குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!

இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!

ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ

இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!

மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here

2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்

நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.

அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே

உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!

ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே

-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 14, 2013

எது உண்மைக் கல்வி?

இளைமை முதல் எமது உண்மை ஸ்வரூபத்தினை பலவித முகமூடிகளை கொண்டு மறைத்த வண்ணமே வாழ்ந்து வருகிறோம். எம்மை புற உலக தேவைகளுக்கு ஏற்றவாறு எப்படி தயாற்படுத்திக்கொள்வது என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. எமது குடும்பமும் நண்பர்களும் சமூகத்தில் எப்படி நடக்கவேண்டும் என்பதனை கற்று தருகின்றனர். எமது கல்வி முறைகள் பணத்தையும் பௌதிக தேவைகளை பெறுவது எப்படி என்பது பற்றியும் சொல்லித்தருகிறது. இந்த பௌதீக கல்வி மூலம் பணத்தை சம்பாதிப்பது எப்படி? சமூகத்தில் எப்படி மேலான அந்தஸ்திற்கு வருவது என்பது பற்றியே சதா சிந்தித்து போராடி வருகிறோம்.

ஆனால் மிக அரிதாக சிறிதளவான நபர்களே தமது அகவாழ்க்கை, ஆற்றல்களை அறிவதற்கும், பெறுவதற்கும் முயற்சித்து வருகிறார்கள். இந்த அக ஆற்றலை அறிந்தவர்களே தெய்வீக ஞானம், ஆழ்மன சக்தி, சுயசிந்தனை, தன்மதிப்பு, சூஷ்ம சக்திகள், ஆன்மீக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். இவற்றை பெறுவதற்கான சுயம் எம் அனைவரிலும் எப்போதும் நித்தியமாக இருக்கும் ஆன்மாவாகும். இதன் குரலை கேட்பவர்கள் ஆன்ம வாழ்வில் படியெடுத்து வைக்கிறார்கள். இதற்கான வழிமுறைகள் காலம் காலமாக எல்லாவித கலாச்சாரங்களிலும் இரகசியமாக குரு பரம்பரை மூலம் பரப்ப பட்டு வருகிறது. இந்த குருபரம்பரையினை பூர்வ புண்ணியமாக தொடர்பு கொண்டவர்கள் இன்று வரை இந்த உலகில் குப்த யோகிகளாக இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். யார் தமது உள்ளுணர்வின் குரலை மதித்து  உண்மையான அகவாழ்க்கையினை வாழ விரும்பி தாகம் கொள்பவர்களுக்கு இந்த அதி சக்தி வாய்ந்த தெய்வ உதவி கிடைத்த வண்ணமே இருக்கிறது.

துன்பம் நிறைந்த வாழ்க்கை
வாழ்வு என்பது பல்வேறு சவால்களை கொண்ட துன்பம் நிறைந்த ஒன்று, அமைதியான அன்பு நிறைந்த குடும்ப வாழ்க்கை, வெற்றி நிறைந்த தொழில், பாதுகாப்பான செல்வம், நோயற்ற வாழ்க்கை இவற்றை பெறுவது என்பது மிகுந்த சவாலானது. இன்றைய ஆன்மீக ஆசான்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் இதற்கான பதிலாக பூர்வ கர்மம், ஒருவன் செய்த பாவம் என்பவற்றை காரணம் சொல்லி சமாதானமடைகின்றனர். அப்படியானால் இவற்றை வழியே இல்லையா என சோர்வடைந்து வருந்தி மேலும் மேலும் துன்பத்தினை தமக்கு வருவித்துக்கொள்கின்றனர். ஆன்மிகம் என்றவுடன் பலவித ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை போதித்து அனைவரிலும் தாழ்வு மனப்பான்மையினை உருவாக்கி தம்மை பெரியவர்களாக்கி கொள்ளும் உளவியல் உத்திதான் இன்றைய ஆன்மீக ஆசான்களிடம் காணப்படுகிறது.
உண்மை ஆன்மீகம் என்பது தன்னை அறிந்து தனது உள்ளுணர்வை தொடர்பு கொண்டு, தன் உள்ளுனர்விடமிருந்தே எல்லாவித பிரச்சனைகளுக்கும் பதிலை பெற்று வாழ்வின் சவால்களை எதிர் கொண்டு வெற்றி கொள்வது!

இத்தகைய கல்வியே மனிதனுக்கு தேவையான உண்மைக்கல்வி! இத்தகைய கல்வியினை மக்கள் பேறுவதற்கு எமது சித்த வித்யா வலைத்தளம் வழிகாட்டும்! 

Sunday, December 08, 2013

எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி

இந்த இணைப்பில் எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி முழுமையான நூலினை தரவிறக்கி கொள்ளவும் 

நாம் சித்த வித்யா விஞ்ஞான வலைத்தளம் எதற்காக ஆரம்பித்தோம் என்று சரியாக தெரியவில்லை! சிறிதுகாலம் எமது குருதேவரிடம் பெற்றவற்றை பகிரும் தளமாக மட்டும் இருந்து வந்தது! அந்த வகையில் தகவல்களை பகிரும் தளமாகவே இயங்கியது! வாசித்த பலரும் எமக்கு தனிப்பட மின்னஞ்சல் மூலமும், நேரில், தொலைபேசியில் தாம் இறைசாதனையில் ஏற்படும் தடைகளையும் அவற்றை தெளிவாக்கி கொள்ள தகுந்த வழிகாட்டல் இல்லாமல் இருப்பதாகவும் எமது தளம் தமக்கு உதவியாகவும் இருப்பதாக கூறினார்கள்! அந்த வகையில் செயல்முறை ரீதியாக இந்த விடயம் தொடர்பாக வகுப்புக்கள் வைக்கும் படி பலர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் எமக்கு எதுவித உடன்பாடும் இல்லை! ஏனெனில் நாம் பயின்ற முறை குருவுடன் கூடவே இருந்து அவரிற்கு தேவையான சிறு சிறு உதவிகளை (குரு சேவை) செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போது அவர் தரும் உபதேசங்களை பெரும் பொக்கிஷமாக எண்ணி மனதில் பதிப்பித்துக்கொண்டு அவற்றை ஆராய்ந்து விளங்கி கொண்டு கூறப்பட்ட சாதனையினை பயிற்சிப்பது! ஆக நாம் கூற விரும்புவது “சாதனையில் முன்னேற விரும்பின் பொறுமையுடனும், சிரத்தையுடனும் குருவிடம் ஞானத்தினை பெற்று உங்கள் முயற்சியால் முன்னேறுங்கள்” என்பது! அதை விடுத்து புகழ் பாடுவதோ! போற்றி துதிப்பதோ எதுவித ஆன்ம முன்னேற்றத்தினையும் தரமாட்டாது! அந்த வகையில் எமது தளத்தினை வாசித்து உண்மையில் ஆன்ம முன்னேற்றம் பெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு என்ன உதவி எம்மால் செய்யமுடியும் என்ற எண்ணம் பலகாலமாகவே எம்மில் இருந்து வந்தது! அந்த வகையில் கடந்த 2013 நவராத்திரி இறுதியில் ஸ்ரீ பௌர்ணமி நாளில் குருதேவரின் பரிபூரண ஆசியுடன் எம்மை அண்டி வரும் சாதகர்களுக்கு தெய்வ சக்தியினை பெறும் ஸ்ரீ ஜோதி எனும் எளிய ஸ்ரீ வித்யா சாதனையினை பகிர்ந்து கொள்ள அனுமது கிடைத்தது.

இந்த சாதனை ஸ்ரீ போக நாத குருதேவர் பழனியில் புவனேஸ்வரி தாய் சக்தி கொண்டு தெய்வ சக்தியினை அருளுகின்ராறோ அந்த சாதனை அன்றி வேறல்ல!

இதனை வாசிக்க தொடங்கும் போது ஏற்படும் சாதனை தொடர்பான சந்தேகங்களை எமக்கு எழுதுங்கள்! கட்டாயம் விடை கிடைக்கும்!

உங்கள் வாழ்வில் ஸ்ரீ ஜோதி ஒளிரட்டும்! அனைத்து நன்மைகளும் தேடி வரட்டும்! தேவைப்படும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

-     - சுமனன் -

பாளையங்கோட்டையில் சென்னை ஆத்ம ஞான யோக சபாவின் பயிற்சி வகுப்புகள்

ஆர்வமுள்ள நண்பர்கள் பங்குபெறலாம்!

Saturday, December 07, 2013

Sunday, December 01, 2013

ஸ்ரீ ஜோதி சாதனை தொடர்பான சந்தேகங்களும் பதில்களும் - 01

எமக்கு அனுப்பபட்டிருந்த ஒருசில சந்தேகங்ககளும் அதற்கான விடைகளும். 

இந்த சாதனையினை ஞாயிறுகளில் காலை  08.00 - 08.40 மணியிலும் மேலும் தினசரியும் செய்யச் சொல்லி அறிவுறுத்தி இருந்தீர்கள், சற்று விளங்கவில்லை, விபரமாக கூற முடியுமா? 

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு தியானம், இது மின்கலத்தினை சக்தியேற்றும் செயல்முறை போன்றது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆகாய மனத்தினூடாக (Cosmic mind) அனைவருக்கும் குருமண்டலத்திலிருந்து சக்தி பரவும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதற்கு சொல்வதே ஞாயிற்றுக்கிழமை, ஏற்றுக்கொண்ட சக்தியினை சமநிலையில் வளர்த்துக்கொள்வதற்கு தினசரி பயிற்சி, தினசரி பயிற்சியினை காலை, மாலை உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றை வகுத்துக்கொண்டு செய்யலாம். 

ஸ்ரீ வித்யா ஸ்ரீ ஜோதி மார்க்கத்தில் முதல் படிமுறையில்  உள்மூச்சின் போது ஓம் என்று உச்சரிப்பதுபற்றியும் "ம்" என்ற சப்தத்தை மூன்று முறை அழுத்தி கூறுவது பற்றியும் விளக்க முடியுமா?

உள்முச்சின் போது "ஓம்" என உச்சரிப்பு மனதில் நிகழவேண்டும், அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மூச்சினை அவதானிக்கவேண்டும், அப்படி அவதானிக்கையில் மனதில் உச்சரிக்கும் "ஓம்" மூச்சில் மோதி மூச்சுடன் கலக்கும். மற்றும்படி ஒலி வெளியே கேட்கும்படி 'ஓம்" இணை உச்சரித்து உள்முச்சினை எடுப்பது இயலாத காரியம். மனதில் உச்சரித்து மூச்சினை அவதானித்து கலப்பதே சரியான செய்முறை. மனதில் உச்சரிக்கும் பொது "ம்" இணை சற்று நீட்டி மூன்று தடவை வரும் நேர அளவிற்கு உச்சரிக்கவும். 

தியான நிலையில் ஓம் ஹ்ரீம் என்பதனை மனதில் உச்சரிக்கவே முடிகிறது. இது சரிதானா?
ஆம் இது சரியானது, உண்மையான சாதனை மனதினாலேயே நடைபெறுகிறது, 

சில நேரங்களில் மனம் அலைபாய்கையில் மந்திரத்தை சொல்லவதை விடுத்து சாட்சி பாவமாக இருக்க எத்தனிக்கிறேன். நான் இதே முறையை தொடரலாமா? அல்லது மீண்டும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமா?

நீங்கள் சொல்லும் நிலை சாட்சி பாவம் என்று கொள்ள முடியாது, சாட்சி பாவம் என்பது மனதின் எண்ணங்களால் எதுவித சலனமும் ஏற்படாமல் மனதினை எம்மால் கட்டுப்படுத்த கூடிய நிலை. 
மனம் அலைபாய்கையில் மீண்டும் மந்திரத்தினை ஜெபித்து மனதை சரியான நோக்கத்தில் இயங்க வைக்க வேண்டும். மனம் இயற்கையில் பலவித சக்திகளை எண்ணங்கள் மூலம் ஈர்த்து செயல் புரிகிறது. மந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியில் அலை அதிர்வு (frequency), அதனை திரும்ப திரும்ப சொல்லுவதால் அது மனதுடன் பரிவுற்று மனதினை தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மையினை  உண்டு பண்ணுகிறது. ஆகவே வேறு எண்ணங்கள் வருகின்றது என்றால் சலித்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து சாதனையினை தொடரவும். 

மனதினை சரியான வழியில் இயங்க வைக்கும் சித்த சாதனை இந்த இணைப்பில் தந்துள்ளோம். இதனை கூறிய படி பயிற்சிக்கவும். 

இந்த சாதனையின் முடிவில் உங்களால் தரப்பட்ட பிரார்த்தனை தவிர்ந்து வேறு பிரார்த்தனை எதனையும் செய்யலாமா?

ஆம், நிச்சயமாக, ஆனால் உங்கள் குறைகளை புலம்பும் மறை நிலை வார்த்தைகள் இல்லாமல், அந்த குறைகள் தீரவேண்டிய நேர் நிலை வாசகங்களாக பிரார்த்திக்கவேண்டும். கல்வி, செல்வம், மகிழ்ச்சி, நல்லுறவு, சந்தோஷமான இல்லற வாழ்க்கை, ஆரோக்கயம் என்பவற்றை பிரார்த்திக்க வேண்டும், 

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...