குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 20, 2015

காகபுசுண்டர் குறள்

தரப்பட்டுள்ள  பொருள் விளக்கம்  ஏற்கனவே சித்தர் மார்க்கத்தில்  இருந்து   சாதனை  புரிபவர்களுக்கானது.  எளிய முழுமையான  விளக்கம் குருவருள் உத்தரவு  வரும்போது  வெளியிடுவோம். 

1:
சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு
பொருள்: பேரொளியான பூரணத்தை துணைகொண்டு சிவராஜா யோகத்தில் இருந்து பராபரம் என்றார் பூரணத்தை நாடு!

2:
அண்ட முடிமீதி லங்கிர விமதியைக்
கண்டுதரி சித்தல் கதி.
பொருள்; பராபரத்தை அறிய சிவராஜா யோகம் செய்ய வேண்டும் என்று முதல் குறளில் சொன்னோம், அதன் முதல் படி அண்டத்தின் மூலமான நாதமும் விந்துவும் உடலிற்கு ரவி மதி எனும் சூரிய சந்திரனாய் எப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இயக்குகிறது என்று அறிய வேண்டும்.

3:
வலமிடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற்பின் வீடு.
பொருள்: அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள மதி ரவி அறியவேண்டும் என்று முன்னர் சொன்னோம், பிண்டத்தில் மதி ரவி நிற்கும் இடம் வலது இடது மூச்சு என்று அறிந்து அதை நேரிபடுத்தி விரயமாகும் பிராணனை சேமித்து சமப்படுத்தினால் அது வீடு என்ற பேற்றை தரும்.

4:
அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்.
பொருள்: தந்திர யோகத்தில் பல்வேறு யோகங்கள் பயிற்சிப்பதற்கு உண்டென்றும் அது அறுபத்துநான்கு வகைப்படும் என்று கூறுவர், அவற்றை எல்லாம் பயிலவேண்டும் மன மாயையில் விழுந்து விடாமல் குரு உபதேசித்த சிவராஜா யோகத்தில் நிலைத்து நில்.

5:
உலகமே மாயமென வுன்மனதிற் கண்டு
நலமாக நாதனடி நம்பு
பொருள்: மாயையினால் சூழ்ந்து மனிதன் பிறவிக்கு காரணமான மனத்தை பண்படுத்தி உலகு மாயை என்பதனை மனதின் உதவி கொண்டு விசாரத்தால் அறிந்து எல்லாவற்றிற்கும் மூலமான இறைவனின் பாதத்தை நம்பி உன் சாதனையினை தொடர்வாயாக .

6:
சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்.
பொருள்: பல்வேறு பிரளயம், யுகம் கண்ட பதினெண் சித்தர் என்ற கணக்கிற்கும் முன்னராக என்றும் இருக்கும் புசுண்டனாகிய நான் அத்தன் என்ற சிவனிற்கு நிகராக அருள் புரியக்கூடியவன் என்று அறி!

7:
சொன்னே னறிந்து சுகமா யுலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்.
பொருள்: இந்த உலகத்தவர்கள் துன்பத்தில் இருந்து மீண்டு மாறாத பேரின்பம் பெறுவதற்கான இறவா நிலை பெறுவதற்கான வழிகளை  நான் அறிந்து கூறியுள்ளேன்.

8:
கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண் முதிர்பதயு மாறு.
பொருள்: பார்வைக்கு மூலமான கண்ணில் மணியாக நின்ற இறைவன் பிருதிவி பூதம் அதிகமான ஸ்தூல தேகத்திலும் நிறைந்து, அதனை  முதிர வைத்து  அனைத்துக்கும் காரணமான சிகாரம் என்ற அக்னி ஸ்வரூபமான் மகா காரண சரீரம் பெறுவதற்கு ஆதாரம் என்று அறிவாய்.  

9:
விண்டனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டி லறிவீர் நலம்.
பொருள்: இதற்குரிய முறைகளை வெளிப்படையாக காகபுசுண்டர் ஞானம் முப்பத்திரண்டில் கூறியுள்ளேன், பார்ப்பீர்களாக!

10:
நேத்திரத்தைக் காகம்போல் நிச்சய மாய்நிற்க
ஆத்துமத்தி லானந்த மாம்.
பொருள்: நேத்திரத்தில் காகம் என்ற அக்னி ஸ்வரூபமாக நிற்க அதை அறிய ஆத்மாவில் ஆனந்தம் பெறலாம்.

11:
உலகி லறிந்தோ ரொருநாளும் மாளார்
பல நினைவை விட்டுநீ பார்.
பொருள்: இந்த இரகசியத்தை உலகில் உள்ளவர்கள் அறிந்தால் அவர்களுக்கு இறப்பு இல்லை, ஆகவே உனது மனதை பல்வேறு விடயங்களில் செலுத்தி ஆற்றலை வீணடிக்காமல் இந்த இரகசியத்தை அறிவதில் செலுத்து!

12:
கண்டோருஞ் சொல்லார் கருத்தாற் பெரியோரைத்
தொண்டுசெய்து பெற்ற சுகம்.
பொருள்: இதனை அனுபவித்து அறிந்தவர் எல்லோரும் சொல்லித்தர மாட்டார், அப்படி அறிந்தவர் இருப்பின் அவர்களுக்கு தொண்டு செய்து அவர்கள் அன்பினை பெற்று அறிந்தாயானால் இன்பம் அடைவாய்!

13:
ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாதுசிவன் பூசைசெய்து வை.
பொருள்: நாம் ஆரம்பத்தில் கூறிய அண்டத்தில் உள்ள வஸ்துவை எப்படி உடலில் சேர்ப்பது என்று அறிந்து அதனை சிவ சக்தியின் அருள் கொண்டு பூசை செய்து உடலில் சேர்க்க வேண்டும்.

14:
முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாம லுண்டுநிலை சார்.
பொருள்: ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரத்தில் இருந்து மனிதனை துன்பத்திற்குள்ளாக்கும் மூன்று வினைகளை சிவராஜா யோகத்தால் சுட்டு நீறாக்கி அதற்கு அமிர்தத்தை பொழிந்து மகா காரண சரீரத்தை உருவாக்கி இறவா நிலையினை அடைவாய்!

15:
யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்.
பொருள்: மேலே கூறிய நிலையினை சாதிக்க தேவையான கற்ப முறைகளையும், யோக பயிற்சிகளையும் புசுண்டர் பதினாறு என்ற நூலில் கூறியுள்ளேன், விரைவாக அவற்றை கற்று தேறு!

16:
வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம்வா ராகுறள்முற் றும்.

பொருள்: சிவராஜா யோகமாகிய வாசியை இயக்கம் முனிவனே, எனது மகனே! உனது சாதனைக்கு மோசம் வராமல் தகுந்த ஞானத்தை தந்த இந்த குறள் முற்றுப்பெற்றது! 

1 comment:

  1. ஐயா, இந்த விளக்கமே அர்த்தம் புரிகிறதே, சாதனைதான் காரணமோ?

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...