குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 06, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 04

தான்றிக்காய் பற்றிய அறிவியல் தகவல்கள்

இது சித்தவைத்திய மருந்துகள் பலவற்றில் சேர்க்கப்படுவது. இது முத்தோஷங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. எனினும் கபத்திற்கெதிராக சிறப்பான முறையில் செயற்படும். பொதுவாக கபக்குற்றமுடைய நோய்களுக்கான மருந்தில் அதிகமாக பயன்படுத்தப்படும்.

அறிவியல் ஆய்வுகளின் படி கீழ்வரும் பதார்த்தங்களை உடையதாக அறியப்பட்டுள்ளது.
  •  Main chemical constitutes are tannins mainly include ß- sitosterol, gallic acid, ellagic acid, ethyl gallate, galloyl glucose and chebulaginic acid.
  • linoleic acid -31 % respectively ( இது உடலில் உள்ள கொலஸ்ரோல் அளவினை சரியாக வைத்திருக்க உதவும் ஒரு பதார்த்தமாகும். கொழுப்பினை HDL (high density lipoprotein) ஆக வைத்திருந்து கொலஸ்ரோல் ஆக மாறுவதை கட்டுப்படுத்துகிறது. 
  • Tannin
உடலில்   தான்றிக்காயில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின்செயற்பாடு
Tannins:
1. It shows scavenging activity against mitochondrial lipid peroxidation. (lipid peroxidation என்பது பொதுவாக நச்சுப்பதார்த்தம் உடலில் சென்றவுடன் உடலில் உள்ள லிப்பிட்டு கொழுப்புகளை அழிக்க முனையும் செயற்பாடு, இதனை தான்றிக்காயில் உள்ள இரசாயனப்பதார்த்தங்கள் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் நச்சு நீக்கம் நிகழ்கின்றது.
2. It causes significant decrease in cholesterol level. (கொலஸ்ரோல் அளவினை குறைக்கும்.)
3. It shows antimicrobial activity against bacteria and virus. (வைரசு, பற்றீரியாவினை அழிக்கும் செயற்பாடு)
4. It shows significant inhibition of microsomal lipid peroxidation and reduction in triglyceride levels in liver. (நாம் பொதுவாகா உண்ணும் அனைத்து கொழுப்புகளும்  triglyceride  வகைக்குள்ளேயே அடங்கும். எமது அன்றாடதேவைக்கு அதிகமானவை ஈரலில் சேர்த்து வைக்கப்படும். அதனால் இரத்த கொலஸ்ரோல் அளவு அதிகரிக்கும், சதையியின் செயற்பாடு குறைந்து நீரிழிவு உண்டாகும். இருதயக்கோளாறுக்கு வழிவகுக்கும். இவையனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.  
5. It show reduction in total acidity and peptic activity and increase in mucin content. (உடலிலும் வயிற்றிலும் அமிலத்தன்மையினை கட்டுப்படுத்தி கலச்சுரப்பினை அதிகரிக்கிறது. இதனால் வயிற்று அல்சர் குணமாகின்றது. )

Curing Diseases  as per the pharmachological chemistry:
1. It is useful in cough, bronchitis and pharyngitis.
2. It is used in dyspepsia, flatulence, dipsia, and vomiting.
3. It is used in ophthalmopathy, strangury, splenomegaly, cephalagia and general debility.
4. It is useful in skin diseases, leucoderma and greyness of hair.

Research Information :
Terminalia belerica extract reduces the levels of lipids in hypercholesterolemic models. It causes significant decrease in liver lipids and heart lipids. (Ref. Shaila, H.P. and et.al., Preventive actions of Terminalia belerica in experimentally induced atherosclerosis, Int J Cardiol. 1995 Apr ;49 (2):101-106)

நவீன ஆய்வு முடிவுகள்:
தான்றிக்காயின் இரசாயன கூறுகள் பொதுவாக கொலஸ்ரோல்களை குறைக்கின்றன, ஈரல் கொழுப்புகளையும் இருதய கொழுப்புகளையும் (கொலஸ்ரோல் மற்றும் லிப்பிட்டுகள்) கணிசமான அளவில் குறைக்கின்றன.

சித்தர்கள் கூறும் பலன்களும் நவீன ஆய்வுகளும் பொருந்தி வருவதை எண்ணி நாம் பெருமையடைய வேண்டுமல்லவா!

இன்று பலரும் சிறுவயதிலே ஹார்ட் அட்டாக், கொலஸ்ரோல் எனக்கூறக்கேட்கிறோம். அவற்றிற்கெல்லாம் இது ஒரு எளிய தீர்வல்லவா?எமது உடலில் அதீதமாக சேரும் கொழுப்பினை கட்டுப்படுத்தி உடலினை நோயிலிருந்து காப்பாற்றி உறுதி சேர்க்கும் செயலினை தான்றிக்காய் செய்கிறது.

அடுத்த பதிவில் நெல்லிக்காய் பற்றி அறிவியல் கூறும் உண்மைகளைப்பற்றிப் பார்ப்போம்.

Tuesday, February 05, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 03


கடுக்காய்  பற்றிய அறிவியல் தகவல்கள்!

திரிபலாவில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்பவற்றினைப்பற்றிய சித்தர்கள் கூறிய கருத்தினைப் பாத்தோம், இந்தப்பதிவில் இவை மூன்றினதும் விஞ்ஞான ஆய்வு முடிவுகளைப் பற்றிப் பார்ப்போம். 

முதலாவது கடுக்காய்

இது தாவரவியலில் combretaceae குடும்பத்தினை சேர்ந்தது. இது ஆயுர்வேத தத்துவத்தின்படி அறுசுவைகளில் ஐந்து சுவைகளை உள்ளடக்கியது. கசப்பு சுவை அதிகம் உடையது. நவீன விஞ்ஞான ஆய்வின்படி இது ஈரலின் செயற்பாட்டினை தூண்டி பாதுகாப்பதுடன், குடலில் உள்ள அழுக்குகள், பழைய மலங்களை வெளித்தள்ளுகிறது. அத்துடன் நரம்புகளை வலிமைப்படுத்தி நரம்புதளர்ச்சியினை குணப்படுத்துகிறது. அதனால் ஐந்து புலன் களினால் பெறும் உணர்வுகள் மேம்படுகின்றன. சிறு நீர்கல், சிறு நீரில் யூரியா, சிறு நீர் வெளியேறுவதில் உள்ள தடைகள், மற்றும் உடலில் உள்ள ஒட்டுண்ணிப்புழுக்களினை அழிக்கும் செயன்முறையினையும் அதிகரிக்கிறது. இரத்ததினை சுத்திகரிக்கிறது. தொண்டை கரகரப்பு, தசைப்பிடிப்பு போன்றவற்றினையும் நிவர்த்தி செய்கிறது. மன அழுத்ததினையும் குறைக்கும் தன்மை வாய்ந்தது. 

கடுக்காயினைப்பற்றி பல்வேறு மருந்தியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றின் சாராம்சம் அட்டவணையாக கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. 


கடுக்காயில் காணப்படும் கீழ்வரும் பதார்த்தங்கள் அதன் எல்லையற்ற மருத்துவகுணங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 
  • Different types of chebulic acid,
  • Gallic acid, 
  • Elagic acid, 
  • Tannic acid,
  • Amino acids,
  • Flavonoids like luteolin, rutins and quercetin etc.
அடுத்த பதிவில் தான்றிக்காய் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது என்று பாருங்கள். 

இந்த அறிவியல் பார்வையினை இங்கு பகிர்வதன் நோக்கம் யாதெனில், 
  1. சித்த மருத்துவத்தின் அறிவியல் பின்புலம் எத்தகையது என்பதனை அறிதல். 
  2. இன்றைய நவீன அறிவியல்  பலகோடி செலவழித்து செய்து கண்டு பிடிக்கும் இந்த வேதியல் பண்புகளை சித்தர்கள் தமது பாடல்களில் எவ்வளவு விரிவாக சொல்லிவைத்து சென்றுள்ளார்கள் என்பதனை உணர்தல். 
  3. அடுத்து சித்த வைத்தியர்கள் நவீன அறிவியல் ரீதியாக எமது மருந்துகளை எப்படி விளங்கப்படுதுதல் என்பதிற்கான முன்மாதிரியினை உருவாக்கல் என்பனவே. 
மேலே கூறப்பட்ட 03 வது நோக்கம் மிக ஆழமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயமாகும். ஏனெனில் பெரும்பாலான சித்த வைத்தியர்கள் சித்தர் கூறியுள்ளார்கள் எனக்கூறி ஒருவித உயர்வு நவிற்சி தொனியில் உரையாடும் போது அவற்றை ஒரு மூட நம்பிக்கை சார்ந்த விடயமாக பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகல் உள்ளன. 

சித்தர் நூற்களில் கூறப்பட்டுள்ள (இடைச் செருகல்கள் தவிர்ந்த ) அனைத்துமே நவீன விஞ்ஞானத்துடன்பொருந்தி வரக்கூடியதுடன் அதற்கு அப்பாலும் செல்லக்கூடியது. ஆனால் அது பற்றிய சரியான புரிதலை  தற்கால நடையில் ஒப்பு நோக்கி புரிய வைப்பதும் இவற்றை எமது அடுத்த சந்ததிக்கு கொடுக்க வேண்டியதுபாரம்பரியமாக கற்றவர்கள் ஒவ்வொருவருவதினதும் கடமையாகும். 

அந்த கடலளவு பணியில் ஒரு சிறு துளிதான் முயற்சியில் இந்தப்பதிவுகள்!

ஸத்குரு பாதம் போற்றி!

Monday, February 04, 2013

கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 02


பொதுவாக காயகற்பம் என்றவுடம் மலைகள் பல ஏறி மூலிகை சேகரித்து அவற்றை சித்தர்கள் முறைப்படி சுத்தி செய்து செய்யும் மருந்துகள் என எண்ணப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை என்றாலும் இந்த மாயையினால் பலர் தமது கையில் கிடைக்கும் எளிய பொருட்களையே பயன்படுத்துவதில்லை. தம்மிடம் தான் சித்தர்கள் கூறிய இரகசியங்கள் இருப்பதாக மக்கள் மனதினை நம்பச்செய்வதற்காக, இப்படியான தோற்றத்தினை பல சித்தமருத்துவர்கள் உருவாக்கி விடுகிறார்கள், 

அந்த வகையில் எல்லோருக்கும் ஆயுர்வேத/சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கக்கூடிய சூரணம்தான் திரிபலா சூரணம், பெரிய விலைவராது, ஆனால் குணம் பெரியது. இந்தப்பதிவில் திரிபலா சூரணத்தினை பற்றிய முழுமையான அலசலினை பார்ப்போம். அதில் கீழ்வரும் தகவல்களை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
  • திரிபலா சூரணத்தில் உள்ள மூலிகைகள் பற்றி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்?
  • திரிபலா சூரணத்தில் உள்ள மூலிகைகளினைப்பற்றி நவீன அறிவியல் என்ன சொல்கிறது?
  • திரிபலா சூரணம் எப்படி உடல் செயற்படுகிறது? காயகற்பமாகிறது?
  • திரிபலா சூரணத்தினை எப்படி எல்லோரும் பயன்படுத்துவது?
  • அவ்வாறு பயன்படுத்தும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? அவற்றினை எப்படி சமாளிப்பது? எடுக்கவேண்டிய அளவுகள் எவை?

இவ்வளவு விபரங்களையும் நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டு, தினசரி திரிபலா சூரணத்தினை பயன்படுத்தி உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிமுறையினை இந்த கட்டுரைத்தொடர் உங்களுக்கு போதிக்கும். 

திரிபலா என்பது திரிதோஷங்களையும் சமப்படுத்தி உடலை பலப்படுத்தக்கூடிய மூன்று மூலிகைகள் எனக் கண்டோம், அந்த மூன்று மூலிகைகளூம்
  • கடுக்காய் -Terminalia Chebula
  • தான்றிக்காய் - Terminalia Belerica
  • நெல்லிக்காய் - Emblica officinalis

இந்த மூன்று மூலிகைகளும் கற்பமூலிககள் எனப்படும், அதாவது உடலை நீண்டகாலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மூலிகைகள். முதலில் இவைபற்றி சித்தர் நூற்கள் என்ன சொல்கிறது என்று பார்த்து விட்டு வருவோம். 

முதலில் கடுக்காய் பற்றி பதார்த்தகுண விளக்கம் கீழ்வருமாறு பாடலாக கூறுகிறது;

கடுக்காய் -Terminalia Chebula

கடுக்காயுந் தாயுங் கருதிலொன்றென் றாலுங்
கடுக்காய் தாய்க்கதிகங் காணீ - கடுக்காய்நோ
யோட்டி யுடற்றேற்று முற்றவன்னை யோசுவைக
ளூட்டியுடற் றேற்று முவந்து

இதன் பொருள் கடுக்காயும் தாயும் ஒன்றேனவே நினைத்தாலும் தாயைப்பார்க்கிலும் கடுக்காய் அதிகமாம், ஏனென்றால் கடுகாய் உடலிலுள்ள பிணிகளை நீக்கி உடலை வலைமைப்படுத்தும், ஆனால் தாயோ தன் அன்பு மிகுதியால் அறுசுவை உண்டிகளை பிள்ளைக்கு கொடுத்தாலும் பிணிகள் அற்ற உடல்தான் உணவை கிரகித்து தன்னை போசிக்கும் தன்மையுடையது. ஆகவே உணவு எப்படி பயனுடையதாகும் என்ற வகையறியாமல் உணவூட்டும் தாயினை விட கடுக்காய் சிறந்தது என்கிறார். 

இதனுடைய செயல்கள் 
  • மலகாரி - பேதியுண்டாக்கும்
  • சங்கோசகாரி, - சரீர தாதுக்களில் நுண்ணியிர் தொற்றினால் அழுகிவிடாமல் இருக்கும் பண்புடையது
  • தாதுஷீணரோதி - சதை நரம்புகளை சுருங்க்கச் செய்யும்
  • ரக்தஸ்தம்பனகாரி - ரத்த நாளங்களை சுருங்கச் செய்து இரத்தத்தினை வெளியாக்காமல் தடுக்கும் மருந்து
  • உதரவாதஹரகாரி - வயிற்றில் உஷ்ணத்தினை உண்டாக்கி வாயுவை கண்டிக்கும் மருந்து. 

போகர் ஏழாயிரம் கடுக்காயின் வகைகளையும் அதன் மூலம் செய்யக்கூடிய கற்பங்களையும் பற்றி விரிவாக கூறும். கடுகாயினை தனியாகவே கற்பமாக கொள்ளலாம். அதுபற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம். இங்கு கடுக்காய் திரிபலா சூரணத்தில் சேர்வதால் அதுபற்றிய விபரங்களை சிறிதாக பார்ப்போம். 

இரண்டாவது தான்றிக்காய்
தான்றிக்காய் - Terminalia Belerica

ஆணிப்பொன் மேனிக்கழகு மொளிவுமிகுங்
கோணிக்கொள் வாதபித்தக் கொள்கைபோந் - தாணிக்காய் 
கொண்டவர்க்கு மேகனறுங் கூறா வனற்றணியுங்
கண்டவர்க்கு வாதம்போங் காண்

இதன் பொருள் தான்றிக்காயினை உண்பதால் உடல் ஆணிப்பொன்னை போல் உடல் மின்னும், வாத பித்த தோஷங்கள் சமப்படும், உடற்சூடு, வாதகோபம் பித்த நீர், ஆண்குறிக்கிரந்தி என்பன போகும், உடலில் அழகும் ஒளியும் உண்டாகும். 

இதனுடைய செயல்கள்;
  • சங்க்கோசகாரி - சரீர தாதுக்களில் நுண்ணியிர் தொற்றினால் அழுகிவிடாமல் இருக்கும் பண்புடையது
  • சுரகாரி - சுரம் நீக்கும் மருந்து


மூன்றாவது நெல்லிகாய்
நெல்லிக்காய் - Emblica officinalis

நெல்லிக்காய் 

வற்றல் (காயந்தது)



பித்த மனலையம் பீநசம்வாய் நீர்வாந்தி
மத்தமலக் கட்டு மயக்கமுமி - லொத்தவுரு
வில்லிக்கா யம்மௌங்க்கா மென்னாட்கா லந்தேர்ந்தே
நெல்லிக்கா யம்மருந்து ணீ

நெல்லிக்காய்க் குப்பித்த நீங்க்கு மதன்புளிப்பாற்
செல்லுமே வாதமதிற் சேர்துவர்ப்பாற் - சொல்லுமைய
மோடுமிதைச் சித்தத்தி லுன்ன வனலுடனே
கூடுபிர மேகமும்போங் கூறு

இதன் குணம் கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகலில் உண்ணும்போது பைத்தியம் (திரிதோஷ குழப்பத்தால் வரும் மனக்கோளாறு), கப நோய், பீநிசம், வாந்தி, மலபந்தம், பிரமேகம் இவைகள் இல்லாமல் போகும். அதன் புளிப்புச் சுவையால் வாயுவும், துவரால் கபமும் நீங்க்கும். 

இதன் செயல்கள்
  • சீதளகாரி - உஷ்ணத்தினை தணீத்து அதிக தாகத்தினை உண்டாக்காமல் செய்வது
  • மூத்திரவர்த்தனகாரி - சிறு நீரினை அதிகமாக்கும் மருந்து
  • இலகுமலகாரி- உபவத்திரம் இல்லாமல் மலத்தினை வெளியேற்றும் மருந்து
  • உதரவாதஹரகாரி - வயிற்றில் உஷ்ணத்தினை உண்டாக்கி வாயுவை கண்டிக்கும் மருந்து. 

இந்த மூன்று கற்பமூலிகைகளையும் சேர்த்த மருந்துதான் திரிபலா சூரணம் எனப்படும். 

இது பற்றிய மேலும் பல விபரங்களை அடுத்துவரும் பதிவுகளில் காண்போம்!


Sunday, February 03, 2013

சித்தர்களின் அரிய கற்பமுறை - அறிவியல் ஆதாரங்களுடன்


"இது எமது 200 ஆவது பதிவு, இதிலிருந்து பலகாலமாக எழுதுவதற்கு எண்ணியிருந்த வைத்தியம் சார் குறிப்புகளை தரலாம் என எண்ணுகிறோம். எமது மற்றைய பதிவுகள் மன, ஆன்ம முன்னேற்றத்தினையே கூறுவதாக இருந்து வந்துள்ளது. இனிவரும் மருத்துவக்குறிப்புகள் பலருக்கும் அன்றாட தேவைகளில் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். படித்து பயன் பெற குருதேவரை பிரார்த்திக்கிறோம். "


சித்தர்களின் அரிய கற்பமுறை - அறிவியல் ஆதாரங்களுடன்
இன்று சித்தமருத்துவம் என்பது "பாட்டி வைத்தியம்" என்று நம்பப்பட்டு விளக்கமில்லாமல் அனுபவத்தின் மூலம் நம்பிக்கையில் குணமாகும் வைத்தியம் என்று பலர் கருதி வருகின்றனர். அதேபோல் கற்ற சித்தவைத்தியர்கள் கூட தாங்கள் சித்தவைத்தியர் என்பதனை காட்டுவதற்கு பழம் பாடல்கள் இரண்டை கூறி சித்தர்கள் கூறியது என மழுப்பி அதனை தற்கால மொழியில் விளக்க முடியாமல் இருப்பதால்  தற்கால கல்வி முறையில் கற்றவர்கள் அவர்களை அறிவியல் பின்புலமின்றி ஏதோ நம்பிக்கையில் செயற்படுகின்றார்கள் என எண்ணி விடுகிறார்கள். இதன் பயனாக தூய அறிவியல் கலையான சித்தமருத்துவம் இன்று பாட்டி வைத்தியமாகிவிட்டது. இந்த கட்டுரை தொடரின் நோக்கம் சித்தர்களின் காயகற்ப முறை ஒன்றினை அறிவியல் ரீதியாக புரிதலை ஏற்படுத்துவதாகும், இது காலத்தின் தேவையுமாகும். 

இவற்றை எழுதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று பட்டதாரி சித்த மருத்துவர்களும், பரம்பரை சித்தமருத்துவர்களும் என்னுடன் விவாதத்திற்கு வரலாம், அதற்கு பதிலாக எனது தகுதி பற்றிய சில குறிப்புகளை இங்கு தந்துவிட்டு மேற்கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன். 

- எமது தந்தை வழி ஆறு தலைமுறை சித்தவைத்தியர்கள், நான் ஏழாவது தலைமுறை, எனது தாய் பட்டம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர், சிறுவயது முதல் சித்தவைத்திய மருந்துகள் செய்வது தொடங்கி குணபாடம்/பதார்த்தகுண விளக்கம் குருமுறையாய் கற்றுள்ளேன். ஆக நான் பரம்பரை சித்த வைத்தியன்!
- கல்வி முறையில் வேதியல்/தாவரவியல் (Chemistry/Botany) ஆய்வுகள் செய்யக்கூடிய அளவிற்கு எம். எஸ்ஸி (M. Sc) வரை கற்றுள்ளேன். நான் ஒரு தொழில்சார் விஞ்ஞான ஆய்வாளன் (Professional Scientific researcher).

இந்த இருவழி அறிவுகளும் இந்த விடயத்தினை அணுகுவதற்கு உபயோகித்துள்ளேன்,

இனி விடயத்திற்குள் செல்வோம், 

சித்தமருத்துவத்தின் அடிப்படை மருந்து: திரிபலா சூரணம், இது ஒரு காயகற்பமும் கூட. இதப்பற்றிய விஞ்ஞான ஆய்வினைத்தான் இந்தப்பதிவினூடு பார்க்கப்போகிறோம்.

திரி என்றால் மூன்று என்று பொருள், பலா என்றால் பலனளிப்பது என்று பொருள். சித்த மருத்துவ அடிப்படையில் உடலின் அடிப்படை உடற்றொழிலியல் முத்தோஷங்களில் தங்கியுள்ளது. வாதம், பித்தம், கபம் ஆகிய முத்தோஷங்களும் சமனிலையில் இருந்தால் ஆரோக்கியம், சமனிலை கெட்டால் நோய். இந்த முத்தோஷங்களையும் சமப்படுத்தி பலனளிப்பது திரிபலா ஆகும். 

திரிபலா இல்லாதா சித்த ஆயுர்வேத மருந்துகள் இல்லை எனலாம். இது பொதுவாகா மலமிளக்கி எனக்கருத்தப்படாலும் இதன் இரகசியங்கள் அளவிகடந்தவை அவற்றைத்தான் இனிப்பார்க்கப்போகிறோம், 

தொடரும்...

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...