நூல் மதிப்புரை 01 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்அகத்தியர் ஞானம் 30 என்ற பாடல்களுக்குத் திரு. சக்தி சுமனன் அவர்கள் எழுதியுள்ள விளக்கவுரை, தமிழ் சித்தர் யோகம் மற்றும் தத்துவங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நூல் ஆகும். பொதுவாக சித்தர் பாடல்களில் பல முக்கிய தத்துவங்கள் மறைப்பாக எழுதப்பட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதனால் இப்பாடல்களுக்குப் பல்வேறு விதமான விளக்கவுரைகள் நம்மிடையே உலாவுகின்றன. 

இந்த விளக்கவுரைகளில் பெரும்பான்மையானவை சித்த மார்க்கத்தில் பயிற்சியில்லாதவர்களால் எழுதப்பட்டிருப்பதால் பல தவறுகளைக் கொண்டவையாக உள்ளன. திரு. சுமனன் அவர்கள் குருமண்டலத்தின் ஆசியுடனும், வழிகாட்டுதலுடனும் இப்பாடல்களுக்கு அனுபவபூர்வமாக விளக்கவுரை எழுதியிருப்பதால் இந்த தவறுகள் விலக்கப்பட்டு சித்த மார்க்கத்தின் சரியான வழிமுறைகள் நம் அனைவருக்கும் கிட்டுகின்றன. 

இந்த நூலில் சாகாக்கால், வேகாத்தலை, வாசி, வாலை, பிராணாயாம வழிமுறைகள், மந்திரங்களின் முக்கியத்துவம், பஞ்சாட்சர மந்திர தத்துவம் போன்ற பல அரிய விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் நாம் அதுவரை கற்ற தத்துவங்களை நினைவுபடுத்திக்கொள்ள பெரும் உதவியாக உள்ளன. சித்த மார்க்கத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் உயர்நிலைகளை அனுபவிப்பவர்களுக்கும் இந்த நூல் ஒரு குருவாக இருந்து வழிகாட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. திரு. சக்தி சுமனன் அவர்களது நற்பணி மேலும் தொடர சித்தர்களின் அருளாசிகளை வேண்டுவோமாக. 


Dr. Geetha Anand, 
Researcher in Tamil Siddha Philosophy, 
Bangalore.

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு