யோகசாதனைக் குறிப்புகள் - மனதின் ஆறு சக்திகள்


பொதுவாக எமது யோக தாந்திரீக  மரபில் மூன்று வகையான சக்தி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது, அதாவது இச்சா சக்தி (ஆன்ம பலம் அல்லது எடுத்த கரியத்தை எண்ணியவாறு முடிக்கும் ஆற்றல்) கிரியா சக்தி (செயல்புரியும் ஆற்றல்), ஞானாசக்தி (அறிவு சக்தி) என்பதே அவை மூன்றும்.   

இந்த மூன்று சக்திகளும் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணி குழம்ப வேண்டாம், மனிதன் கடவுளின் சிறிய மாதிரி, ஆகவே பிரபஞ்ச மகா சக்தி மனிதனிலும் உண்டு, இதனையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்றார்கள். மனிதனில் உள்ளது என்றால் எங்கு உள்ளது? மனதில்தான் இந்த சக்திகள் உள்ளது. இறைவன் தனது பிரபஞ்ச மனதில் உள்ள இந்த சக்திகள் மூலம் பிரபஞ்சத்தில் காரியங்கள் நடத்துவது போல இறைவனின் சிறிய மாதிரியுருவான மனிதன் தனது மனது கொண்டு இந்த சக்திகளை பாவிக்க முடியும், அறிந்தோ அறியாமலோ இவற்றை நாம் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். யோக சாதனை தாந்திரீகம் என்பன சாதாரண நிலையில் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதற்கும் மேல் சென்று அதீத சக்தியினை பெறும் முறைகளை கூறுகின்றன. இங்கு மனித மனதின் ஆறுசக்திகளும் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 

மனதிற்கு ஆசைகள் உதிக்கும் இந்த ஆசைகளை உருவாக்கும் ஆற்றல் இச்சா சக்தி எனப்படும், உருவாக்கிய ஆசைகளை அடைவதற்குரிய செயலில் ஈடுபடத்தூண்டும் செயலூக்கம் கிரியா சக்தி. இந்த செயலினை எப்படி செய்வது என்று திட்டம் போட்டு அடையும் விதமும் முறைகளும் ஞானா சக்தி, இந்த அடிப்படை சக்திகள் மூல சக்தியான பராசக்தியின் அமிசமாக மனிதனில் மனதின் ஒரு கூறாக இருக்கின்றன. 

இது தவிர மனதின் சக்திகளை ஆறுவிதமாக கீழ்வருமாறு பகுக்கலாம்;
 • வேதனா சக்தி – பிரித்துணரும் திறன்
 • ஸ்மரண சக்தி – ஞாபக சக்தி
 • பாவனா சக்தி – ஆக்கபூர்வகற்பனை (இது வெறுமனே எண்ணங்களை எழுந்த மானமாக கற்பனை செய்வதை குறிப்பதன்று, உணர்வுபூர்வமாக ஒரு ஒழுங்குமுறையில் கற்பனை செய்வதைகுறிக்கும், இப்படியான பாவனை பிரபஞ்சத்தில் கட்டாயம் நடந்தே தீரும் என்பது சித்த வித்தையில் அடிப்படை விதி)
 • மனுஷ்ய சக்தி - தீர்மானிக்கும் சக்தி, ஒரு விடயத்தினை நல்லதா கெட்டதா என தீர்மானிக்கும் சக்தி.
 • இச்சா சக்தி அல்லது சங்கல்ப சக்தி – ஆன்ம பலம் அல்லது சங்கல்பிக்கும் எண்ணத்தினை நிறைவேற்றும் ஆற்றல். 
 • தாரணா சக்தி – ஒரு விடயத்தினை ஏகாக்கிரமாக மனதில் நிறுத்தி சிந்திக்கும் திறன்.

Comments

 1. பதிவிற்கு நன்றி, இதனை பற்றி மேலும் அறிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்

  ReplyDelete
 2. பதிவிற்கு நன்றி, இதனை பற்றி மேலும் அறிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்

  ReplyDelete
 3. மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete
 4. Continue to the gud job. Thank you.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு