மனதின் விளக்கம்

முகநூலில் சித்தர்களது மனம் பற்றிய உண்மைகள் பற்றி கலந்துரையாடலாம் எனக்கேட்டபோது பல நண்பர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த பதிவுகள் ஆரம்பிக்க படுகிறது. முதலாவதாக 

ஆக இதில் உள்ள அடிப்படைவிடயங்கள் குருமுகமாக பெற்றதும், மேலும் யாம் கற்று, பயிற்சித்து, சிந்தித்த விடயங்களும், மனம் பற்றிய பௌத்த, தாந்திரீக தத்துவங்களும்   அடங்கியிருக்கும்.

எமது குருபரம்பரையின் அடிப்படை கல்வி மனம் என்பது என்னவென்று அறிதல் என்று எமது குருநாதர் கூறுவார்.  ஏனென்றால் யோகம், ஞானம், பக்தி, கர்மம் எதுவென்றாலும், வழிபாடுகளாக இருக்கட்டும் மனத்தின் வழியாகத்தான் அவை செய்யப்பட வேண்டும்.

சமய நெறிகள், யோக மார்க்கம், தத்துவ நெறிகள் இவையாவும் மனிதனின் மனச் சலனத்தினை கட்டுப்படுத்தி, சித்த விருத்திகளை நிரோதித்து, தகுந்த பண்புகளை உருவாக்கி இறையை அடைவிக்க செய்யும் முறைகளே ஆகும்.

மனது இல்லாமல் மனிதனிற்கு இக வாழ்வும் இல்லை, பர வாழ்வும் இல்லை, இன்பம் துன்பம் இரண்டிற்கும் காரணம் மனமே அன்றி வேறில்லை. ஆக மனதினை அறிந்து பலப்படுத்தி, வசப்படுத்தி செயற்பட தெரிந்தவன் தனது வாழ்க்கையினை தனது இச்சைப்படி வாழ்வை அனுபவிப்பான் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

இப்படி மனதினை அறிய விரும்புபவன் செய்ய வேண்டிய முதல் விடயம் என்ன?

தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்று அறிந்து, தெளிதல்! எமது வாழ்க்கையில் நாம் புரியும் செயல்கள் யாவும் எதற்காக என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? கல்வி கற்கிறோம், வேலை செய்கிறோம், திருமணம் முடிக்கிறோம், பிள்ளைகள் பெறுகிறோம், நூற்களை வாசிக்கிறோம், எழுதுகிறோம், திரைப்படம் பார்க்கிறோம், இப்படி பல்வேறு செயல்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

எளிய பதில் ------à திருப்தி அதன் மூலம் மனதிற்கு கிடைக்கும் இன்பம்.

ஆகவே மனிதனது வாழ்க்கை குறிக்கோள் எப்போதும் இன்பத்தை நோக்கியதாக இருக்கும்.

இதனை மேலும் சிந்தித்த பெரியவர்கள் இந்த இன்பங்கள் நிலையானதா? இதனை எப்படி நிலையானதாக்குவது என்று ஆராயப் புகுந்தனர். இதன் வழி வந்ததுதான் தியானமும், ஆன்ம ஞானமும்.
சுருக்கமாக மனிதனது வாழ்க்கை குறிக்கோள் இன்பம் என்ற ஒன்றே, இந்த இன்பம் இருவகையாக பகுக்கப்படும். ஒன்று நிலையானது மற்றது நிலையற்றது.

சமயங்கள் ஆன்மீகம் என்பன நிலையான இன்பத்தினை அடைவதற்கான வழியினை காட்டுகிறது. நிலையற்ற உலகவாழ்வு இன்பங்களை அடைவதற்கான வழி பலகாலம் மதங்களை ஆதிக்கம் செலுத்தியவர்களால், அதிகாரத்தில் உள்ள அரசர்களால் மற்றவர்கள் பெற்று விடக்கூடாது என்று மறைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையால்தான் மனிதன் இன்று குழப்ப நிலையில் இருக்கின்றான்.

இன்று பலரும் ஆன்மீகம் என்ற போர்வையிலும், சித்தர்கள் பற்றிய ஆர்வத்தில் திரிவது, இப்படியான விடயங்களை கற்க வேண்டும் என்பதும் தமது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழி கிடைக்காதா என்ற உள்மன ஆதங்கமே அன்றி உண்மையில் இறை இன்பம் பெற வேண்டும் என்ற உந்துதலால் அல்ல. இது அவர்கள் தவறு இல்லை, ஏனெனில் இயற்கையில் ஒருவன் உலக இன்பங்களை அனுபவிக்காமல் இறையின்பத்தினை அனுபவிக்க முடியாது.

அடிப்படையில் மனிதன் தனது நிலையற்ற மனித வாழ்வில் பெறக்கூடிய இன்பங்களை பெற்று அனுபவிக்கும் அதேவேளை இது நிலையானது இல்லை, இதற்கு மேலான நிலையான இன்ப நிலை ஒன்று இருக்கிறது என்று உணர்ந்து, வாழ்வில் சலிப்பு, வெறுப்பு இன்றி இறைசாதனையினை புரியக்கூடிய தன்மையினை அடைய வேண்டும்.

ஆக மனிதனது உண்மைக்கல்வி “மனம்” பற்றி அறிந்து அதனை எப்படி பயன்படுத்துவது என்பதே!


Comments

  1. மனதைப்பற்றிய உங்களது அருமையான பதிவை கண்டு என்மனம் திருப்தியடைகிறது,,, இப்படியான உங்களது ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு