சித்த வித்யா பாடங்கள்: 18 (அ) சூஷ்ம திருஷ்டி - சூட்சும பார்வைஉலகில் பலகாலமாக எதிர்காலத்தினை கணித்து அறிந்தவர்கள் (ஜோதிடத்தின் மூலம் அல்ல!), நடந்த சம்பவங்களை தமது மானச சக்தி மூலம் அறிந்தவர்கள் பலர் இருந்துள்ளார்கள், இருந்தும் வருகிறார்கள். இவர்கள் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார்கள் என்பதனையே இந்த கட்டுரைத்தொடர் ஆராயப்போகிறது. அது மட்டுமன்றி சூஷ்ம திருஷ்டியினைப் பெறுவதற்கு உரிய சாதனைகள் எவை என்பது பற்றியும் பின்வரும் பதிவுகளில் விளக்கப்பட உள்ளது. அதனால வாசகர்களே ஆர்வமுடன் இந்த பதிவுத்தொடரினை எதிபார்த்து இருங்கள்.

இன்றையகாலகட்டத்தில் ஈ.எஸ்.பி, சைக்கோமெட்டரி என அதிதீத புலனாற்றல்கள் பற்றி பலர் படித்தறிந்திருப்பீர்கள். இந்த சூஷ்ம திருஷ்டி என்பதும் அத்தகைய ஆற்றலில் ஒன்றுதான். சூஷ்ம திருஷ்டி என்றால் சூஷ்மத்தினை பார்த்தறிதல் என்று பொருள். பொதுவாக பார்வை எனப்படுவது ஸ்தூலப் பொருட்களை பார்ப்பதையே கருதுவோம். சூஷ்ம திருஷ்டியில் ஒரு பொருளின் சூஷ்ம அமைப்பினை பார்த்தறியலாம். 

எது சூஷ்மம்? மனிதனை எடுத்துக்கொள்வோம், மனிதனது உடல், அங்கங்கள், ஸ்தூலம்! மனம், உணர்வு, ஆறு ஆதாரங்கள், பிராண ஓட்டம் என்பன சூட்சுமம். சூஷ்ம திருஷ்டி என்பது பௌதீக கண்களால் பார்ப்பதிலிருந்து மாறுபட்டது. எதிர்காலம், கடந்த காலம் என்பனவற்றின் பதிவுகள் மிக சூஷ்மமாக இந்த பிரபஞ்சத்தில் பதியப்பட்டுள்ளது, ஆக சூஷ்ம திருஷ்டி உள்ள ஒருவர் அவற்றை கண்டறியும் ஆற்றலைப்பெறுகிறார் என்பதே இந்த ஆற்றலின் மூலம் கடந்த கால, எதிர்கால சம்பவங்களை அறிகிறார் என்று பொருள். அதுபோல் ஒருவருடைய எண்ணங்களும் சூஷ்மமாக இந்த பிரபஞ்சத்தில் பரவியிருக்கும். அவற்றையும் சூஷ்ம திருஷ்டி உடைய ஒருவர் கண்டறியலாம். 

சூஷ்ம திருஷ்டி என்றால் சூட்சும பார்வை என்று பொருள் எனச் சொன்னோம், அப்படியானால் கண்களால்தான் இவற்றைப் பார்ப்போமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா! சூட்சும பார்வை என்பது வெறும் கண்களால் பார்பது என்ற பொருள் அல்ல, எமது கண்களை எவ்வளவு விருத்தி செய்தாலும் அவற்றால் சூட்சும பொருட்களையோ, எதிர்காலத்தினையோ, இறந்தகாலத்தினையோ பார்க்க முடியாது. இது வேறொரு சாதனை மூலம் சாதிக்கப்படுவது, அவை பின்வரும் பதிவுகளில் பதியப்படும். 

அதுபோல் ஒருவர் மனம் ஒன்றி ஏகாக்கிர நிலையில் இருக்கும் போது மனதில் திடுமென சில எண்ணங்கள் உதித்து பிரச்சனைக்கு வழிகாட்டும், இந்தகைய நிலையினைத்தான் சூஷ்ம திருஷ்டி என்பதா? எனக் கேட்பர். இந்தக் கேள்வியும் நியாயமானதே, மன ஏகாக்கிரம் மூலம் உணர்வு ஒன்றி பெறுவதல்ல சூட்சும பார்வை. 

சூட்சும பார்வை என்பது என்ன என்பதனை எமது குருநாதர் கண்ணைய யோகீஸ்வரர் விளக்கிய வார்த்தைகளில் அப்படியே தருகிறோம். 

" சூஷ்ம திருஷ்டி படைத்தவன் ஒரு சாதாரண மனிதன் நிகழ்கால சம்பவத்தை எப்படித் தன் கண்களூடாக நேருக்கு நேர் பார்ப்பானோ அப்படி கடந்த கால நிகழ்கால சம்பவங்களை அறிகிறான், ஒரு சாதாரண மனிதனிற்கு கடந்தகால சம்பவங்களும் நிகழ்கால சம்பவங்களும் தற்போது இல்லாத ஒன்றாக இருந்தாலும் சூஷ்ம திருஷ்டி உள்ளவனுக்கு அச்சம்பவங்கள் நிகழ்காலத்தில் நடப்பதுபோலவே அனுபவிப்பான். ஒருவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இடம் எப்படி இருந்தது என்று அறியவேண்டி சூஷ்ம திருஷ்டி சாதனையினை உபயோகித்தால் அவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தின் அமைப்பு, வீதிகளின் அமைப்பு, வீடுகள், வாழ்ந்த மக்கள் என்பவற்றை நேருக்கு நேர் காண்பது போல் காண்பான்"

அதாவது அவன் அந்த இடத்தில்,சம்பவத்தில் இருந்த உணர்விலேயே விடயங்களை நேருக்கு நேர் பார்த்து அறிந்து கொள்வான். 

ஆகவே சூஷ்ம திருஷ்டி என்பது மன ஊகத்தினால் தெரிந்து கொள்ளும் முறை அல்ல, நேருக்கு நேராக பார்த்தறிவது என்று பொருள். 

அடுத்த பதிவில் சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். 

சத்குரு பாதம் போற்றி! 

Comments

  1. சூட்சம திருஷ்டியுடைய சாதகன் நம் கண்களால் காண்பது போலவே 3 கால நிகழ்வுகளையும் காணலாம்(நம் ஸ்தூல கண்களின் துணை இல்லாமலே).... எப்படி என்று அறிய ஆவலாக உள்ளது, எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ...வாழ்த்துக்கள் தொடருங்கள்.. நன்றி..

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு