நூல் மதிப்புரை 02 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்


சித்த பாரம்பரிய மிக்க ஸ்ரீ ஷக்தி சுமணன் அவர்கள் எழுதிய 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' ஆதார நூலுக்கான பொழிப்புரை, விரிவுரை, கருத்துரை கொண்ட தெளிந்த நூல் மருத்துவ கலாநிதி. விக்னவேணி அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. 


முதலில் நூலின் வடிவமைப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். முப்பது பாடல் கொண்ட ஆதார நூலின் பாடலுக்கு ஒரு அத்தியாயம் அமைத்து முதலில் ஆதார பாடலை சொல்லி, பின்னர் அதன் பொருளைச் சொல்லி, விவரணம் கொடுத்து, அனுபவரீதியான விளக்கம் தந்து இறுதியில் நினைவிலிருத்த வேண்டியவைகளை வினாவாக அமைத்துள்ளது சிறப்பாக உள்ளது. நூலாசிரியர் தனக்கு புரிந்ததை மட்டும் தொகுத்து எழுதாமல் 'சங்க மரபு' போல் பிறருடன் கலந்துரையாடி அதில் பெற்ற தெளிவுடன் தன குரு, பிற அனுபவறிவு மிக்க சான்றோர் ஆகியோரின் கருத்தையும் பெற்று எழுதியுள்ளார். பெரும்பாலான சித்த மருத்துவம், மரபு சார்ந்த நூற்கள் அகத்தியர் பெயரிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' ஆதார நூலும் அது போலவே அமைந்திருக்கிறது. மொழி நடை பிற்க்காலத்தை சேர்ந்த எளிய நடையில் இருந்தாலும் அதில் உள்ள பொருளை சித்த மரபில் கற்றுணர்தவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம், ஹத யோகம் என்னும் நான்கில் சித்த மரபு ஞான யோகமே. ஞான யோக பயிற்சி எளிதல்ல. குருமுகமாகவே கற்க வேண்டும், இறையருள் இருந்தாலே கற்க வாய்ப்பு கிட்டும். வாசி யோகம் என்னும் மூச்சு பயிற்சி சித்தர்களின் ஞான மார்கத்தில் முதன்மையானதும் எளிமையானதும் ஆகும். இருப்பினும் மூச்சை உள்வாங்கல், நிலைநிறுத்தல், சரியான அளவில் வெளிவிடல், இரு நாசிகள் மூலம் சுவாசிக்கும் பொழுது இருக்க வேண்டிய கால அளவு எல்லாராலும் எளிதில் கடைபிடிக்கப் படுவதில்லை 

குருவின் பயிற்சியின் மூலமும் கற்பவர் தகுதியும், மனதை புருவ நடுவில் ஒருமுகபடுத்துகின்ற ஆற்றலும் உடையவர்களே மேற்கொள்ள முடியும். அந்த ஆற்றலை பெற்று மூச்சு பயிற்சி செய்யும் வழிமுறைகளும், மேற்கொண்டால் கிட்டும் பலனும் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது. மனதை ஒருமுகபடுத்தலும், மந்திரங்களை உச்சரிப்பதால் மூச்சு பயிற்சியை மேற்கொள்வது, அதன் அனுபவம் முதலியன படிப்படியாக மேற்கொண்டு தொடர்ந்து ஆறு ஆதாரங்கள் வழியை அமிர்த நிலை அடைவதை 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' கற்பிக்கிறது.

திருமூலர், கொங்கணவர், சட்டமுனி ஆகியோற்றின் இது பற்றிய கருத்துக்களையும் உள்வாங்கி எழுதப்பட்டதால் பிற்கால நூல் என்று தோன்றினாலும், இக்காலத்தவர் கடைபிடிக்க கூடிய வகையில் 'அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்' அமைந்திருப்பதும் அதற்கான தெளிந்த விளக்கத்துடன் ஸ்ரீ ஷக்தி சுமணன் எழுதி இருப்பது போற்றுதலுக்குரியது. சித்த மரபு ஞான யோகம் கற்ப்பவர்களுக்கு மிக உதவியானது.
Chennai
1st May 2016

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு