ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 28: நாமங்கள் 70

கிரிசக்ர –ரதாரூட-தண்ட-நாதா-புரஸ்க்ருதாயை (70)
கிரிச்சக்கரமென்னும் தேரில் வீற்றிருக்கும் தண்ட நாதா (வராஹி) வால் வழிகாட்டப்படுபவள்கிரிசக்ரம் என்பது தண்ட நாதா எனப்படும் வாராஹியின் தேர் ஆகும். இந்த தேவி மிகுந்த சக்திவாய்ந்தவளாகும், இவளைப்பற்றி ஏற்கனவே நாமம் 11இல் விபரிக்கப்பட்டுள்ளது. கிரி என்பது வராஹத்தினை குறிக்கும். வராஹம் என்பது காட்டுபன்றியினைக் குறிக்கும். தேவியின் முகம் வராஹ முகம். தேவியின் தேரும் காட்டுப்பன்றி வடிவுடையது. கையில் தண்டத்தினை கொண்டிருப்பதால் தண்ட நாதா எனப்படுகிறாள். கிரி என்பதற்கு ஒளிக்கற்றைகள் என்றும் ஒரு பொருள் உண்டு, இங்கு ஒளிக்கற்றை என்பது படைப்பின் ஒளியினைக்குறிக்கும். இது படைப்பின் ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஒளியினைக் குறிக்கும். இது பற்றி புனித பைபிளிலும் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது (Genesis.I.3)  “ கடவுள் கூறினார் அங்கே ஒளியிருந்தது, ஒளி வெளிப்பட்டது என்று. சக்ர என்பது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற சுழற்சியினை குறிக்கும். யோகியானவன் இந்த கிரிசக்ரத்தின் மேலே அமர்ந்திருக்கிறான் என்பதன் பொருள் அவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செய்முறையினூடாக செல்கின்றான் என்பதே. ஆனால் அவன் இறப்பு பற்றிய பயம் அற்றவனாக இருக்கின்றான். எப்படி ஒருவன் இறப்பு பற்றிய பயம் அற்றவனாக இருக்க முடியும்? இறப்பு என்பது ஸ்தூல உடலின் அழிவு மட்டுமே! ஆன்மா அழிவற்றது. யோகியானவன் தனது ஸ்தூல உடலின் அழிவு பற்றி வருந்துவதில்லை. ஏன் வருந்துவதில்லை?இதற்கு சிவ சூத்திரத்தில் சிவனே பதிலளித்திருக்கிறார்; யோகியானவன் தனது ஆன்மா தவிர்ந்து வெளியிலிருந்து வரும் இன்பதுன்பங்களினால் மாற்றமடைவதில்லை. அவன் தனது அந்தக்கரணங்களுடன் (மனம்,புத்தி, சித்தம், அஹங்காரம்) தொடர்பு படும்போது மட்டுமே உடல் சாந்த துன்பங்களுடன் தன்னை தொடர்பு படுத்திக்கொள்கிறான். யோகியானவனிற்கு ஸ்தூல உடல் சார்ந்த இன்ப துன்பங்கள் முதன்மையானதல்ல. அவன் உடலினூடான தொடர்புகள் அனைத்திலும் விடுபட்டு முழுமையாக பிரம்மத்துடன் இணைந்திருக்கிறான். இந்த நிலை அவனுக்கு சாத்தியமாகின்றது ஏனெனில் அவன் தன்னுடைய உணர்வினை பிரம்ம உணர்வுடன் ஒன்றாக இணைத்திருக்கின்றான். இதுவே எல்லா நூற்களிலும் இணைவு, சிவசக்தி ஐக்கியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. வாராஹி தேவி எமது ஆக்ஞா சக்கரத்தில் வசிக்கிறாள். இந்த நாமம் எமது உடலின் செய்கைகளுடன் ஆன்மாவுடன் தொடர்பு படுத்தாமல் ஞானம் பெறுதல் பற்றிய முக்கியத்துவத்தினை கூறுகின்றது. உடலானது கர்மாவின் தாக்கத்தால் பாதிப்புற்றாலும் ஆன்மா தூய்மையாகவும், தன்னுணர்வு பிரம்ம உணர்வுடன் கலந்து முக்தியினை நோக்கி இட்டுச்செல்லும். முக்தி என்பது பிறப்பு இறப்பு அற்ற நிலையாகும்.


68, 69, 70வது நாமங்கள் லலிதாம்பிகை, மந்திரிணி, வாராஹி ஆகிய மூவரதும் தேரினைப்பற்றி கூறுகின்றன. மந்திரிணியும் வாராஹியும் லலிதாம்பிகையிற்கு அடுத்த உயர் நிலையில் உள்ள சக்திகளாகும். இந்த இருசக்திகளையும் உபாசித்து இவர்கள் அருள் இல்லாமல் லலிதையினை நெருங்கவோ அருள்பெறவோ முடியாது. மந்திரிணி லலிதையின் சாம்ராஜ்யத்தில் பிரதம மந்திரி அனைத்து நிர்வாகப்பொறுப்பும் மந்திரிணியின் கீழேயே உள்ளது. இது மந்திரிணி ந்யஸ்த ராஜ்யஸ்துரே என்ற 768 நாமாவினால் உறுதிசெய்யப்படுகிறது. வாரஹி தேவியின் படைத்தலைவி. வாராஹி எல்லவித துர்சக்திகளையும் விரட்டும் ஆற்றல் உள்ளவள். வாராஹி ஆஷாட (ஆடி) மாதத்தின் 18வது நாள் மிகவும் விஷேஷமாக வழிபடப்படுபவள். இந்த வழிபாடு திருமணதடையுடையவர்களுக்கு திருமண பாக்கியத்தினை அளிக்கும். இந்த மூன்று தேர்களும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமானது. முன்னரே விபரிக்கப்பட்டது போல் இங்கு தேர் என உருவகிக்கப்படுவது எமது மனமும் அதன் பரிணாமமுமே. 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு