குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 05, 2014

மனதின் செயல்முறை விஞ்ஞானம்: வாழ்க்கையில் ஏன் வேற்றுமைகள்?


சென்ற பதிவில் ஒவ்வொரு உயிரினதும் மனிதனதும் வாழ்க்கை நோக்கம் இன்பத்தினை நோக்கியதாகவே இருக்கிறது என்பது பற்றி பார்த்தோம். ஆனால் இன்பத்தினை நோக்கி செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இன்பத்தினை தருவதில்லை. இலாபம் தரும் என்று தொடங்கிய வியாபாரம் நஷ்டத்தினை தருகிறது. சுவைக்கு என அருந்தும் உணவு நோயினைதருகிறது. இன்பம் என்று எண்ணிய உறவுகள் துன்பத்தினை தருகிறது. இப்படி எண்ணுவது ஒன்றாக இருக்க விளைவு வேறாக இருக்கிறது.

இவை எல்லாம் ஏன் என்று தேடவிரும்பும் ஒருத்தன் கடவுள் மீது பழி போடுகிறான், கிரகதோஷம் என்கிறான், ஜாதகத்தில் கோளாறு என்கிறான், கர்மம் காரணம் என்கிறான், பில்லி சூனியம், செய்வினை காரணம் என்கிறான், செய்த பாவங்கள் காரணம் என்கிறான், இப்படி காரணங்கள் பலவாக இருந்தபோதும் எல்லோருக்கும் பொதுவான விடை எப்போதும் கிடைப்பதில்லை. ஏனெனினில் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் இதே துன்பங்களை அடைகின்றனர்.

இதனை தெளிவாக ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் இப்படிக்கூறுவார். “பிறப்பதற்கு முன் ஏற்பட்டதோ, பிறந்த பின் ஏற்பட்டதோ, கடவுள் கொடுத்ததோ, கர்மவினை அளித்ததோ, கிரகங்கள் விளைவித்ததோ, வேறேதேனால்லுண்டானதோ மனித வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகள், நன்மை, தீமைகள் அவனில் செயற்பட “மனிதன்” என்ற சொல்லில் கலந்திருக்கும் பலகருவிகளில் ஒரு கருவிதான் காரணம், அந்தக்கருவி “மனம்”, கடவுள் நன்மையோ தீமையோ செயற்படுத்த விரும்பினார், கிரகங்கள் தனது செயலை செயல்புரிய வேண்டுமாயின், எமது பூர்வ கர்மம் செயற்பட வேண்டுமானால் அவை மனதினூடாகத்தான் செயற்படவேண்டும்.

மனிதனின் முயற்சி, எண்ணம், செயல் எதுவானாலும் முதலில் மனதில் எண்ணமாக பரிணமிக்க வேண்டும், அதன் பின்னரே செயல் நிலைக்கு வரும். செல்வம் பெறவேண்டும் என்று எண்ணுபவன் தனது மனதில் முதலில் செல்வம் பெறவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கி, அதன் படி மனதினை செயற்படுத்தியே செல்வத்தினை பெறவேண்டும்.

இதைப்போல் மனிதருக்கு நடைபெறும் தீமைகளும் மனதில் எண்ணமாக பரிணமித்தே எமக்கு நடைபெறுகிறது. இதுபற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம். இந்த பதிவில் கூறவரும் உண்மை யாதெனில் “ எமக்கு நடைபெறும் நன்மைகள், தீமைகள் எதுவாக இருப்பினும் அது மனதினூடாகவே நடைபெறுகிறது” என்பதே!

ஆகவே மனதினூடாக இவை எப்படி செயற்படுகிறது என்பதனை நாம் அறிந்தால், கட்டுப்படுத்தும் முறைகள் தெரிந்தால், எமக்கு நடைபெறும் நன்மை, தீமைகளையும் நாம் மாற்றி அமைக்கலாம்.


மனதின் செயல்முறை விஞ்ஞானம் மேலும் தொடரும்.. 

Saturday, January 04, 2014

மனதின் விளக்கம்

முகநூலில் சித்தர்களது மனம் பற்றிய உண்மைகள் பற்றி கலந்துரையாடலாம் எனக்கேட்டபோது பல நண்பர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த பதிவுகள் ஆரம்பிக்க படுகிறது. முதலாவதாக 

ஆக இதில் உள்ள அடிப்படைவிடயங்கள் குருமுகமாக பெற்றதும், மேலும் யாம் கற்று, பயிற்சித்து, சிந்தித்த விடயங்களும், மனம் பற்றிய பௌத்த, தாந்திரீக தத்துவங்களும்   அடங்கியிருக்கும்.

எமது குருபரம்பரையின் அடிப்படை கல்வி மனம் என்பது என்னவென்று அறிதல் என்று எமது குருநாதர் கூறுவார்.  ஏனென்றால் யோகம், ஞானம், பக்தி, கர்மம் எதுவென்றாலும், வழிபாடுகளாக இருக்கட்டும் மனத்தின் வழியாகத்தான் அவை செய்யப்பட வேண்டும்.

சமய நெறிகள், யோக மார்க்கம், தத்துவ நெறிகள் இவையாவும் மனிதனின் மனச் சலனத்தினை கட்டுப்படுத்தி, சித்த விருத்திகளை நிரோதித்து, தகுந்த பண்புகளை உருவாக்கி இறையை அடைவிக்க செய்யும் முறைகளே ஆகும்.

மனது இல்லாமல் மனிதனிற்கு இக வாழ்வும் இல்லை, பர வாழ்வும் இல்லை, இன்பம் துன்பம் இரண்டிற்கும் காரணம் மனமே அன்றி வேறில்லை. ஆக மனதினை அறிந்து பலப்படுத்தி, வசப்படுத்தி செயற்பட தெரிந்தவன் தனது வாழ்க்கையினை தனது இச்சைப்படி வாழ்வை அனுபவிப்பான் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

இப்படி மனதினை அறிய விரும்புபவன் செய்ய வேண்டிய முதல் விடயம் என்ன?

தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்று அறிந்து, தெளிதல்! எமது வாழ்க்கையில் நாம் புரியும் செயல்கள் யாவும் எதற்காக என்று நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? கல்வி கற்கிறோம், வேலை செய்கிறோம், திருமணம் முடிக்கிறோம், பிள்ளைகள் பெறுகிறோம், நூற்களை வாசிக்கிறோம், எழுதுகிறோம், திரைப்படம் பார்க்கிறோம், இப்படி பல்வேறு செயல்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

எளிய பதில் ------à திருப்தி அதன் மூலம் மனதிற்கு கிடைக்கும் இன்பம்.

ஆகவே மனிதனது வாழ்க்கை குறிக்கோள் எப்போதும் இன்பத்தை நோக்கியதாக இருக்கும்.

இதனை மேலும் சிந்தித்த பெரியவர்கள் இந்த இன்பங்கள் நிலையானதா? இதனை எப்படி நிலையானதாக்குவது என்று ஆராயப் புகுந்தனர். இதன் வழி வந்ததுதான் தியானமும், ஆன்ம ஞானமும்.
சுருக்கமாக மனிதனது வாழ்க்கை குறிக்கோள் இன்பம் என்ற ஒன்றே, இந்த இன்பம் இருவகையாக பகுக்கப்படும். ஒன்று நிலையானது மற்றது நிலையற்றது.

சமயங்கள் ஆன்மீகம் என்பன நிலையான இன்பத்தினை அடைவதற்கான வழியினை காட்டுகிறது. நிலையற்ற உலகவாழ்வு இன்பங்களை அடைவதற்கான வழி பலகாலம் மதங்களை ஆதிக்கம் செலுத்தியவர்களால், அதிகாரத்தில் உள்ள அரசர்களால் மற்றவர்கள் பெற்று விடக்கூடாது என்று மறைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையால்தான் மனிதன் இன்று குழப்ப நிலையில் இருக்கின்றான்.

இன்று பலரும் ஆன்மீகம் என்ற போர்வையிலும், சித்தர்கள் பற்றிய ஆர்வத்தில் திரிவது, இப்படியான விடயங்களை கற்க வேண்டும் என்பதும் தமது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழி கிடைக்காதா என்ற உள்மன ஆதங்கமே அன்றி உண்மையில் இறை இன்பம் பெற வேண்டும் என்ற உந்துதலால் அல்ல. இது அவர்கள் தவறு இல்லை, ஏனெனில் இயற்கையில் ஒருவன் உலக இன்பங்களை அனுபவிக்காமல் இறையின்பத்தினை அனுபவிக்க முடியாது.

அடிப்படையில் மனிதன் தனது நிலையற்ற மனித வாழ்வில் பெறக்கூடிய இன்பங்களை பெற்று அனுபவிக்கும் அதேவேளை இது நிலையானது இல்லை, இதற்கு மேலான நிலையான இன்ப நிலை ஒன்று இருக்கிறது என்று உணர்ந்து, வாழ்வில் சலிப்பு, வெறுப்பு இன்றி இறைசாதனையினை புரியக்கூடிய தன்மையினை அடைய வேண்டும்.

ஆக மனிதனது உண்மைக்கல்வி “மனம்” பற்றி அறிந்து அதனை எப்படி பயன்படுத்துவது என்பதே!


Thursday, January 02, 2014

எது பகுத்தறிவு?


அறிவு என்பதன் வரைவிலக்கணம் என்ன? அனுபவத்தாலோ, கல்வியாலோ பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள், தகவல்கள், திறன்கள் அறிவு எனப்படும். இந்த அறிவினை பெறுவதற்கு எமக்கு தேவையான திறன் “பகுத்தல்” எனக்கொள்ளலாம். இந்த பகுக்கும் தன்மையினைதான் நாம் “அறிவியல் அல்லது விஞ்ஞானம்” என்று கூறுகிறோம்.

இந்த அறிவியல் ரீதியில் ஒரு விடயத்தை அல்லது செயலைப்பற்றிய அறிவினை பெறுவதற்குரிய வரைமுறை “விஞ்ஞான முறை” எனப்படும். இந்த முறையில் முதலில் ஆய்வுகளுக்கு தேவையான தரவுகளை கட்டுப்பாடான முறையில் சேகரித்தல், சேகரித்த தகவல்களின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்தல், அவற்றை கணித சமன்பாடுகளில் வரைவு படுத்தல், அவற்றிலிருந்து குறித்த செயல், தொகுதியினை புரிந்து கொள்ளுதல், இது கண்களால் பார்த்து தர்க்கத்திற்கு பொருந்தி வரும் விடயங்களை அறிந்து கொள்ளுதல்!  இதுவே நவீன அறிவியல்! அறிவினை பெறுவதற்கான மேற்கத்திய முறை!

எந்த அறிவினை பெறுவதற்கும் மனிதன் தனது மனதினைத்தான் பயன்படுத்த வேண்டும். மனித சமுதாயத்தின் சரித்திரத்தை உற்று நோக்கினால் அறிவினை பெறுவதற்கு மனதினை உபயோகித்து இருவகையான அறிவுகளை பெற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். ஒன்று தர்க்க முறை எனப்படும் நவீன அறிவியல், மற்றையது உள்ளுணர்வை கொண்டு அறியும் ஞானம், இரண்டாவதே கீழைத்தேய தத்துவங்களான இந்து, தாந்திரிக, பௌத்த, சீன தத்துவங்களின் அறிவு பெறும் முறை. இன்றைய காலகட்டத்தில் தர்க்க அறிவினை விஞ்ஞானம் என்றும் உள்ளுணர்வு அனுபவ அறிவை மதம் என்றும் அழைக்கிறோம். மனிதனது எந்த அறிவும் இந்த இரண்டு முறைகளின் மூலமே பெறமுடியும் என்பது அறுதியான முடிவு!

பொதுவாக கண்களால், காது முதலிய புலன்களால் அறியும் அறிவினை, கணித விதிகளை கொண்டு ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் அறிவியலே பகுத்தறிவு என்பது.

ஆனால் இன்று பகுத்தறிவின் விளக்கம்  தமிழர்களிடையே வித்தியாசமான மனோவியாதியாக உருவெடுத்திருக்கிறது. குறித்த ஒரு சமூகத்தினை தீவிரவாதியாக முத்திரை குத்தி, தமிழ் இனம் படும் இன்னல்களுக்கெல்லாம் அவர்களே காரணம் என்று வசைபாடி, எமது முன்னோர்கள் தமது உள்ளுணர்வு கொண்டு அறிந்த அறிய உண்மைகளை சரியாகா ஆராயாமல், கீழ்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் எள்ளி நகையாடுவது பகுத்தறிவு இயக்கமாகி கொண்டிருக்கிறது.  

"The Wave Structure of Matter Explains the Atomic Structure of Matter. The 'Particle' as the Wave-Center of a Spherical Standing Wave in Space" explains the cosmic dance of Nataraja."

"Modern physics has shown that the rhythm of creation and destruction is not only manifest in the turn of the seasons and in the birth and death of all living creatures, but is also the very essence of inorganic matter," and that "For the modern physicists, then, Shiva's dance is the dance of subatomic matter." 

ஆக நாம் கூற வருவது என்னவென்றால் உண்மை பகுத்தறிவு என்பது ஒரு விடயத்தினை விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து அறிவினைப் பெறுவது, அப்படி ஆராயும் போது அதன் முடிவில் எமது முன்னோர்கள் “உள்ளுணர்வு ஞானத்தின்”  மூலம் கண்ட உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கும். ஆகவே கோவில், சிலைகள், பூஜை முறைகள் ஏன் இருக்கவேண்டும் என்று கேள்வி கேட்பவர்கள் அந்த பிரச்சனையினை ஆரம்பத்தில் விஞ்ஞான முறைப்படி ஆராய ஆரம்பியுங்கள் உங்கள் பகுத்தறிவு முடிவுறும் இடத்தில் அகத்தறிவான ஞானம் ஒளிர ஆரம்பிக்கும். அங்கு அதற்கான விடை கிடைக்கும்! அதைவிடுத்து ஒருவித கற்பனைவாதத்தினால்  வளர்த்துக்கொண்டு தூற்றுவதாலும், பழிப்பதாலும் தம்மை பெரியவர்களாக காட்டிக்கொள்ள நினைப்பது ஆரோக்கியமான செயல் அன்று! 

வரும் பதிவுகளில் எமது முன்னோர்கள் ஏன் கோவில்களை ஏற்படுத்தினார்கள்? சிலைகளை வடித்தார்கள்? பூஜைமுறைகளை வகுத்தார்கள் என்பது பற்றி பகுத்தறிவும் அகத்தறிவும் கொண்டு ஆராய்வோம்.

Wednesday, January 01, 2014

புதிய 2014 வருட பிரார்த்தனை

இந்த புதிய 2014 ஆங்கில வருடத்தில் எமது வலைத்தள  நண்பர்கள் அனைவருக்கும் பதினாறு பேறுகளுமான; 

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும் (நாட்டில் நல்லாட்சி)
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
பெற்றிட குருநாதரும் ஆதிசக்தி பராபட்டாரிகையும் அருள் புரியட்டும்.

என்றும் அன்புடன்
சுமனன்

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...