுமன்று, நான் பாவத்தால் கட்டுண்டவனுமன்று, நான் இன்பமும் அன்று, நான் துன்பமுமன்று, நான் மந்திரத்தால் கட்டுண்டவனுமன்று, நான் புண்ணிய தீர்த்த்த்தில் உறைவபவனுமன்று, நான் வேதங்களுமன்று, நான் யக்ஞமுமன்று, நான் போகமும் அன்று, நான் போகிக்கும் இன்பமும் அன்று, நான் போகிப்பவனுமன்று,

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)*******************************************************
ந ம்ருத்யுர்ந சங்கா ந மே ஜாதிபேத: பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந பந்துர்ந மித்ரம் குருர்நைவ சிஷ்யச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௫||

நான் இறப்பால் கட்டுண்டவனுமன்று, நான் பயத்தால் பீடிக்கப்பட்டவனுமன்று, நான் ஜாதியில் அகப்பட்டவனுமன்று, எனக்கு தாயும் இல்லை, தந்தையுமில்லை, பிறப்புமில்லை, எனக்கு உறவுமில்லை, நட்புமில்லை, குருவுமில்லை, சீடனுமில்லை,

**********************************************

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)
அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ விபுத்வாஞ்ச ஸர்வத்ர ஸர்வேத்ரியாணாம் |
ந சாஸங்கதம் நைவ முக்திர்ந மேயச்சிதானந்தரூப: சிவோ(அ)ஹம் சிவோ(அ)ஹம் ||௬||

நான் எங்கும் படர்ந்தவன், நான் குணங்கள் அற்றவன், நான் ரூபம் அற்றவன், நான் உலகத்துடன் பற்று அற்றவன், நான் எங்கும் நிறைந்தவன், நான் அனைத்துக்கும் மூலமானவன், நான் அனைத்து புலன் அனுபவங்களுக்கும் ஆதாரமானவன், நான் எதனுடனும் பந்தப்படுபவனுமன்று, நான் எதனிலும் விலகி இருப்பவனுமன்று!

நான் என்றும் ஆனந்தமான தூய சிவம் (சிவோஹம்)


Comments

  1. மிகவும் அருமை அற்புதம் ஓம் நமசிவாய அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு